Yarl Forum
எது வேண்டும் ? சுதந்திரம் வேண்டும் அதற்கு - - ஆருத்ரா - - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: எது வேண்டும் ? சுதந்திரம் வேண்டும் அதற்கு - - ஆருத்ரா - (/showthread.php?tid=4866)



எது வேண்டும் ? சுதந்திரம் வேண்டும் அதற்கு - - ஆருத்ரா - - Thaya Jibbrahn - 03-07-2005

மெல்ல நழுவி வரும் மாலையில்
மோனத்தில் தவங்கிடக்கும் நேரம்
வட்டு உதிர்ந்த தென்னை உச்சியில்
கிள்ளை மொழி பேசும் கிளிகள்

சிறகடிக்க முடியா குஞ்சொன்று
தவறிக் கீழ் விழும்
பேடையும் துணைவனும்
பிரிவு தாளாது
கூக்குரலிட்டு ஓய்ந்து போகும்.

கூண்டிலிட்டு பார்த்தால் கொள்ளை அழகு
புழுதி உடுத்த தங்கை
விரைந்தோடி வந்தாள்.

ஏய் கிளியே
எது வேண்டும் உனக்கு?

பால் வேண்டுமா? அன்றில்
பழம் வேண்டுமா?

குஞ்சோ அடைபட்ட துயரில்
கூண்டை காலால் பிறண்டும்.


மீண்டும் கேட்டாள்.
அழகு தமிழ் பேசக்
கற்றுத் தரட்டுமா?
விடைபகர முடியா சோகம் அதற்கு
சின்னவள் விடுவதாயில்லை.
எது வேண்டும் உனக்கு?

விறுவிறுவென ஓடி வந்த
சின்னத் தம்பி பிஞ்சு விரல்களால்
கூட்டைத் திறந்தபடி சொன்னான்
சுதந்திரம் வேண்டும் அதற்கு


- ஆருத்ரா -


- KULAKADDAN - 03-07-2005

நல்ல கவிதை......
இணைப்புக்கு நன்றி......


Re: எது வேண்டும் ? சுதந்திரம் வேண்டும் அதற்கு - - ஆருத்ரா - - aswini2005 - 03-07-2005

Thaya Jibbrahn Wrote:விறுவிறுவென ஓடி வந்த
சின்னத் தம்பி பிஞ்சு விரல்களால்
கூட்டைத் திறந்தபடி சொன்னான்
சுதந்திரம் வேண்டும் அதற்கு


- ஆருத்ரா -

இந்த வரிகளே இந்தக்கவிதையின் உயிராகிறது.