Yarl Forum
மென்பொருட்களுக்கு நுழைவுச்சொல் பெற்றுக்கொள்ள.......... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: மென்பொருட்களுக்கு நுழைவுச்சொல் பெற்றுக்கொள்ள.......... (/showthread.php?tid=4903)



மென்பொருட்களுக்கு நுழைவுச்சொல் பெற்றுக்கொள்ள.......... - வியாசன் - 03-03-2005

உங்களிடம் பலமென்பொருட்கள் இருக்கலாம் நுழைவுச்சொற்கள் இருக்காது. இணையத்தில் பல பரீட்சாத்தப் பதிப்புக்களை வெளியிடுகின்றார்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை செயலிழந்துவிடுகின்றது. அவற்றை நீங்கள் பதிவுசெய்து அதற்குரிய நுழைவுச்சொல்லை இட்டால் அவை தொடர்ந்தும் செயற்படும். அதனால் நீங்கள் பணத்தை மீதப்படுத்தமுடியும். பெரும்பான்மையான நுழைவுச்சொற்களை எடுத்துக்கொள்வதற்கு ஒரு தளம் இயங்குகிறது. அதன் முகவரி உங்களுக்கு தேவையா?
உங்கள் கருத்துக்களை பார்த்தபின் நான் அதை கொடுக்கும் வழிபற்றி யோசிக்கிறேன். இதில் இணைத்து பொறுப்பாளர்களுக்கு சிக்கல் ஏற்படுத்த விரும்பவில்லை


- tamilini - 03-03-2005

என்ன என்ன மென்பொருட்களிற்கு இருக்கு எல்லாத்திற்குமா..?? சும்மா போடுங்க அண்ணை.. தம்பி தான் அதுக்கு :wink:


- வியாசன் - 03-03-2005

தமிழ்ஸ் தனிமடலில் அனுப்புகிறேன் 10 ட்டை போய் கோள் சொல்லக்கூடாது
புரம்பாலும் எல்லாவற்றிற்கும் கிடைக்கும்


- VERNON - 03-04-2005

மன்னிகவும் வியாசன் அவர்களே
ஒரு மென்பொருள் உருவாக்குவதற்கு எத்தனை மணிநேர வேலை எத்தனை பேரின் முயற்சி அவர்களின் உழைப்புக்கு நாம் கொடுக்கும் நாம் கொடுக்கும் வெகுமதிதான் அவ் மென்பொருளுக்கு நாம் கொடுக்கும் விலை!!!.
இலவசமாக நீங்கள் முயற்சித்துப் பார்த்த மென்பொருள் உங்களுக்கு உபயோகமானது எனில் அதை ஏன் விலை கொடுத்து வாங்கக் கூடாது ?
தற்காலிக உபயோகம் எனில் பரீட்சார்த்த பதிப்பினையே உபயோகிக்கலாமே !!
இணையத் தளங்கள் தங்களின் தளத்தினை விளம்பரப்படுத்த
இப்படியான மென்பொருள் உடைப்பான்களை வழங்குகின்றார்கள்
(இப்படியான மென்பொருள் உடைப்பான்கள் சிலவற்றறை யாழ் இணையத்திலும் கண்டேன் )
மென் பொருள் உடைப்பான்களை உபயோகிப்பதே திருட்டுத்தான் !!!!!!


- anpagam - 03-04-2005

இலவசம் என்றால் பொலிடோலும் (நஞ்சு) குடிக்கும் காலம் அய்யா நம்ம காலம்... :wink: :mrgreen:
விளங்கிறது vernon ஆனால்... அதா கணணி உலகில் யதார்த்தம்... அய்யா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :oops:


- Nitharsan - 03-04-2005

நீங்கள் எந்த தளத்தைப் பற்றி சொல்கின்றீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அத்தளத்தை இங்கு வெளியிடுவதில் களத்திற்க்கு எந்த பிரச்சிணையும் வராது என நினைக்கின்றேன். கோட் (code) பண்ணி போட்டால் அதை நேரடியாக களத்தில் இருந்து அழுத்தி வாசகர்கள்
பார்க முடியாது எனவே அவர்கள் அதை கொப்பி செய்து தங்கள் வுறுசரில் பேஸ்ட் பண்ணி நேரடியாக பார்ப்பார்கள். அப்பிடி செய்தால் எங்கிருந்து அதாவது எந்த தளத்தில் குறிப்பிட்ட தளத்திற்கான இணைப்பு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது...
அப்படி செய்தால் நல்லம்..
இதோ எனக்கு தெரிந்த சிறந்த வைரஸ் அற்ற நுழைவுச்சீட்டு இணையங்கள் சில...


