Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பேசாப் பொருள் - பால் உறவுகள்
ஹோமோ செக்ஷ¥வல்/ லெஸ்பியன் ?????
பெண்ணாய் மாற விரும்பும் ஆண்களின் கதைகள்- சு.சமுத்திரத்தின் வாடாமல்லி, குஷ்வந்த் சிங்கின் " நியூ டெல்லி" மற்றும் கி.ராவின் ஒரு சிறுகதையைப் படிக்கும் பொழுது, மனதில் பரிதாப உணர்வுதான் ஏற்பட்டது. வட இந்தியாவில் வசித்தப்பொழுது,இத்தகைய ஆண்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால், ரிக்ஷாவில் கும்பலாய் வந்து பாடி விட்டு காசு வாங்கிப் போவார்கள். ஏதோ பிறப்பு மற்றும் ஹார்மோன் கோளாறு என்று இந்த அர்த்தநாரீஸ்வரர்களை சொல்வார்கள். சின்ன பையன்கள் கொஞ்சம் இடுப்பை ஆட்டி நடந்தால், கீச்சு குரல், மீசை இல்லாத முகம் என்றால் ஒன்பதாம் எண் பட்டம் சூட்டப்படும். இவர்களைப் பற்றி பழைய நாகரீகங்களில், கல்வெட்டுகளில் சான்று உண்டு என்று சொல்லப்பட்டது.
ஆனால் கா.நா.சு வின் "பசித்த மானுடம்" மற்றும் சு. சமுத்திரம் அவர்களின் ஒரு மாத நாவல், ஆதவனின் சிறுகதையொன்றிலும் (அ) காமம் அருவருப்பையே உண்டாக்கின. உடலில் கழிவுக்கு என்று ஒதுக்கப்பட்ட துளைகளை வேறு பிரயோகமும் செய்யலாம் என்று இலக்கியம் என்று சொல்ல கூடிய கதைகளில் கண்ணில் விழும் இத்தகைய கதா பாத்திரங்கள் மனபிறழ்வு மனிதர்களாகவே காட்சியளிக்கிறார்கள். ஆனால் தமிழில் லெஸ்பியன்களைப் பற்றி இதுவரை எதுவும் படித்ததில்லை.
என்னுடன் படித்த மாணவி நாங்கள் பார்க்க, பார்க்க ஆணாய் மாறி வந்தாள். முகத்தில் ரோமமும், குரல் கனத்தும் போக ஆரம்பித்தது. ஆபரேஷன் செய்துக் கொண்டு முழு ஆணாய் மாறி விடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தவள், கூட படிக்கும் இன்னொரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததும், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டாள். அவளால் ஒரு ஆணை மணந்து குடும்பம் நடத்த முடியாது என்பது பார்க்கும் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடலாம்.
சிறு வயதில் ஆண் பிள்ளைகள், பெண் போல் நடந்துக் கொண்டால் யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதே ஒரு பெண் குழந்தை ஆணைப் போல நடந்துக்கொண்டால், பெற்றவர்களுக்கு பெருமை பிடிப்படாது.
அடுத்து ஒரு நாள், சயின்ஸ் லேப்பில் டெஸ்ட் டூயூப்கள் காணவில்லை என்று லாப் அசிஸ்டெண்ட் ஆயா வந்து கூப்பாடுப் போட ஆரம்பித்தாள். கடைசியில் அது யார் எடுத்தார்கள் என்று கண்டும் பிடிக்கப்பட்டது. காரணம் ..... ஆயா கத்தியது, அப்பொழுது புரியவில்லை. பிறகு அவைகளை " வேகமாய் ஒருவருக்கு ஒருவர் செலுத்திக் கொள்வார்கள்" என்று சொல்லப்பட்டது. இந்த பெண்கள், லெஸ்பியனா? எனக்கு தெரியவில்லை. "ப்யர்" என்று ஒரு படம் வந்ததே அதைப் போலதானே இதுவும். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டார்கள். இன்றைய நாட்களில், ஆணுடன் பழகுவதால் ஏற்படும் பின் விளைவுகள் இல்லை என்பதால், மாணவிகளில் இத்தகைய செயல் பாடுகள் அதிகரித்து வருகின்றன என்று ஆசிரியை ஒருவர் கூறினார்.
இயற்கையின் குளறுபடியாய் ஆணின் உடல், பெண் மனது அல்லது பெண்ணின் உடலில் ஆண் மனமாய் இருப்பதால், அவர்கள் செய்வது தவறில்லை. தினத்தந்தி, ஜூவி போன்ற பத்திரிக்கையில் இவர்களைப் பற்றிய கட்டுரைகள் வரும். ஆனால் அங்கும் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும்தான் காட்சியளிப்பார். ஓரே குறை குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லுவார்கள்.
ஆனால் உடல் திமிர் பிடித்து ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது எவ்வகையில் சரி? பத்திரிக்கைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் இப்படியும் இருக்கலாம் என்று தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இவை சமூக சீரழிவு என்று குற்றம் சாட்டுகிறேன். அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, நாளை ஊர் முன்னால் சாதாரணமாக திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும், ஒரு சேஞ்சுக்கு பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து, தன் துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.
ஆனால் படித்தவர்கள், சமூகத்தில் அறிவாளிகள் என்று புகழப்படுபவர்கள் இத்தகைய சீரழிகளை தவறில்லை என்று சொல்வதுதான் வேதனையாக இருக்கிறது. சரி என்று சொல்பவர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் தவறு என்று எடுத்து சொல்வார்களா அல்லது அப்படி வாழ்வது ரொம்ப நல்லது என்று ஊர் அறிய ஊக்குவிப்பார்களா?
இங்கு நான் ஆணாய் மாறிய பெண்ணையோ அல்லது பெண்ணாய் மாறிய ஆணையோ சொல்லவில்லை என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.
ராமச்சந்திரன் உஷா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஓரினச் சேர்க்கை என்பது ஒரு fashionable வி்ஷயமில்லை. இங்கே அம்மாதிரியானவர்களை சமூகம் வாரி அரவணைத்துக்கொள்கிறது என்றுமில்லை. இங்கேயும் பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் வித்தியாசமானவர்களாக இருப்பவர்கள் பகிடி செய்யப்படுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய அக்கா பெண் பேச்சு வாக்கில் அவளுடைய பள்ளிக்கூடத்தில் ஒரு பையன் கொஞ்சம் பெண் போல இருப்பதால் பகடி செய்வதாகப் பேச்சு வாக்கில் சொன்னாள். அவளிடம் பெரிய லெக்சர் எல்லாம் அடிக்காமல் இயன்ற அளவு பேசிப்புரிய வைக்க முயற்சித்தேன். இன்னுமொரு மனிதனின் உரிமையை இதுபோன்ற நடவடிக்கைகள் பாதிக்கின்றன என்று சொன்னேன். கறுப்புத் தோல் என்பதால் உன்னைப் பகடி செய்தால் எப்படியிருக்கும் என்றதும் அவளுக்குப் புரிந்துவிட்டது. தன் தோழதோழியர் இனிமேல் அப்படிச் செய்யாமலும் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தாள். அவள் மட்டுமல்ல, என்னுடைய வேறு சில நண்பர்களும் அப்படிப் பேசுகிறார்கள்தான். Girl friend தேவையில்லை. மருத்துவப் படிப்பு முடிந்ததும் பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்று முடிவெடுத்த ஒரு நண்பன் Gayஆக இருப்பானோ என்ற கிசுகிசு ஓடிக்கொண்டே இருக்கிறது. அது அவர்களுக்கு அநாவசியமானது என்று திட்டிக்கொண்டிருக்கிறேன்.
அதையேதான் நான் இங்கேயும் சொல்வேன். இது மற்றவர்களின் உரிமைக்குள் நம் மூக்கைத் திணிக்கும் வேலை.
என்னால் எப்படி இன்னொரு பெண்ணை முத்தமிடுவதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாதோ அப்படி ஒரு ஆணால் இன்னொரு ஆணை முத்தமிடுவதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது இல்லையா? இது ஒரு fashionableஆன வி்ஷயம் இல்லை என்றபோதும், சமூகம் வித்தியாசமாகப் பார்க்கும் என்றெல்லாம் இருந்தும் அதையும் மீறி இந்த வழியில் செலுத்துவது எது? இதுபோன்ற வி்ஷயங்கள் geneகளிலேயே இருக்கிறது என்ற வி்ஷயம் விஞ்ஞானக் கட்டுரைகளைப் படிக்கும்போதோ, விவரணப் படங்களைப் பார்க்கும்போதோ தெரிகிறது. இங்கேயிருக்கும் விஞ்ஞானிகள் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்(சுந்தரவடிவேல்?).
சமூகத்தின் கட்டுப்பாட்டுக்கஞ்சி வேறு பாலாரைத் திருமணம் செய்துகொண்டு அவதிப்படுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களே இம்மாதிரி நீங்கள் சொன்னபடி திருமணம் செய்து குழந்தைகுட்டி என்று பெற்றுக்கொண்டு பிறகு தங்களால் அப்படி இருக்கமுடியாது என்பதை பல வருடப்போராட்டங்களுக்குப் பிறகு உணர்ந்துகொள்கிறார்கள். சமீபத்தைய உதாரணம் நியூஜேர்சி ஆளுநர்.
நீங்கள் சொன்னபடி நெருங்கிய உறவினர் - சகோதரம், பிள்ளைகள் ஓரினப் புணர்ச்சியாளர் என்று வரும்போது அதிர்ச்சியாக இருக்கும். மனித மனம் இல்லையா? நம்மால் நம் பெற்றோர் எப்படி நம்மைப் பெற்றெடுத்தார்கள் என்பதையே யோசிக்க ஒரு மாதிரி இருக்கும். ஏதோ நாம்தான் ஆதாம்-ஏவாள் என்ற நினைப்பு எல்லோரிலும் இருக்கும். சகோதர சகோதரியரை நினைக்கவும் சங்கோஜமாக இருக்கும். நம்மூரில் இரு வேறு பாலார்கள் காதல் வயப்படுவதே பிரச்சனைக்குள்ள வி்ஷயமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர ஊருலகமெல்லாம் கூடிப்பேசி முடிவெடுக்கும் வி்ஷயமாக இருக்கிறது. அதற்குள் கண்டறியாத ஜாதி வேறு.
தம்மைப்பற்றிப் புரிந்துகொண்டு சமூகத்தில் யாருக்கும் பிரச்சினைகொடுக்காமல் முடிவெடுத்து ஒன்றாக இருக்க விரும்புவர்களை நாம் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும். ஒருவரின் படுக்கையறைவரை நாம் ஏன் நம் மூக்கை நுழைக்கவேண்டும்? இதுதான் என்னுடைய கேள்வி!
அப்படி யோசிப்பதற்கு நமக்கு நேரமும் பொழுதும் அக்கறையும் இருந்தால் உலகில் எத்தனையோ வி்ஷயங்கள் இருக்கின்றன.
வன்புணர்ச்சியால் அவதிப்படும் பெண்கள்.
அதைவிட வருத்தப்பட வைக்கும் வி்ஷயம் - வன்புணர்ச்சியால் அவதிபப்படும் குழந்தைகள் - ஆண்குழந்தை பெண்குழந்தை என்ற வித்தியாசம் இல்லாமல் அவதிப்படும் குழந்தைகள்.
இவர்களைப் பற்றி யோசிப்போமே!
அனாதரவாகப் போய் உலகிலேயே முதலாவது தொழில் என்று சொல்லும் விபச்சாரத்தில் விழும் பெண்களைக் காப்பாற்றுவோமே. விருப்பமில்லாமல் கடத்தப்பட்டு உழலும் பெண்களைக் காப்பாற்றலாமே. அவர்களைப்பற்றிக் குரல் கொடுக்கலாமே. வேறு வழியில்லாமல் விபச்சாரத்துக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கலாமே!
போர் என்று வந்துவிட்டால் அதில் முதலில் பலியாவது பெண்கள். Rwandaவில் நடந்த இனப்படுகொலை உங்களுக்குத் தெரியும். அங்கேயும் பெண்கள் வன்முறைக்கு ஆளானர்கள். அவர்கள் விரும்பி அந்தமாதிரி நடக்கவில்லை. ஆனால், பல உபத்திரவங்களுக்கு ஆளான பெண்கள் ஊர்திரும்ப அவர்களை அவர்கள் குடும்பங்களே சேர்த்துக்கொள்ளவில்லை. ஒரு சிலருக்கு குழந்தைகள்கூடப் பிறந்துள்ளன. அவையும் அனாதரவாக இருக்கின்றன. பல பெண்கள் அப்படியே பிரமை பிடித்தாற்போல இருக்கிறார்கள். திரும்ப வந்த மனைவியைச் சேர்ந்துக்கொண்ட ஒரு சில கணவர்களும் அண்டை அயலவர்களுக்குப் பயந்து மனைவியரைத் துரத்திவிடுகிறார்கள்.
இதற்கு ஒரு முடிவு காண உழைக்கலாமே.
இதையெல்லாம் விட்டுவிட்டு அடுத்தவர் வீட்டுப் படுக்கையறைக்குள் நமக்கென்ன வேலை?
-மதி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
உஷா நீங்கள் என்தான் சொல்ல வருகின்றீர்கள். இரு பெண்கள் உறவு கொள்வதோ. இல்லை இரு ஆண்கள் உறவு கொள்வதோ அவர்கள் வேண்டுமென்று செய்யும் ஒன்றல்ல. எனது அலுவலகத்தில் இது பற்றிய விவாதம் ஏற்பட்டது. எல்லோருமே வெள்ளையர்கள். அவர்கள் பார்வை எனக்கு அதிர்சியாக இருந்தது. காரணம் எல்லோருமே ஓரினச்சேர்க்கையை கேலி செய்யும் மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள். நான் ஒரு தமிழ் பெண் அவர்களை எதிர்த்து நின்று வாதிட்டேன். கடைசியாக என்னிடம் கேட்டார்கள் நீ ஒரு பெண்ணுடன் உறவு கொள்வாயா என்று. எனக்குச் சிரிப்பாக இருந்தது. இதன் தொடக்க நிலையைக் கூட அறிந்து கொள்ளாத முட்டாள்களாக இருக்கின்றார்களே என்று. நான் சொன்னேன் எனக்கு அப்படி ஒன்றை நினைத்துக் கூடப்பார்க்க முடியாமல் இருக்கின்றது. காரணம் எனது உடல் மனம் இரண்டும் ஆண்கள் பால் ஈர்ப்புக் கொண்டதாக இருக்கிறது. அதே போல்தான் அவர்களுக்கும். அவர்கள் தனிப்பட்ட உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். மதிக்காவிட்டாலும் பரவாயில்லை கேலியாகவது செய்யாமல் இருக்கலாம்.
தாங்கள் கூறியது போல் பெண்ணும் பெண்ணும் உறவு கொண்டுவிட்டுப் பின்னர் ஒன்றும் நடக்காதது போல் திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்று. எமது கலாச்சாரம் எங்கே ஒருவரின் தனிப்பட்ட உணர்விற்கு மதிப்புக் கொடுத்தது. எத்தனை பெண்கள் தமக்கு விருப்பமில்லாத ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு கடமைக்காக அவர்களுடன் உறவு கொண்டு பிள்ளைப் பெறுவதில்லையா? அதுபோல்த் தான் இவர்களும் சமூகம் குடும்பப்பெயர் என்று தம் விருப்பை விடுத்து வாழ்ந்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.
தாங்கள் இலங்கை எழுத்தாளராக சியாம் செல்லத்துரையின் Funny boy படித்திருந்தீர்கள் என்றால் தெரியும் அவர் மனஉளைச்சல் பற்றி.
நான் சில வருடங்களுக்கு முன்பு ஆதலினால் நாம் எனும் பெயரில் இரு பெண்களுக்கான உறவு பற்றி ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். அதனை தற்போது குறும்படமாக சில மாற்றங்களைச் செய்து எடுத்துக்கொண்டிருக்கின்றேன். இப்படியான உறவு இயற்கையாகவோ இல்லாவிட்டால் சந்தர்ப்ப வசமாகவோ வரலாம் என்பது நான் தேடல் மூலம் அறிந்து கொண்டது. தொடர்ந்து ஆண்களால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு ஆண்கள் மேலான வெறுப்புää பயம் இப்படியான உறவுகளை ஏற்படுத்த வாய்பிருப்பதாகத் தெரிகின்றது. இதற்கு நாம் என்ன செய்யலாம்?
சுமதி ரூபன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
//ஆனால் உடல் திமிர் பிடித்து ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது எவ்வகையில் சரி? பத்திரிக்கைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் இப்படியும் இருக்கலாம் என்று தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன.//
இதோடு முழுதாய் ஒத்துப்போக முடியவில்லை. முதலில் ஆணோடு ஆண் சேர்ந்து வாழ்வது
உடல் திமிர் என்று நீங்களே வரையறுக்கொண்டால் ஒன்று செய்யமுடியாது. பெரும்பாலான சமயங்களில்
இதற்கான தேவை உளவியல் காரணங்களால்தான் எழுகிறது. அல்லது [இக்கரையிலிருந்து ] நம் பார்வையில் மனப்பிறழ்வு அல்லது மனத்திரிபு.
Posted by: karthikramas at February 25, 2005 04:08 PM
ஒரு நல்ல விவாதம் சாத்தியமாகலாம் என்பதாலும், உங்கள் போல் பலர் பிறழ்ந்த (?) கருத்துக்களில் இருக்கலாம் என்பதாலும், வாசிக்க உதவும் என்பதாலும் மேலே சொன்ன சுட்டியில் உள்ளவற்றை இங்கு போடுகிறேன்.
================================
பையனுக்கு மாப்பிள்ளையும், பெண்ணுக்கு மணப...
சமீபத்தில் ராயர் காப்பி கிளப்பில் ஓரினச் சேர்க்கை திருமணம் குறித்து
வேறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. அதெல்லாம் இருக்கட்டும் தி எல் வோர்ட் (The L word) என்றொரு தொலைக்காட்சித் தொடர் வருகிறதே பார்த்தீர்களா?
என்னங்க அதப் பாக்கலன்னா எப்பிடி? நிறைய பேர் அதை பார்த்தால் தன் கருத்தை
மாற்றிக்கொள்வார்கள். மாற்றி கொள்வார்களோ இல்லையோ தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். சும்மா சொல்லக் கூடாது சார் அட அடா!! என்னமா இயக்கி இருக்கிறார்கள் தொடரை. தொடர் முழுக்க சூடு தாங்கல. ஒவ்வொரு பாத்திரமும் கவர்ச்சியா நடிக்க வைத்து நம்மை யெல்லாம் சொக்க வைக்கிறாங்க.
இதெல்லாம் நான் சொல்லவில்லை ;-), ஒரு ரிவியூவில் படித்தேன். ஒரிரண்டு நாட்கள் பார்க்கவும் செய்தேன். பிடித்திருந்தது நடித்த பெண்களை.
சரி விஷயத்துக்கு வருவோம். ராயர்களில் சிலர் ஒரின சேர்க்கை திருமனத்தை ஆதரித்தனர். இவர்களில் பத்ரி,டைனோ போன்றவர்கள் மனிதாபிமானத்தைக் மேற்கோளிட்டு மடல்களை எழுதியிருந்தனர். ரூமியோ "சொல்வது மாதிரி எழுதியிருந்தார். இவரது கேள்வி உண்மையில் இது முறையானதா? உபயோகமுள்ளதா? என்பதுதான். நான் சில மடல்களை மட்டுமே படித்தேன். மற்றவைகளை படிப்பேன்.
கேள்விகளும் சிந்தனைகளும் பின்வருமாறு :
-----------------------------------
1. ஓரினச் சேர்க்கை முறை? சரியா? ஒத்துக் கொள்ளப்படவேண்டியதா? முட்டாள்த்தனமா?
2. ஓரினச் சேர்க்கையில் இன்பம் விளைவது உண்மையா?
3. அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டியது சரியாகுமா? சமூக அங்கீகாரம் தரத் தகுதியானதா?
4. ஓரினச் சேர்க்கையின் மீது நாம் கொள்ள வேண்டிய சரியான பார்வையெது?
1. நமது பழக்கங்கள் அனைத்தும் நாம் இந்த சமூகத்தில் இருந்து பெற்றுக் கொண்டவை. அதாவது
இந்த சமூகத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு நாம் ஒத்துக் கொண்டு கற்றுக் கொண்டவை. எப்படி திருடுதல் கூடாது, கொலை கூடாது என்று கற்றுக் கொண்டோமோ அப்படியேதான் ஓரினச் சேர்க்கை வித்தியாசமானது என்றும் கற்றுக் கொண்டோம். இவைகளை கற்றுகொண்டதானால் நாம் சட்டப்படி ஒரு சிறந்த குடிமகனாய் இருக்கிறோம். வெற்றிகரமான வாழ்க்கையை பெறுகிறோம். எனவே இவற்றை நாம் தலையாய விஷ்யங்களாக போற்றுகிறோம். ஓரினச் சேர்க்கை கூடாது என்று எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்று யோசித்தால் அதற்கு ஒரு சரியான காரணத்தை முன் வைக்க வேண்டும். இதன் பதில் கடைசியில் வருகிறது ;-)
2. அனுபவம் இருந்தால்தான் சொல்ல முடியும் என்று யாராவது சொன்னால் இதற்கு யாரும் பதில் சொல்லமுடியாது. நடப்பவைகளை கண்களை திறந்து பார்த்தால், இன்பம் விளைவது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இல்லையெனில் வேலை மெனக்கெட்டு ஒருவனோ இல்லை ஒருத்தியோ கஷ்டப்பட்டு (??) இதில் ஏன் ஈடுபடவேண்டும்.
3. எந்த புது விஷயமும் அல்லது வித்தியாசமான விஷயமும் முதலில் அங்கீகரத்தை பெறுவது என்பது இயல்பாய் நடப்பது இல்லை. கலிலியோ முதல் நம் சுதந்திரம் வரை அங்கீகாரம் என்பது எடுத்தவுடன் பெறப்பட்டதாய் நமக்கு காட்டவில்லை. சமுதாய அங்கீகாரம் வேண்டும் என்பது எத்தனை முக்கியமோ அதைவிட முக்கியம் சமூக மனிதாபிமானம் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது வேண்டும்.
4. நமது சட்டங்கள் யாவும் மத, மற்றும் இறை நம்பிக்கைகளின் ஊற்றுக் கால்களிலிருந்து வெளிவந்தவையே. எனவேதான் சட்டம் கீதையையும்.பைபிளையும் தினமும் உண்மையின் சாட்சியாக அழைத்துக்கொள்கிறது.ஒரு மதத்தில் பல திருமணம் முறையானதாகவும் இன்னொரு மதத்தில் அது சட்டத்துக்கு புறம்பானதாகவும் இருப்பதை சரியான உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது சட்டத்துக்கு இறைனம்பிக்கையை தாண்டிய அறிவு இல்லை.அல்லது சட்டம் இறையை தாண்டிப் பாயாது என்றும் சொல்லலாம்.இந்து மதத்தில் மனிவியிடம் பிள்ளைப் பேற்றுக்காக தவிர வேறு மற்ற எந்த காரணத்த்க்காகவும் உடலுறுவு வைத்து கொள்வது சட்டப்படி தவறு என்பதை சமிபத்தில் நண்பனிட்மிருந்து அறிந்து கொண்டேன். இந்த சட்டம் எங்கே? நமது நடைமுறை எங்கே?? நாம் சட்டப்படி ஏற்கனவே குற்றவாளிகள்தாம் என்பது நமக்கே தெரியும்.. யாரையும் கேட்கவேண்டியதில்லை. எனினும் நாம் எப்படி சரியானவர்கள் ஆகிறோம்? ஒரு திருமணத்திற்கு மேல் கூடாது என்கிற சட்ட எல்லையைத் தாண்டும் போது ஒரு இந்து சட்டப்படி குற்றவாளி ஆகிறான். ஆனால் ஒரு இசுலாமியருக்கு இச்சட்டம் பொருந்தாது.
எனவே ஓரினச்சேர்க்கையாளர்கள், இறைனம்பிக்கையின் அடிப்படையில் விளைந்த சட்டத்திடம் அங்க்கீகாரம் கேட்பது, மிகவும் தவறான இடத்தில் சென்று முறையிடுகிறார்கள் எனபதாகும். இறைவாதத்தில் எங்கிமே ஓரினச் சேர்க்கையானது ஊக்குவிக்கப்படவில்லை. இந்த காரணத்தைக் கொண்டுதான் ரூமி போன்றவர்கள் இது "இயற்கைக்கு மாறானது" என்கிற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் நடைமுறை பிரச்சினை இறைவாதத்தை பொருட்படுத்தவில்லை என்பதுதான் கண்கூடு.இறைவாதத்தை பொருட்படுத்தாதவர்களிடம் இறைவாத சட்டத்தை ஏற்கசொல்வது சரியானதல்ல. மாறாக அது இறைக்கு விளைக்கும் அவமானமே என்றாகிறது, எனது பார்வையில்.
னமது நோக்கில், இவர்கள் தவறு செய்வது போல் இருந்தாலும் அது தவறு அல்ல என்று பார்ப்பதே சரியானதாக இருக்க முடியும். அதாவது பைத்தியங்களின் பார்வையில் நாம் பைத்தியம் என்பது போல்(அப்பாடா இந்த உதாரணத்தை உபயோகப்படுத்த ஒரு இடம் கிடைத்தது). நாம் பைத்தியமாக ஆகாதவரையில் ஒரு சாதாரண மன நிலையிலிருப்பவரை "பைத்தியம்" என்று சொல்ல நமக்கு மனம் வராது.
நமது பார்வையில் இவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்கள். அவர்கள் பார்வையில் நாமும் அப்படியே என்பதை சிந்திக்க மறக்ககூடாது. இவர்களை அங்கீகரிக்காமல் இருப்பது ஒருவித ஆதிக்க மனப்பான்மையேதான்.
ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. "பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா" என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது.
அங்கீகாரம் கொடுத்தவுடன், ஓரினச் சேர்க்கையாளர்களும் போகிற வருகிறவர்களை வம்புக்கிழுக்காமல் இருக்குமாறும் சட்டம் இயற்றப்படவேண்டும். சரி சட்டப்படி அங்கீகாரம் பெற்றுவிட்ட நிலைமையை ஊதிப் பெருசாக்கி யோசிப்போம்.
பூங்காக்களிளும், வீதிகளிலும் ஓரினர்களின் சேஷ்டைகளை (??) பொறுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் உண்டாகும்.
குடும்பங்களில் இது என்ன விளைவை ஏற்படுத்தும்?
திருமணங்களின் மதிப்பு என்னவாகும்?
நமது பிள்ளைகளின் வளர்ச்சியில் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும்?
அமெரிக்காவில் குடியுரிமைச் சட்டமும் கேள்விக்குள்ளாக்கபடும். அதாவது ஏமாற்றுதல்களுக்கு எளிதில் இது வழிகோலும். உதாரணமாய், நான் மாசாசுசெட்ஸ் சென்று ஒருவருடன் தங்கி அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் , சட்டப்படி(by certificate of marriage) குடுயுரிமையை விண்ணப்பிக்கலாம். சட்டத்தை எதிர்த்து போராட்டம் கூட நடத்தலாம்.
மொத்தத்தில் ஒரு புதிய சமூகமுறையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும். அதனால் ஏற்படும் அழிவுகளுக்கும் நாம் தயாராக வேண்டும். ஆனால் மனிதாபிமானப் பார்வை வேண்டும் என்பதில் எனக்கு சற்றும் தயக்கம் இல்லை.
Posted by: karthikramas
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மதி, சுமதி, கார்த்திக் இது கேலி செய்யும் நோக்கிலோ அல்லது பிறரின் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைக்கும் முயற்சியோ இல்லை. காதில் விழுந்த சங்கதி " ஒருவருக்கு ஒருவர்" என்று மாணவிகள் ஈடுப்படுவது அதிகமாகி விட்டது என்பது. கார்த்திக் சொல்லியதுப் போல, ஏதோ சுகமில்லாமலா அப்படி செய்கிறார்கள்? மீடியாக்கள் ஆளுகை மற்றும் உலகமயமாக்கலின் இன்னொரு வினையா, இப்படியும் உண்டு என்று இதுவரை தெரியாதவர்களுக்கும் தெரிய வைப்பது? திரும்ப சொல்கிறேன், நான் சொல்ல வந்தது "பயர்" படம் போன்ற படங்கள், ரெண்டும் கெட்டான் வயதில் செய்துப் பார்க்கலாமே என்று சொல்லி தருவதுப் போல இருக்கிறது.
உஷா
Posted by: ramachandran usha at February 25, 2005 04:36 PM
நான் அப்படி நிச்சயமாக நினைக்கவில்லை. இது சும்மா செய்து பார்க்கலாம் எனும் விஷயம் அல்ல. உணர்வு ரீதியானது. நிச்சயமாக உங்களாலோ என்னாலோ முடியாது எனும் போது எங்கள் மனம் எப்போதாவது பரீட்சித்துப் பார்ப்போம் என்று நினைக்குமா?
Posted by: Karupi at February 25, 2005 04:47 PM
...நாட்டின் படுக்கையறைகளிலிருந்து அரசாங்கத்தை அகற்ற விரும்புகிறேன் (get the government out of the nation's bedrooms)'' இது கனேடியப் பிரதமர்களில் ஒருவரான ரூடோவின் பிரபலமான வாசகம்.
உடம்பு மற்றும் உடலுறவு கொள்வது இனப்பெருக்கத்தின் நிமித்தம் என்பது நம்பப்படுவதால்தான் 'ஒரு பெண்ணை இன்னொரு பெண் தொடுவதும்' 'உடலில் கழிவுக்கு என்று ஒதுக்கப்பட்ட துளைகளை வேறு பிரயோகமும் செய்யலாம்?' என்பதெல்லாம் 'அதால் என்ன பிரஜோயனம்' என கேட்க வைக்கிறது. நாங்கள் பிரயோயனத்துக்காகத்தான் எல்லாக் காரியங்களையும் செய்கிறோம் என்பது இல்லையே. அப்படி இருக்க, மற்றவர்களில், 'பரிதாபப்படவும்''அனுதாபப்படவும்' நாங்கள் யார்? எனது கறுப்புத் தோழியொருத்தியின் மகன், -துாய கிறிஸ்தவன்- '..அவர்களை எல்லாம் வரிசையில் வைத்து சுடவேண்டும்' என்றான் (வயது 16). கருணையும் நேசமும் போதிக்கிறதாய் சொல்கிற மதங்கள் ஒருவனை இப்படித்தான் ஆக்குமென்றால் யார் மனப்பிறழ்வு உடையவர்கள்? இன்னொரு மனிதரின் உறவில் மூக்குநுழைக்கிற எங்கட values ஐ அவர்களில் போட விரும்புகிற நாங்கள் 'மனப்பிறழ்வு' அற்றவர்களா?
நீங்கள் குறிப்பிடுகிற எழுத்துக்களில் அம் மனிதர்கள் மனப்பிறழ்வு உடையவர்களாய் பட்டார்களெனில் அது எழுதியவர்களுடைய பார்வை, அல்லது உங்களுடைய நம்பிக்ககைளின் வழியான பார்வையில் உள்ள பாரபட்சம்.
உடல் தினவு எடுத்து 'ஒழுங்கான' (ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லாத) மனிதர்கள் செய்யிற வேலைகளிற்கும், இயற்கையின் பொருட்டு செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. 'துணைக்கு துரோகம்' செய்வது நியாயமற்றதுதான். அதேநேரம் சீகரட் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு எல்லோரும் சீகரட் குடிப்பார்கள் என்பதுபோல 'எல்லோரும்' இப்படி ஆகிவிடுவார்கள் என்பது... உண்மையில்லை. அப்படி 'fashion' இற்குச் செய்பவர்கள்தான் நீங்கள் சொன்ன 'அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, நாளை ஊர் முன்னால் சாதாரணமாக திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும், ஒரு சேஞ்சுக்கு பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து, தன் துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.'
ஆனால் அந்தத் துரோகம் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் என்பதைவிட வேறு பெண்களுடன் என்பதே மிகவும் சாத்தியப்படுகிற ஒன்று. ஆகவே அந்த குற்றச்சாட்டும் பயமும் அர்த்தமில்லாதது.
உங்களுடைய கருத்து இங்குள்ள வெள்ளை.கறுப்பர்கள்.தமிழர்களைவிட மாறக்கூடியதன்மையுடையதாய் உள்ளதாகவே நினைக்கிறேன்.
Posted by: பொடிச்சி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நான் சில காலம் தி.க.வில் இருந்த காரணத்தால் எங்களின் கோசம் சில "அந்த" மாதிரி இருக்கும். அதுபற்றி விரிவாகக் கூற தற்போது ஆத்திகனான என் மனம் இடம் கொடுக்கவில்லை! காரணம் கடவுள் இல்லை என்று சொல்லி மெய்ப்பிக்க நாங்கள் தந்த விளக்கங்கள்!
உணர்ச்சிக்கு ஏதாவது வடிகால் போதும்... அது எந்த வழியாக இருந்தால் என்ன என்று நினைப்பதாலேயே இதுபோன்ற ஓரிணப்புணர்ச்சி, பொருந்தாக் காமம், பின்வழி புணர்தல், சுய உதவி.. இப்படிப் பல.
சுய உதவியில் எய்ட்ஸ் போன்ற தொந்தரவுகளும் பிள்ளைப்பேறு போன்ற தொந்தரவுகளும் உறை போன்ற கூடுதல் செலவினங்களும் இல்லாததால் வீடுகளில் தனியறைகளில் தங்கும் இளைஞிகளும் விடுதிகளில் தங்கும் இளைஞிகளும் அதையே நாடுகின்றனர். பெரும்பாலும் காதலர் இல்லாதோரே சுய உதவியை நாடுகின்றனர்! ஆண்கள் என்றாலும் மேற்கூறியவைதான். செலவும் மிச்சம். காதலியைக் கூட்டிக்கொண்டு தெருத்தெருவாய் அலைய வேண்டியதில்லை! பணப்பையின் எடை குறையாது!
சின்ன வயதில் எனக்கு கண்ணில் ஏதோ வலி. என் அப்பா கண் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். எனக்கு 4 அல்லது 5 வயதிருக்கலாம். மருத்துவர் சோதித்துவிட்டு தாதியைக் கூப்பிட்டு ஊசி போடச் சொன்னார். தாதியும் வந்தார். மாத்திரை என்றால் எனக்கு பிடிக்கும். ஊசி என்றால் காத தூரம் ஓடுவேன். என்னை இடது புறம் ஒரு தாதி பிடித்துக் கொள்ள வலது புறம் இன்னொரு தாதி பிடித்துக் கொள்ள என் அப்பா கால்சட்டையை உருவி "சூத்துல போடுங்க" என்றார்! தாதியும் "ஆமாம்.. இது வலி அதிகமுள்ளது. அங்கதான் போடவேண்டும்!" என்றார்! நான் கத்தினேன்.. கதறினேன்.. கேட்பார் யாருமில்லை!!! இருந்த கோபத்தில் தாதியைப் பார்த்து சொன்னேன்," ஏண்டி என் சூத்த பாக்க உனக்கு அவ்ளோ ஆசையா?!!!"
அதன் பின் ஏன் கேட்கிறீர்கள்..? சாதாரணமாய் போட வந்த அவர் நன்றாக அழுந்தப் போட என்னால் 3நாள் இடுப்பை நகர்த்தமுடியவில்லை!!!
எங்கள் தெருவில் ஒரு பாய் இருந்தார். காலையில் லுங்கியோடு வாசலில் நின்று பராக்குப் பார்த்து பல் விளக்கும் என்னிடம் வந்து, "என்ன மாப்ளே...எப்ப கப்பலுக்கு போறீங்க... " என்று ஆரம்பித்து என் இடக்கையைப் பிடித்துக் கொள்வார்! பின் என் கையை ஆட்டியவாறே அங்கு தொட்டுப் பார்ப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம். எதேச்சை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அடிக்கடி அவர் செய்யவே ஒருநாள் துர்வாசரானேன்! அதுக்கப்றம் ஏன் தொட்றார்???
அதேபோல பேருந்தில் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு ஏறி உட்கார்ந்தேன். நல்ல தூக்கம். கண்ணயர்ந்துவிட்டேன். திடீரென கூச்சமாக இருக்க தீடீரென விழித்தால் பக்கத்தில் அமர்ந்திருந்தவரின் கை என் குழாய்ச் சட்டையின் மேல்! அவ்வளவாகக் கூட்டமில்லை. படுவேகம் பேருந்து. வந்ததே கோபம் எனக்கு! அடச்சீ...நீயும் ஒரு மனுசனா என்று சொல்லி திட்டி விட்டு அடுத்த இருக்கை மாறிச் சென்றேன்.
சிங்கை வந்த புதிதில் சில காலம் இரவு வேலை. நான் கருமமே கண்ணாயிருக்க அவ்வப்போது எனக்கு உதவிகள் செய்ய வயதான சீனரை எனக்கு உதவிக்கு அமர்த்தி இருந்தனர். நள்ளிரவு.. கண்கள் சுழற்ற அவரிடம் சொல்லி விட்டு மேஜைமீதே கண்ணயர்ந்தேன். அப்போதும் அதேபோன்றதொரு கூச்சம். எழுந்து பார்த்தால் அவரின் கை!!! அப்போதே எழுந்து வெளியே வந்துவிட்டேன். மறுநாளே பிரச்னையை மேல்மட்டம் சொல்லி... அதை ஏன் கேட்கிறீர்கள்!
சாதாரணமாகப் பெண்கள் பேசத் தயங்கும் விசயத்தை எழுதிய உங்களின் துணிவே துணிவு.
Posted by: மூர்த்தி at February 26, 2005 12:09 PM
எங்களுடைய கலாச்சாரத்தில் பாலியல் என்பது எப்பொழுதுமே வெளிப்படையாக பேசப்படாத பொருளாகவே இருந்து வந்துள்ளது எங்களுடைய உடம்பு பற்றிய விசயங்களும் கூட அப்படித்தான் இத்தகைய மௌனமும் நிலவுகிற நிலைமையில் தான் எமது சமூகம் உள்ளது எடுத்துப் பாருங்கள் Kamasuthira புராதன தென்னிந்திய கோவில்களில் ஒருபால் உறவு சிற்ப வேலைப்பாடுகள் இடம் பெற்றுள்ளதை காண்கிறோம். குறிப்பாக ஜாமி பாரம்பரியத்தில் வரும் தேவாம்சம் மிக்க ஒருபால் உறவுகள் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஓரபால் உறவுகள் என்பது பெண்,ஆண் உறவுகளுக்கான இயல்பான மாற்று என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.
