| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 535 online users. » 0 Member(s) | 533 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| ::: இராவணன் RETURNS ::: |
|
Posted by: Kurumpan - 02-26-2005, 07:34 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (25)
|
 |
வரலாறு வாய்பிளந்து நிற்கிறது!
இல்லை என்போரும்
இருக்காது என்போரும்
சாத்தியமே இல்லை - என
சத்தியம் செய்தோரும்
இனி என் செய்வார்?
அரக்கன் என வர்ணித்தவர்
அலறிடித்து ஓடுவரா?
10 தலையாம் என
பகிடி வதை செய்தவர்
பித்தனின் உளரல்
எனக் கொள்வரா? - இனி
யாழ்களம் அவர் வந்தால்
அன்றைய இராவணன்
அழுக்காகி போன
வரலாற்றின் தலைவன்
இன்றைய இராவணன்
வீணர் காலத்தில்
எம் காலம் வீணா போச்சென்றெண்ணி
வீணான சித்தாந்தம் தடை போட்டான்
கருத்துடையவன்
சிந்தனையாளன்
சிதறிடாமல்
பகுதிகளை பக்குவமாய்
பங்கு படுத்தினான்
அங்கே மப்பில் போனால்
மரியாதை வெளியேற்றம் தான்.
நகைப்புக்கு
நிலம் கொடுத்த வள்ளல் இவன்
அப்பு போல ம... வந்தவர்
அவர் அணியோடு
அரட்டையில் இணைந்தவர்
மல்லாந்திருந்து
மகிழ்ந்துலாவும்
நிலம் அது
நிச்சயம்...
இவன் வள்ளல்தான்
பத்து தலை
அவ்வப்போது சிவந்ததுண்டு
களத்தின் ஆரோக்கியம் காணவே
அது கண்டு
நாம் வியந்ததுண்டு!
இராவணனே நீவிர் வாழ்க
நின் சேவை வாழிய பல்லாண்டு!!
|
|
|
| விரைவில் கின்னஸில் |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 06:47 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
விரைவில் கின்னஸில்
<img src='http://www.jayatvnews.org/news-photos/short-web.jpg' border='0' alt='user posted image'>
பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1 அடி உயரம் உள்ள 19 வயது பெண், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த சுமார் ஒன்றரையடி உயரம் உள்ள பெண், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த 19-வது வயதான சபா கண்வல் என்ற பெண், 67 சென்டி மீட்டர் உயரமே உள்ளார். ஆறரை கிலோ எடை மட்டுமே உள்ள, நடமாடும் பொம்மைபோல தோற்றமளிக்கும் சபா கண்வல், விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள உலகில் மிக உயரமான மனிதரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jaya news
|
|
|
| விநோத பைக் |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 06:46 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
விநோத பைக்
<img src='http://www.jayatvnews.org/news-photos/vinoda-bike-web.jpg' border='0' alt='user posted image'>
இறக்கைகள் இல்லாத சிறிய விமானம் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் மோட்டார் பைக், அமெரிக்காவில் பிரபலமடைந்து வருகிறது.
ஸ்விஸ் ஏர்லைன்சில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானி அர்னால்டு வேக்னர் என்பவர் வடிவமைத்திருக்கும் இந்த விநோத மோட்டார் பைக், மணிக்கு 165 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். விமானத்தின் இறக்கைகளின் அடிபாகத்தில் இருக்கும் சக்கரங்களைப் போல இந்த மோட்டார் பைக்கின் இருபுறமும் சிறிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பைக்கை இயக்கத் தொடங்கியவுடன், மேலே எழும்பி மறைந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சக்கரங்களை, வளைவுகளிலும், பைக்கின் வேகத்தை அதிகரிக்கும் போதும், பாதுகாப்பு பொருளைப் போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம். பைக்கை ஓட்டுபவர் தவிர, மேலும் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இதன் விலை, இந்திய தொகையில் சுமார் 15 லட்சம் ரூபாயாகும். இந்த பைக்கில் அமர்ந்து செல்வது, விமானத்தில் பறந்து செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக, இதனை பயன்படுத்துவோர் கூறுகின்றனர்.
Jaya news
|
|
|
| இரட்டை குழந்தைகள். |
|
Posted by: KULAKADDAN - 02-26-2005, 06:36 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (80)
|
 |
<img src='http://img233.exs.cx/img233/9949/image0012mq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/1519/image0029bd.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/7268/image0033qb.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/6771/image0040tt.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/2681/image0056cs.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/2892/image0061bw.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/9871/image0078nt.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/6694/image0088ab.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img233.exs.cx/img233/4706/image0096vc.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| தமிழ்ப் படம் ஆங்கிலப் பெயர் அண்ணாவின் கொள்கையா? |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 06:03 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (3)
|
 |
தமிழ்ப் படம் ஆங்கிலப் பெயர் அண்ணாவின் கொள்கையா?<img src='http://thatstamil.indiainfo.com/images26/anna130.jpg' border='0' alt='user posted image'>
சுப.வீரபாண்டியன்
தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவது தொடர்பான வாதங்கள் கொதி நிலையை எட்டியுள்ளது. தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பிறகு, அது இன்னொரு புதிய இடத்தைத் தொட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிக்கை, ஆங்கிலத்தில் பெயர் வைப்பது அண்ணாவின் இரு மொழிக் கொள்கைக்கு ஏற்றதே என்று கூறுகிறது. அண்ணாவின் பெயரால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, அண்ணாவின் மொழிக் கொள்கையை இவ்வளவு மலிவுப்படுத்தலாமா? இப்படிக் கொச்சைப்படுத்தலாமா என்று கேட்க வேண்டியுள்ளது.
அண்ணாவின் மொழிக் கொள்கை என்ன என்பதை, "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்", "தமிழனின் மறுமலர்ச்சி ", "மாணவருக்கு அண்ணா", "அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்" முதலான அவருடைய பல நூல்கள் நமக்கு விளக்குகின்றன.
முன்னாள் துணைவேந்தர் அ.இராமசாமியின் "அண்ணாவின் மொழிக் கொள்கை", மு¬னைவர் சக்கரவர்த்தியின் "அண்ணாவின் விடுதலைச் சிந்தனைகள்" ஆகிய ஆய்வேடுகளில், அவரது மொழிக் கொள்கை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
எந்த நூலிலும், எந்த ஆய்வேட்டிலும், தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பதற்கு அண்ணாவின் கொள்கை ஆதரவு தெரிவிப்பதாக நம் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆனால், அண்ணா உறுப்பினராக இருந்த அதே நாடாளுமன்ற மேலவையில் இன்று உறுப்பினராக இருக்கும், "பன்மொழிப் புலவரான" எஸ்.எஸ்.சந்திரன், "சைக்கிள்" எனும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் சொல்லே இல்லை என்பது போல அறிக்கை விட்டிருக்கிறார்.
இதே சைக்கிள் குறித்து அண்ணா எழுதியுள்ள வரிகள் இப்போது நம் நினைவுக்கு வருகின்றன. பிற மொழியில் இருக்கும் எந்தச் சொல்லையும் தமிழாக்கி, அதாவது ஆங்கிலச் சொல்லையோ, சமசுகிருதச் சொல்லையோ அப்படியே தமிழில் உச்சரிக்காமல், அச்சொற்களை, எல்லாம் தமிழில் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
எடுத்துக் காட்டாக, "சைக்கிள்" என்னும் ஆங்கிலச் சொல்லை, "ஈருருளி" என்றும், "பிரத்யட்சம்" என்ற சமசுகிருதச் சொல்லை "கண்கூடு" என்றும் வழங்கலாம் என்கிறார் அண்ணா ('மாணவர்க்கு அண்ணா').