பிறீ சீரியல் இணையத்தில் வைரஸ் இருப்பதாய் எனக்கு எச்சரிக்கை செய்கிறது இருப்பினும் சிலருக்கு பிரச்சினை இல்லை என்று சொன்னார்கள்
நேசமுடன் நிதர்சன்


<b>நிதர்சன் உங்கள் இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. இவ் இணைப்பு வேண்டுபவர்கள் நிதர்சனை மின்னஞ்சல் மூலமோ தனிமடல் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள் நன்றி


கவிதன்</b>


- kavithan - 03-04-2005

இந்த இணைப்புகளில் மேலிழும் விண்டோகள் மூலமும், மற்றும் இணைப்புக்களிலும் தவறான பாலியல் தளங்களுக்கு இணைப்பும், வைரஸ்களின் உறைவிடமாகவும் செயற்படுவதனால் இவ் இணைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளது . இத் தளங்களின் இணைய முகவரி வேண்டும் என்றால் நிதர்சனையோ வியாசன் அண்ணாவையோ தொடர்பு கொள்ளவும்.


- Nitharsan - 03-04-2005

நன்றி கவிதன்
அவற்றில் ஆபாச இணைப்புக்கள் இருந்தும்; அதை இணைத்தமைக்காக வருந்துகின்றேன்...
நேசமுடன் நிதர்சன்


- விது - 03-04-2005

திரு வியாசன் தனிப்பட்டமுறையில் எனக்கு அறியத்தரமுடீயுமா?


- வியாசன் - 03-04-2005

anpagam Wrote:இலவசம் என்றால் பொலிடோலும் (நஞ்சு) குடிக்கும் காலம் அய்யா நம்ம காலம்... :wink: :mrgreen:
விளங்கிறது vernon ஆனால்... அதா கணணி உலகில் யதார்த்தம்... அய்யா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :oops:

நீங்கள் வசதிபடைத்தவர்கள் வரும் எல்லாமென்பொருட்களையும் விலைக்கு வாங்கிவிடுவீர்கள். ஆனால் பலர் அப்படியல்ல.
2000டொலர் பெறுமதியான மென்பொருட்களை மாணவர்கள் விலை கொடுத்துவாங்கமுடியாது.
நீங்கள் தேவைப்பட்டால் சொல்லுங்கள் பெரும்பான்மையான மென்பொருட்கள் தரமுடியும்.
சில நிறுவனங்கள் செய்கிறவேலைக்கு வேறுவழியில்லை.
pinnacle studio 9 plus ன் விலை 120 டொலர்வரை ஆனால் அவர்கள்
உள்ளே பயன்படுத்துகிற Effect ஒவ்வொன்றையும் பயன்படுத்த முடியாதவாறு அதனுள் விளம்பரங்களை சேர்க்கிறார்கள். அதற்குரிய நுழைவுச்சொல் ஒவ்வொன்றும் 50 டொலர்வரை முழுவதையும் பயன்படுத்த 20 க்கு மேற்பட்ட நுழைவுச்சொல் தேவை. விற்பனைசெய்யும்போது அவர்கள் அதை பயன்படுத்தமுடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளதை சொல்லாமல் ஏமாற்றி விற்பனை செய்வது நேர்மையானதா?
இன்று ஒவ்வொருவரையும் ஏமாற்றி விற்பனை சேய்வதை நிறுவனங்கள் கைக்கொள்ளும்போது இப்படியான பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.
அது சரி நீங்கள் இங்கு இடம்பெயர்ந்து(அகதியாக) வந்தபோது நேர்மையாகவா வந்ததீர்கள்.
நீங்கள் வராவிட்டாலும் உங்கள் பெற்றோர் சட்டத்தை ஏமாற்றித்தான் வந்திருப்பார்கள்.
மற்றவர்களின் தவறை சுட்டிக்காட்டும்முன் நீங்கள் உங்கள் மனசாட்சியுடன் சற்றுப்பேசுங்கள்.


- anpagam - 03-05-2005

வியாசன் நான் சொன்னகருத்து உங்கள் இருவரின் கருத்துக்கு மாறாக இருப்பதுபோல் தெரியவில்லையா.. :wink: Idea :mrgreen: