![]() |
|
நோர்வே முடிவுசெய்ய இயலாது! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நோர்வே முடிவுசெய்ய இயலாது! (/showthread.php?tid=4976) |
நோர்வே முடிவுசெய்ய இயலாது! - Vaanampaadi - 02-27-2005 முஸ்லிம்களின் தனித்தரப்புக் கோரிக்கை; நோர்வே முடிவுசெய்ய இயலாது! அம்பாறையில் சொல்யஹய்ம் தெரிவிப்பு சமாதானப் பேச்சுக்களில் முஸ்லிம்கள் தனித்தரப்பாகப் பங்குபற்றும் கோரிக்கையைப் பொறுத்தவரை நோர்வே எந்த முடிவையும் எடுக்கமுடியாது. பேச்சுக்களுடன் தொடர்புடைய ஏனைய இரு தரப்பினருமே இது தொடர்பாக முடிவுசெய்யலாம். இப்படிக் கூறியிருக்கின்றார் நோர்வேயின் விசேட தூதர் எரிக் சொல்யஹய்ம். நேற்று அம்பாறைக்கு விஜயம் செய்த எரிக் சொல்யஹய்ம் அங்கு சாய்ந்தமருதுவில் முஸ் லிம் சமய, சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அங்கு உரையாற்றுகையில் எரிக் சொல் யஹய்ம் தெரிவித்ததாவது:- சமாதான முன்னெடுப்புகளும், ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளும் ஒரே சம யத்தில் முன்னெடுக்கப்படவேண்டியவை. ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்ட பிரதேசங்களில் மூன்று உடனடித் தேவை கள் உள்ளன. தொழில் வாய்ப்பு, மக்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மாணவர்களின் கல்வி நிலைமைகளை வழமைக்குக் கொண்டு வருதல் ஆகிய முக்கிய தேவைகளை நிறை வேற்றுவதற்கு நோர்வே உதவும். ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அரசு - விடுதலைப் புலிகளை உள்ளடக்கிய கட்டமைப் பொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டமைப்பில் முஸ்லிம்களின் எதிர் பார்ப்புகளிற்கும் இடமளிக்கப்படும் என்றும் - சொல்யஹய்ம் தெரிவித்தார். உதயன் |