Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 456 online users.
» 0 Member(s) | 453 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  தாயகத்தாகம்
Posted by: anpagam - 03-07-2005, 01:06 AM - Forum: குறும்படங்கள் - Replies (5)

இயற்றியவர்கள்: இளங்கோ, தயா, வர்மன்.
பாடியவர்: செந்தூரன்.
ஒளிப்பதிவு: ரவிஅச்சுதன்.
இசை: வர்மன்.
இயக்கம் & தயாரிப்பு: இளங்கோ நாகராஜா.

MP3
VEDIO
நன்றி.

Print this item

  எது வேண்டும் ? சுதந்திரம் வேண்டும் அதற்கு - - ஆருத்ரா -
Posted by: Thaya Jibbrahn - 03-07-2005, 12:32 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

மெல்ல நழுவி வரும் மாலையில்
மோனத்தில் தவங்கிடக்கும் நேரம்
வட்டு உதிர்ந்த தென்னை உச்சியில்
கிள்ளை மொழி பேசும் கிளிகள்

சிறகடிக்க முடியா குஞ்சொன்று
தவறிக் கீழ் விழும்
பேடையும் துணைவனும்
பிரிவு தாளாது
கூக்குரலிட்டு ஓய்ந்து போகும்.

கூண்டிலிட்டு பார்த்தால் கொள்ளை அழகு
புழுதி உடுத்த தங்கை
விரைந்தோடி வந்தாள்.

ஏய் கிளியே
எது வேண்டும் உனக்கு?

பால் வேண்டுமா? அன்றில்
பழம் வேண்டுமா?

குஞ்சோ அடைபட்ட துயரில்
கூண்டை காலால் பிறண்டும்.


மீண்டும் கேட்டாள்.
அழகு தமிழ் பேசக்
கற்றுத் தரட்டுமா?
விடைபகர முடியா சோகம் அதற்கு
சின்னவள் விடுவதாயில்லை.
எது வேண்டும் உனக்கு?

விறுவிறுவென ஓடி வந்த
சின்னத் தம்பி பிஞ்சு விரல்களால்
கூட்டைத் திறந்தபடி சொன்னான்
சுதந்திரம் வேண்டும் அதற்கு


- ஆருத்ரா -

Print this item

  தமிழ் எழுத்துருக்கள் வேண்டும்!
Posted by: sayanthan - 03-07-2005, 12:18 AM - Forum: கணினி - Replies (6)

விதம் விதமான தமிழ் எழுத்துருக்கள் எங்கு கிடைக்கும்.. அல்லது யாரிடம் கிடைக்கும்? தலையங்கங்களிற்கு பொருத்தமான வகையில்..

Print this item

  மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு
Posted by: KULAKADDAN - 03-06-2005, 11:33 PM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

ஒரு சமன்பாடு

'அவர்கள்' கேட்கிறார்
அதுஎப்படி.....
ஆணும் பெண்ணும் சமமாமே
அதுஎப்படி.....

நாங்கள் சொல்கிறோம்
நிறுக்கும் தராசில்
நிறுத்த பொருளும்
நிறைக்கல்லும்
ஒன்றல்ல
ஆனால்
சமம்!

-உதயா - தோழியர்
மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு

Print this item

  காதலின் தொடக்கமே நட்பா?
Posted by: Malalai - 03-06-2005, 11:32 PM - Forum: கவிதை/பாடல் - Replies (125)

நட்புடன் பழகிய
நாட்களோ சில
நாட்களை மீறிய - அவன்
நினைவுகளோ பல

மானிடர் மனதை
மலங்கவைக்கும்
காதலின் உணர்வுகளை
கண்விழித்துத் தேடுகிறாள்
கண்டுவிடுவாளா
கருவிழிகளே
விடை கூறுங்கள்

பேதையவள் பேதலித்து
பித்துப் பிடித்தலைய
பிடிவாதம் பிடிக்கிறாளே
பிழையேதுமின்றி
பதிலளித்துவிடுங்கள்

கண்களில் காதல் வழிய
கண்ணீரில் தீ வளர்த்துக்
காத்திருக்கிறாள் காதலி - உன்
காலடித் தளத்தில்
அவள் பூத்திருக்கிறாள்

கற்பனையில் காதலித்து
கண்ணனை கைபிடிக்க
ஆசை கொண்டாள்
ஆண்டாள்
காதலைக் கற்பனையென
நினைப்பவனை
கைபிடிக்க
கனவு கண்டாள்
கன்னியிவள்

மங்கையின் மனதை
மாற்றிய மன்னவனே
அவள் மனதை - நீ
அறியாயோ?
அறிந்து விட்டால்
ஆனந்தம் மட்டும் தான்
ஆடவனே உன் வசம்

Print this item

  என்னான்றே வீடியோ பாடல் - TTN
Posted by: yarl - 03-06-2005, 11:16 PM - Forum: கவிதை/பாடல் - Replies (25)

source
]http://sayanthan.blogspot.com/2005/03/blog...t_07.html[/url]


என்னான்றே நீ என்னான்றே
என்னான்றே நீ என்னான்றே

வன்னிக்காட்டு வரிச்ச புலி அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன் - எதிரிக்கு
தண்ணி காட்டும் தலைவன் எங்க அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன்

ஏ... நெல்லியடி நெத்தியடி
மில்லரடி சொல்லியடி
அண்ணேன்றேன் வெற்றி மன்னேன்றேன்

ஆனையிறவு தெரியுமா
அடிச்ச அடி புரியுமா
என்னான்றே நீ என்னான்றே

அன்பில தான் பஞ்சடா
அசராத நெஞ்சடா
அண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன்
........................