Posted by: ranji at February 26, 2005 10:36 PM
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
ம்ம்ம் மதன் எனக்கும் ஒருயோசனை இருந்தது களத்தில் பாலியல்உறவு சம்பந்தமான ஆரோக்கியமான ஒரு கருத்தாடலை துவக்கலாம் என்று ஆனால் எத்தனைபேர் ஆபாசங்களின்றி அதேநேரம் பெண்கள் வெட்கமினறி கருத்தாடுவார்கள் என்று நினைத்து அந்தயேசனையை நிறுத்தி விட்டேன்
; ;
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மதி கூறியது:
// இதுபோன்ற வி்ஷயங்கள் geneகளிலேயே இருக்கிறது என்ற வி்ஷயம் விஞ்ஞானக் கட்டுரைகளைப் படிக்கும்போதோ, விவரணப் படங்களைப் பார்க்கும்போதோ தெரிகிறது. இங்கேயிருக்கும் விஞ்ஞானிகள் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்(சுந்தரவடிவேல்?). //
இதுவரை தன்பால் புணர்ச்சி விழைவுக்கு அறிவியல் அடிப்படையில் கறாரான ஆதாரம் கண்டறியப்படவில்லை. நீங்கள் பார்த்திருக்கக் கூடியது செய்தித்தாள்களில் அவ்வப்போது வெளியாகும் pseudoscience.
1993 ம் ஆண்டில் சில அறிவியலாளர்கள் (Hamer et al. Science, 261, 321 (1993)) ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்பால்புணர்ச்சியாளர்களாக உள்ள சகோதரர்களின் X க்ரோசொம்களின் மரபணுத் தொடர்புகளை ஆராய்ந்து அதற்கான மரபணு Xq28 locus (இதற்கு தமிழில் என்னவென்று சொல்லத் தெரியவில்லை) இல் உள்ளதாக மொழிந்தனர். இந்த தொடர்பு பெண்களிடம் இல்லை என்றும் அவர்களே இன்னொரு ஆய்வில் தெரிவித்தனர். இந்த கருதுகோள் இரு வேறு ஆய்வுகளில் மறுதலிக்கப்பட்டுவிட்டது (Rice et al. Science 284, 665(1999)). ஆகவே தன்பால்புணர்ச்சி விழைவுக்கான உயிரியல்/உடலியல் தொடர்பு இதுவரை நிறுவப்படவில்லை என்றே கொள்ள வேண்டும் (தன்பால்புணர்ச்சியாளர்கள் விழைவுக்கும், அலிகளுக்கு ஆண்கள் மீதான கவர்ச்சிக்கும் வேறுபாடு உண்டு). சூழ்நிலைக் காரணங்களும், அவை உருவாக்கும் உளவியல் காரணங்களும் இருப்பதற்கான ஆதாரங்கள் உண்டு.
ஆகவே ராமச்சந்திரன் உஷா தன் பிள்ளைகளை முன்வைத்துச் சொல்லும் அக்கறைகளில் நியாயம் உள்ளதாகவே படுகிறது. அதே போல அவர் சொல்வது போல ஊடகங்கள் இதை இன்னும் பரவலாக்குவதும் சாத்தியம். இப்போது பொதுத்தளத்தில் (இங்கும், பிற இடங்களிலும்) நடக்கும் விவாதத்தில் அறிவியல் சுத்தமாக இல்லை. அரசியல் தான் உண்டு. அதற்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை.
சுந்தரமூர்த்தி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தற்பால் நாட்டம்
ராமச்சந்திரன் உஷா இன்றைய வலைப்பதிவில் ஹோமோஷெக்வல்/லெஸ்பியன் என்ற தலைப்பிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். சில ஆணித்தரமான கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். அதை முன்வைத்து சில எண்ணங்கள்;
<i>உஷா சொல்லியிருப்பது
ஆனால் உடல் திமிர் பிடித்து ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது எவ்வகையில் சரி? பத்திரிக்கைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் இப்படியும் இருக்கலாம் என்று தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இவை சமூக சீரழிவு என்று குற்றம் சாட்டுகிறேன். அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, நாளை ஊர் முன்னால் சாதாரணமாக திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும், ஒரு சேஞ்சுக்கு பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து, தன் துணைக்கு துரோகம் செய்கிறார்கள். </i>
மதி கருத்துப் பகுதியில் சொல்லியிருப்பதைப் போல கனடாவிலோ, அமெரிக்காவிலோ வசிப்பராக இருந்தால் இதைவிட இன்னும் கடுமையான வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். இனி, உஷா சொல்லியிருப்பதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இது தற்பாலர்களைக் குற்றம் சாட்டுபவர்கள் வழக்கமாக கூறும் அதே வார்த்தைகள்தான். இங்கே எவ்வளவு குழப்பம். இருக்கிறது.
"ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக்கொண்டு" - ஒருவரையொருவர் என்று வந்தவுடனேயே இதில் தவறு இல்லை என்றாகிவிடுகிறதல்லவா? ஒருவர் மற்றவரை என்றிருந்தால் வேண்டுமானால் ஏமாற்றப்பட்டவருக்கு ஆதரவாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. மனமொத்து இருவர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதில் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை. (என்னுடைய நண்பன் ஒருவன் திருமணமே இப்படித்தான் என்று சொல்வான்).
அப்படி ஒருவர் ஏமாற்றப்பட்டிருந்தால், இது வழக்கமான கற்பழிப்பு, ஏமாற்றல் போன்ற அதே எல்லைக்குள்ளே வந்துவிடும். இதைக் கையாள, தீர்ப்பு சொல்ல தற்பால் சமாச்சாரம் தேவையில்லை.
"அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும்" - சின்னவீடு வைத்துக்கொள்வதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மீண்டும் அதே எல்லைக்குள்ளே நிறுத்தி இதை விவாதித்தால் போதும். தற்பால் சமாச்சாரம் தேவையில்லை.
"பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து" - இதற்கு ஒரு விசேடப் பெயர் இருக்கிறது. இருபால்நாட்டம் (Bisexuality). இது வரையறையிலேயே கற்பு என்ற சமாச்சாரத்தைக் கீழேபோட்டுமிதித்துக் கொண்டு நிற்பது. இதைப்பற்றிய தீர்ப்புகளுக்கு "பலதாரம்" (Polygamy) - பார்த்தீர்களா, polygamy என்று எளிதாக மேற்கத்தியர்கள் சொல்வதற்கு நாம் 'தாரம்' என்ற திருமணம் சார்ந்த பிரயோகத்தை நாடி நிற்க வேண்டியிருக்கிறது. பல்இணைநாட்டம் கொண்டவர்களுக்கு நம் சமூகத்தில் என்ன மதிப்பு கொடுக்கிறோமோ அதே மதிப்பை இருபால்நாட்டம் கொண்டவர்களுக்கும் தரலாம்
இங்கே நான் உஷா சொல்லியிருப்பதை வார்த்தைக்கு வார்த்தை வெட்டி வாதிடமுற்படவில்லை. பொதுவில் தற்பாலர்களைச் சுட்டுப் பொசுக்கவேண்டும் ரீதியில் பேசுபவர்கள் எல்லோருமே இப்படித்தான் குழப்பமாக எல்லா விழுமியங்களையும் அவர்கள் மீறுவதாக மேம்போக்காகச் சொல்லிவிடுவார்கள்.
* * *
நம்முடைய சமூகம் சார்ந்த சில விழுமியங்களைப் பார்ப்போம். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெமினிகனேசன், கமலஹாசன், குன்னக்குடி வைத்தியநாதன் என்று தொடங்கி வரிசையாக நம் சமூகத்தின் 'தலைமகன்கள்' இருக்கிறார்கள். இவர்களை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம், இந்த சமாச்சாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆராதிக்கிறோம். பிரபலங்களை விடுத்து எல்லோருடைய சொந்ததிலும் கொஞ்சம் தேடிப்பார்த்தால் யாராவது ஒரு 'வீரியமுள்ள் ஆண்மகன்' இருப்பார். இதை ஆண்கள் மாத்திரமல்லாது பெண்களும் போற்றுவதையும் பார்த்திருக்கிறேன். இவர்களால் கெட்டுப்போகாத நம் சமூகம் 'ஒழுக்கமாக' ஒற்றைத் தற்பால் துணையுடன் வாழும் ஆண்களாலோ, பெண்களாலோ கெடப்போவதில்லை என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
தற்பால் சமாச்சாரத்தை வைதீக இஸ்லாமியர்கள், கத்தோலிக்கர்கள் எதிர்க்கும் தீவிரத்துடன் இந்துக்கள் எதிர்க்க முடியாது ஏனென்றால் நம் எண்ணிலடங்காத புராணங்களில் எல்லாவற்றுக்குமே எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. பலதாரத்தை ஆதரிக்கும் இஸ்லாமியர்கள் இந்த இடத்தில் உறுதியாக இருப்பதைப் பார்க்கலாம்.
எனக்குத் தெரிந்து இங்கே பல தற்பாலர்கள் ஒழுக்கத்தோடும், கண்ணியத்தோடும் இருக்கிறார்கள். என் மனைவியின் அலுவலில் அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் பெண் அப்படிப்பட்டவர்தான். எனக்கு அடுத்த நாற்காலியில் உட்காரும் புண்ணியவானுக்கு கல்யாணம் ஆகி, அவர் பையனுக்கு இன்னும் ஒரு வருடத்தில் கல்யாணம் ஆகப் போகிறது. ஆனால் அவர் கைவைக்காத இடம் கிடையாது (இவருக்கு மற்றவர்கள் முன்னால் 'கைவைப்பதில்' கூடுதல் ஆர்வம். ஒரு விசேடம் என்னவென்றால் இவர்கூட தற்பாலர்களையெல்லாம் வரிசையில் நிற்கவைத்துச் சுடவேண்டும் என்று சொல்வார். என்னுடைய அந்தரங்கங்கள் பற்றி நிறைய கேள்விகளைத் தயக்கமில்லாமல் கேட்பார். இதற்கு வேண்டா வெறுப்பாக நான் சொல்லும் விடைகள் (திருமணத்திற்கு முன்பு எனக்கிருந்த தொடர்புகள் (இல்லாத என்று படிக்கவும்), இப்பொழுது நான் செய்யும் (செய்யாத என்று படிக்கவும்) மேலதிக சில்மிஷங்கள்) எதிலுமே இவருக்கு நம்பிக்கையில்லை. எனென்றால் இவர் தன்னைப்போலவே பிறரையும் பார்ப்பவர்.
மறுபுறத்தில் என் மனைவியின் நண்பியை நான் சந்தித்திருக்கிறேன். அவருக்கு எனக்கும் என் மனைவிக்கும் இடையிலிருக்கும் பரஸ்பர புரிதல்கள் மீது முழு நம்பிக்கையிருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்!
* * *
சிலபேர் இயற்கையிலேயே அப்படித்தான், அவர்களை நான் சொல்லவில்லை. ஊடகங்களைப்பார்த்துக் கெட்டுப்போனவர்களைத்தான் - ரீதியில் சப்பைக்கட்டுகளும் வழக்கமாக வருவதுதான். ஆனால் தீர்ப்பென்னவோ ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும்தான். இவர்கள் ஒட்டுமொத்தமாக தீர்ப்புகளை வழங்குவது இயற்கையிலேயே உளவியல்/உடற்கூறியல் ரீதியாக மறுபாலர்களிடம் நாட்டமே இல்லாதவர்களையும் பாதிக்கிறது என்பதை பலர் அறியமாட்டார்கள்.
மறுபடியும் - அப்படி ஊடகங்களைப்பார்த்து தற்பால் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை - சினிமா பார்த்துவிட்டுக் கொலைசெய்பவர்கள், பத்திரிக்கையில் கற்பழிப்பு செய்தியைப் படித்துவிட்டுக் கற்பழிப்பவர்கள் இன்னபிறர்களுக்கு என்ன மரியாதை/தண்டனை தருவீர்களோ அதே ரீதியிலேயே கையாளலாமே. இந்த இடத்தில் தற்பாலர் என்று ஏன் தனித்துப் பார்க்கவேண்டும்.
* * *
தவறான புரிதல்களின் காரணமாக திருமணத்தில் நிர்ப்பந்திக்கப்பட்டு தங்கள்/பிறர் வாழ்க்கையைச் சீரழித்தவர்கள் (சீரழிக்கத் தூண்டப்பட்டவர்கள்) பலரை எனக்குத் தெரியும். இதேபோல பிரபலங்களுக்கு மத்தியிலும் உண்டு. கணினிகளுக்கு வித்திட்ட அலன் டூரிங், ஓவியர் பூபேன் காக்கர் இவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டர்கள் என்று என்னுடைய பழைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.
இனி முக்கியமான கேள்விக்கு வரலாம். சமீபத்தில் ஏன் இவர்களது எண்ணிக்கை/நடவடிக்கை அதிகரித்திருக்கிறது?
இந்தியாவில் என்னுடன் கூட கல்லூரியில் படித்த நண்பனின் தகப்பனார் (அப்பொழுது அவருக்கு 55 வயது) ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லோருடைய ஆடைகளுக்குள்ளும் இருப்பதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்படுபவர். இவரைப்போல பலரை வைதீக குடும்பங்களுக்குள்ளே நானே சிறுவயதில் கண்டிருக்கிறேன். என் நண்பரின் அப்பாவைப் பற்றி எங்கள் வட்டாரங்களிலேயே நாங்கள் மறைமுகமாக ஒருவரையொருவர் எச்சரித்துக் கொள்வோம். இப்பொழுது ஊடகங்களின் பெருக்கத்தின் காரணமாக எல்லா தகவல்களும் பெருகியோடுவதைப் போல இந்தத் தகவல்களும் பெருகியோடுகின்றன. அவ்வளவுதான். இதில் எண்ணிக்கை அதிகரிக்கிறது, குறைகிறது என்றேல்லாம் சொல்ல முடியாது (சும்மா கையைக் காட்டிப் பேசலாமேயொழிய தரவுகள் கிடையாது).
