Yarl Forum
விநோத பைக் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: விநோத பைக் (/showthread.php?tid=4987)



விநோத பைக் - Vaanampaadi - 02-26-2005

விநோத பைக்
<img src='http://www.jayatvnews.org/news-photos/vinoda-bike-web.jpg' border='0' alt='user posted image'>
இறக்கைகள் இல்லாத சிறிய விமானம் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் மோட்டார் பைக், அமெரிக்காவில் பிரபலமடைந்து வருகிறது.

ஸ்விஸ் ஏர்லைன்சில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானி அர்னால்டு வேக்னர் என்பவர் வடிவமைத்திருக்கும் இந்த விநோத மோட்டார் பைக், மணிக்கு 165 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். விமானத்தின் இறக்கைகளின் அடிபாகத்தில் இருக்கும் சக்கரங்களைப் போல இந்த மோட்டார் பைக்கின் இருபுறமும் சிறிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பைக்கை இயக்கத் தொடங்கியவுடன், மேலே எழும்பி மறைந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சக்கரங்களை, வளைவுகளிலும், பைக்கின் வேகத்தை அதிகரிக்கும் போதும், பாதுகாப்பு பொருளைப் போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம். பைக்கை ஓட்டுபவர் தவிர, மேலும் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இதன் விலை, இந்திய தொகையில் சுமார் 15 லட்சம் ரூபாயாகும். இந்த பைக்கில் அமர்ந்து செல்வது, விமானத்தில் பறந்து செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக, இதனை பயன்படுத்துவோர் கூறுகின்றனர்.

Jaya news


- kavithan - 02-27-2005

ஆகா.. அருமை <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->