Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 559 online users.
» 0 Member(s) | 556 Guest(s)
Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  கனேடிய வானொலியின் கருத்து கணிப்பு
Posted by: Mathuran - 02-27-2005, 06:15 PM - Forum: புலம் - No Replies

சிறீலங்காவின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன்; பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமா? இல்லையா? என்ற தொலைபேசிக்கருத்துக்கணிப்பு கனடாவில் இயங்கும் வானொலியான சி.எம்.ஆர். பண்பலை வரிசையில் நேற்றிரவு நடத்தப்பட்டது.

இந்தக் கருத்துக் கணிப்பின்படி பெரும்பாலான மக்கள் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கம் - விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டாது என்று தெரிவித்துள்ளனர்.

C.M.R தமிழ் FM வானொலியில் நடைபெற்ற இந்த கருத்துக்கணிப்பில்ää சிறீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று 15.23 வீதமான மக்களும்; சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டாது என்று 84.67 வீதமான மக்களும் - வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி புதினம்

Print this item

  அம்மா உன் பிள்ளை... எங்கு தரவிரக்கம் செய்யலாம்
Posted by: shanmuhi - 02-27-2005, 01:02 PM - Forum: கவிதை/பாடல் - Replies (19)

அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை... என்ற தமிழீழ பாடல் எங்கு தரவிரக்கம் செய்யலாம்.
அல்லது யாரிடமாவது இருக்கின்றதா...?

Print this item

  பாதியிலே தேன்நிலவை முறித்த..............
Posted by: வியாசன் - 02-27-2005, 10:47 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கும் ஜக்கிய மக்கள் சதந்திர முன்னணி அரசாங்கத்திற்குமிடையிலான உறவு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஐ.ம.சு முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியதுடன் இவ்உறவு முடிவிற்கு வந்துள்ளது.

இவ்உறவில் நெருக்கடி ஏற்பட்டு இ.தொ.கா வெளியேறியதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சிறுபான்மை அரசாகியுள்ளது. அதாவது அறுதிப் பெரும்பான்மை (113 ஆசனங்கள்) அற்ற சிறுபான்மை அரசாங்கமாக (111 ஆசனங்கள்) ஐ.ம.சு.மு. அரசாங்கம் மாறியுள்ளது. இந்நிலையானது அரசாங்கம் கவிழும் அளவிற்கு நிலைமையைக் கொண்டு செல்லப் போவதில்லை என்று துணிந்து கூறமுடியும். ஆனால் சிற்சில தடங்கல்களை மாத்திரமே சில வேளைகளில் மட்டும் விளைவித்தல் கூடும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் குறிப்பாக சனாதிபதி சந்திரிகாவுடனான உறவில் நெருக்கடியேற் பட்டு இ.தொ.கா வெளியேறியதொன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில்ää இவ் இருதரப்பினருக்கும் இடையில் ஏதோ பாரம்பரிய உறவோ அன்றி கொள்கைப்பற்றோ என்று ஒன்றும் இருந்ததில்லை.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் இ.தொ.காவும்- ஐ.ம.சு முன்னணி என்ற ரீதியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சிää ஜே.வி.பி. மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போட்டியிட்டே பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டன. இதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து கொள்வதை எவ்வாறு கொள்கை அடிப்படையிலானது. என்று கூறி விடமுடியும்?

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இருதரப்பிற்குமான தேவையின் நிமித்தம் இரு கட்சிகளும் பேச்சுக்களை நடத்தின. அதாவது அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காக ஐ.ம.சு.முன்னணியும் ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடித்துக் கொள்வதற்காக இ.தொ.காங்கிரசும் இரகசியப் பேச்சுக்களை நடத்தின. இருதரப்பு இலாபம் கருதியதானதாகவே இது இருந்தது.

பேரங்களின் முடிவில் இ.தொ.கா. உறுப்பினர்களில் ஒருவர் அமைச்சராகவும் மற்றையவர் பிரதி அமைச்சராகவும் பதவி ஏற்க இ.தொ.கா. அரசாங்கத்தில் இடம் பிடித்துக் கொண்டது. ஆயினும் இதுவரை இ.தொ.கா எந்த அரசாங்கத்தில் பங்கேற்பினும் முதலில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கும் ஆறுமுகம் தொண்டமான் இம்முறை பதவி ஏற்கவில்லை.

இதற்காக ஆறுமுகம் தொண்டமான் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதற்கு விரும்பவில்லை என்பதல்ல இதன் அர்த்தம். ஆறுமுகம் தொண்டமான் கோரிய அமைச்சுப் பதவியை சனாதிபதி சந்திரிகா உடனடியாக வழங்கத்தயாராக இல்லாமல் இருந்ததே காரணமாகும். ஆனால் காலக்கிரமத்தில் கோரிய அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கையுடன் ஆறுமுகம் தொண்டமான் இருந்தபோதும்ää அது சாத்தியமாகவில்லை. இந்நிலையிலேயே அரசாங்கத்தை விட்டு வெளியேற இ.தொ.கா தலைமை தீர்;மானித்துள்ளதெனலாம்.

