Yarl Forum
விரைவில் கின்னஸில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: விரைவில் கின்னஸில் (/showthread.php?tid=4986)



விரைவில் கின்னஸில் - Vaanampaadi - 02-26-2005

விரைவில் கின்னஸில்


<img src='http://www.jayatvnews.org/news-photos/short-web.jpg' border='0' alt='user posted image'>

பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1 அடி உயரம் உள்ள 19 வயது பெண், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சுமார் ஒன்றரையடி உயரம் உள்ள பெண், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த 19-வது வயதான சபா கண்வல் என்ற பெண், 67 சென்டி மீட்டர் உயரமே உள்ளார். ஆறரை கிலோ எடை மட்டுமே உள்ள, நடமாடும் பொம்மைபோல தோற்றமளிக்கும் சபா கண்வல், விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள உலகில் மிக உயரமான மனிதரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaya news