| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 514 online users. » 0 Member(s) | 512 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| தமிழ்செல்வனின் எச்சரிக்கை |
|
Posted by: eelapirean - 03-07-2005, 04:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தமிழ் மக்கள்ää விடுதலைப் போராளிகளை படுகொலை செய்யும் நிகழ்வுகளுக்கு முடிவுகட்டும் வகையில் விரைவில் தமிழீழத் தேசியத் தலைமை தீர்க்கமான முடிவை அறிவிக்க உள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்;செல்வன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று அளித்த நேர்காணலில் சு.ப.தமிழ்ச்;செல்வன் இதைத் தெரிவித்தார்.
அந்த நேர்காணலில் தமிழ்ச்;செல்வன் கூறியுள்ளதாவது:
தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் எமது போராளிகள் கொல்லப்படுவதையும் எங்களுடைய தலைவர் தொடர்ந்தும் பார்த்து சகித்துக்கொண்டிருக்க மாட்டார்.
நிச்;சயமாக எமது தலைமைப்பீடம் மிக விரைவில் இதற்கொரு தீர்க்கமான முடிவை எடுக்கின்ற சூழலை நோக்கி நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறது.
இது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மக்கள் சொந்த இடங்களில் இருந்து தொடர்ந்து இடம்பெயர்ந்தமை தமிழ்மக்கள் மீது பெரியதொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சிங்களப் படைகள் மேற்கொண்டடு அழித்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டவை ஆகியவற்றால் தான் எமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது.
எங்களுடைய இந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது ஒரு தேசிய விடுதலை அமைப்பாக பரிமாணம் பெற்றுள்ளது.
பெரியதொரு பலங்கொண்ட படைக்கட்டுமானங்களைக் கட்டி எழுப்பி இன்று எங்கள் நிலப்பிரதேசத்தின் அறுபது எழுபது வீதமான நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்.
முழுமையாக தமிழ் மக்களுடைய ஆதரவோடும் பங்களிப்போடும் எங்களுடைய விடுதலைப் போராட்டம் மிக உயர்ந்த ஒரு நிலையில் இருக்கின்றது.
ஆகவே தமிழ் மக்கள் மீது இப்படியான படுகொலைகளை தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தால் விடுதலைப்புலிகள் பொறுமைகாத்துக் கொண்டிருப்பார்கள் என்பது எதிர்பார்க்க முடியாது.
விடுதலைப்புலிகள் ஒரு கால அவகாசத்தை- ஒரு சந்தர்ப்பத்தை தெற்கிற்கு- சிங்கள அரசாங்கங்களுக்கும் இனவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் எப்பொது இதில் இருந்து சலிப்படைந்து வெறுப்படைந்து அவர்கள் ஒரு உறுதியான முடிவை எடுக்கிறார்களோää அந்தக்கட்டத்தில் விடுதலைப்புலிகளும் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார்கள்.
நிச்;சயமாகப் பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. பொறுமை என்பதற்கு உண்மையில் கணிசமான அளப்பெரிய தியாகங்களைச்; செய்துவிட்டோம்.
இனி அடுத்தகட்டமாக சர்வதேச சமூகத்திற்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் எங்களுடைய செய்திகளை ஆணித்தரமாக கொடுத்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் இப்படியான போக்குகளில் இருந்து மாற்றங்கள் ஏற்படாவிட்டால் நிச்;சயமாக நிலமை மோசமடையும் என்றே நான் கருதுகிறேன்.
விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில் நாங்கள் எப்பொழுதுமே யுத்தத்தையோ வன்முறையையோ பெரும் உயிரழிவையோ நாங்கள் விரும்பவில்லை.
எங்கள் மக்கள் மீது அவை திணிக்கப்படும் பொழுது அதனை எதிர்கொள்வதற்காக எங்களுடைய மக்களையும் தேசத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு தற்காப்பு நிலையாகத்தான் எங்களுடைய விடுதலை அமைப்பு கட்டி எழுப்பப்பட்டது.
