![]() |
|
உடல் நிலை மோசமானதன் எதிரொலியா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: உடல் நிலை மோசமானதன் எதிரொலியா? (/showthread.php?tid=4951) |
உடல் நிலை மோசமானதன் எதிரொலியா? - Vaanampaadi - 02-28-2005 26 ஆண்டுகளில் முதல் முறையாக போப் ஆண்டவருக்கு பதிலாக உதவியாளர் பிரார்த்தனை- உடல் நிலை மோசமானதன் எதிரொலியா? ரோம், பிப். 28- 84 வயதான 2-ம் ஜான்பால், போப் ஆண்டவர் ஆனது முதல், கடந்த 26 ஆண்டுகளில் ஒரு முறைகூட தவறாமல் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டு வந்து இருக்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்ற போது கூட, அந்த அந்த இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்டார். 1981-ம் ஆண்டு மே மாதம் போப் ஆண்டவர் துப்பாக்கியால் சுடப்பட்டு சாவின் விளிம்பைத் தொட்ட 4-வது நாளில் கூட ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தபடி ரேடியோ மூலம் ஆசியுரை வழங்கினார். இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்கனவே ஒருமுறை ஆஸ்பத்திரியில் இருந்தபோதுகூட அவர் ஜன்னல் அருகே உட்கார்ந்து இருக்க, அவரது உதவியாளர் அவர் சார்பில் அருளுரையைப் படித்தார். நேற்று அவருக்குப் பதிலாக அவரது உதவியாளர் ஆர்ச் பிஷப் லியோனார்டோ சாண்ட்ரி புனித பீட்டர் சதுக்கத்தில் பிரார்த்தனை நடத்தினார். போப் ஆண்டவர் சார்பில் அருளுரை வழங்கினார். போப் ஆண்டவர் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே பிரார்த்தனையில் கலந்து கொள்வார் என்று வாடிகன் அறிவித்தது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுவாசக் கோளாறை நீக்குவதற்காக தொண்டையில் ஆபரேஷன் நடந்ததால் அவரால் தற்காலிகமாகப் பேச முடியவில்லை. எனவே அவர் தன் அதிகாரத்தை உதவியாளரிடம் கொடுத்து இருக்கிறார். ஆஸ்பத்திரியில் உள்ள தன் அறை ஜன்னல் அருகேயும் பக்தர்களுக்கு காட்சி தரவும் மாட்டார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அவர் நேற்று ஜன்னல் அருகே நின்று பக்தர்களை ஆசீர்வாதம் வழங்கினார். போப் ஆண்டவரைத் தேர்ந்து எடுக்கும் உரிமை பெற்ற கார்டினால்களும், அரசியல்வாதிகளும் ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். அவர்கள் யாரும் போப் ஆண்டவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. போப் ஆண்டவரின் உதவியாளர்களையும், டாக்டர்களையும் மட்டுமே சந்தித்துப் பேச முடிந்தது. போப் ஆண்டவர் உடல் தேறி வாடிகன் திரும்ப வேண்டும் என்று கோரி கத்தோலிக்க மக்கள் உலகம் முழுவதும் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். போப் ஆண்டவர் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரியிலும் கத்தோலிக்க மாணவர்களும் பாதிரியார்களும் பிரார்த்தனை நடத்தினர். தொண்டையில் ஆபரேஷன் நடந்த 12 மணி நேரத்துக்குப் பிறகு போப் ஆண்டவர் காலை உணவு எடுத்துக் கொண்டார். இயந்திர உதவி இல்லாமல் சுவாசித்தார் என்று வாடிகன் தெரிவித்து உள்ளது. போப் ஆண்டவரைப் போன்ற வயதானவர்களுக்கு ட்ராக் கியோடோமி (தொண்டை ஆபரேஷன்) செய்தால் நிமோனியா போன்ற விஷக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். 10 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போப் ஆண்டவர் மேலும் சில வாரங்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டும். உடல் நிலை மோசமானால் 2-ம் ஜான்பால் போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்து விடுவாரா என்று சில பக்தர்கள் கேட்டபோது, அவர்தான் பொறுப்பில் இருக்கிறார். வாடிகன் எடுக்க வேண்டிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறார் என்று வாடிகன் அதிகாரிகள் கூறினர். Maalaimalar - tamilini - 02-28-2005 :| :| |