ஆனால் ஒன்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் அமைச்சுப் பதவி ஒன்றை அதாவது இ.தொ. காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்குதல் என்பது அவரின் கொள்கைக்கு மாறானதொன்றல்ல. ஏனெனில் ஐ.ம..சு. முன்னணி அரசாங்கத்திலுள்ள சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைத்தவிர ஏனைய அனைவருமே அமைச்சுப் பதவிகளை வகித்தே வருகின்றார்.

இந்நிலையில் ஆறுமுகம் தொண்டமான் புறக்கணிக்கப்பட்டமைக்கு ஜே.வி.பி. காரணமாக இருக்கலாம் என்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுண்டு. ஏற்கனவே 35 இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஜே.வி.பி. தனது பலமான ஆட்சேபத்தைத் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஒரு அமைச்சர் பதவி அதுவும் தமிழர் ஒருவருக்கு வழங்கப்படுவதை அது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளும் என்பதற்கில்லைää

இந்நிலையில்ää ஆறுமுகம் தொண்டமானுக்கான அமைச்சுப்பதவி ஒன்றை சனாதிபதி சந்திரிகா ஒதுக்கீடு செய்வதென்பது சிரமம் மிக்கதொன்றே.

இதனை உணர்ந்தே இ.தொ.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாகத் தீர்மானித்துள்ளது. இ.தொ.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேறியதினால் மலையகத் தமிழ்மக்களுக்கு பெரும் இழப்பு ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இ.தொ.கா. தலைவர்களுக்குச் சிலவேளைகளில் சில இழப்புக்கள் ஏற்படலாம்.

ஆனால் இ.தொ.கா. அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமளவிற்குச் சென்றுள்ளமையும்ää சனாதிபதி சந்திரிகா இ.தொ.காவை அணைத்துச்செல்லமுடியாமல் போனமையும் அண்மைய அரசியலில் முரண்பாடானதொன்றேää இதற்கு ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தில் இனவாத சக்திகளின்; ஆதிக்கம் வளர்ச்சிகண்டு விட்டமை காரணமாக இருக்கலாம். இது ஒரு வகையில் சனாதிபதி சந்திரிகாவின் கைக்கு மீறியதொன்றாகக் கூட இருக்கலாம்.

நன்றி: ஈழநாதம்

தங்களுடைய கருத்துக்கள் வெளியிடுவதற்கு அனுமதியளித்த ஈழநாதம் நாளேட்டு நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்



நன்றி புதினம்

Print this item

  கடனை திருப்பி கேட்ட பெண் எரித்து கொலை
Posted by: Vaanampaadi - 02-27-2005, 10:07 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

பிப்ரவரி 27, 2005

கடனை திருப்பி கேட்ட பெண் எரித்து கொலை

சென்னை:

பூந்தமல்லி அருகே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட பெண் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.


பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி (36). இவரது கணவர் மூர்த்தி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கனிமொழி, அப்பகுதியில் சீட்டுப் பிடித்து வந்தார். அதில் வந்த பணத்தை வட்டிக்கும் கொடுத்து வந்தார். கனிமொழியிடம் மாங்காடு ரகுநாதபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியன் என்பவர் 25,000 , பூந்தமல்லியைச் சேர்ந்த தாஸ் என்பவர் ரூ. 75,000 பணம் வட்டிக்கு வாங்கியிருந்தனர்.

வட்டிக்கு வாங்கிய பணத்தை இருவரும் திருப்பிக் கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து பணத்தை திருப்பித் தருமாறு கனிமொழி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கனிமொழியை மாங்காட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு மாலை வருமாறு இருவரும் கூறியுள்ளனர்.

இதையடுத்து கனிமொழி மாலை 4 மணியளவில் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பாண்டியனும், தாஸும் சேர்ந்து கனிமொழியை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அதிர்ந்து போன கனிமொழி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து கனிமொழி மீது ஊற்றிய இருவரும் அவர் மீது தீவைத்து விட்டு கதவை வெளியில் பூட்டி விட்டு தப்பினர். தீயில் கருகிய கனிமொழியை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கனிமொழி இறந்தார். கனிமொழியை தீவைத்து எரித்த பாண்டியன், தாஸ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Thatstamil

Print this item

  இந்தி நடிகை மோனிகாபெடி இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறார்
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:25 AM - Forum: சினிமா - No Replies

போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும்
இந்தி நடிகை மோனிகாபெடி இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறார்
நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


புதுடெல்லி, பிப்.27-

போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும் இந்தி நடிகை மோனிகாபெடி, இந்தியா வுக்கு கொண்டு வரப்படு கிறார். நாடு கடத்தும் உத்த ரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆகி விட்டது.