உயிரழிவும் இழப்புக்கள்ää அவலங்கள் ஆகியவற்றை மீறி நாங்கள் ஒரு நல்ல எதிர்காலத்தைக் கட்டி எழுப்புகிறோம். அதற்கான ஒரு சந்தர்ப்பமாகத் தான் விடுதலைப்புலிகள் மீது ஒரு நிழல் யுத்தத்தை படுகொலைகளைச்; செய்து கொண்டிருக்கின்ற சூழலிலும் இவ்வளவு இழப்புக்களையும் தாங்கிக்கொண்டு நாங்கள் கால அவகாசத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம். பொறுமை காக்கின்றோம் ஆனால் தொடர்ச்;சியாகச்; சிங்கள அரசாங்கம் இதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் மீதும் தமிழ் தேசம் மீதும் ஒரு யுத்தத்தைச்; சுமத்துமேயாக இருந்தால் விடுதலைப்புலிகள் தீர்க்கமான முடிவை எடுப்பார்கள்.
அதனை எதிர்கொள்வதற்கு மிகத்துணிககரமான துணிச்;சலான தீர்மானங்களை எடுத்து அடுத்த கட்டத்திற்குச்; செல்வார்கள் என்பதில் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையைச்; செலுத்துகின்றோம் என்றார் அவர்.
:roll: :roll: :roll: நன்றி புதினம்
|
|
|
| சகலவித செல்வங்களையும் பெற... |
|
Posted by: வியாசன் - 03-07-2005, 03:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (18)
|
 |
பத்தினித்தெய்வத்தின் கால்களில் விழுந்தால் சகலவிதமான செல்வங்களும் கிடைக்கும். நீங்களும் சகலவிதமான செல்லவங்களும் பெற வேண்டுமா?
Anvarrajah
<img src='http://img164.exs.cx/img164/887/anwarraja9sk.jpg' border='0' alt='user posted image'>
thanapal
<img src='http://img164.exs.cx/img164/1251/dhanabal6vi.jpg' border='0' alt='user posted image'>
Jeevananththam
<img src='http://img164.exs.cx/img164/7589/jeevanandham3bo.jpg' border='0' alt='user posted image'>
Jeyakumar
<img src='http://img164.exs.cx/img164/6373/jeyakumar1ql.jpg' border='0' alt='user posted image'>
Panndurangan
<img src='http://img164.exs.cx/img164/8071/paandurangan5xa.jpg' border='0' alt='user posted image'>
Pannerselvam
<img src='http://img164.exs.cx/img164/869/panneer3ev.jpg' border='0' alt='user posted image'>
Ponnaiyan
<img src='http://img164.exs.cx/img164/6192/ponnaiyan6vc.jpg' border='0' alt='user posted image'>
Semmalai
<img src='http://img164.exs.cx/img164/9569/semmalai6st.jpg' border='0' alt='user posted image'>
Shanmuganathan
<img src='http://img164.exs.cx/img164/9955/shanmuganaatha8lg.jpg' border='0' alt='user posted image'>
Thalvaisundaram
<img src='http://img164.exs.cx/img164/5983/thalavaisundaram3sz.jpg' border='0' alt='user posted image'>
Thampiththurai
<img src='http://img164.exs.cx/img164/3067/thambidurai5rw.jpg' border='0' alt='user posted image'>
Vaiththilingam
<img src='http://img164.exs.cx/img164/6662/vaidyalingam3kj.jpg' border='0' alt='user posted image'>
Vallarmathi
<img src='http://img164.exs.cx/img164/6066/valarmadhi3bv.jpg' border='0' alt='user posted image'>
Veluchsamy
<img src='http://img164.exs.cx/img164/2319/veluchaamy3sd.jpg' border='0' alt='user posted image'>
சுட்டபழம்
நன்றி தினகரன்
|
|
|
| நானும் புதுசுதான் ! |
|
Posted by: thivakar - 03-07-2005, 12:04 PM - Forum: அறிமுகம்
- Replies (25)
|
 |
வணக்கம்................
நானும் புதுசுதான் என்னையும் இணைத்துக் கொள்ளுவீஙக தானே................
;<b>அன்புடன் திவாகர்...........சவுதி அரேபியா </b>
|
|
|
| "சில்க்"கை முந்துவாரா தேஜாஸ்ரீ ? |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 05:30 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
"சில்க்"கை முந்துவாரா தேஜாஸ்ரீ ?
