Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 498 online users.
» 0 Member(s) | 495 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,557
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  அமெரிக்க இலட்சியம்
Posted by: Mathan - 03-10-2005, 01:01 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

<img src='http://www.yarl.com/vimpagam/albums/userpics/usaim.JPG' border='0' alt='user posted image'>

Print this item

  பெண்மையின் மெளனபாசை...!
Posted by: tamilini - 03-09-2005, 05:45 PM - Forum: கவிதை/பாடல் - Replies (79)

<img src='http://p.webshots.com/ProThumbs/33/15133_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

[b]மகளீர்க்கு ஒரு தினம்
மகளீர் தினம்
குட்டுப்பட்டு குட்டுப்பட்டு
குனிந்து விட்ட
தலைகள் யாவும்
இன்னும் நிமிர்ந்திடவில்லை
எங்கோ நிமிர்ந்து விட்ட
தலைகள் ஒன்றிரண்டின்
கொக்கரிப்பா இது

பஞ்சாயத்தின் தீர்ப்பிற்காய்
பாஞ்சாலியாய் ஆக்கப்பட்ட
பாகீஸ்தானிய மங்கைக்கு
நீதியில்லை..
கொண்டையில் பிடித்து
கொண்டவன் கொடுமை
செய்வதற்காய்
கோட்டேறி தவணை
கேட்ட பெண்
இன்னும் இவ்வுலகில்

ஆண்குழந்தைக்காய் ஆசை கொண்டு
ஐயா சாமி என்று
சாமியாரின் இச்சைக்கு
இரையான சிந்தனை திறனற்ற
பெண்களும் இவ்வுலகில் தான்.

காதலென கைபிடித்து
சீதனத்தை உதறிவிட்டு
வேண்டா மருமகளாய்
காஸ் வெடித்து
கதைமுடிந்து போவதும்
இங்கே தான்

கணவனிற்காய் காத்திருக்க
கணவனோ கண்ட வீடு மேய
காத்திருந்து அவனை ஏற்பவளும்
இன்னும் இங்கே தான்..
பிறபெண்ணை ஆய்ந்தவனை
வேண்டவென விலக்கி விட்டு
வீரமாய் வாழாது.
விதியென்றெண்ணி..
காலடியில் வீழ்ந்து கிடப்பவளும்
இன்னும் இங்கு

இச்சைக்கு அழைத்தவனை
செல்வாக்கான இடம் என்று
செருப்பால் அடிக்காமல்
மானம் என்றும் மிரட்டல்
என்றும் பயந்து..
எழுத்தால் அடிக்காது
வெளியே சொல்லாத
பெண்ணியம் பேசும்
எழுத்தாள பெண்மணியும்..
இன்னும் இங்கே தான்.

எங்கே அடக்கப்படுகிறதோ..
எங்கே ஒடுக்கப்படுகிறதோ
அங்கே விடியல் இல்லை.
அவர்களிற்கு விழிப்புணர்வு
கொடுக்க பெண்ணியவாதிகள் இல்லை.
எங்கோ ஒருமூலையில்
எதுவுமே அறியாது.
அடுப்பிற்குள் விறகாய்
இரையாகிப் போகும்
அப்பாவி பெண்களிற்கு
மகளீர் தினம்..
என்னவென்று தான் புரியுமா..??

ஆணும் பெண்ணும் சமன் என
அறைகூவல் விட்டுக்கொண்டு
பெண்ணிற்கு மட்டும் விழா எதற்கு
கிடைக்கும் என்று
காத்திருப்பில் பலன் ஏது
பெண்கள் நிலை உயர
வேண்டும் எனின்
ஒரு மகளீர் தினம் தேவையில்லை
தினம் தினம் சாதிக்க வேண்டும்
வருடம் முழுதும் கூப்பாடு..
வருடத்தில் ஒருநாள் பெண் புகழ்பாடா..??

எத்தனை தினங்கள் பெண்ணிற்கு
வயதிற்கு வந்துவிட்டால் தினம்
வளைகாப்பு தினம்
தாலி அறுப்பு தினம்
பெண்ணை பொம்மையாய் இருத்தி
பூசைசெய்யும் தினங்கள்
இன்னும் அழியவில்லை
இதற்குள் ஒரு மகளீர் தினம்
செயல்வடிவு பெறாத காரியங்கள்
மூலைக்குள் முடங்கிக்கிடக்க
அர்த்தமே இல்லாத
ஒரு மகளீர் தினமா..??
களையப்பட வேண்டிய
எத்தனையோ களைகள்
களையப்படாமல் இருக்க..
மகளீர் தினம் என்று..
மன்றங்களில் பேசியும்.
மலர்ச்செண்டு பரிசளித்தும்..
பயன் என்ன..??
தொடரும்...!