அண்ணாவிற்கு முன்பு "துவிச் சக்கர வண்டி" என்றும், அவர் காலத்தில் "ஈருருளி" என்றும் அறியப்பட்ட "சைக்கிள்", இன்று மிக எளிமையாய் "மிதி வண்டி" ஆகிஉள்ளதை நாம் அறிவோம். அதை அறிந்து கொள்ள எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களுக்கு நேரமோ, நிதானமோ இல்லாமல் போயிருக்கலாம்.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/jayawe400.jpg' border='0' alt='user posted image'>
அதுகுறித்து நாம் கவலைப்படவில்லை. ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஜெயலலிதாவிற்கு நேரம் இல்லாமல் போகலாமா? அறிஞர் அண்ணாவின் மொழிக் கொள்கை பற்றி அறிய, ஆயிரம் புத்தகங்களைப் படிக்க வேண்டியதில்லை.
1963, மே 2ஆம் நாள், இந்திய நாடாளுமன்ற மேலவையிலும், 1968 சனவரி 23ஆம் நாள், தமிழகச் சட்டமன்றத்திலும், அவர் ஆற்றியுள்ள இரண்டு உரைகளை மட்டுமே படித்தால் போதுமானது.
அதிலும் குறிப்பாக, 23.01.68 அன்று, இரு மொழிக் கொள்கையை ¬முன்மொழிந்து, ஒரு நாள் முழுவதும், சட்டமன்றத்தில் அவர் நிகழ்த்தியுள்ள உரைகளும், வாதங்களும் மொழி பற்றிய அவருடைய உள்ளக் கிடக்கையை நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டும்.
மும்மொழித் திட்டத்திற்கு மாற்றாக, இரு மொழிக் கொள்கையை அன்று அவர் முன்மொழிந்தார். இரண்டே இரண்டு நோக்கங்களுக்காகத்தான், தமிழுடன் ஆங்கிலம் சேர்ந்த இரு மொழிக் கொள்கையை அவர் கொண்டு வருகின்றார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கும், இந்தியாவின் பிற மாநிலங்களோடும், மத்திய அரசோடும், உலக நாடுகளோடும் தொடர்பு கொள்வதற்கும் ஆங்கிலம் தேவை என்பதே அண்ணாவின் கருத்து.
மற்றபடி "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதே அண்ணாவின் மொழிக் கொள்கை என்பதை ஜெயலலிதா மட்டுமல்லாமல், சரத்குமார், நெப்போலியன் போன்ற திமுக நடிகர்களும் தெரிந்து கொள்வது நல்லது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்னும் கொள்கை இன்று, "எங்கே தமிழ், எதிலே தமிழ்? " என்று கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டது உண்மைதான். தமிழ் வழிக் கல்வியை அண்ணா ஆதரித்தார். ஆனால் இன்று ஆங்கிலப் பள்ளிகளே கள்ளிச் செடிகளாய் மண்டிக் கிடக்கின்றன. வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் கூடுதலாக திராவிட இயக்கங்களின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் கொடி கட்டிப் பறக்கின்றது. ஆனால் இதற்கெல்லாம் அண்ணாவைப் பொறுப்பாக்க முடியாது.
"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதே அவரது மொழிக் கொள்கை என்பதற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன. "நானும், திமுக கழகமும் ஆங்கிலத்திடம் பெரும் பற்றுக் கொண்டிருப்பதாக எண்ண வேண்டாம் என்று கூறும் அண்ணா, நான் ஆங்கிலத்திற்காக வாதாடுகிறேன், ஆங்கிலத்திற்காகப் பேசுகிறேன் என்றால், என்னுடைய தாய் மொழியை விட ஆங்கிலத்திற்கு உயர்ந்த இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல; அது மிகவும் வசதியான கருவி என்பதாலும், உள் நாட்டில் மட்டுமல்லாமல், உலக நாடுகளோடும் தொடர்பு கொள்வதற்கு அது உதவும் என்பதாலும் தான்" என்று, எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லாமல் தன் மொழிக் கொள்கையை விளக்குகின்றார்.
கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று பலமுறை அவர் வலியுறுத்தி இருக்கின்றார். இரு மொழிக் கொள்கையை முன் மொழிந்த அதே நாள், சட்டமன்றத்தில் "தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும், பாட மொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும், நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டுக் காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது" என்ற தீர்மானத்தை அவர் முன் வைக்கிறார்.
நீதிமன்றங்களில் தமிழில் வாதாட முடியமா? என்று வினா எழுந்தபோது "தமிழில்தானே வாதாடினாள் கண்ணகி. அவள் கூறிய வாதங்களை ஆங்கில மொழியால் அல்ல, வேறு எந்த மொழியாலும் அளிக்க முடியாது" என்று உறுதிபடக் கூறியவர் அண்ணா.
தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வினாவுக்கு, நம்முடைய ஊனோடும், உயிரோடும் இரண்டறக் கலந்து விட்ட தமிழ் மொழிக்கு உரிய ஏற்றத்தைத் தருவோம். தமிழ் மொழி அதற்குரிய இடத்தை அடையும் வரை ஓய மாட்டோம் என்பதே (அண்ணாவும் அழகு தமிழும்) அண்ணாவின் விடையாக இருந்தது.
இந்திக்கு மாற்றாக ஆங்கிலம் என்பதுதான் அண்ணாவின் கோரிக்கையே அன்றி, தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் என்பது ஒரு நாளும் இல்லை. எனவே, திரைப்படத் துறையினரின் ஆங்கில மோகத்துக்கும், ஜெயலலிதாவின் ஆங்கில ஆதரவுக்கும், தமிழின உணர்வை இம் மண்ணில் விதைத்த தலைவர்களுள் ஒருவரான அண்ணாவைப் பலியாக்கிட வேண்டா என்பதே நம் வேண்டுகோள்.
"தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்" என்று கேட்கும் குஷ்பு போன்ற சுத்தத் "தமிழச்சிகள்", "நாளை தமிழை உயர்த்திப் பிடிக்க அண்ணா யார்" என்றும் கேட்கக் கூடும். அதனை ஆதரித்து ஜெயலலிதாவும், நன்றி தெரிவித்து சரத்குமாரும் அறிக்கை விடவும் கூடும்.
அண்ணாவின் தொடர்தான் நம் நினைவுக்கு வருகின்றது "ஏ...! தாழ்ந்த தமிழகமே!
சுப.வீரபாண்டியன்
Thatstamil
|
|
|
| ஸ்ரீவித்யா மீண்டும் திருமணம் |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 12:50 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
ஸ்ரீவித்யா மீண்டும் திருமணம்?
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/srividhya500.jpg' border='0' alt='user posted image'>
'எவர் கிரீன்' ஸ்ரீவித்யா மீண்டும் கல்யாணம் செய்து கொண்டுள்ளாராம்.
ஆனால் இது ரகசிய கல்யாணம், அது மட்டுமல்லாமல் தன்னை விட 20 வயது குறைந்த இளைஞரை அவர் கல்யாணம் செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
பிறப்பால் மலையாளியான ஸ்ரீவித்யா பிரபல கர்நாடக இசைக் கலைஞரான மறைந்த எம்.எல். வசந்தகுமாயின் மகள். அபூர்வ ராகங்களில் காயத்ரி என்ற வேடத்தில் அறிமுகமானார். உடனே ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து பிரபலமானார்.
முன்னணி நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்துள்ள ஸ்ரீவித்யா, கமல்ஹாசனை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் கமல் ஒதுங்கிக் கொண்டதால் அந்தத் திருமணம் நடக்கவில்லை.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/srividhya1-500.jpg' border='0' alt='user posted image'>
பின்னர் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீவித்யா, அவரால் இன்பத்தை விட துன்பத்தையே அதிகம் சந்தித்தார். கொடூரக் கணவடரிம் சிக்கி சித்திரவதை அனுபவித்த ஸ்ரீவித்யா சொத்துக்களையும் அவரிடம் இழந்துவிட்டு, தனி மரமாய் நின்றார்.