மோனிகாபெடி

1993_ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களில் நூற்றுக்கணக் கான பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அபுசலீமின் பெஸ்ட் நண்பர் இந்தி நடிகை மோனிகாபெடி.

மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக அபுசலீமை போலீ சார் தேடி வந்தனர். இந்த நிலை யில் அபுசலீமும், மோனிகாபெடி யும், போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றனர்.

பிடிப்பட்டானர்

சனா கடீல் முல்லிக் என்ற பெயரில் உள்ள பாஸ்போர்ட் மூலம், மோனிகாபெடி சென் றார். போர்ச்சுக்கல் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, 2 பேரின் பாஸ்போர்ட்டும் போலி யானது என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அபுசலீ மும், மோனிகாபெடியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கில் அவர்களுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

சி.பி.ஐ.

இந்த நிலையில் "2 பேர்களை யும் தண்டனை காலம் முடிந்த தும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் மீது இருக்கும் வழக்கு விசாரணை யில் இருக்கிறது" என்று போர்ச் சுக்கல் நாட்டுக்கு, சி.பி.ஐ. கடிதம் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, "என் மீதான வழக்குகளை வாபஸ் பெற கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்" என்று கேட்டு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு எந்த பதிலும் இல்லை.

சுப்ரீம் கோர்ட்டில்

இதைத் தொடர்ந்து " என்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது, என் மீதான தண்டனை காலம் முடிந்து விட்டது. எனவே என்னை நார்வே நாட்டில் உள்ள எனது பெற்றோரிடம் ஒப் படைக்க வேண்டும்" என்று கோரி போர்ச்சுக்கல் சுப்ரீம் கோர்ட்டில் மோனிகாபெடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

இதைத் தொடர்ந்து, போர்ச் சுக்கல் நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சட்ட கோர்ட்டில் மோனிகாபெடி அப்பீல் செய் தார். அந்த கோர்ட்டும், இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

இந்தியாவுக்கு...

எனவே மோனிகாபெடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

அதிகாரி பேட்டி

இதுபற்றி டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது :-

அபுசலீம் , மோனிகாபெடி ஆகியோர் மீதான வழக்கு தஸ்தாவேஜ×க்கள் தயாராக உள் ளன. அபுசலீமை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த சட்ட ரீதியான தடையும் இல்லை. இப்போது மோனிகாபெடியை யும் இந்தியாவுக்கு கொண்டு வர தடை நீங்கி விட்டது.

விரைவில் சி.பி.ஐ. அதிகாரி கள் போர்ச்சுக்கல் சென்று இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவார்கள். இந்தியா வில் அவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெறும்".

இவ்வாறு அதிகாரி கூறினார்.

Dailythanthi

Print this item

  மார்பகம் அழகுப்படுத்தும் கிரீம் விளம்பர சர்ச்சை
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:24 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

மார்பகம் அழகுப்படுத்தும் கிரீம் விளம்பர சர்ச்சை
தாய்லாந்து நாட்டில் மார்பகம் அழகுப்படுத்தும் கிரீம் விளம்பரம் காரணமாக சர்ச்சை எழுந்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் -செக்ஸ் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுவது தாய்லாந்து நாட்டின் பேங்காங். இங்கு ஒரு குறிப்பிட்ட கம்பெனி பெண்களின் மார்பகங்களை அழகுபடுத்தும் புதிய கிரீமை தயாரித்துள்ளது. இதை பெண்கள் மார்பகங்களில் பூசி மசாஜ் செய்வதின் மூலம் மார்ப கங்களின் அழகு கூடுகிறது என்கிறது இந்த நிறுவனம். இதை விளக்க 3 மாடல் அழகிகளை அது தேர்வு செய்தது. பொது இடத்தில் இந்த அழகிகளை நிர்வாணமாக நிற்க வைத்தது. 15 நிமிட நேரம் தங்கள் மார்பகங்களில் இந்த கிரீமை தேய்த்து தாங்களே மசாஜ் செய்து பொது மக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர் அழகிகள் இந்த விளம்பர யுக்தி மிகவும் கொச்சையா னது. அருவருக்கத்தக்கது என்று கூறி பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பதில் கூறிய நிறுவனப் பிரதிநிதி இது பெண்களின் மார்பகங்களை அழகுபடுத்தும் கிரீம்தான். பெரிதாக்கும் கிரீம் அல்ல என்று குறிப்பிட்டார்கள்.

தினகரன்

Print this item

  இசை பாடும் …டூத் பிரஸ்
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:24 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

பல் துலக்கும் போது இசை பாடும் …டூத் பிரஸ்
பல்துலக்கும் போது இசைபாடும் டூத் பிரஸ் ஒன்றை அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹாஸ்பெரோ என்ற நிறுவனம் ஒரு புது முயற்சியாக இசை பாடும் …டூத் பிரஸ்களை தயாரித்து உள் ளது. இந்த டூத் பிரஸ்களை வைத்து பல் துலக்கும் போது இனிமையான கீதங்களை பாடுமாம். இதற்காக …டூத் பிரசில் மிக சிறிய மைக்ரோசிப் ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் இசைபாடும் டூத் பிரஸ்கள் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. இதன் விலை ரூ.500 ஆகும்.

தினகரன்

Print this item

  இப்படியும் ஒரு கணிப்பு...
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:23 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

இப்படியும் ஒரு கணிப்பு...

பிறந்த நாள், நட்சத்திரம் பார்த்து ஜோதிடர்கள் ஒருவருடைய குணாதிசயத்தை கணிப்பார்கள். கைரேகை பார்த்து கணிப்பவர்களும் உண்டு. முகத்தைப் பார்த்தே ஒருவரை `அளந்து' விடமுடியும் என்பதை `அகத்தின் அழகு முகத்திலே' என்பார்கள்.

ஆனால் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பாலியல் ஆராய்சி நிபுணர் பிரோ லாரன்சோனி என்பவர் ஒரு பெண்ணின் மார்பகங்களின் அளவை வைத்தே அவர்களின் தன்மை மற்றும் குணாதிசயங்களை கூறமுடியும் என்கிறார். இதற்காக, பல்வேறு வகையான பழங்களுடன் மார்பகங்களை ஒப்பிட்டு, அந்த பெண்களின் தன்மை பற்றி `பிட்டுப்பிட்டு' வைக்கிறார், லாரன்சோனி. இது எப்படி இருக்கு?

Dailthanthi

Print this item

  20_05_2005_க்கு அடித்தது `திருமண யோகம்'
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:22 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

20_05_2005_க்கு அடித்தது `திருமண யோகம்'

வருகிற 20_05_2005_ந்தேதி அன்று திருமணம் செய்து கொள்ள பல தம்பதிகள் மிகவும் விரும்புகிறார்கள். அந்த தேதியில் திருமணம் செய்து கொள்ள ஆலந்து நாட்டில் அதிக ஜோடிகள் விரும்புகிறார்கள்.

அந்த தேதிக்கு இப்போதே "புக்கிங்" ஆரம்பித்து விட்டது. என்றாலும் திருமண மண்டபங்கள் கிடைக்கவில்லை. கூடுதலாக 30 ஆயிரம் வரை வாடகை கேட்கிறார்கள்.

எதற்காக அந்த தேதி மீது இத்தனை மோகம் தெரியுமா? தங்கள் திருமண நாள் மறந்து போய்விடாமல் எளிதில் நினைவு (20_05_2005) வைத்துக்கொள்ளத்தானாம்.

Dailythanthi

Print this item

  புலிகள் ஆட்சேபம்
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நலன்புரி நிலையங்களில் படையினர்
தங்குவதற்குப் புலிகள் ஆட்சேபம்
எரிக் சொல்யஹய்மிடம் நேரில் தெரிவிப்பு
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கின்ற நலன்புரி முகாம் களிலும் இடைத்தங்கல் நிலையங்களிலும் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது குறித்து விடுதலைப் புலிகள் தங்கள் ஆட்சேபத்தை வெளியிட்டிருக்கின்றனர்.
நேற்று அம்பாறைக்கு விஜயம் செய்த நோர்வேயின் விசேடதூதர் எரிக் சொல்யஹய்மிடம் புலிகள் தமது இந்த ஆட்சேபனையை நேரில் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் மட்டு.- அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளந் திரையன், துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் குயிலின்பன், மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி, மட்டு. மாவட்ட துணைத்தளபதி பிரபா, மாவடி முன்மாரிக் கோட்டத் தளபதி ரமணன் ஆகி யோர் நேற்று எரிக் சொல்யஹய்முடன் பேச்சு நடத்தினர்.
நலன்புரி நிலையங்களில் படையினர் நிலைகொண்டிருப்பதை எரிக் சொல்யஹய் மிடம் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சுனாமி அனர்த்த நிவாரணப் பணிகள் ஜனாதிபதியால் இராணுவ அதிகாரிகளின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதே படையினரின் தலை யீட்டுக்கு வழிவகுத்துள்ளது.
இதனால், நிவாரணப் பணியாளர்களும் தொண்டு நிறுவனங்களும் இடையூறுகளைச் சந்திக்க நேரிடுவதாக விடுதலைப் புலிகள் சுட்டிக் காட்டினர்.

உதயன்

Print this item