Print this item

  சின்னப்பிள்ளைக்கு சின்ன சந்தேகம்
Posted by: Malalai - 03-09-2005, 03:52 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (58)

காதலா நட்பா அன்பா சிறந்தது? உங்கள் கருத்த சொல்லுங்களேன் :wink:

Print this item

  சுதந்திர தாகம்
Posted by: msuresh - 03-09-2005, 12:30 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (1)

நோர்வேயில் 'சுதந்திர தாகம்" எழுச்சி நிகழ்வு-19.03.05

http://www.tamilnaatham.com/advert/norway20050309/

Print this item

  சமஷ்டித்தீர்வு அவசியம்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
Posted by: வியாசன் - 03-09-2005, 10:34 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (3)

சமஷ்டித்தீர்வு ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

ஒஸ்லோ பிரகடன வரைவிற்கு அமைய ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித்தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கைகளுக்கான ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வோல்ட்னர் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோது இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தீர்வுமூலம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் கைச்சாத்திட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக பல்வேறு நண்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனை கௌரவிக்கும் முகமாக வன்முறைச்சம்பவங்களையும் சிறுவர்களை யுத்த நடவடிக்கைகளுக்காக சேர்ப்பதையும் இடைநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கைகளுக்கான ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

மேலும் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனர்நிர்மாணப்பணிகள் குறித்து அவர் விரிவாக தெரிவித்துள்ளார்.

இவ் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து தங்களது பிரதிநிதிகள் இவ் விஜயத்தின்போது ஆராய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனர்நிர்மாணப்பணிகளுக்கு அவசியமான பொதுக்கட்டமைப்புக்குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.

இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாகுவது அவசியமானது என்றும் இதனை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சகல தரப்பினரையும் அவர் கேட்டுள்ளார்.

குறிப்பாக அரசாங்கம்ää விடுதலைப்புலிகள் எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவு இதற்கு மிகவும் அவசியம் என்று தெரிவிக்கும் அவர்ää

தற்போது இது குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்றும் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