ஒரு வீட்டை மட்டும் கோர்ட்டில் வழக்குப் போட்டு கடுமையாகப் போராடி மீட்டார். அதன் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட ஸ்ரீவித்யா, சாய்பாபாவின் தீவிர பக்தை ஆனார். அடிக்கடி புட்டபர்த்திக்கும் போக ஆரம்பித்தார்.
இந் நிலையில்தான் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குனர் ஒருவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சில உதவி இயக்குனர்களையும் ஸ்ரீவித்யாவையும் இணைத்து செய்திகள் வந்ததுண்டு. ஆனால், அவை வெறும் சினிமா கிசுகிசுக்களாக கரைந்து போயின.
இப்போது இந்த உதவி இயக்குனர் விஷயத்தில், அது கல்யாணம் வரை போய் முடிந்துள்ளதாக சொல்கிறார்கள்.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/srividhya2.jpg' border='0' alt='user posted image'>
ரகசியமாய் இருவரும் மணம் முடித்துக் கொண்டு இப்போது கேரளாவில் குடித்தனம் செய்து வருகிறார்களாம்.
சென்னையில் உள்ள ஸ்ரீயின் வீட்டில் சில நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம். தனது கணவன் கோரிக்கைக்கு ஏற்ப கேரளாவுக்கு குடி பெயர்ந்துள்ளாராம் ஸ்ரீவித்யா.
ஸ்ரீவித்யாவை விட 20 வயது குறைந்தவராம் புதுக் கணவர் என்கிறார்கள்.
மீண்டும் ஒரு அபூர்வ ராகம்!
Thatstamil
|
|
|
| விஞ்ஞானமாம் விஞ்ஞானம் |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 12:43 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
விஞ்ஞானமாம் விஞ்ஞானம்
வியக்க வைக்குதாம் விஞ்ஞானம்
கருவிலே இருக்கும் குழந்தையை
காட்டி கொடுக்குதாம் விஞ்ஞானம்
சாலையிலே நிறை வாகனமாய்
சாதித்துக் காட்டியதாம் விஞ்ஞானம்
இதுங்க விடும் புகையினாலே
ஓசோன் அடுக்கும் ஓட்டையாம் (விஞ்)
பலவகை உரங்களிலே நல்ல
பலனைக் கொடுக்குதாம் விஞ்ஞானம்
இவைகளைப் போட்டு வளர்ப்பதிலே
உணவுப் பொருளும் விஷமாம்
வண்ண வண்ண உணவு வகையால்
வாயை இனிக்க வைக்குதாம் விஞ்ஞானம்
இவைகளை நாம உண்ணுவதாலே
பலவகை நோய்களுக்கு காரணமாம் (விஞ்)
ஆடைகளின் விஷயத்தில்
அழகாய் தெரியுதாம் விஞ்ஞானம்
இது ஆபாசத்தை காட்டவே
அடித்தளமாய் இருக்குதாம்
கணிப்பொறியால் உலகத்தை
அடக்கி வைத்ததாம் விஞ்ஞானம்
இது! வேலை இல்லாத்
திண்டாட்டத்தை அதிகரிக்கவும் செய்யுதாம்.
-க.தங்கம், கொளத்தூர்.
தினதந்தி
|
|
|
| 55 வயது ஆசிரியைக்கு காதல் கடிதம் கொடுத்த பள்ளி மாணவன் |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 12:41 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
55 வயது ஆசிரியைக்கு காதல் கடிதம்
கொடுத்த பள்ளி மாணவன்
பரமக்குடி, பிப். 26_
55 வயது பள்ளி ஆசிரியைக்கு காதல் கடிதம் கொடுத்த பிளஸ்1 மாணவன் கைது செய்யப்பட்டான். இதுபற்றிய விபரம் வருமாறு:_
பரமக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியையாக ஆதிலெட்சுமி(வயது55) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவன் பெயர் முத்தரசு. இவர் முன்னாள் தி.மு.க. மாவட்ட பொருளாளராக இருந்தவர்.
இதே பள்ளியில் காட்டுபரமக்குடியைச் சேர்ந்த சபரிநாதன்(வயது17) என்பவன் பிளஸ்1 படித்து வருகிறான். இவன் ஆசிரியை ஆதிலெட்சுமிக்கு அடிக்கடி யாரோ ஒருவர் கொடுத்ததாக கடிதம் கொடுப்பாராம். அந்த கடிதத்தில் காதல் ரசம் சொட்டசொட்ட வார்த்தைகள் விளையாடப்பட்டிருக்குமாம். மேலும் ஆபாச வார்த்தைகளும் அதில் இடம் பெறுமாம்.
இதுபோல் நேற்று ஒரு கடிதத்தை ஆதிலெட்சுமியிடம் கொடுத்தாராம். இந்த கடிதத்திலும் காதல் ரசம் சொட்டசொட்ட வார்த்தைகள் விளையாடப்பட்டிருந்தது. உடனே எரிச்சல் அடைந்த பள்ளி ஆசிரியை ஏற்கனவே சபரிநாதன் கொடுத்த கடிதங்களை எடுத்து ஒப்பிட்டுபார்த்தாராம். எல்லா கடிதங்களிலும் ஒரே நபர் எழுதிய எழுத்துக்கள் இருந்ததாம். உடனே இவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் சபரிநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினபூமி
|
|
|
| குரங்கு முகத்துடன் சேட்டை செய்யும் இரண்டு குழந்தைகள் |
|
Posted by: Vaanampaadi - 02-26-2005, 12:41 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
குடந்தை அருகே அதிசயம்
குரங்கு முகத்துடன் சேட்டை செய்யும் இரண்டு குழந்தைகள்
குடந்தை,பிப்.26_
குடந்தை அருகே குரங்கு முகத்துடன் சேட்டை செய்யும் இரண்டு குழந்தைகளை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர்.
குடந்தையை அடுத்த திருவலஞ்சுழியை சேர்ந்த புதுப்படையூர் மாதா கோயில் தெருவைச்சேர்ந்தவர் விஜயா (30), விதவையான இவருக்கு வெண்ணிலா (10), தேவயானி (6), முத்து (5) நித்யா (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.
அவருடைய ஜீவனத்திற்கு கஷ்டப்பட்டு கூலி வேலை பார்க்கும் விஜயாவுக்கு பிறந்த முத்து, நித்யா இரண்டு குழந்தைகளும் பிறந்தது முதல் உருவ ஒற்றுமையில் குரங்கை போலவே உள்ளன. இக்குழந்தைகள் பேச முடியாமலும், பசி என்றால் சாப்பாடு என கேட்கமுடியாமலும் உள்ளதுடன், குரங்கு சேட்டையில் தங்களது சைகைகளை காட்டிவருகின்றனர். கோபம் வரும் போது குழந்தைகள் இரண்டும் கடுங்கோபத்துடன் சீறுவது பார்ப்பவர்களை அச்சுறுத்துவதாக உள்ளது.
முரட்டு சுபாவம் கொண்ட இந்த குழந்தைகளை பராமரித்து வரும் தாயின்இக்குழந்தைகள் எதிர்காலத்தை எண்ணி மிகவும் கவலைப்பட்டு வரும் நிலையில் இங்கே சேவை மையம் நடத்தி வரும் குடந்தை துர்கா மாதர் சங்க தலைவி ராஜாத்தி நமது நிருபரிடம் கூறியதாவது
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் அசல் குரங்கின் சாயலுடன் பிறந்துள்ள இக்குழந்தைகளை பற்றி ஆய்வு செய்ய மருத்துவ ஆலோசனை பெறவோ விஜயாவால் முடியவில்லை. மேலும் இருதய நோயாளியான விஜயாவால் பெண் குழந்தை இரண்டையும் படிக்கவைக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்த குழந்தைகளை பராமரிக்கவும் முடியவில்லை. அரசு சிறப்பு கவனத்துடன் கருணை அடிப்படையில் இக்குடும்பத்துக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு பி.வி.ராஜாத்தி கூறினார்.
தினபூமி
|
|
|
|