வெறும் உளிவைத்துச் செதுக்குவது மாத்திரமே 'மீடியா'வாக இருந்த காலத்திலேயே நம்மூர் கோவில்களில் இதெல்லாம் நிறைய செதுக்கிவிட்டார்கள். எனவே 'மார்டன் மீடியா'-வை மாத்திரம் குறைசொல்ல முடியாது.
<i>இனி அதைவிட முக்கியமான கேள்வியொன்று மீதமிருக்கிறது? அதைக் கேட்டவர் கார்த்திக் ராமாஸ்
ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. "பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா" என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது. </i>
இதற்கான பதிலைப் பின்னர் எழுதுகிறேன். (இப்பொழுது நேரம் போதவில்லை).
venkat
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஓருபால் உறவுகள்
பேசாப் பொருளை பற்றி பேச ஆரம்பிக்கின்ற போது வார்த்தைகளும் பிரச்சினைக்குரிய பொருளாகிவிடுகின்றன. புதிய வார்த்தைகள் தேவைப்படுகின்றன. Homosexuality,Sexism Gays and Lesbians,Hetero போன்ற விஷயங்கள் எமது காலச்சாரத்திற்கு புதியவை அல்ல என்றாலும் அவை பேசாப்பொருள்தான்
இந்தியாவில் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கனடாவில் ரொறன்டோ நகரில் வாழ்ந்து வருகிற பெண்நிலைவாதி இனவாத எதிர்ப்பு போராளி லீலா ஆச்சார்யா ஒருபால் உறவில் ஈடுபட்டிருப்பவர் ஓருபால் உறவுகள் எமது சமூகத்தையோ அல்லது மனித குலத் தொடர்ச்சியையோ அழிக்கப்போவதில்லை ஒருபால் உறவினராகிய நாம் காலங்காலமாக பெற்றோர்களாகவும் குழந்தைகளைப் பேணுபவர்களாகவும் இருந்து வந்திருக்கிறோம். இருந்து வருகின்றோம். மற்றைய எல்லாச் சமூக அங்கத்தவர்களைப் போலவே நாமும் ஆக்கபூர்வமான படைப்பாற்றல் மிக்க அங்கத்தவர்கள்.
லீலா ஆச்சார்யா
பேசாப் பொருளைர் பற்றி பேச ஆரம்பிக்கின்ற போது வார்த்தைகளும் பிரச்சினைக்குரிய பொருளாகிவிடுகின்றன. புதிய வார்த்தைகள் தேவைப்படுகின்றன. Homosexuality,Sexism Gays and Lesbians,Hetero Se போன்ற விஷயங்கள் எமது காலச்சாரத்திற்கு புதியவை அல்ல என்றாலும் அவை பேசாப்பொருள்தான்
இந்தியாவில் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கனடாவில் ரொறன்டோ நகரில் வாழ்ந்து வருகிற பெண்நிலைவாதி இனவாத எதிர்ப்பு போராளி லீலா ஆச்சார்யா ஒருபால் உறவில் ஈடுபட்டிருப்பவர்
லீலா ஆச்சார்யா இப்படி கூறுகின்றார். ஓரு பெண் என்ற முறையிலும் மற்றும் பெண்ணிலைவாதி, ஒருபால் உறவில் ஈடுபட்டிருப்பவள் என்ற முறையிலும் தென்னாசியக் கலாச்சாரத்தின் பல அம்சங்கள் என்னை ஒடுக்குவதாகவே நான் உணர்கிறேன்.எனினும் நான் முற்றாகவே தென்னாசியக் கலாச்சாரத்தை ஒதுக்கி விடுகிறேன் என்பது அல்ல இதன் அர்த்தம் எனது கலாச்சாரத்திலிருந்து முக்கியமானதும் ஆதர்சம் மிக்கதுமான விஷயங்களை நான் எடுத்துக் கொள்கிறேன் ஒடுக்குமறை அம்சங்களை மாற்ற என்னாலியன்றவரை தீவிரமாக முயல்கிறேன். நான் பரோபகார ஆணாதிக்கவாதிகள் (Benevolet Patriarchs) என்று அழைப்பதையே விரும்புகிறேன். ஏனெனில் புரிந்துணர்வுள்ளவர்களாகவும் கனிவு மிக்கவர்களாகவும் ஆண்கள் இருந்த போதிலும் பெண்கள் என்று வருகிற போது பால்வாதிகளாகவும் ஆணாதிக்கவாதிகளாகவும் தான் இவர்கள் இருக்கிறார்கள்.
ஓருபால் உறவுகள் எமது சமூகத்தையோ அல்லது மனித குலத் தொடர்ச்சியையோ அழிக்கப்போவதில்லை ஒருபால் உறவினராகிய நாம் காலங்காலமாக பெற்றோர்களாகவும் குழந்தைகளைப் பேணுபவர்களாகவும் இருந்து வந்திருக்கிறோம். இருந்து வருகின்றோம். மற்றைய எல்லாச் சமூக அங்கத்தவர்களைப் போலவே நாமும் ஆக்கபூர்வமான படைப்பாற்றல் மிக்க அங்கத்தவர்கள்.
தன்னுடைய நண்பன் ஒருவனுடனான உறவைப் பற்றிக் குறிப்பிடும் போது தானும் தனது நண்பனும் மிக நெருக்கமானவர்கள் என்றாலும் அவனுடன் ஒன்றாகப் படுத்தெழும்பமுடியாது என்று ஒரு தமிழ் ஆண் சொன்னார் இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று லீலா ஆச்சார்யாவிடம் வினவ கேள்விக்கு அவர் இப்படி பதில் கூறுகிறார்.
அப்படி என்றால் இவர்கள் உணர்ச்சிபூர்வமாக நெருக்கமானவர்கள் அல்லர் பாலியல்hPதியாகவும் அல்ல என்று தெரிகிறது. உண்மை என்னவென்றால் பாலியல்hPதியாகவும் ஒருவரோடு ஒருவர் நெருக்கமான ஆண்கள் உள்ளனர் என்பதே. ஆனால் இதனை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள இல்லையோ ஆனால் இது உண்மை. ஓருபால் உறவு வெறுப்பு ((HOMOPHOBIA) ) என்பது ஒருபால் உறவு பற்றிய பயமும் மறுப்புமே ஆகும். இது உள்ளார்ந்தும் இருக்கலாம் வெளிப்படையாகவும் இருக்கலாம். தனது நண்பனுடன் மிக நெருக்கம் ஆனால் படுத்தெழும்ப மாட்டேன் என்று சொல்வதும் ஒருவகை உள்வாங்கிய ஒருபால்உறவு வெறுப்பே ஆகும் இது உள்வாங்கிய உள்ளார்ந்த இனவாதம் போன்றது தான்.
அடிப்படையான தளத்தில் மனிதர்கள் விலங்குகளைப் போல என்பது சரிதான். வுpலங்குகளைப் போலவே சில அடிப்படையான உள்ளுணர்வுத் தாண்டல்கள் எமக்கும் உள்ளன. உதாரணமாக அபாயத்தை உணர்ந்து கொள்வது இதுபொலவே உணவு,நீர் இருப்பிடம் போன்றவை தொடர்பாகவும் விலங்குகளைப் போலவே எமக்கும் அடிப்படையான தேவைகள் உள்ளன. மனிதர்களுடைய மூளையின் அமைப்பு அவர்களை மேலும் சிக்கலானவர்களாக ஆக்குகிறது. வுpசயங்களை பகுத்தாய்வு செய்ய எங்களால் முடிகிறது. புலதரப்பட்டதும் பல தளப்பட்டதுமான அனுபவங்களையும் உணர்வுகளையும் மற்றைய மனிதர்கள் தொடர்பாக நாம் பேணமுடிகிறது. ஏனவே மனிதர்கள் மகிவும் இலகுவான விலங்கியல் உள்ளுணர்வுத் தூண்டல்களுக்கும் நடத்தைகளுக்கும் அப்பாலானவர்கள் என்பது தெளிவு.
ஓருபால் உறவுகள் என்பன மிகவும் இயற்கையானவையே இத்தகைய உறவுகள் இயற்கைக்கு மாறானவை என்னும் வாதம் பிற்போக்காளர்களாலும் வலது சாரித் தீவிரவாதத்தாலும் திருச்சபையினராலும் வழமையாக முன்வைக்கப்படும் ஒன்று. குழந்தைகளை பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளும் பெண்கள் தொடர்பாகவும் திருச்சபையும் அரசம் இது இயற்கைக்குமாறானது ஏனும் வாதத்தை முன்வைக்கின்றன.
இந்த வாதத்தின் அடிநாதம் என்ன வென்றால் பெண்களுக்கு அவர்களுடைய வாழ்வின் குறிக்கோள் குழந்தைகளை பெறுவது தான். என்பதாகும். உண்மையில் குழந்தைகள் பெறுவது எநன்பது பெண்களுடைய உயிரியல் உரிமையாகும். இந்த உரிமைக்கு எப்போது அர்த்தம் எற்படுகின்றது என்றால் குழந்தைகள் பெறுவதைத் தீர்மானிப்பது நாங்களாக அதாவது பெண்களாகிய நாங்களாக இருக்கும்போது மட்டுமே.
உஷாவின் கட்டுரையைப் பார்த்தவுடன் எனக்கு இந்த நேர்காணல் நினைவு வந்ததில் அதில் சிறுபகுதியை இங்கு தந்துள்ளேன். மிகுதிநேர்காணலையும் தர முயற்சிக்கின்றேன்.
நன்றி சரிநிகர் 1995
நேர் கண்டவர் சேரன்
றஞ்சி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஹோமோ செக்ஷவல்,/லெஸ்பியன் ???????? (தொடர்ச்சி)
பெட்டை, கறுப்பி, உருப்படாதது நாராயணன் இவர்களின் வலைப் பதிவுகளைப் படித்ததும், சமீபத்தில் காதில் விழுந்த இரு சிறுமிகளின் கதையையும் கேட்டதும் தான், இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன். இன்று வெங்கட், கண்ணன், ஷ்ரேயா களத்தில் குதித்துவிட்டார்கள். மொத்தமாய் பதில் சொல்லி விடுகிறேன் -
பள்ளியில் அந்த பெண்கள், வகுப்பு முடிந்ததும் கட்டி பிடித்துக் கொண்டு முத்தமிட்டுவிட்டுதான் பிரிகின்றனவாம். என் மனம் அவர்களின் சொந்த விஷயம் என்று சொன்னாலும், மகளிடம் அந்த பெண்களின் சகவாசமே வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறேன். நம்மை பாதிக்காவிட்டால் சரி என்ற ஒரு சாதாரண மத்திய வர்க்கத்தின் கோழை மனப்பான்மை, பயம்தான். இங்கு மறுமொழி சொன்னவர்களின் படிப்பறிவு, இருக்கும் இடமும், பழகும் மக்களும், இயங்கும் தளமும் என்னை விட பலப்படி மேலானது. ஒரு டீன் ஏஜூம், இன்னொன்று டின் ஏஜ்ஜூல் நுழைந்துக் கொண்டு இருக்கும் குழந்தைகளை வைத்துக் கொண்டு, இன்னும் பழைய சித்தாந்தப்படி வாழும் ஒரு பெண்ணின் பயமே இந்த பதிவு. அமெரிக்காவில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் இதைத்தான் சொல்லுவேன்.
திரும்ப, திரும்ப என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்று, தற்காலிக தீர்வாய் இப்படி நடந்துக் கொள்ளுவது, மீடியாக்களின் கைங்கரியமா? இல்லை என்று சொல்பவர்களுக்கு, சினிமா போன்ற மீடியாக்களைப் பார்த்து சில விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று ராகவேந்திரரும், அண்ணாமலையார் கோவில் பிரபலம் ஆனதிற்கு யார் காரணம்? ராதிகா போடும் தாலி சங்கிலியில் முகப்பு வைத்துப் போடுவதைப் பார்த்து நம் ஊரில் அப்படி போடாத தாய்குலத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். குஷ்பூ போடும் ரவிக்கையை, தேடி, தேடி அலையும் கும்பலை பாண்டிபஜாரில் இன்றும் காணலாம். அட்டை கத்தி வீரமும், வாய் பந்தல் வசன சினிமாவையும் வைத்து ஆட்சியையே பிடிக்கவில்லையா? எண்பதுகளில் வெளி வந்த அலைகள் ஓய்வதில்லை, கன்னுகுட்டி காதலையும், கிளிஞ்சல்கள், மரோ சரித்திரா போன்ற படங்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்துக் கொள்ளுவதையும் சொல்லி தரவில்லையா?
காமம் என்பதை கண்டுக்காமல் விட்டு விட்டால், நீறு பூத்த நெருப்பாய் அடங்கியிருக்கும். தீனிப் போட ஆரம்பித்தால் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கும். சுய கட்டுப்பாட்டை குழந்தைகளுக்கு இதை சொல்லி தர வேண்டும் என்பது என் எண்ணம். சுய பழக்கங்களும், ஓரின பழக்கமும் தவறில்லை என்று சொல்ல ஆரம்பித்தால், எல்லாமே தவறில்லை என்ற எண்ணம் வராதா? இந்த என் எண்ணம் சரியா தவறா?
