Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாதியிலே தேன்நிலவை முறித்த..............
#1
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கும் ஜக்கிய மக்கள் சதந்திர முன்னணி அரசாங்கத்திற்குமிடையிலான உறவு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஐ.ம.சு முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியதுடன் இவ்உறவு முடிவிற்கு வந்துள்ளது.

இவ்உறவில் நெருக்கடி ஏற்பட்டு இ.தொ.கா வெளியேறியதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சிறுபான்மை அரசாகியுள்ளது. அதாவது அறுதிப் பெரும்பான்மை (113 ஆசனங்கள்) அற்ற சிறுபான்மை அரசாங்கமாக (111 ஆசனங்கள்) ஐ.ம.சு.மு. அரசாங்கம் மாறியுள்ளது. இந்நிலையானது அரசாங்கம் கவிழும் அளவிற்கு நிலைமையைக் கொண்டு செல்லப் போவதில்லை என்று துணிந்து கூறமுடியும். ஆனால் சிற்சில தடங்கல்களை மாத்திரமே சில வேளைகளில் மட்டும் விளைவித்தல் கூடும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் குறிப்பாக சனாதிபதி சந்திரிகாவுடனான உறவில் நெருக்கடியேற் பட்டு இ.தொ.கா வெளியேறியதொன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில்ää இவ் இருதரப்பினருக்கும் இடையில் ஏதோ பாரம்பரிய உறவோ அன்றி கொள்கைப்பற்றோ என்று ஒன்றும் இருந்ததில்லை.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் இ.தொ.காவும்- ஐ.ம.சு முன்னணி என்ற ரீதியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சிää ஜே.வி.பி. மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போட்டியிட்டே பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டன. இதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து கொள்வதை எவ்வாறு கொள்கை அடிப்படையிலானது. என்று கூறி விடமுடியும்?

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இருதரப்பிற்குமான தேவையின் நிமித்தம் இரு கட்சிகளும் பேச்சுக்களை நடத்தின. அதாவது அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காக ஐ.ம.சு.முன்னணியும் ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடித்துக் கொள்வதற்காக இ.தொ.காங்கிரசும் இரகசியப் பேச்சுக்களை நடத்தின. இருதரப்பு இலாபம் கருதியதானதாகவே இது இருந்தது.

பேரங்களின் முடிவில் இ.தொ.கா. உறுப்பினர்களில் ஒருவர் அமைச்சராகவும் மற்றையவர் பிரதி அமைச்சராகவும் பதவி ஏற்க இ.தொ.கா. அரசாங்கத்தில் இடம் பிடித்துக் கொண்டது. ஆயினும் இதுவரை இ.தொ.கா எந்த அரசாங்கத்தில் பங்கேற்பினும் முதலில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கும் ஆறுமுகம் தொண்டமான் இம்முறை பதவி ஏற்கவில்லை.

இதற்காக ஆறுமுகம் தொண்டமான் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதற்கு விரும்பவில்லை என்பதல்ல இதன் அர்த்தம். ஆறுமுகம் தொண்டமான் கோரிய அமைச்சுப் பதவியை சனாதிபதி சந்திரிகா உடனடியாக வழங்கத்தயாராக இல்லாமல் இருந்ததே காரணமாகும். ஆனால் காலக்கிரமத்தில் கோரிய அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கையுடன் ஆறுமுகம் தொண்டமான் இருந்தபோதும்ää அது சாத்தியமாகவில்லை. இந்நிலையிலேயே அரசாங்கத்தை விட்டு வெளியேற இ.தொ.கா தலைமை தீர்;மானித்துள்ளதெனலாம்.

ஆனால் ஒன்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் அமைச்சுப் பதவி ஒன்றை அதாவது இ.தொ. காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்குதல் என்பது அவரின் கொள்கைக்கு மாறானதொன்றல்ல. ஏனெனில் ஐ.ம..சு. முன்னணி அரசாங்கத்திலுள்ள சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைத்தவிர ஏனைய அனைவருமே அமைச்சுப் பதவிகளை வகித்தே வருகின்றார்.

இந்நிலையில் ஆறுமுகம் தொண்டமான் புறக்கணிக்கப்பட்டமைக்கு ஜே.வி.பி. காரணமாக இருக்கலாம் என்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுண்டு. ஏற்கனவே 35 இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஜே.வி.பி. தனது பலமான ஆட்சேபத்தைத் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஒரு அமைச்சர் பதவி அதுவும் தமிழர் ஒருவருக்கு வழங்கப்படுவதை அது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளும் என்பதற்கில்லைää

இந்நிலையில்ää ஆறுமுகம் தொண்டமானுக்கான அமைச்சுப்பதவி ஒன்றை சனாதிபதி சந்திரிகா ஒதுக்கீடு செய்வதென்பது சிரமம் மிக்கதொன்றே.

இதனை உணர்ந்தே இ.தொ.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாகத் தீர்மானித்துள்ளது. இ.தொ.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேறியதினால் மலையகத் தமிழ்மக்களுக்கு பெரும் இழப்பு ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இ.தொ.கா. தலைவர்களுக்குச் சிலவேளைகளில் சில இழப்புக்கள் ஏற்படலாம்.

ஆனால் இ.தொ.கா. அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமளவிற்குச் சென்றுள்ளமையும்ää சனாதிபதி சந்திரிகா இ.தொ.காவை அணைத்துச்செல்லமுடியாமல் போனமையும் அண்மைய அரசியலில் முரண்பாடானதொன்றேää இதற்கு ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தில் இனவாத சக்திகளின்; ஆதிக்கம் வளர்ச்சிகண்டு விட்டமை காரணமாக இருக்கலாம். இது ஒரு வகையில் சனாதிபதி சந்திரிகாவின் கைக்கு மீறியதொன்றாகக் கூட இருக்கலாம்.

நன்றி: ஈழநாதம்

தங்களுடைய கருத்துக்கள் வெளியிடுவதற்கு அனுமதியளித்த ஈழநாதம் நாளேட்டு நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்



நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)