சில்க் ஸ்மிதா அளவுக்கு தேஜாஸ்ரீ வருவாரா என்பது 'அது ஒரு கனாக்காலம்' வெளிவந்தால் தெரியும்.
மூன்றாம் பிறையில் கமல், ஸ்ரீதேவியின் நடிப்பு, பாலுமகேந்திராவின் கேமரா, அட்டகாசமான கதை என பல அம்சங்கள் பளிச்சிட்டாலும் அதையும் மீறி இன்னும் நம் மனக் கண்ணில் நிழலாடுவது, சில்க் ஸ்மிதாவின், "பொன் மேனி உருகுதே' பாடல்தான்.
அந்த அளவுக்கு அருமையான டான்ஸ் மூவ்மென்ட்ஸ், இசை, ஜானகியின் ஸ்வீட் வாய்ஸ், சில்க்கின் நளினம் என பாட்டுக்குப் பலம் சேர்த்த விஷயங்கள் பல. இன்று கேட்டாலும் அந்தப் பாட்டு அப்படியே சிலிர்க்க வைக்கும்.
மூன்றாம் பிறைக்கு வெயிட் கொடுத்த பொன்மேனி போல, "அது ஒரு கனாக்காலம்' படத்திலும் ஒரு பாட்டை வைத்துள்ளார் பாலு மகேந்திரா. பொன்மேனியைப் போல வர வேண்டும் என்று நினைத்து அதை அவர் வைக்கவில்லையாம்.
எதேச்சையாக அமைந்தது என்று பாலு மகேந்திரா கூறினாலும் கூட, மூன்றாம் பிறையை இந்தப் பாடல் தூக்கிச் சாப்பிடும் என்கிறார்கள்.
இந்தப் பாட்டுக்கு தேஜாஸ்ரீ நடனமாடியுள்ளார். இளையராஜாவின் இசையில் பாட்டு அட்டகாசமாக வந்துள்ளதாம். இந்தப் பாட்டு தனக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என்று சந்தோஷமாக கூறுகிறார் தேஜாஸ்ரீ.
சின்ன வீடா வரட்டுமா மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த தேஜாஸ்ரீ, இந்தப் பாட்டின் மூலம் சில்க் ஸ்மிதா போல உச்சத்தைத் தொடுவார் என்று பாலுமகேந்திராவே பாராட்டினாராம்.
பாலு மகேந்திரா சார் போன்ற பெரிய இயக்குனரின் வாயால் நான் பாராட்டப்பட்டது ரொம்பப் பெருமையாகஇருக்கிறது.
சில்க் ஸ்மிதா அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட இந்தப் பாடலுக்கு நன்றாக டான்ஸ் ஆடியுள்ளேன் என்றுதான் நினைக்கிறேன். மிகவும் சிரமப்பட்டு இந்தப் பாடலுக்கு ஆடினேன். டான்ஸும், பாட்டும் அருமையாக வந்துள்ளது.
இளையராஜா சாரின் இசையும் பாடலும் நன்றாக வந்ததும் ஒரு காரணம். சில்க் ஸ்மிதாவுடன் என்னை ஒப்பிட்டு இப்போதே பேசுவது சந்தோஷமாக இருக்கிறது என்கிறார் தேஜாஸ்ரீ.
தேஜாஸ்ரீ இப்போது படு பிசி. "அது ஒரு கனாக்காலம்' படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதைப் போல நிறையப் படங்களில் ஆடிவருகிறாராம்.
"தகதிமிதா', "அந்த நாள் ஞாபகம்', விவேக்குடன் "சொல்லி அடிப்பேன்', "நீயே நிஜம்' என அவரது கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்.
நல்லா வந்தா சரி!
|
|
|
| வெள்ளரிக்காயின் மகிமை |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 04:15 AM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
வெள்ளரிக்காயின் மகிமை...