கமலஹாசன் போன்ற பெரிய ஆட்களின் தனிமனித ஒழுக்கம் பற்றி சொல்லப்பட்டது. அது சமூகத்தில் பெரிய மனிதர்களின் பொதுவான குணம். ஆனால் மத்திய வர்க்கத்தில் கணவன், மனைவி,பிள்ளைகளுக்கு இதுதான் வாழ்க்கை முறை என்று எழுதப்படாத சட்டம் உள்ளது. ஒருவர் தவறினாலும் அது எல்லாரையும், ஏன் குடும்பத்தில் கூட பிறந்தவர்கள், மச்சான், மச்சினையைக்கூட பாதிக்கும். செக்கு மாடு வாழ்க்கைதான். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், என் விருப்பப்படிதான் வாழுவேன் என்பவர்களை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுவதில்லை. எல்லாரும் நாடகமாடிக்கொண்டு, வாய் பேச்சில் சவடால் விட்டுக் கொண்டும் பொய் வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் என்று சில அறிவுஜீவிகள் குற்றம் சாட்டலாம்,. ஆம், அது உண்மைதான். குடும்பத்துடன் இணைந்து வாழ அப்படி ஒரு முகமூடி தேவைத்தான் இல்லை என்றால் ஹிப்பியாகவோ அல்லது காட்டிலோ போய் உட்கார்ந்துக் கொள்ள வேண்டியதுதான்.
கண்ணன் சாரும் தன் பங்கிற்கு பல கேள்விகளைக் கேட்டுள்ளார். கல்யாணம் மிக தேவைத்தான். ஆட்டம் போடும் ஆண்கள் எல்லாம், ஒரு காலக்கட்டத்தில் மனைவி சொல்லே மந்திரம் என்று அடங்கிவிடுகிறார்கள். வயது, இளமையும் இருக்கும்வரையில் எவ்வளவு வேண்டுமானாலும் ஆடலாம். நான் யாருக்கும் அடங்க மாட்டேன் என்று தன் போன போக்கில் திரிந்தவர்களின் கடைசி காலம் பரிதாபத்துக்குரியதாகிவிடுகிறது. ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு சலிப்பு என்கிறீர்கள், காரணம் எதிர்பார்ப்புகள். மனைவியோ, கணவனோ மற்றவர்களை மதித்து வாழ்ந்தால் வாழ்க்கை என்றுமே இனிக்கும். கொஞ்சம் வம்பு, சண்டை, பிறகு ஊடல், பின்பு கூடல் என்று வாழ்க்கைப் போய் கொண்டு இருக்கிறது. நேற்று நடந்ததை நினைத்து குற்றமனப்பான்மையுடன் வாழாமல், நாளைய தினத்தை நினைத்து கனவுகளை, கற்பனைகளையும் வளர்த்துக் கொள்ளாமல், இன்று இந்த நிமிடம் சந்தோஷ மனத்துடன் இருந்தால் போதும்- ரஜனீஷ் சொன்னது.
ஒரு சமூகத்தில் வாழும் பொழுது, சில கட்டுப்பாடுகள் அவசியம். சில பொய்கள், சமரசங்கள் வாழ்க்கையை இனிமையாக்குகின்றன. முன்பு சி·பி வெங்கடேஷ் எழுதிய "நன்றி சுனாமி" பலராலும் வெகுவாய் அலசி ஆராயப்பட்டது. ஜெயமோகன் அவர்களும் பிராமண மத்தியவர்க்கத்தின் மனநிலைமை இது என்றார். ஆனால் இதில் குல வித்தியாசம் எதுவுமே எனக்கு தெரியவில்லை. நாளையதினத்தைக் குறித்து கவலைப் படும் அனைத்து இன, குல மத்தியமரின் சுயநலமான மன நிலைமைத்தான் அது.
வயதிற்கு வருவதற்கு முன்பு கணவனை இழந்த என் உறவு பெண் ஒருவர், பிறகு படித்து ஆசிரியை ஆகி, கூட வேலை செய்யும் வேறு சாதி ஆசிரியருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரை யாரும் எதுவும் சொல்லவில்லை. அவள் உணர்வுகளை மதித்தார்கள். எல்லா வீட்டு விசேஷங்களிலும் அவர் கலந்துக் கொள்வார். இரண்டு வருடத்திற்கு முன்பு எண்பதாவது வயதில் காலமானார். இதை தவறு என்று சொல்லாத மத்திய வர்க்கம் ரோமியோ அஜீத்துக்கு ஷாலினி கிடைத்ததுப் போலவோ அல்லது குஷ்பூ, ராதிகா போலவோ வாழ்க்கை அமைத்துக் கொள்ள ஒரு பொழுதும் இடம் தராது. இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓரே நியதி.
கண்ணன் சார், என் தைரியத்தைப் பாராட்டியிருக்கிறார். இனி நிஜமாகவே தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாரும் எல்லா விஷயமும் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பொதுவில் செல்ல பெண்கள் பயபப்டுகிறார்கள். காரணம் இத்தகைய ஆழமான அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களை பெண்கள் பேசினால், பல ஆண்களுக்கு பிடிப்பதில்லை. பெண்களை எந்த விஷயத்தில் தாக்கினால், சுருண்டு விழுவார்கள் என்பது அவர்களுக்கு அத்துப்படி.
பெண்களின் மன உணர்வுகளை இதுவரை யாருமே சரியாய் வெளிப்படுத்துவதியதில்லை என்று நினைக்கிறேன். மங்கையர் மலரைப் போல புடைவை, நகை அல்லது பக்தி போன்றவை எழுதுகிறார்கள். இன்னொரு புறம் பெ·மீனா போல, பெண்ணுரிமை என்ற பெயரில் வறட்டு தத்துவம். பெண்கள் பேச்சு, ஆண்கள் பேச்சு என்று எந்த வித்தியாசமும் இல்லை. வானத்தின் கீழ் இருப்பவை அனைத்து அலசி,
தோய்த்து பிழிந்து காய வைக்கப்படும். ஒரு அழகான பெண், அவளின் உடல் அழகு, கூந்தல், நிறம் போன்றவற்றை ரசிக்கும், பாராட்டும் முதல் நபர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள். பிற பெண்களின் ஏதாவது ஒரு அழகு அதிகமாய் இருந்தால், பார்க்கும் பெரும்பாலானப் பெண்கள் அதை பாராட்டி ஒரு வார்த்தையாவது சொல்லி விடுவார்கள்.
ஆனால் நான் இணையத்தில் எழுத ஆரம்பித்த நாளில் இருந்து, பல்வேறுவிதமான தாக்குதலை எதிர்க் கொண்டாலும், அனைத்துமே நேர்மையாய் நடந்தவைதான். திட்டினாலும் முகமூடி அணியாமல் நேராய் நீ எழுதியது தவறு என்றுத்தான் சொன்னார்கள். பின்னால் என்ன பேசினார்கள் அல்லது பேசப் பட்டது என்பது எனக்கு தெரியாது :-)). ஒரு வேளை ஆரம்பம் முதல் சண்டைக்காரி என்ற பெயர் எடுத்ததாலோ என்னவோ? இதுவரை பெரிய பிரச்சனை எழவில்லை.
கண்ணன் சார், உங்களின் கடைசி கேள்விக்கு பதில்- ஒன்றிரண்டு காதில் விழுந்துள்ளது. இதிலும் ஆண் என்ன பெண் என்ன?
தோழியர் கூட்டு வலைப் பதிவு ஆரம்பித்தப் பொழுது, தோழிகளிடம் அழகு, சமையல் குறிப்பு, கோலம் என்றுப் போட்டு இன்னொரு மங்கையர் மலர் ஆக்கிவிடாதீர்கள் என்று சொன்னேன். அதேப் போல வரட்டு பெண்ணுரிமை பேசுவதிலும் எனக்கு விருப்பமில்லை. இன்று மீனா, செல்வநாயகி இருவரும் சுவாரசியமாய் பல்வேறு விஷயங்களை எழுத ஆரம்பித்துள்ளனர். தனிக்குடித்தனம் போனவர்களே, கொஞ்சம் இங்கும் ஏதாவது- தோழியர்களுக்கு என்று ஸ்பெஷலாய் ஏதாவது எழுதிப் போடுங்களேன்.
நிறைய விஷயங்கள், விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள். எல்லாருக்கு நன்றி!
ராமச்சந்திரன் உஷா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஷ்ரேயா எழுதினத காணம்.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன மதன்.. நாடகத்திற்கு அல்லது திரைப்படத்திற்கு ஏதாவது கதை எழுதிறீங்களா..?? இவ்வளவு நீளமாய் இருக்கு.. கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு போடுறது.. வாசிக்க பயித்தியம் பிடிச்சிடும்.... போல கிடக்கு.. :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
tamilini Wrote:என்ன மதன்.. நாடகத்திற்கு அல்லது திரைப்படத்திற்கு ஏதாவது கதை எழுதிறீங்களா..?? இவ்வளவு நீளமாய் இருக்கு.. கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு போடுறது.. வாசிக்க பயித்தியம் பிடிச்சிடும்.... போல கிடக்கு.. :mrgreen: அப்ப இப்ப சுகமோ........... :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
குழக்காட்டான்,
ஷ்ரேயா எழுதியதை நான் இன்னும் இணைக்கவில்லை. நிறைய கட்டுரைகள் இருப்பதால் ஒவ்வொன்றாக இணைக்கின்றேன்.
தமிழினி,
நிறையப் பேர் இதற்கு பதில் எழுதியிருக்கின்றார்கள். அனைத்தையும் படித்தால்தான் புரியும் இன்னும் இருக்கின்றது இணைப்பதற்கு,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அப்ப இப்ப சுகமோ...........
கணணி சுகமான தான் சுகமாகும்.. தம்பி.. இவ்வளவு எழுத்தையும் வாசித்தால் தலைவலி கு}டிடும். சரி மதன் ஆறுதலாய் இணையுங்கள்.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஓரினச் சேர்க்கை
இன்றைக்கு 2 பதிவுகள் படித்தேன். தோழியரில் ஒன்று. மற்றது பொடிச்சியினது. உடனடியாக மனம் "ஓரினச் சேர்க்கையாளர்" பற்றிய அறிமுகம் எனக்கு எப்ப ஏற்பட்டது என்பதை யோசித்தது. சரியாக குறிப்பிட முடியவில்லை. இலங்கையில் இருந்த போது எனக்கு இவை பற்றி தெரிந்திருந்திருக்கக் கூடும். ஞாபகமில்லை. ஒரு த.சே.வின் அறிமுகம் ஏற்பட்டது சிட்னியில் கல்லூரியில் தான். ஒரு பெண். அவவின் பாலியல் தெரிவு அவவின் சுதந்திரம் என்பதே என் கருத்தாக இருந்தது/ இருக்கிறது. ஒரு conservertive குடும்பத்திலிருந்து வந்த எனக்கு எப்படி இந்தக் கருத்து முதலிருந்தே மனதில் ஒரு விதமான குழப்பமும் இல்லாமல் தோன்றிற்று / வேரூன்றியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது. இவர்களின் சேர்க்கைத் தெரிவு சரியானதா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தனிப்பட்ட கருத்து எனக்கு இல்லை. ஒரு விஷயத்தில் தனிப்பட்ட கருத்து இல்லாதிருத்தல் சாத்தியமா என்பது பற்றிப் பிறகு பார்க்கலாம். ஆனாலும் ஒரு சக மாணவியாக அவவின் பேச்சும் நடவடிக்கைகளும்(5 வார்த்தையில் ஒன்று "f***", பெண் தோழியுடனான உறவு பற்றிய விளக்கங்கள்) என்னால் சகிக்கக் கூடியதானவையாக இருந்ததில்லை. அதற்காக எப்பவும் அவவோடு அளவாகவே வைத்துக் கொள்வேன். அவள் தவறாக எடுத்துக் கொள்வதில்லை என்பது பெரிய ஆறுதல். ஆனால் வகுப்பின் வழமையான பகிடி சேட்டைகளில் சேர்ந்து முஸ்பாத்தி பண்ணியிமிருக்கிறேன்.
இரண்டாவது அறிமுகம் ஒரு ஆண்.அதே கல்லூரியில் இரண்டாமாண்டின் போது. ஓரளவுக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் குழப்பங்கள் பிரச்சனைகள் பற்றி தெளிவு கிடைத்தது இவனது அறிமுகத்தினால் என்று சொல்லலாம். கொஞ்சம் அதிகப்படியான பெண்மையுடன் கூடிய பாவனை. உடல்வாகும் அப்படியே.. வளர்த்துக் கொண்டிருக்கும் தலைமயிர். Robert என்ற பெயருடையவன். நகம் வளர்த்து தெளிந்த நகப்பூச்சும் பூசியிருப்பான். முற்போக்குச் சிந்தனைகளுடையவன் என்று சொல்லலாம். இதே வகுப்பில் இருந்த சிலருக்கு இவன் அவர்களுடைய குழுவில் இடம் பெற்றது பிடிக்காமல் ஆசிரியரிடம் போய் இவனை குழுமாற்றம் செய்த "பெருமை" உண்டு. எங்கள் குழுவில் இவன் மட்டும்தான் ஆண். பெண்ணாக மாறப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். நாங்களும் அவனுடம் இருந்து பெண்ணாக இருப்பதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்வோம். சிறுவயதிலிருந்தே தான் தனிமையாக உணர்ந்ததாகச் சொல்வான். Princess என்பதே பள்ளியில் அவனது பட்டப்பெயராக இருந்திருக்கிறது.
