Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாடசாலை மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்களுக்கு
#1
பாடசாலை மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பணிப்பு

28.2.2005
வவுனியாவில் குறிப்பிட்ட முக்கிய சந்திகளில் கூடி நின்று பெண்கள் பாடசாலை மாணவிகளைக் கேலி செய்வதிலும் வீணான தொல்லை கொடுக்கும் செயல்களிலும் ஈடுபடும் இளைஞர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா தலைமையகப் பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

தெருக்களில் காரணமின்றி வெறுமனே கூடி நின்று இயல்பு நிலைமைக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட சந்திகளில் இளைஞர்கள் செயற்படுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நீதிபதி பொலிஸாருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அண்மையில் வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் இரு இளைஞர் குழுக்களிடையே நடைபெற்ற மோதலின் போது கத்திகள் பொல்லுகள் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால் இளைஞர்கள் காயங்களுக்கு உள்ளாகிய இந்தச் சம்பவத்தையடுத்து நகர்ப்புற பாடசாலை மாணவர்கள் 6 பேர் உட்பட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் இவர்களில் 6 பேர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதையும் அவர்களின் பல்கலைக்கழக கல்வியில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதையும் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பண்டாரிகுளம் பாடசாலை மாணவர் குழுவிற்கும்இளைஞர் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் பாரதூரமான காயங்களுக்கு இளைஞர்கள் இலக்காகியுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் கொழும்பு வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நீதிபதி 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோஷ்டிகளுக்கிடையிலான தெருச்சண்டைகள் தொடர்ந்து செல்வதையே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வகையான தெருச் சண்டைகளையும் குழு மோதல்களையும் மேலும் அனுமதிக்க முடியாது என்பதால் சந்தேக நபர்களுக்குப் பிணை மறுக்கப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் தெருக்களில் கூடி நின்று குழுக்களாகச் செயற்பட்டு வருவதுடன் தங்களுக்குள் மோதிக் கொள்வதையும் அநாவசியமான செயல்களில் ஈடுபட்டு அமைதிக்கும் இயல்பு நிலைமைக்கும் பங்கம் விளைவிப்பதனால் சந்தேகத்திற்கு உரியவர்களைக் கைது செய்து விசாரணை செய்வதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் எனவும் வவுனியா மாவட்ட நீதிபதி வவுனியா பொலி‑ஸாருக்குப் பணித்துள்ளார்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)