வெள்ளரிக்காய் வில்லைகளைக் கண்ணின் மேல் வைத்துக் கொண்டால் கண் எரிச்சல் உடனே போகும். வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி முகத்தில் தேய்த்தால், கரும் புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவை மறைந்து சருமம் பளபளப்பாகும். வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, தயிரில் போட்டு அத்துடன் பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து குளிர் சாதன பெட்டியில் வைத்து பிறகு ஜில்லென்று ஒரு கப் சாப்பிட்டால் வெய்யிலால் வரும் தாகம், சோர்வு களைப்பு நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.
உதடுகள் பளப்பளக்க...
முகத்திலேயே மிக மிக மென்மையான பகுதி உதடுகள்தான். உதடுகள் உடலின் வெப்பம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி வறண்டு, கறுத்துப் போகும். இரும்புச் சத்து குறைவாக இருப்பதும், உதடுகள் கறுப்பாக இருப்பதற்கு ஒரு காரணம். இதற்கு ஒரே வழி, சுத்தமான பன்னீர் ரோஜாவின் சாறு எடுத்து தினமும் வெண்ணெய் கலந்து உதடுகளில் பூசி வரவும். சில நாட்களில் உதடுகளில் மாற்றம் தெரியும். தண்ணீர் நிறையக் குடிக்கவும். நல்ல தரமான லிப்ஸ்டிக் உபயோகப்படுத்தவும்.
கால்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமா...
கால்களுக்கு தினமும் கட்டாயம் ஓய்வு தேவை. மசாஜ் செய்வதன் மூலம் கால்களுக்கு இந்த ஓய்வைக் கொடுக்கலாம். கால்களை அடிக்கடி சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். பிறகு மென்மையான துண்டால் இதமாகத் துடைத்து வைத்துக் கொள்ளவும். கணுக்காலிலிருந்து பாதம் வரை வாரம் இருமுறை ஆயில் மசாஜ் செய்து கொள்ளவும். முடிந்தால் ஒத்தடம் கொடுக்கவும். வெந்நீர் மூலம் ஒத்தடம் கொடுத்தால் (எண்ணெய் மசாஜ் பிறகு) கால்கள் பளபளப்படையும். எப்போதும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை காலணிகளை மாற்றுவது சிறப்பு.
முடி கொட்டாமல் இருக்க...
சிலருக்கு முடி அடிக்கடி கொட்டும். இந்த பிரச்சனைக்கு இதோ உடனடி தீர்வு. முடி கொட்டுவதற்கு முக்கியக் காரணம் உடலில் ஏற்படும் மாற்றங்கள். மன அழுத்தம், கவலை, உடல்நலத்தில் பாதிப்புகள், மற்றும் உடல்சூடும் ஒரு காரணமாகும். நிறைய இயற்கை உணவுகள் (காய் கறி, பழ சாலட்டுகள்) சாப்பிடவும். தலை முடிக்கு உயர்தர மூலிகை எண்ணெய் நல்ல பலன் தரும். மோரில் வெந்தயப் பொடி கலந்து சாப்பிட்டால் முடி கொட்டுவது நிற்கும்.
|
|
|
| சரும பிரச்சனையா? இனி கலங்க வேண்டாம் |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 04:14 AM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
சரும பிரச்சனையா? இனி கலங்க வேண்டாம்
பெண்களின் சருமத்தை தாக்கி அதன் ஆரோக்கியத்தையும், அழகையும் கெடுக்கும் நோய்களுள் முக்கியமான ஒன்று செதில் படை. படை படையாக வரும் இது வெள்ளைச் செதில்களாகவும் உதிரும்.
செதில் படை நோய் சருமத்தின் செல்களை வேகமாக மூப்படைய வைக்கும். ஒரு மாதத்தில் வளர்ச்சி அடைய வேண்டிய செல்கள் 3 அல்லது 4 நாட்களிலேயே வளர்ந்து முதிர்ந்து விடும். ஆனால் உதிர்வதில் மட்டும் வேகம் காட்டுவதில்லை. சருமத்தில் சிவந்து எரிச்சலை ஏற்படுத்தும்.
நோயின் பாதிப்பு ஏற்பட்டவுடன் தொடக்க காலங்களில் சிறு சிறு வட்டங்களாக தோன்றி பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பரவும். சருமத்தின் மேல் புறத்தில் உறுத்தலான செதில்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். குறைந்த பட்சம் 30மி.மீ. அளவில் இருந்து 200 மி.மீட்டர் வரை படைகளின் அளவுகள் அமையும். ஓயாத நமைச்சல் இருக்கும்.
சொறிந்தால் இவை உதிரும். ரத்தக் கசிவும் இருக்கும். மருந்துகளின் ஒவ்வாமை நுரையீரல் நோய்கள், மனக்கவலை, மன உளைச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்று இதற்குக் காரணமாகும்.
பரம்பரையும் கூட இந்த பாதிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
பெரும்பாலும் இது தொற்றுவதில்லை. நோய் கண்ட இடங்களை மிதமான சூடுள்ள வெந்நீரை ஊற்றி செதில்களை மென்மையாகத் தேய்த்து அகற்றிய பின்பு மருத்துவர் தரும் மருந்துகளைப் பூசலாம்.
சரும பாதிப்புகளுக்கு நல்ல நிவாரணம் தரக் கூடியது உயிர் சத்து டி. சூரிய ஒளியில் இருந்து இதைப் பெற முடியும். உடலில் சூரிய ஒளி படும்படி நிற்பதும் நல்ல பலனைத் தரும். மனதை ஒருநிலைப்படுத்தும் முறையாக தியானம் இந்த பாதிப்பிற்கு நல்ல பலன் தரக்கூடியது.
அமிலத் தன்மை கொண்ட தக்காளியை விலக்குவதுடன் இறைச்சியையும் ஒதுக்குதல் வேண்டும். இந்த நோய் ஒருமுறை வந்து குணமான பின்பு மீண்டும் வரும் வாய்ப்பும் உண்டு. சிலருக்கு ஒரு சில குறிப்பிட்ட பருவங்களில் மட்டும் ஏற்படுவதும் உண்டு. இந்த பாதிப்பை சாதாரண சொறி - சிரங்கு என நினைத்து அலட்சியமாக இருப்பது மிகவும் தவறான ஒன்று. இந்த பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மருத்துவரை நாடி உடனடியாக ஆலோசனையுடன் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
|
|
|
| தலைமுடி நரைப்பதைத் தவிர்க்க முடியும் |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 04:13 AM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
தலைமுடி நரைப்பதைத் தவிர்க்க முடியும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே இளம் வயதிலே வயது முதிர்வுப் பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. அழகு சாதனப் பொருள்களுக்கு அடிமையாவதன் மூலம் பெண்களுக்கு முடி நரைத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றுகின்றன. இதிலிருந்து விடுபட வழி இருக்கிறதா? அதற்கு முன் அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:-
உடலில் அடிப்படையாக வாதம், பித்தம் ஆகியவை அதிகரிப்பதன் மூலம்தான் இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது.
உலர்ந்துபோன உணவு, காரம், உப்பு நிறைந்த, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளைவிட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு. பசியில்லாத போது அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல் ஆகியவை தோச காரணிகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே இளம் வயது முதிர்வு ஏற்படுகிறது.
பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் ஆகியவை தோசக் காரணிகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இளம்வயது முதிர்வு ஏற்படுகிறது.
இளம் பெண்கள் தங்கள் மேனியழகைப் பாதுகாக்க என்னென்ன வழிகளில் முயற்சிக்கலாம் என்ற ஆலோசனையை ஆயுஷ் ஆயுர்வேதிக் அறிவியல் மையத்தின் மருத்துவ வல்லுநர் இங்கே வழங்குகிறார். குறிப்பாக நரை வராமல் தடுக்க அவர் கூறும் ஆலோசனைகளை மிக பயனுள்ளவை!
தினசரி தவறாமல் கடைôபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
அதிகாலையில் விழித்தல், குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை ஒரு பழக்க வழக்கமாகக் கொண்டிருத்தல்.
இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் சூரிய வெப்பத்தால் முகத்தில் எண்ணெய் வடிதல். அழுக்கு சேர்தல் ஆகியவை உண்டாகிறது. முகம் மிருதுத் தன்மை பெறுவதற்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.
தலை, காதுகள் மற்றும் பாதங்களில் தினகரி உயவுத் தன்மை கொண்ட எண்ணெய்களைப் பூசுவதன் மூலம் தோசக் காரணிகளை நீக்கலாம்.
எளிதில் கிடைக்கும் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம் நன்கு குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தல் ஆகியவற்றைத் தடுக்கிறது.
உணவுப் பழக்க வழக்கத்தை ஒழுங்குபடுத்துதல்.
நீங்கள் உட்கொள்ளும் உணவு இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளைக் கொண்டு நடுநிலையுடன் இருக்க வேண்டும்.
உங்களுடைய உணவில் கோதுமை, கருப்பு கொள்ளு, தேங்காய், மனிலா கொட்டை, வெல்லம், நெய் மற்றம் பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சருமத்தில் ஈரத் தன்மை மற்றும் வழவழப்பு தன்மை மூலமாக சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது.
இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின் குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் தூங்கச் செல்ல வேண்டும்.
எண்ணெய் மிகுந்த, காரமான, வாசனை நிறைந்த மற்றும் பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
தினசரி உடற்பயிற்சியாக ஒன்றரை மணி நேரம் வரை வேகமாக நடப்பது முக்கியம். இதனால் வியர்வை வெளியேறி நச்சுப்பொருள் நீக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.
|
|
|
| கலைஞரின் 'கண்ணம்மா' |
|
Posted by: Vaanampaadi - 03-07-2005, 04:04 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
கலைஞரின் 'கண்ணம்மா'
கொஞ்சங்காலத்துக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம், தப்பிப் போய் இப்போது வந்திருக்கிறது.
படத்துக்கு கருணாநிதியின் வசனம், மீனாவின் பாந்தமான நடிப்பு, கவர்ச்சியுடன் கூடிய விந்தியாவின் வில்லத்தனம் என மூன்று பலங்கள். ஆனால், கதையில் தான் அந்த அளவுக்கு பலமில்லை.
தமிழர்களின் மாலை நேரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து வைத்துக் கொண்டுள்ள 'அழுமூஞ்சி' தொலைக்காட்சித் தொடர் நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதை ஏற்க மட்டுமல்ல, சகிக்கவும் முடியவில்லை.
ராதிகாவின் அண்ணாமலை தொடரில் நடித்த பிரேம்குமார், மெட்டி ஒலியில் நடித்த வெங்கட் இருவரும்தான் அந்தப் படத்தின் கதாநாயகர்கள்.நாடகத்தில் நடிப்பதைப் போலவே படத்திலும் 'நடித்துள்ளார்கள்'. இதில் வெங்கட் கொஞ்சம் போல தேறினாலும், பிரேம்குமார் நடிப்பு படுமோசம். இந்த வெங்கட் ஏற்கனவே, பாரதிராஜாவின் ஈரநிலம் படத்தில் வில்லனாக வந்து, கிளைமாக்ஸ் காட்சியில் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
கொஞ்சம் அந்த கால கதை தான். ஏழை ஆனந்த் (பிரேம்குமார்), பணக்கார மதன் (வெங்கட்) இருவரும் நல்ல நண்பர்கள். ஆனந்த்தை டாக்டருக்குப் படிக்க வைக்கிறான் மதன். படிக்கும்போது கண்ணம்மாவின் (மீனா) நட்பு பிரேம்குமாருக்கு கிடைக்கிறது. இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.
இந்நிலையில் மதனுக்கு, கண்ணம்மாவை பேசி முடிக்கிறார் அவளது அப்பா (சந்திரசேகர்). இதை எதிர்பார்க்காத மதன், தனது நண்பனுக்கே கண்ணம்மாவை கல்யாணம் செய்து வைக்கிறான். திருமணத்திற்குப் பின்னர் ராணுவத்தில் வேலை கிடைத்து இந்தியாவின் இமயமலையின் பனி படர்ந்த கார்கில் போர் முனைக்கு செல்கிறான் ராணுவ டாக்டரான ஆனந்த். சில நாட்களிலேயே பனிப்புயலில் சிக்கி இறந்து விட்டதாக கர்ப்பிணியான கண்ணம்மாவுக்கு தகவல் வர உடைந்து போகிறாள். மார்க்கம் தெரியாமல் தத்தளிக்கும் கண்ணம்மாவை தனது வீட்டுக்குக் கூட்டி வருகிறான் மதன். இதை மதனின் மனைவி மாலா (விந்தியா) எதிர்க்கிறார். மீனாவுக்கும், தன் கணவருக்கும் தொடர்பு இருப்பதாய் விஷம் கக்குகிறார் விந்தியா. இதனால் மதன் குடும்பத்தில் குழப்பம். மீனாவை வீட்டை விட்டு விரட்ட பல குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்து தோற்ற விந்தியா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதே சமயம் எதிர்பாராத திருப்பமாக பனிப்புயலில் சிக்கி இறந்ததாகக் கருதப்பட்ட ஆனந்தும் ஊர் திரும்புகிறார்.
கண்ணம்மாவின் அவலநிலையைப் பார்த்து கொதிக்கும் அவன், அடுத்து என்ன செய்கிறான் என்பதே கதை.
மொத்தமாக படத்தைப் பார்த்தால், பல குறைகள் பளிச் பளிச்சென தெரிகின்றன. நாடகத்தனமான காட்சிகள், அதற்கு வலுவேற்றும் வகையிலான நடிகர்கள், கனமில்லாத கதை என குறைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
மீனாவின் நடிப்பு மிக அருமை. தனக்கும் மதனுக்கும் தொடர்பிருப்பதாய் விந்தியாவால் பஞ்சாயத்தில் நிறுத்தப்படும்போது, கருணாநிதியின் நீண்ட வசனங்களை உணர்ச்சிகரமாய் உச்சரித்து கைத்தட்டல் வாங்குகிறார். அதே போல சந்திரசேகர். வழக்கமாகவே கொடுத்த பாத்திரத்தில் சிறப்பாக நடிக்கும் இவர் கூடுதலாக சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
ஆனால், டிவி நடிகரான பிரேம் படத்தில் டூயட் பாடி ஆடுகிறார். பார்க்க கண்றாவியாக இருக்கிறது. விந்தியாவுக்கு வழக்கம்போல் நடிப்பை விட கவர்ச்சி நன்றாகவே கைகூடி வருகிறது. பேசாமல் அந்த வழியிலேயே தொடர்ந்து அவர் போய் விடலாம். அதிலும் கிச்சு கிச்சு தாம்பாளம் பாட்டில் நம்மை ரொம்பவே உசுப்பேத்துகிறார்.
படம் முழுவதும் நறுக் வசனங்களால் தற்கால நாட்டு நடப்புகளை விளாசித் தள்ளியிருக்கிறார் கருணாநிதி.
"கண்ணம்மா இல்லாமல் வீடே வெறிச்சோடி விட்டது" என்று குயிலி கூறும்போது, "கண்ணகி இல்லாமல் கடற்கரையே வெறிச்சோடி கிடக்கிறது" என்று வையாபுரி பதில் சொல்ல, கருணாநிதியின் பேனா வார்த்தை ஜாலம் செய்கிறது. தமிழன் புகழ் பாடும் வசனங்களுக்கும் குறைவில்லை.
விஷப் பாம்பும் பளபளப்பானது, விலாங்கு மீனும் பளபளப்பானது என்று வரும் வரிகள் பழைய பூம்புகார் பட வசனங்களை நினைவுபடுத்துகிறது. சில இடங்களில் வசனங்கள் ரொம்ப நீளம். திரைக்கதை அமைப்பில் பெரிதாக ஓ(கோ)ட்டை விட்டிருக்கிறார்கள். காட்சிகள் அந்த கால சினிமா மாதிரி நாடக பாணியில் நகர்கின்றன.
படத்தின் தலைப்புப் பாட்டையும் கருணாநிதியே எழுதியிருக்கிறார். பாடல் வரிகள் சூரியக் கதிர்கள். 'இசை வசந்தம்' எஸ்.ஏ.ராஜ்குமாரன் இசை காதுகளை பல இடங்களில் பதம் பார்க்கிறது. இயக்குனர் பாபா போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, சன் டிவி நாடகத்தை பெரிய திரையில் பார்த்த உணர்வு ஏற்படுவதை தவிர்ப்பது ரொம்ப சிரமம்.
|
|
|
|