![]() |
|
55 வயது ஆசிரியைக்கு காதல் கடிதம் கொடுத்த பள்ளி மாணவன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 55 வயது ஆசிரியைக்கு காதல் கடிதம் கொடுத்த பள்ளி மாணவன் (/showthread.php?tid=4993) |
55 வயது ஆசிரியைக்கு காதல் கடிதம் கொடுத்த பள்ளி மாணவன் - Vaanampaadi - 02-26-2005 55 வயது ஆசிரியைக்கு காதல் கடிதம் கொடுத்த பள்ளி மாணவன் பரமக்குடி, பிப். 26_ 55 வயது பள்ளி ஆசிரியைக்கு காதல் கடிதம் கொடுத்த பிளஸ்1 மாணவன் கைது செய்யப்பட்டான். இதுபற்றிய விபரம் வருமாறு:_ பரமக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியையாக ஆதிலெட்சுமி(வயது55) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவன் பெயர் முத்தரசு. இவர் முன்னாள் தி.மு.க. மாவட்ட பொருளாளராக இருந்தவர். இதே பள்ளியில் காட்டுபரமக்குடியைச் சேர்ந்த சபரிநாதன்(வயது17) என்பவன் பிளஸ்1 படித்து வருகிறான். இவன் ஆசிரியை ஆதிலெட்சுமிக்கு அடிக்கடி யாரோ ஒருவர் கொடுத்ததாக கடிதம் கொடுப்பாராம். அந்த கடிதத்தில் காதல் ரசம் சொட்டசொட்ட வார்த்தைகள் விளையாடப்பட்டிருக்குமாம். மேலும் ஆபாச வார்த்தைகளும் அதில் இடம் பெறுமாம். இதுபோல் நேற்று ஒரு கடிதத்தை ஆதிலெட்சுமியிடம் கொடுத்தாராம். இந்த கடிதத்திலும் காதல் ரசம் சொட்டசொட்ட வார்த்தைகள் விளையாடப்பட்டிருந்தது. உடனே எரிச்சல் அடைந்த பள்ளி ஆசிரியை ஏற்கனவே சபரிநாதன் கொடுத்த கடிதங்களை எடுத்து ஒப்பிட்டுபார்த்தாராம். எல்லா கடிதங்களிலும் ஒரே நபர் எழுதிய எழுத்துக்கள் இருந்ததாம். உடனே இவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் சபரிநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தினபூமி - kavithan - 02-27-2005 இதுவுமா... :twisted: |