ஒரு நாள் வந்தான்..வாகன ஒட்டுநர் அனுமதிப்பத்திரத்தைக் காட்டினான். அதில் "Sarah" என்று பெயர் மாற்றப்பட்டிருந்தது. சட்டத்தின் முன் தான் ஒரு பெண் என்பதை நிலைநிறுத்தும் முயற்சியின் பலன் அது என்பதை தெளிவாக விளங்கப்படுத்தினான். கல்லூரிக்கும் தேவையான அத்தாட்சிகளைக் கொண்டுவந்து சேராவாக மாறிவிட்டான். தொடர்ந்த வாரத்தில் இதுவரை ஆண்களின் ஆடையில் வலம் வந்த சேரா முதன் முதலாக ஒரு நீண்ட பாவாடையும் ஒரு வடிவான் மேற்சட்டையும் அணிந்து வந்து, வகுப்பில் சலசலப்பை ஏற்படுத்தினாள். கிசுகிசுப்பான பேச்சுகளும் நமுட்டுச் சிரிப்புகளும் நிறைந்த அந்தக்கணத்து வகுப்பை போன்று நாராசமானதாக வேறொன்றும் அவளுக்கு இருந்திராது என்பது திண்ணம். எங்களுக்கு, அதாவது குழுவிலிருந்த பெண்களுக்கு சேராவை பெண்ணாய் பார்ப்பதில் பிரச்சனை இருக்கவில்லை.
இரண்டு மூன்று மாதங்கள் சென்றிருக்கும், வகுப்பிலே ஆசிரியர் இல்லாத சமயம் பார்த்து தீவிர "ஹோமோஃபோபிக்" ஒருவனுக்கும் இவனுக்கும் தர்க்கமேற்பட்டது.
"நீயெல்லாம் கடவுளுக்கு எதிரானாவன்"
"எதனை ஆதாரமாக வைத்து இப்படிச் சொல்கிறாய்"
"பைபிளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பாவிகள், தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறது"
"அதற்கு நான் என்ன செய்யட்டும்..நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்"
"அஹா! உன் செய்கைகளை ஆமோதிக்கும் கடவுளர் யாருமில்லை, அதனால் நீ கடவுள் பக்தியில்லை எனச் சொல்கிறாய்"
"என் காதலன் கத்தோலிக்கன்.அதற்கு என்ன சொல்கிறாய்"
"நரகத்திற்குப் போவான்"....
இப்படியே தொடர்ந்து பல அனாவசிய கோணங்களையும் தொட்ட அந்த விவாதம் கடைசியில் மற்றவன் "உன்னுடன் ஒரு அறையில் இருப்பதே என் மேல் ஏதோ ஊருவது போலுள்ளது" என்று சொல்லி வெளியேறியதில் முடிவுற்றது. அன்றைக்குத்தான் எனக்கு உறைத்தது, இப்படியும் மடத்தனமான ஆட்கள் இருக்கிறார்களே என்று. இவனும் சக மனிதன் தானே. உனக்கும் இவனுக்கும் செல்லப்பிராணியின் தெரிவில் வித்தியாசமிருக்கலாம்..உனக்கு நாயும் அவனுக்கு பூனையும் பிடிக்கலாம், அதற்காக தர்க்கம் செய்து,கீழ்த்தரமாக நடந்து கொள்வாயா?ஒருவனது தனிப்பட்ட விடயமான பாலியல் தெரிவு மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனத்திற்குள்ளாக வேண்டும்?
தப்பித் தவறி பழைய ஞாபகத்தில் Rob என்று கூப்பிட்டு நாக்கை கடித்து Sarah என்று நான் மாற்றியிருக்கிறேன்.ஒன்றும் பேசாது, அது பரவாயில்லை என்று சொல்லி, வேண்டுமென்று செய்யப்பட்ட தவறல்ல என்பதைப் புரிந்து கொண்டவள்.
ஆனாலும் அவனது "அவள்" மாற்றம், சுற்றியிருந்த எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. எதிர்ப்பாலர்மேல் ஈர்ப்பு இருப்பதையே நியதி என்று கண்டும் கேட்டும் வளர்ந்தோருக்கு இம்மாதிரியான பாலியல் தெரிவுகள் அதிர்ச்சியளிக்கும். ஒரு நாளும் காணாத ஒன்று, வழமைக்கு மாறான ஒன்றாக ஒருவருக்கு தோன்றுவது, இன்னொருவருக்கு மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கும். ஆணொருவருக்கு பெண்ணில் ஈர்ப்பு வருகிறது. ஒரு ஆண் தன்னினச் சேர்க்கையாளருக்கு இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அடிப்படை வித்தியாசங்கள் தான் மனிதர்களை ஈர்க்கின்றன, வேறுபடுத்துகின்றன. இயல்பாகவே இருக்கும் வித்தியாசங்கள் போன்று ஒருவர் செய்யும் தெரிவுகளும் அவரை சமூகத்தில் அடையாளம் காட்டும். ஆனால் துரதிஸ்டவசமாக சமூகத்தின் அங்கத்தவர் என்ற முறையில், சக மனிதப்பிறவி என்னும் அடிப்படையில் தன்னினச் சேர்க்கையாளர்கள் பெரும்பாலானோரால் பார்க்கப்படுவதில்லை. அந்நியப்படுத்தப்பட்டு, அருவருக்கப்படும் நிலையே காணப்படுகிறது.
செய்வதற்கு உரிமையில்லாத செயலான பிறரின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைப்பதும், அதன் மீதான விமர்சனமும் தேவையற்றன. தெரிவுகள் தனிப்பட்டவை, அவற்றில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ நாகரிகமல்ல. அப்படியே விமர்சிக்கத்தான் வேண்டும், அதுதான் வாழ்வினைச் செலுத்துகிறது என்று நினைத்தால் அதை அழுக்கான அந்தரங்கங்களுக்குள் புதைத்துக் கொள்வது புத்தியான செயல்.
ஷ்ரேயா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தற்பால் நாட்டம் - ஒரு அறிவியல் பார்வை
நேற்று கார்த்திக்கின் கேள்விக்கு விடை சொல்வதாக நிறுத்திவிட்டுப் போனேன்.
ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. "பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா" என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது.
இந்தக் கேள்வியின் அடிப்படையே தவறு. இது தற்பால் நாட்டத்திற்கு உயிரியல் ரீதியில் அடிப்படை கிடையாது என்பதை அறுதியிட்டுத் தீர்மானமாக மொழிகிறது. (பிறப்பிலேயே இருக்காது என்பதில் இன்னும் உயிரியல் நிச்சயமாக விடை சொல்லமுடியவில்லை). பரிணாமத்தின் அடிப்படையில் தற்பால் நாட்டத்தை எளிதாக விளக்க முற்படுகிறேன்.
இதற்கு முதல் கட்டமாக எதிர்பாலின் மீதான நாட்டத்தைப் புரிந்துகொள்ள, ஏன், எப்படி, எவ்வளவு என்ற மூன்று கேள்விகளுக்கு விடைகாண முயற்சிக்கலாம். (ரிச்சர்ட் டாக்கின்ஸ்ஸின் The Selfish Gene, River out of Eden, Arndt von Hippel-ன் Human Evolutionary Biology Mark Ridley-ன் Evolution போன்ற புத்தகங்களைப் படித்திருப்பவர்களுக்கு என் கருத்துக்களின் அடிப்படை எளிதில் பிடிபடும்)
ஏன்? எதிர்பாலின்மீது ஏன் நாட்டம் வருகிறது? விடை மிகவும் எளிதானது, இது நம் மரபின் அடிப்படை. எல்லா உயிரினங்களுக்கும் ஜீன்கள் என்னும் மரபுக்கூறுகள்தான் ஆதாரம். ஒரு உயிரினம், ஜனித்து, வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்து, மடிந்துபோவது பத்திரமாக தன்னுடைய மரபுக்கூறைத் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தத்தான். அந்த அடிப்படையில் இந்த வாழ்வின் அனைத்து கூறுகளையுமே விளங்கிக் கொள்ள முடியும். மனிதனில் இப்படி அடுத்த தலைமுறைக்கு மரபணுவைக் கடத்த இருபால் புணர்ச்சியே வழியாக இருக்கிறது (சில விலங்குகளிலும் தாவரங்களிலும் கலவியற்ற இனப்பெருக்கம் சாத்தியம் என்பதை நாம் அறிவோம்). கலவியின் பொழுது பெண்ணிடமிருந்தும் ஆணிடமிருந்தும் மரபணுக்கள் ஒன்று கலந்து அதன் மூலம் ஜனிக்கும் உயிருக்குத் தன்னிடம் இருக்கும் மரபணுவை அளித்து மரபுத் தொடர்ச்சியை நிச்சயம் செய்வதே 'ஏன்' என்ற கேள்விக்கு விடை.
எப்படி? எப்படியெல்லாம் எதிர்பால்மீதான் கவர்ச்சி வருகிறது? நம் இலக்கியங்களில் இருக்கும் ஈர்க்கிடை நுழையாத கொங்கைகள், அரசிலை அல்குல், மகரயாழின் குடமென இருக்கும் பிட்டங்களிலும் தொடங்கி, மெல்லிடை, நீளக் கூந்தல் என பெண்ணில் காணும் அழகு ஒவ்வொன்றுக்கும் அடிப்படை - அந்தப் பெண்ணுக்குத் தான் அளிக்கவிருக்கும் மரபுக்கூறைப் பத்திரமாக எடுத்துச் செல்லும் தகுதி (உடற்கூறியல் ரீதியாக) இருக்கிறதா என்ற நோட்டமே. அதாவது அழகு என்று ஆணின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அவன் விந்தினில் இருக்கும் குரோமோசோம்கள் சொல்லிக் கொடுப்பவைதான். பருத்த கொங்கைகள் - பிறக்கும் குழந்தைக்கு வஞ்சனையில்லாமல் பாலூட்ட, விரியாத அல்குலும், மெலிந்த இடையும் சிரமமின்றி பிள்ளையைப் பெற்றெடுக்க. நீள்விரி கூந்தலும் கயலன்ன மைவிழியும் பொதுவில் ஆரோக்கியத்தைக் காட்டுகிறன (குறிப்பாக புரோட்டீன்கள் குறைவின்மையை). இப்படி அடிப்படையில் மரபைச் சுமந்து செல்லும் திறமை வெளியில் பெண்ணழகாக மிளிர்கிறது.
அடுத்தமுறை ரோட்டில் பிகரைப் பார்க்கும் பொழுது முப்பத்து மூன்றாவது குரோமோசோமை நினைத்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தாலோ, எழுதிய நிரலில் பூச்சிபிடித்துக் கொடுக்கும் சக நிரலினியைப் பார்த்து கண்மலரும்பொழுது நாணம் வந்தாலோ நான் பொறுப்பல்லன்.
அதேபோல தின்தோளும் திரண்ட மார்பும் பெண்ணின் சுயநலமிக்க மரபணுவின் விழைவுகள்தான். பிறக்கும் குழந்தைக்கும் குழந்தையைச் சுமக்கப்போகும் தனக்கும் ஆபத்துகளினின்று காப்பாற்றும் உடல்வலிமை இந்த ஆணுக்கு இருக்கிறதா என்ற தேட்டமே அவன் அழகின் வரையறைகளாகின்றன. தனக்கு உணவிடுவானா? தன்னைக் காப்பாற்றுவானா - அவன்தான் என் மனதிற்குப் பிடித்த அழகன்.
(பெண்ணியவாதிகள் கொஞ்சம் பொறுங்கள், மாறிவரும் இந்த வரையறைகளைப்பற்றி பின்னர் சொல்லுகிறேன்)
இதனுடைய வேற்றுவடிவம்தான் "தோள்ல தூக்கிப்போட்டு வளர்த்த" தங்கைக்கோர் கடிதம் டி.ராஜேந்தர் "கண் கலங்காம பாத்துக் கொண்ட" பாசமலர் சிவாஜி போன்றவர்கள். இன்றைக்கும் ராக்கி கட்டி தங்கைக்கு (தன் மரபில் பாதி) 'பாதுகாப்பாக' இருக்க முயலும் சேட்டுப் பசங்கள் சௌகார்பேட்டைக்கருகில் ஜர்தா பீடா போட்டுக்கொண்டு சைட் அடித்து அதே மரபுக்கு மாற்றுவழி வழிதேடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.
எவ்வளவு? இந்த இடத்தில்தான் மரபணுக்கள் அற்புதமாக சமூக விழுமியங்களைச் செதுக்குவதைப் பார்க்க முடிகிறது. எளிதான ஏரணத்தின்படி கணக்கு வழக்கில்லாமல் புணர்ந்து தள்ளும் ஆணும், அதேபோல கணக்கற்றவர்களுடன் பிணைந்து தன் மரபை முன்னெடுத்துச் செல்லும் பெண்ணும்தான் உயிரியல்ரீதியாக மிகவும் வெற்றிகரமான விலங்குகளாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு தாரம், அளவோடு பெற்றெடுத்தல் என்பவைதான் உண்மையில் மரபணுக்கள் தங்களை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொள்ள கண்ட தீர்வுகள். ஏன்? அதிகம் பெற்றெடுத்தால் சாக்கடும் அதிகரிக்கும். அளவோடு பெற்றுவிட்டு, பின் பெற்றதை பேணி வளர்த்தெடுத்து அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்வதைப் பார்ப்பதில்தான் மரபணுக்களின் உண்மையான வெற்றி இருக்கிறது (இவளுக்குச் சாகறதுக்குள்ள ஒரு கல்யாணத்தப் பண்ணிவைக்கனும், போறதுக்குள்ள ஒரு பேரனை மடில எடுத்துக் கொஞ்சலேன்னா இந்தக் கட்ட வேகாது). எனவே உடனடி அடுத்த தலைமுறையைத் தாண்டி மரபின் தொடர்ச்சியை நிச்சயிக்க அளவோடு பெறுதல் முக்கியம். அதேபோல, பல இணைகளுடன் புணர்வதைக் காட்டிலும் ஒற்றைத் துணையே இந்த விளையாடில் இறுதிவரை வெற்றிபெற எளிதான வழி. தன்னுடைய கவனமும், சக்தியும் விரயமாகமல் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் குவித்து அதை வெற்றிகரமாக வளர்த்தெடுப்பதில்தான் மரபணுக்கள் ஆர்வமாக இருக்கின்றன.
கவனிக்கவும், இப்படி ஒன்றிரண்டு பெறுவது கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நடைமுறைக்கு வந்த உத்தி, இதற்குமுன் டஜன் கணக்கில் பெற்றெடுத்துக் காய்ச்சலிலும் கழிவிலும் சாகக் கொடுத்துப் புலம்பிக்கொண்டுதான் இருந்தார்கள். நவீன அறிவியல் இதைப் பெரிதும் மாற்றியிருக்கிறது. சிசுச்சாக்காடு, பிணி இவற்றைக் குறைப்பதிலும், வாழ்நாளை நீட்டிப்பதிலும் நவீன மருத்துவத்தின் வெற்றிகளின் அடிப்படையில் ஒன்றிரண்டே பெற்று அவற்றை நல்லபடியாக வளர்ப்பது சமீபத்தில் தன் விளையாட்டு உத்தியை மாற்றிக்கொண்ட மரபணுக்களின் புத்திசாலித்தனம்.
இந்த ஒருதாரம், கற்பு, சிறு குடும்பம் இப்படித் தனி மனிதனைக் கடந்த சமூக விழுமியங்களையும் மனிதனுக்குள்ளே இருக்கும் 23 சோடி குரோமோசோம்கள் வரையறுப்பவைதான். இதையே கொஞ்சம் நீட்டித்தால் பொய்யாமை, கள்ளுண்ணாமை, பொச்சாவாமை, சுற்றம் தழால் என்று எல்லா வள்ளுவ சமாச்சாரங்களையும் பத்திரமாக அடுத்த தலைமுறைக்குத் தாம் தொடர வழி என்ன என்று மரபனுக்கள் கண்டவை என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
* * *
இப்படி எல்லாமே மரபுச் சமாச்சாரம்தான் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லியாகிவிட்டது, இனி இவற்றின் மாற்றங்களையும் மரபுக்கூறுகளைக் கொண்டு நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டேன். இப்பொழுது பெண்ணியவாதிகளைச் சமாதானப்படுத்த கொஞ்சம் திண் தோளர்களை நையப் புடைக்கலாம். மாறிவரும் விழுமியங்கள், சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப இப்பொழுது தனக்கான உண்டியையும் உறையுள், பாதுகாப்பையும் பெண்கள் தாமாகவே பெற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த நிலையில் காப்பாற்ற வேண்டும், சோறிட வேண்டும் போன்ற கட்டாயங்களைக் கடந்துவிட்ட நிலைகளில் பெண்களின் 'பார்வையிலும்' மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் என்னைப் போன்று வாங்கிய பம்பரங்களையெல்லாம் பிறருக்கு ஆக்கர் அடிக்கக் கொடுத்துவிட்டு, முட்டியால் கோலிதள்ளிக் காலம் கழித்த சோப்ளாங்கிகளுக்குக் கன்னி கழிய கட்டாயம் விடிவு கிடையாது. (மறுபுறத்தில் வெற்றி குத்துப்படாத பம்பரத்தில் இல்லை, குவாண்டம் மெக்கானிக்ஸ்க்கு மாறிவிட்டது என்று மரபும் விழித்துக் கொள்வதைப் பாருங்கள்).
விளையாட்டின் விதிகளைப் பெண்கள் மாற்றிக் கொண்ட அளவுக்கு ஆண்கள் ஏன் மாற்றவில்லை? விடை ரொம்ப எளிது; மாற்றிக்கொள்ள அவர்கள் கையில் சரக்கில்லை. நீர்த்துப் போகாமல் சுக்கிலத்தை நிறைவடையச் செய்வதில் பெண்ணின் பங்கு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எனவே, ஆண்கள் இன்னும்
பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்னால் வெருட்டி முலையால் மயங்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப் பொருள்பறிக்க
...
என்று பட்டினத்தார்போல அவ்வப்பொழுது புலம்பினாலும், அடுத்த நொடி குரோமோசோம்கள் "மாதர் இளமுலைகள் வாழ்க" என்று செயங்கொண்டார் ஸ்டைலில் விசிலடித்துப் பீறிடுகின்றன.
உயிர்த்திருத்தலுக்கான தேவைகள் மாறுபட, மாறுபட அழகின் வரையறைகளும் மாறுவதைப் பார்க்கமுடியும். ஈர்க்கிடை நுழையாக கொங்களுக்க்கான தேவை போய், "உங்கள் பட்டுப்பாப்பா விரும்பிடுமே இந்த பாரக்ஸை" என்று புஷ்டியெல்லாம் புட்டியிலேயே கிடைக்கத் தொடங்கியவுடன் தானே ஈர்க்காக மாறிப்போன சிம்ரனைக் கண்டு குரோமோசோம்கள் சிலிர்த்துக் கொள்கின்றன. அதேபோல 'விண்ணோடும் முகிலோடும்' என்று முழங்கிக் கொண்டிருந்த ஆண்மகன் இப்பொழுது "ஹேய் அஸைந்தாடும் காற்றுக்கும் அழகான நாற்றுக்கும் காதலா, காதலா" அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஈனஸ்வரத்தில் முனகியே பெண்களைக் கவரமுடிகிறது.
டஜன் கணக்கில் பிள்ளைகளைப் பெறுவதை நிறுத்தி "இரண்டுக்குப் பிறகு இப்பொழுது வேண்டாம்; மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்" என்ற அறுபதுகளைக் கடந்து, "நாமிருவர் நமக்கிருவர்" எண்பதுகளைத் தொடர்ந்து "ஒரு குடும்பம் ஒரு குழந்தை" தொன்னூறுகள் போய், "நாமே குழந்தை; நமக்கேன் குழந்தை" என்று சொல்லும் காலம் வந்து கொண்டிருக்கிறது. இப்படிப் பிள்ளை பெறுவதற்காகப் புணர வேண்டிய தேவை குறையக் குறைய, புணரும் வழக்கத்தை அடியோடு மறந்துவிடாமல் இருக்க குரோமோசோம்கள் செய்த உபாயம் - கலவியை இன்பமாக மாற்றி அந்த விளையாட்டை வழக்கொழியாமல் காப்பாற்றியது. அதாவது மரபுக்கடத்தலுக்கான அத்யாவசியமான கலவியின் தேவை குறைந்துவிட்டது, ஆனால் அது அடியோடு நின்று போய்விடாமல் இருக்கப் புணர்தலில் மாத்திரம் இன்பமில்லை, புணர்தல் நிமித்தத்திலும் இன்பம் என்று 'அந்த சமாச்சாரத்தை'விட்டு கொஞ்சம் வெளியே வரவைத்தது.
இப்படிப் புணர்தல் நிமித்தத்தின் பங்கு அதிகரிக்க அதிகரிக்க, அந்தத் துளை மாத்திரம் எதுக்கு எந்தத் துளையும் இன்பத்தின் வடிகாலே என்று நீட்டிக்கப்பட்டது. சமூக மாற்றங்களுக்கேற்ப குழந்தை பெறுவது (நம் சமூகத்தில் திருமணம் என்று கொள்ளவும்) தள்ளிப்போக, கொஞ்சம் நாள் பொறு தலைவா-க்கள் தன் கையே தனக்குதவி என்று வஞ்சிக் கொடிவரும்வரை காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக 'ஆதி இன்பத்தின்' தேவை மாறிப்போனவுடன் பாதி இன்பங்கள் இயற்கையாகிப்போயின. கொஞ்சம் கொஞ்சமாக இது எங்கே செல்கிறது என்று தெரிகிறதா?
தற்பால் நாட்டம். தன் நேரடி மரபு இல்லாவிட்டாலும் தன்னைச் சார்ந்த மரபு விருத்தியாகிக் கொண்டே போகிறது என்ற தீர்மானமான நம்பிக்கையின் வெளிப்பாடே ஓரினப் புணர்ச்சி. மனிதர்களை விடுத்த பிற உயிரிகளும் இந்த விளையாட்டில் ஈடுபடுவது விஞ்ஞானிகளால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. (கட்டாயம், இவைகள் எதுவுமே காமசூத்ரா புத்தகங்களை படிக்கவில்லை, குறை சொல்லப்பட்டும் நவீன தொலைக்காட்சிகளைப் பார்ப்பதில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றுக்கு peer pressure கிடையாது). இருபால் கலவி மரபு நீட்டிப்பின் அடிப்படைத் தேவை என்று இருந்தாலும், ஒரு சமூகத்தைச் சேர்ந்த எல்லோரும் இதில் ஈடுபடுவதைவிட சிலர் 'விட்டுக்கொடுப்பது' பொதுவில் அந்தச் சமூகத்தின் மரபுத் தொகுதிக்கு நல்லது. இதன் மறுவெளிப்பாட்டைத் தேனிக்களிடம் காணமுடியும், ஒற்றை இராணித் தேனிக்கு ஓராயிரம் சேவகர்கள் இருப்பது மரபுப் போட்டியைக் குறைக்கவே. எனவே, தற்பால் நாட்டம் கொண்டவர்கள் இயற்கைக்கு மாறானவர்கள் என்ற கூற்றில் எந்தவிதமான நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் உங்கள் விளையாட்டில் தலையிடாமல் "என் வழி தனி வழி" என்று போகும் அவர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டவர்கள்.
இனி தற்பால் நாட்டம் பிறவியிலேயே வருவதா அல்லது பிறரைப் பார்த்து கற்றுக் கொள்வதா? இந்தக் கேள்விக்கு நவீன அறிவியல் இன்னும் தீர்மானமாக விடைகாணவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் இது இயற்கைக்கு மாறானதல்ல என்பதில் அறிவியல் உறுதியாக இருக்கிறது. மாறிவரும் சமூக, பொருளாதாரக் காரணிகள், கூடவே மாறிவரும் மரபுப் போட்டியின் விதிகள் இவை எல்லாமாக தற்பால் நாட்டத்தை இயற்கையிலேயே சிலரிடம் விதைக்கின்றன. செயற்கை முறை சினையூட்டல், சோதனைக் குழாய் கருத்தரித்தல், இதையெல்லாம் இயற்கையாக ஒத்துக்கொண்டுவிட்டோம் (சாத்தான் என்று பெயர் வாங்கிய சோதனைக் குழாய் டாக்டரம்மா, 'புள்ள இல்லாம இருந்த எம்பொன்னுக்குப் பிச்சைபோட்ட மகராசி' என்று தொழப்படும் மாற்றத்தை யோசித்துப் பார்த்தீர்களா? இதையெல்லாம் மட்டும் வெள்ளகாரனப் பாத்து, தொலைக்காட்சியைப் பாத்து என்று ஏன் பொங்கியெழுவதில்லை). எனவே, இதை உடல்ரீதியான குறைபாடாகவோ, சமூகநோயாகவோ தற்பால் நாட்டத்தைச் சித்தரிப்பது எந்தவிதத்திலும் நியாயமானதில்லை.
தற்பால் நாட்டம் கொண்டவர்களை யார் தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் புரியும். வைதிக மதவாதிகள் - கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குருமார்கள், பஜ்ரங்க்தள் வகையறா தீவிரவாதிகள். இதே குழுக்கள் எல்லோரும் அதேபோல் கருக்கலைப்பையும் தீவிரமாக எதிர்ப்பார்கள். ஏன், கலையும் கருக்களாலும், தற்பால் புணர்ச்சியாலும் இனப்பெருக்கம் குறைந்துபோய் தங்கள் மதத்தின் பரப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம். ஆனால் உண்மையில் மாறிவரும் விளையாட்டின் விதிகளைப் புரிந்து கொள்ளாமல் இவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
venkat
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
மிகப்பெரிய ஒரு விடையம்ää மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது
|