![]() |
|
இந்தியாவும் இலங்கையும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இந்தியாவும் இலங்கையும் (/showthread.php?tid=4978) |
இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ...... - Vaanampaadi - 02-27-2005 இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்நேரமும் கைச்சாத்தாகலாம் <img src='http://www.sundaytimes.lk/050227/images/ftont.jpg' border='0' alt='user posted image'> - புதுடில்லியில் கதிர்காமர் அவ்வாறு நடந்தால் அது தமிழ் மக்களுக்கு எதிரான இந்தியாவின் ஒரு பகைமை நடவடிக்கை 27 02 2005 சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முக்கர்ஜியை சந்தித்து பேசினார். சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். சுனாமி தாக்கிய பின்னர் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் சிறீலங்கா ஜனாதிபதியின் கடிதம் ஒன்றையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் வழங்கினார். இதன் பின்னர் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த கதிர்காமர் இருநாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள இணக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் இப்போது எந்த நேரத்திலும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகலாம் என்றும் சொன்னார். இவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்வது தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பகைமை நடவடிக்கையாக இருக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்த்து வருவது தெரிந்ததே. கடந்த வருட இறுதியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகி இருந்த போதிலும் தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை அடுத்தும் குறிப்பாக மதிமுக செயலர் வைகோ புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியதை தொடர்ந்தும் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. தமிழ் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்க மாட்டாது என்று அப்போது வைகோவிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்திருந்தார். இப்போது இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும் என்று கதிர்காமர் புதுடில்லியில் வலியுறுத்தி உள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை புனரமைப்பது சிறீலங்கா பாதுகாப்பு படைகளுடன் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்வது பயிற்சிகளை வழங்குவது உள்ளிட்ட மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் சமபலத்துடன் இருப்பதே சிறீலங்கா அரசு போர்நிறுத்தம் செய்ய முன்வரவும் மூன்று வருடங்களாக அது நீடிக்கவும் காரணமாக இருந்தது. இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால் அது சிறீலங்காவின் சிங்கள மேலாதிக்கவாதிகள் தாம் கூடுதல் பலத்துடன் இருப்பதாக எண்ணத் தூண்டுவதாகும். அது அவர்களை மீண்டும் யுத்தம் செய்ய தூண்டுவதாகவும் ஏற்கனவே இழுபறியில் இருக்கும் சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுப்பதாகவும் அமையும். இதனாலேயே இத்தகைய ஒப்பந்தம் தமக்கு எதிரான ஒரு பகைமை நடவடிக்கை என்று தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். செய்திகோவை இந்தியாவும் இலங்கையும் - Vaanampaadi - 02-27-2005 இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்து 18 ஆண்டுகளின் பின்பு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பது இதுவ முதற்தடவையாகும். பிரதமரின் விஜயம் சமாதான முன்னெடுப்பு விடயத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு வலுவடையச் செய்யுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - shanmuhi - 02-27-2005 அவரின் வருகையால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான ஆதாயமும் இல்லை. புலிகளின் விமானப்படைக்கு இந்தியா அவதானமாக - வியாசன் - 03-02-2005 புலிகளின் விமானப்படைக்கு இந்தியா அவதானமாக இருக்க வேண்டுமாம் எச்சரிக்கிறது ஜே.