சுட்டபழம்
நன்றி புதினம்

Print this item

  கற்பூர வாசத்தைக் கழுதை அறியாதே
Posted by: hari - 03-09-2005, 07:11 AM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<span style='font-size:23pt;line-height:100%'>கற்பூர வாசத்தைக் கழுதை அறியாதே
[size=14]
வானத்துத் தேவதை பூமிக்கு வருகின்றாள்.
வரம்கேட்க காத்திருப்பவர்களே
வரிசையாக வாருங்கள்.
"வெண்தாமரைத் தட்டேந்திய" வெடியரசி
வீதிக்கு வருகின்றாள்
எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.
" நவாலி நரபலி" நாயகி உலா வருகின்றாள்
பிக்குகளே "பிரித்" தோதுங்கள்
தலதாமாளிகையின் தங்கக் கவசமே
"சந்திரிக்கா"வுக்கு வாழ்த்துக் கூறுக.
அலரி மாளிகை அலங்கார ரூபிணி
"கொரகொல்லைச் சமாதி" யைக்
கும்பிட வருகின்றாள்.
எடுபிடிகளெல்லோரும் எழுந்து புறப்படுக
நாடாண்ட பண்டாரநாயக்கா திருமகளே!
ஈடாடிக் கொண்டிருக்கும் ரத்வத்த மருமகளே!
செந்தமிழர் குடியழிக்கத் தேரெடுத்த சீமாட்டி!
தேசமெல்லாம் தீமூட்டும் சிங்களவர் பெருமாட்டி!
தாய்வாழ்வு வாழ்க! தமிழ் வாழ்வு வீழ்க.
"கட்டியக்காரக் கதிர்காமரே" வருக!
இதை எட்டுமுறை சொல்லுக.
என்னது?
உன்னால் முடியாதா?
கதிர்காமா எதிர்வாதமா புரிகின்றாய்?
என்ன? உனக்குத் தமிழே தெரியாதா?
மன்னிக்க;
ஆத்திரத்தில் அவசரப்பட்டு விட்டேன்.
உன்னைப் போலொருவன்
உலகத்தில் கிடையாது.
அடிமைக்கு நீயே அசல்.
தமிழே தெரியாத தமிழனே!
காக்கை வன்னியனின் கடைசித் தம்பியே!
ஆங்கிலத்தில் சொல்லு அது போதும்.
அடுத்து "ஆராத்தியெடுக்கும் அழகி" யார்?
பத்மாவா?
பலே, பொருத்தமான பொடிச்சி
நல்ல பலசாலிகள் நாலுபேர் வேண்டும்.
கனதூரம் "காவவேண்டும்."
இடையிடையே "காலும் பிடிக்கவேண்டும்!
எச்சில் துப்பும்போது
இருகையில் ஏந்தவேண்டும்.
எவரெவரென்று பேர்சொல்லு பார்க்கலாம்?
"உடுப்பிட்டிச் சிங்கம்"
"திருமலைச் செயல் வீரன்"
"அத்தியடிக் குத்தியன் டக்ள்ஸ் தேவானந்தா"
மற்றது யார்?
"மாணிக்கதாசன்"
அச்சா, அருமையான தெரிவு.
இவர்களுக்கு
எலும்புகூட எறியவேண்டியதில்லை
பழைய செருப்புக்கே
பல்லிளிக்கக் கூடியவர்.
நிலபாவாடை விரிப்பவன் யார்?
"நீலன் திருச்செல்வம்"
சபாஷ்
அள்ளக்குறையாத அறிவுத் திலகத்துக்கு
வெள்ளத் துணிவிரிக்கும் வேலையா?
வெகு பொருத்தம்.
ஆயிரம் கண்ணுடைய ஆத்தாளுக்கு
சாமரம் வீசுவது யார்?
"அஸ்ரப்" பை அழைத்து வாருங்கள்.
கவரி பற்றி வீசட்டும் காற்று வரட்டும்.
பெற்ற தாயை கூட நிறுத்து விற்கும்
எட்டப்பர் கூட்டமே!
தமிழனின் மானத்தையும், வீரத்தையும்
எங்கே அடகு வைத்தீர்கள்?
கசாப்புக்கடை வாசற் காகங்களாகக்
கழிவுகள் தூக்கவா காத்திருக்கிறீர்கள்?
உங்களையும் ஒருத்தி பெற்றாளே
என்ன பாவம் செய்தாளோ?
எத்தனை வதைக்கிடையில் எம் நாடு
நீங்கள் பத்திரிக்கையில் பார்த்தது பாதி,
பாழிருட்டில் போனது மீதி
நெடிய பனையாக நிமிர்ந்துள்ள தேசத்துக்கு
கொடிய விஷமேற்றக் குதிப்பவர்களே
தமிழன் எதிரியால் அழிந்ததைவிட
துரோகியால் எரிந்ததே அதிகம்.
இந்த வரலாறு இன்றுவரை நீண்டு
உங்களிடம் வந்து முடிகின்றது.
உதிரம் சொரிந்து வளர்த்த உரிமைப் பயிரை
கருகவிடச் சொல்லும் கறுப்புச் சட்டைகளே!
நாளை காலமெழுதும் தீர்ப்பின்
வாயில் விழுந்து போய்வீர்கள்.
நாங்கள் காற்றிடமிருந்து காப்பாற்றி
போற்றி வணங்கும் "புனித நெருப்பை"
ஊதியனைக்கும் உரிமையை
உங்களுக்குத் தந்தது யார்?
கானல் நீரில் கைநனைக்கத் துடிப்பவரே!
கனவிற்கண்ட தெருவில்
பயணம் புறப்பட்டு
இன்று காடுமாறி விட்டீர்கள்.
இனி வீடு வரமாட்டீர்கள்.
விடுதலை போராட்டமென்பது
வாய் கிழியும் வார்த்தைகளாலான
வானவில்லல்ல.
புள்ளடி போடும் கள்ள வியாபாரமல்ல
அது உயிர்கொடுத்து வாங்கும் உரிமம்
சத்தியத்துக்கான யுத்தம் தான்
உரிமைக்கான திசைகாட்டும்.
வழிதவறாத நேர்கோடே வழிகாட்டும்.
உயிர்ப்பூவே விடுதலைக்கு உரிய மலர்.
"பிள்ளைகளின்" பொன்னுடலம் வீழும்
ஒவ்வொரு கணமும்
பூமிப்பந்தே புல்லரித்துக் கொள்ளும்.
காற்றின் கண்களும் கலங்கும்
மேகங்கள் கூட மெளனமாகும்.
நெஞ்சுக் கூட்டுக்குள் நெருஞ்சி குத்தும்.
உங்களுக்கு இவையொன்றும் உறைக்காது.
வேரிழந்து போன மரங்களுக்கு
நீரினைப் பற்றி எப்படித் தெரியும்?
உங்களை எவர்தான் கணக்கில் எடுத்தார்?
சுவர்வெடித்தும்
கூரை சிதிலமாகியும் விட்ட
பழைய வீட்டுக்கு எவர்தான் வர்ணம் பூசுவர்.
என்றாலும்....
பத்திரிக்கைகள் படிக்கும் போது தான்
பற்றிக்கொண்டு வருகிறது
விடுதலைக்கு அதிக விலை கொடுத்து விட்டும்
விஸ்பரூபமாக நிற்கும் எங்கள் தலைவிதியை
தூரத்தில் உள்ள
நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும்.
கற்பூர வாசத்தை கழுதை அறியாதே;
தந்ததைத் தின்றுவிட்டுச் சரிந்து படுக்காமல்
உங்களுக்கேனிந்த "ஊர்த்துளவாரம்"?
இரும்படிக்கும் இடத்திலே
இலையானுக்கு என்ன அலுவல்?
சுதந்திரத்துக்குப் போராடும் மக்களுக்கு
சோற்றுப் பிண்டங்கள்
சுற்றறிக்கை விடுவதேன்?
மனிதனாக பிறந்தவனுக்கு
வெட்கம், ரோசம் வேண்டும்.
அதையெப்படி உங்களிடம் எதிர்பார்பது ?
மனிதர்களுக்குத்தானே அது!
</span>
புதுவை இரத்தினதுரை
ஆவணி 1995