இது நான் புதுசாக கேட்ட ஒரு புலிகளின் இயக்கப் பாட்டு! அறிவுமதி எழுத பாடியிருப்பவர் தமிழக பின்னணி பாடகி மாலதி.

விடுதலை கானங்களில் இப்பாடல் ரகம் ஒரு புது மாதிரியாக எனக்கு தோன்றுகிறது.

சிலர் தங்களை இப்பாடல் கவரவில்லை என்கிறார்கள். சிலர் அட்டகாசம் என்கிறார்கள்.

எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் பாடியவர் மாலதி என்பதனாலேயோ என்னவோ கூடவே மன்மதராசா பாடலும் நினைவுக்கு வருகிறது.

இந்தச் சுட்டியை
http://www.inayatamil.com/annaithamizh/enn...nnandreanee.wma
அழுத்தி நீங்களும் கேட்டு பாருங்கள். இணைப்பிற்கான நன்றி - தயா ஜிப்ரான் இணையத்தமிழ்

Print this item

  ஒருவகையான உத்தியோகப்பற்றற்ற அரசு
Posted by: eelapirean - 03-06-2005, 05:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

<b>ஒருவகையான உத்தியோகப்பற்றற்ற அரசு</b>

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடுகளை புனரமைப்பதற்கு ஆறு பில்லியன் ரூபாவை அரச முகவர் நிலையங்களுக்கு ஊடாக உலகவங்கி செலவிடும் என்றும் விடுதலைப் புலிகளுடனான கலந்தாலோசனையுடன் இந்த நிதி செலவிடப்படும் என்றும் உலகவங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பீற்றர் ஹரோல்ட் தெரிவித்தார் என சண்டேரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் நாம் கலந்தாலோசிப்பது குறித்து ஊடகத்துறையின் ஒரு தரப்பும் தாய்நாட்டுக்கான தேசிய இயக்கமும் என்னை கடுமையாக விமர்சித்துள்ளன. உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி - ஒருவகையான உத்தியோகப்பற்றற்ற அரசு இருக்கிறது என்ற உண்மை பிரகாரமும் அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அதுவொரு தரப்பு என்பதாலும் சட்டப்படியான பங்குதாரராக இருப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கு தகுதியுண்டு என்றும் இந்த பேட்டியில் பீற்றர் ஹரோல்ட் தெரிவித்துள்ளார்.

சண்டேரைம்ஸ் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில் யுத்தத்துக்கு பின்னரான புனரமைப்புக்கு நிதியுதவி வழங்கும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகிய கூட்டு தலைமை நாடுகளை கொண்ட குழுவில் சேர்ந்துகொள்ள ஐநா சபை விருப்பம் தெரிவித்தது என்றும் ஆனால் அதனை வேண்டாமென இலங்கை அரசு தடுத்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சுட்டது உலகசந்தை

Print this item

  நிதியுதவி
Posted by: Vasan - 03-06-2005, 02:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதியுதவி

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காக யாழ். மாவட்டத்திலுள்ள இருபாலை எக்ஸ்பிரஸ் கல்வி நிலைய இயக்குனரான வரதராஜன் தனது 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (01.03.05) அன்று மாலை 4.00 மணியளவில் யாழ். மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளரிடம் ஒரு இலட்சம் ரூபா (100இ000ஃஸ்ரீ) நிதியினை கையளித்துள்ளார்.

http://www.eelampage.com/index.shtml?id=20...50747049670&in=
http://www.nitharsanam.com/?art=9117
www.theexpressinstitute.com

Print this item

  தமிழ்ப்பொலிஸ்மா அதிபர் கவலைக்கிடம்
Posted by: KULAKADDAN - 03-06-2005, 12:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

காலம் கடந்த ஞானோதயம் பலருக்கு ஏற்பட்டுவருவதை இலங்கை வரலாற்றுப் போக்கில் பலரையும் காணலாம். அண்மையில் இந்த வரிசையில் இணைந்து கொண்டவர் வேறு யாரும் அல்ல. முன்னாள் சிறிலங்கா பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜாதான். இவர் இவ்வாறு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டபோது அரச ஆதரவு சக்திகள் "பார்த்தீர்களா இலங்கை ஜனநாயக நாடு". அது சிறுபான்மை இனத்தைச்சேர்ந்தவர் ஒருவரையே பொலிஸ்மா அதிபராக நியமித்துள்ளது என்றெல்லாம் தங்களுடைய வால்பிடி அரசியலுக்கு வக்காலத்து வாங்கியதை பெரும்பாலானோர் மறந்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.தற்போது அப்போதைய பொலிஸ்மா அதிபர் சொல்வதை அவருடைய வார்த்தைகளிலே கேளுங்கள்.