வி.பி. விடுதலைப்புலிகள் அமைப்பிடம் விமானப்படை இருப்பதால்த இந் தியா மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென ஜே.வி.பி எச்சரித்துள்ளது.இது தொடர்பாக ஜே.வி. பியின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச கொழும்பிலிருந்து வெளியாகும் த சண்டே ரைம்ஸ்டு இதழுக்கு அளித் துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது - விமானப்படையை விடுதலைப் புலிகள் அமைத்திருப்பது மிகப் பெரிய பிரச்சினை. இந்திய அர சாங்கம் மிகுந்த எச்சரிக்கை யுடன் இந்தப் பிரச்சினையை கவனித் தாக வேண்டும். இதை கவனமாக கையாளுகின்ற திறமை இந்தியா வுக்கு உண்டு.இந்தியாவின் முன்னாள் பிரத மர் ராஜிவைக் கொலை செய்த வர்கள் புலிகளே. எனவே இப்போது தங்கள் வசமுள்ள விமானப்படை யால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தரமுடியும். போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி புலிகள் அமைப்பினர் விமானப் படையை அமைத்துவிட்டனர். இது மிகவும் துரதிஷ்டவசமா னது. புதிதாக எழுந்துள்ள இந்த அபாயகரமான சூழ்நிலையை தலை வர்கள் வரவேற்கக் கூடாது.இவ்வாறு விமல் வீரவன்ச கூறி யுள்ளார். சுட்டபழம் நன்றி ஈழமுரசு - Mathan - 03-03-2005 இந்தியாவும் கதிர்காமரும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய உறவுநிலையை `மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மகோன்னதமானது' என்று அடிக்கடி வர்ணிப்பதில் பெருமைப்படும் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கடந்த வாரம் புதுடில்லி விஜயத்தின்போது தெரிவித்திருந்த சில கருத்துகள் எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன. வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் கதிர்காமர் இந்தியாவுக்கு இதுவரை 50 க்கும் அதிகமான தடவைகள் விஜயம் மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. கடல்கோள் அனர்த்தத்தில் இலங்கை அவலத்துக்குள்ளான வேளையில் அவசர நிவாரணப் பணிகளில் இந்தியா செய்த அளப்பரிய உதவிக்காக நன்றி தெரிவிப்பதற்கு ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் விசேட தூதுவராகவே இத்தடவை அவர் புதுடில்லி சென்றிருந்தார். `தூரதர்ஷன்' தொலைக்காட்சிக்கு விரிவான பேட்டி யொன்றை அளித்த கதிர்காமரிடம் இலங்கை விவகாரத்தில் இந்தியா தீவிர பங்கேற்கவேண்டுமா என்று கேட்கப்பட்டபோது, `ஆம், இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவில் உள்ளவர்களுக்கு நியாயபூர்வமான- முறைப்படியான ஒரு நலன் ( Legitimate Interest ) இருக்கிறது. இலங்கையில் என்ன நடந்தாலும் அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். இதன் அடிப்படையில், ஒட்டுமொத்த விளைவுகளில் அக்கறையில்லாத தரப்பாக இந்தியா இருக்க முடியாது' என்று பதிலளித்திருக்கிறார். `கோட்பாட்டு அளவிலான (Academic Interest) அக்கறையை விட கூடுதலான பங்கை இந்தியா ஆற்ற வேண்டுமென்று நாம் விரும்புகின்றோம். இலங்கையில் எந்த வகையான தீர்வு காணப்படுவதை இந்தியா விரும்புகிறது என்பதை குறிப்பிட்டுக் கூற அது தயாராக வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். வேறு எந்தவெளிச் சக்தியும் எதையும் கூறமுடியாது. தீர்வு எத்தகையதாக இருக்க வேண்டும் என்று கூறக்கூடிய ஒரே வல்லமை மிக்க நாடு இந்தியா தான். அவ்வாறு கூறுவதற்கான நியாயபூர்வமான உரிமை இந்தியாவுக்கு மாத்திரமே இருக்கிறது. இந்தியா இதைக் கூறாதவரை முரண்பாடுகளுக்கு இடமிருக்கும். இலங்கையில் நடப்பவை குறித்து நிச்சயம் இந்தியத் தலைவர்கள் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இலங்கைக்கான தீர்வு எந்த வகையானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் அதன் மனதில் இருப்பதை இந்திய அரசாங்கம் வெளிப்படையாகச் சொல்வதற்கு