![]() |
|
கடனை திருப்பி கேட்ட பெண் எரித்து கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: கடனை திருப்பி கேட்ட பெண் எரித்து கொலை (/showthread.php?tid=4968) |
கடனை திருப்பி கேட்ட பெண் எரித்து கொலை - Vaanampaadi - 02-27-2005 பிப்ரவரி 27, 2005 கடனை திருப்பி கேட்ட பெண் எரித்து கொலை சென்னை: பூந்தமல்லி அருகே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட பெண் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார். பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி (36). இவரது கணவர் மூர்த்தி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கனிமொழி, அப்பகுதியில் சீட்டுப் பிடித்து வந்தார். அதில் வந்த பணத்தை வட்டிக்கும் கொடுத்து வந்தார். கனிமொழியிடம் மாங்காடு ரகுநாதபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியன் என்பவர் 25,000 , பூந்தமல்லியைச் சேர்ந்த தாஸ் என்பவர் ரூ. 75,000 பணம் வட்டிக்கு வாங்கியிருந்தனர். வட்டிக்கு வாங்கிய பணத்தை இருவரும் திருப்பிக் கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து பணத்தை திருப்பித் தருமாறு கனிமொழி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கனிமொழியை மாங்காட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு மாலை வருமாறு இருவரும் கூறியுள்ளனர். இதையடுத்து கனிமொழி மாலை 4 மணியளவில் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பாண்டியனும், தாஸும் சேர்ந்து கனிமொழியை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அதிர்ந்து போன கனிமொழி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து கனிமொழி மீது ஊற்றிய இருவரும் அவர் மீது தீவைத்து விட்டு கதவை வெளியில் பூட்டி விட்டு தப்பினர். தீயில் கருகிய கனிமொழியை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி கனிமொழி இறந்தார். கனிமொழியை தீவைத்து எரித்த பாண்டியன், தாஸ் இருவரும் கைது செய்யப்பட்டனர். Thatstamil - tamilini - 02-27-2005 hock: hock: :evil:
|