" அரசமைப்புக் கவுன்ஸிலில் முக்கியமானவர்கள் மூவர் இருக்கின்றனர். அதன்தலைவர் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டாரஇ அடுத்தவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சஇ மற்றவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க. இவர்களைவிட ஏனைய ஏழு உறுப்பினர் களும் எவ்வாறு அரசியல் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.இவர்கள் அனைவரும் எனது வரலாறுஇ எனது செயற்பாடுகள்இ சேவை மூப்புஇ எனது பின்னணி என அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே என்னைச் சிபாரிசு செய்தனர். அப்படி அந்தப் பத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட என்னை ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார் என்றால் அதுபற்றிக் கருத்துக்கூற என்னால் இயலவில்லை.அரசியலும்இ இனவாதமும் எனக்கு எதிராகச் செயற்படும்போது என்னால் எதுவும் செய்ய முடியாது. இலங்கை என்ற நாட்டுக்காகவே நான் சேவையாற்றி இருக்கிறேன். "



"அரசமைப்புக் கவுன்ஸில் வழங்கிய சிபாரிசைத் தனியொருவர் நிராகரித்திருப்பது பற்றி எனக்கு எவ்வித வருத்தமும் கிடையாது. நான் தமிழன் என்ற காரணத்தினாலேயே பொலீஸ் தலைமைப் பதவியில் நீடிப்பு வழங்கப்படாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்". இவ்வாறு கூறுகிறார் கடந்த 03ம்திகதி லஞ்ச ஆணைக்குழுவின் பிரதிநிதியாக ஏனையோரால் பிரேரிக்கப்பட்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் ரி. ஆனந்தராஜா.



இப்படித்தான் உயர்பொறுப்புகளில் இருந்த பலர் தமிழன் என்ற காரணத்தால் வரலாற்றிருந்து மறக்கடிக்கப்பட்டார்கள்.



குறிப்பு:
சிறிலங்கா முதல் இராணுவதளபதியாக இருந்தவர் பொன் முத்துக்குமார் என்பவர். இவரைப்பற்றி யாரும் அறிந்திருக்கிறீர்களா?

சிறிலங்கா விமானப்படையை கட்டியெழுப்புவதற்காக அப்போதைய ஜனாதிபதியான ஜேஆர் அவர்களால் சிங்கப்பூரிலிருந்து தமிழ் விமான கப்டன் ஒருவர்வரவழைக்கப்பட்டிருந்தார். இவரைப்பற்றியாவது யாராவது அறிந்திருக்கிறீர்களா?

தமிழ்ச்சங்கமம்!

Print this item

  அடுத்த ஐநா தூதுவர் - சிங்களவர்?
Posted by: Mathan - 03-06-2005, 11:10 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

அடுத்த ஐநா தூதுவர்

சிறிலங்கா அரசு ஐநாவுக்கான அடுத்த செயலாளராக தங்களது பிரதிநிதியை நியமிப்பதற்கான அரசியல் இராசதந்திர செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையாகவே சிறிலங்கா அரசுத்தரப்பு சமாதான செயலாளராக ஜயந்த தனபாலா குறிப்பிட்ட பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இவ்விடயம் சம்பந்தமாக தமிழ்செய்தி ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என நான் கருதுகிறேன்.

தற்போதைய யுத்தமற்ற சூழ்நிலையை பயன்படுத்தியும் தற்போதைய ஜயந்த தனபாலாவின் சமாதான பணிகளை சுட்டிக்காட்டியும் தமது பிரதிநிதி ஐநா செயலாளராக உருவாக்கிவிடவேண்டுமென்பதில் சிறிலங்கா அரசு மறைமுகமாகவும் நேரடியாகவும் பல செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இவ்விடயமாக உரிய கவனத்தை தமிழர் தரப்புகள் முன்னெடுக்காவிட்டால் சிறிலங்காவின் அரசாண்மைக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கிவிடும். இலங்கைத்தீவில் சிறுபான்மை இனங்கள் அதன் பெரும்பான்மை இனத்தால் அடக்கப்படுவது நியாயமாக்கப்படும். எனவே தமிழ் தரப்புகள் உரிய கவனம் செலுத்தி சிறிலங்கா அரசின் பிரதிநிதியை ஐநாசபை பிரதிநிதியாக்கப்படுவதை தடுப்பதற்கான காத்திரமான நடவடிக்ககைகளை உடனடியாகவே எடுக்கப்படவேண்டும்.

தற்போது ஐநா செயலாளராகவிருக்கும் கொபிஅனானின் பதவிக்காலம் டிசம்பர்2006 உடன் முடிவடைகிறது.

தமிழ்ச்சங்கமம்

Print this item