சரியான தருணம் இது. சமஷ்டித் தீர்வு காணப்பட வேண்டுமென்று இந்தியா யோசனை கூறுமானால், இலங்கையில் உள்ள சகல கட்சிகளும் அதற்கு இணங்கும்' என்று வெளியுறவு அமைச்சர் பேட்டியில் கூறியிருக்கிறார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்து 11 மாதங்கள் கடந்தும் நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்க முடியாமல் இருக்கும் துரதிர்ஷ்டவசமானதொரு நிலையில்- அரசாங்கமே கவிழ்ந்து விடுமோ என்று சந்தேகம் வலுவடையுமளவுக்கு அதன் பிரதான பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)க்கும் இடையே (விடுதலைப் புலிகளுடனான விவகாரங்களைக் கையாளுவது தொடர்பில்) சர்ச்சைகள் கூர்மையடைந்திருக்கும் ஒரு கட்டத்தில் இலங்கை விவகாரத்தில் இந்தியா தீவிர பங்காற்ற வேண்டுமென்று கதிர்காமர் கேட்கிறார். இதே இந்திய விஜயத்தின் போது தான் கதிர்காமர், விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இது பொருத்தமான தருணமில்லை என்றும் கூறியிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். சமாதான முயற்சிகளில் காணப்படும் தேக்க நிலையைப் போக்குவதற்கு குறைந்தபட்ச முயற்சியையேனும் மேற்கொள்வதற்கு ஏதுவான மனோ நிலை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியில் இல்லாதிருக்கும் இச் சந்தர்ப்பத்தில்- அதே சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக உலகுக்குக் கூறிக் கொண்டிருக்கும் இந்தியாவை தீவிர ஈடுபாட்டைக் காண்பிக்குமாறு கதிர்காமர் வலிந்து கேட்பதன் நோக்கம் என்ன? விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமற்றதாகக் கதிர்காமர் காணும் இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தீவிர ஈடுபாட்டினால் எதைச் சாதிக்க முடியுமென்று அவர் நம்புகிறார்? இலங்கைக்கான தீர்வு எத்தகையதாக இருக்க வேண்டுமென்று கூறுவதற்கு நியாயபூர்வமான உரிமையுடைய நாடு இந்தியா மாத்திரமே என்றும் இந்தியா அதைக் கூறாதவரை முரண்பாடுகளுக்கு இடமிருக்கும் என்றும் கூறும் கதிர்காமர், 1980 களில் இலங்கைக்கான தீர்வொன்றைத் தருவதற்கு நேரடியாக புதுடில்லி தலையீடு செய்த போது தென்னிலங்கை அரசியல் சமுதாயம் இந்தியாவை எவ்வாறு கணித்தது என்பதை அறியாதவராக இருக்க முடியாது. சமஷ்டித் தீர்வை இந்தியா யோசனையாக முன்வைக்குமானால், இலங்கையில் உள்ள சகல கட்சிகளும் அதற்கு இணங்கும் என்று வெளியுறவு அமைச்சர் தைரியத்துடன் கூறுவதற்குக் காரணம் தென்னிலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இன்றைய `மகோன்னத உறவு நிலையே' என்று கருதவேண்டியிருக்கிறது. இலங்கையின் சரித்திரத்தையும் அதன் அரசியலையும் வேறு எதையும் விட மிகக் கூடுதலான செல்வாக்கிற்குட்படுத்திய ஒரே காரணியென்றால், அது இந்தியாவுக்கு மிகவும் அண்மையாக- 20 மைல் அகலக் கடலால் பிரிக்கப்பட்ட நிலையில்- அமைந்திருக்கிறதென்ற புவியியல் நெருக்கமேயாகும். இந்த உண்மையின் அடிப்படையில் நிலைவரங்களைப் புரிந்து கொள்வதற்குப் பெரிதாக அரசியல் ஞானம் எதுவுமே தேவையில்லை. ஆனால், அதே புவியியல் நெருக்கம் இலங்கையின் அண்மைக்கால சரித்திரத்தில் ஒரு குறுகிய கால கட்டத்துக்குள் ஏற்படுத்திய விபரீதங்கள் இரு நாடுகளும் அவற்றின் மக்களும் என்றென்றைக்கும் மனதைவிட்டகலாத பாரதூரமான படிப்பினைகளைத் தந்திருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இன நெருக்கடிக்குக் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வுமே தமிழர்களின் பாதுகாப்பையும் பத்திரத்தையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருந்த கால கட்டமொன்று இருந்தது. அப்போது தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் அதிகப் பெரும்பான்மையான பிரிவினரால் இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடாகவே நோக்கப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படையின் இலங்கைப் பிரவேசத்துக்குப் பின்னரான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் காரணமாக மாற்றமடைந்த நிலைமைகளின் கீழ் இலங்கை விவகாரத்தைத் தூர இருந்து அவதானிக்கும் போக்கை இந்தியா கடைப்பிடிக்க ஆரம்பித்தது. இந்தியா விடுதலைப் புலிகளைத் தடை செய்து அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலைகள் காலப்போக்கில் தென்னிலங்கையின் உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், தமிழ் மக்களின் நியாயபூர்வமானதும் சட்டபூர்வமானதுமான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களுக்குக் குறுக்கே இனிமேல் இந்தியா நிற்கும் என்ற நம்பிக்கையையும் பேரினவாதச் சக்திகள் மத்தியில் தோற்றுவித்தன. இன்று தென்னிலங்கை இந்தியாவை ஆரத் தழுவுவதற்கும் நாட்டின் ஐக்கியத்தினதும் ஆட்புல ஒருமைப்பாட்டினதும் `நம்பிக்கைக்குரிய பாதுகாவலன்' என்று போற்றுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும். இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா ஈடுபாட்டைக் காட்டவேண்டும். அதேவேளை, தமிழ் மக்களினதும் பொதுவில் சிறுபான்மை இனங்களினதும் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளுக்கு விரோதமான தென்னிலங்கைப் பேரினவாதச் சக்திகளுக்குக் தெம்பூட்டக் கூடிய ஒரு சிறுநகர்வைக் கூட இந்தியா செய்தல் ஆகாது என்பதே எமது வேண்டுகோள். சரித்திரத்தில் இருந்து எவரும் எதையும் படிப்பதில்லை என்பதே சரித் திரத்தில் இருந்து நாம் படித்த பாடமாகிவிடக் கூடாது. தினக்குரல் - Mathan - 03-04-2005 இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கோருவது இந்தியாவைச் சிக்கலில் மாட்டிவிடும் ஒரு பொறி இலங்கை விவகாரத்தில் இந்தியா தலை யிட வேண்டும் என்று அமைச்சர் கதிர்காமர் புதுடில்லியில் தெரிவித்திருப்பது இந்தியாவை மேலும் சிக்கலில் மாட்டிவிடும் இலங்கை அர சின் பொறி என்று கூறியுள்ளார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பி.பி.ஸி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார் அதில் மேலும் தெரிவித்ததாவது:- உள்ளூர் வளங்களையும், புலம்பெயர்வாழ் தமிழர்களின் உதவிகளையும் மற்றும் ஓரளவு சர்வதேச உதவி நிறுவனங்களின் உதவிகளை யும் வைத்துக்கொண்டே நாம் எமது பகுதிகளில் ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வருகின்றோம். ஆனால், வெளிநாட்டு உதவிகள் அனைத் தும் தென்னிலங்கையில் இலங்கை அரசினால் முடக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளைப் பொறுத்தவரை அனைத்து வெளிநாடுகளுமே சிறப்பாக உதவின. இந்திய இராணுவம் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுப்படுத்தி செயற்பட்டதாக நாம் கேள்விப்பட் டோம். ஆனால், அவற்றை நேரடியாகப் பார்க் கவோ அல்லது அவற்றை அப்பகுதி மக்களிடம் இருந்து அறிந்துகொள்ளவோ எமக்கு முடிய வில்லை. தமிழர் தாயகப் பகுதிகளில் உதவிப் பணிக ளில் ஈடுபடுவதற்கு இந்திய இராணுவம் கேட்டி ருந்தால் நாம் அதனை சாதகமாவே பரிசீலித் திருப்போம். சர்வதேச உதவிகள் எமது பகுதிக ளுக்குத் திருப்பப்ட வேண்டும் என்று கேட்டிருந் தோம். இந்திய இராணுவம் கோரி இருந்தால் அதனை நாம் சாதகமாக பரிசீலித்திருப்போம். இலங்கை விவகாரத்தில் இந்தியா அதிக அக்கறை செலுத்தி அதற்கான ஒரு தீர்வை பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என்று அமைச்சர் கதிர்காமர் கூறுவது குறித்து கேட் கப்பட்டதற்கு பதிலளித்த தமிழ்ச்செல்வன், விடு லைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடை யில் தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கை யில் அதனைப் புறந்தள்ளிவிட்டு சிங்கள அரசு இப்படிப் பேசிவருவது இந்தியாவை ஒரு இக் கட்டில் மாட்டும் முயற்சி என்றும், இது ஒரு காலந் தாழ்த்தும் போக்குமாகும். - இவ்வாறு மக்கள் பிரச்சினை தொடர்பாக எப்போதுமே பொறிவைத்து நடப்பது இலங்கை அரசின் வழமை. இங்கு தீர்வை முன்வைக்க வேண்டியவர்கள் சிங்களத் தலைவர்கள் தான். uthayan |