Yarl Forum
பத்து தலைகளும் இருபது கைகளுமாய் ஓர் உருவம்.- தயா ஜிப்ரான் - - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பத்து தலைகளும் இருபது கைகளுமாய் ஓர் உருவம்.- தயா ஜிப்ரான் - (/showthread.php?tid=4980)



பத்து தலைகளும் இருபது கைகளுமாய் ஓர் உருவம்.- தயா ஜிப்ரான் - - Thaya Jibbrahn - 02-27-2005

நேற்றென் கனவிலோர்
அசரீரி!

பத்து தலைகளும்
இருபது கைகளுமாய் - ஓர்
உருவம்.

வாஞ்சசையுடன் வாரியணைத்து
வார்த்தையொன்று பகர்ந்த பின்
மறைந்திற்று

"நீயென்னை புரிந்தவன்
ஆனாலும்
என்பெயரால் கலகமொன்றை
தொடக்கிவைத்தாய் போ!!

பார்ப்பனீயர்கள் போலவே
நீயுமெந்தன்
பெயருக்கு களங்கம் செய்தாய்.

திராவிடத் தோன்றல்கள்
தசாவதானியாய்
திறன்செய்து பகை வென்றோம்.

பொறுக்க முடியாப் பகை
பத்துதலை ராட்சதனாய்
என்னை
உருவகம் செய்திற்று.

வழி வழிவந்த
தலைமுறையும்
செவிவழிக் கதையை
சரியென நம்பிற்று

நீயாகிலும் உண்மையுரை!

காக்காகுருவிகளின்
கலகங்களுக்கு
கதிகலங்கிப் போகாதே!!

களங்களில்
கண்ணியம் காத்து - நம்
திறன் நிறுத்து

புதியதலைமுறைக்கு
புரியும்படி - நம்
பழையகதை உரை

வாழும்வரை
வல்ல தமிழ் வாழ உழை!! "


சொல்லி மறைந்தது
சொப்பனத்தில் வந்த சுடர்.


-தயா ஜிப்ரான் -


Re: பத்து தலைகளும் இருபது கைகளுமாய் ஓர் உருவம்.- தயா ஜிப்ரான் - - shiyam - 02-27-2005

Quote:பார்ப்பனீயர்கள் போலவே
நீயுமெந்தன்
பெயருக்கு களங்கம் செய்தாய்.

காக்காகுருவிகளின்
கலகங்களுக்கு
கதிகலங்கிப் போகாதே!!
இதிலை அப்பு எந்த இனம்


- hari - 02-27-2005

Quote:புதியதலைமுறைக்கு
புரியும்படி - நம்
பழையகதை உரை

வாழும்வரை
வல்ல தமிழ் வாழ உழை!! "

நல்ல கவிதை வாழ்த்துக்கள்!


- sinnappu - 02-27-2005

ஐயோ தொடங்கிறாங்கள் தொடங்கிறாங்கள் அந்தாளை திருப்பியும் இழுக்கிறாங்கள் எங்க போய் முடியப்போதுதோ
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: