![]() |
|
கண்காணிப்புக் குழுவினர் வவுனியாவில் அத்துமீறல்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கண்காணிப்புக் குழுவினர் வவுனியாவில் அத்துமீறல்! (/showthread.php?tid=4931) |
கண்காணிப்புக் குழுவினர் வவுனியாவில் அத்துமீறல்! - Vaanampaadi - 03-02-2005 கண்காணிப்புக் குழுவினர் வவுனியாவில் அத்துமீறல்! வவுனியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையிடுவதாகக் கூறி நேற்று போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அத்து மீறி நடந்துகொண்டனர் என்று புலிகள் குற் றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வவுனியா மாவட்ட விடுத லைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பா ளர் ஞானவேல் தெரிவித்ததாவது- நேற்று மாலை 2 மணியளவில் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வவு னியா மாவட்ட இணைப்பாளரும், அவருடைய உதவியாளரும் என்னைச் சந்திக்க வந்திருந்த னர். இன்று (நேற்று) மக்கள் சந்திப்பு தினம் என்பதால் நான் மக்களை சந்தித்துக்கொண்டி ருந்தேன். அவ்வேளையில் அங்கு வந்த போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் எங்களு டைய அனுமதி எதையும் பெற்றுக்கொள்ளாது போராளிகள் தங்குமிடத்துக்கு - மாவட்ட அரசி யல்துறை அலுவலகத்தின் பிற்பகுதிக்கு - அத்து மீறிச் சென்றனர். இச் செயற்பாடு ஓர் அநாகரிகமான நடவ டிக்கை. அப்போது எமது மொழிபெயர்ப்பாளர், இதுபோராளிகளின் தங்குமிடம். இவர்கள் சொந் தத் தேவைக்காகப் பயன்படுத்துமிடம். நீங்கள் அலுவலகத்தின்முன்பகுதியிலேயே பேசலாம் என்று கூறினார். அவ்வேளை, போர்நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் வவுனியா மாவட்ட இணைப்பாளர், இல்லை நாங்கள் பேசவந்த விடயம் முக் கியமானது. இந்த இடத்தில் வைத்தே அத னைப் பேசவேண்டும் - என்று கூறி வாக்கு வாதப்பட்டுள்ளார். பின்னர் நான் அவ்விடத்திற்கு விரைந்து உரிய முறைப்படி பேச்சுக்களை நடத்த ஒழுங்கு செய்யப்பட்ட இடத்திற்குச் செல்வோம் என்று கூறி னேன். ஆனால், அதற்கு அவர்கள் தாங்கள் எங்கு போவதற்கும் உரிமை உள்ளவர்கள், எந்த இடத் தில் வைத்தும் கதைக்கலாம் என்று என்னோடு வாதிட்டனர். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் எந்த நோக்கத்துடன் வந்தார்கள் என்பதும் - ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என் பதும் - எமக்குத் தெரியவில்லை. அவர்களுடைய செயற்பாட்டை அநாகரிக மான - அத்துமீறிய - நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகின்றோம். - என்றார். இதேவேளை - இச்சம்பவம் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமைப் பரிசோதனை செய்யவில்லை. எனினும், அது தொடர்பான பேச்சுக்களை நடத்தவே எமது பிரதிநிதிகள் அங்கு சென்றிருந்தார்கள் - என்றார். உதயன் |