இக்கவிதை பற்றிய உங்கள் மதிப்பீட்டுக்கு இங்கே சொடுக்குங்கள்

Print this item

  சுரதாவின் ஈழம்-எழுதி செயலியில் இணையத்தமிழ்.
Posted by: Thaya Jibbrahn - 03-09-2005, 03:08 AM - Forum: இணையம் - Replies (2)

இணையத்தமிழ் இணையத்தளம் தற்போது சுரதா வின் ஈழம்-எழுதி செயலியில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்வதன் மூலம் அந்த செயலியை மேம்படுத்தவும் இணையத்தளத்தின் ஆக்கங்களை செப்பனிடவும் உதவலாம். நண்பர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

www.inayatamil.com

Print this item

  சின்னப்பிள்ளைகளுக்கு மட்டும்
Posted by: vasisutha - 03-08-2005, 11:39 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (15)

சின்னப்பிள்ளைகளுக்கு மட்டும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:

<b><span style='font-size:25pt;line-height:100%'>ஏமாந்த வேதாளம்!</b></span>

<img src='http://img190.exs.cx/img190/5411/vethalam2ur.jpg' border='0' alt='user posted image'>

ஒரு விவசாயி தன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தான். அவனது கடுமையான உழைப்பின் காரணமாக நெல் பயிர் நன்றாகச் செழித்து வளர்ந்திருந்தது. கதிர் முற்றி நெல் மணிகள் மஞ்சள் நிறத்தில் மின்னின. இந்தச் சாகுபடி நன்றாக விளைந்திருப்பதால் குடும்பம் கஷ்டப்படாமல் இருக்கும் என்று எண்ணினான் விவசாயி.

கதிர் அறுக்க நல்ல நாள் பார்த்து கதிர் அரிவாள், சாக்கு மூட்டை எல்லாம் எடுத்துக்கொண்டு அறுவடைக்குத் தன் வயற்காட்டிற்குச் சென்றான் விவசாயி.

ஒருமுறை வயலின் முன் விழுந்து கும்பிட்டு எழுந்த விவசாயி பயிர் செழித்து முற்றி வளர காரணமான சூரியனையும் வணங்கினான். பிறகு தலையில் துண்டைக் கட்டி, இடுப்பு வேட்டியை தார்பாய்ச்சிக்கட்டி வலது கையில் கதிர் அறுக்கம் அரிவாளுடன் வயற்காட்டில் அறுவடையை ஆரம்பிக்க இறங்கினான்.

அப்போது.

``நில், பயிரை தொடாதே! என்று ஒரு அதட்டும் குரல் கேட்டது.

விவசாயி நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான். எவருமே தென்படவில்லை.

``என் வயலில் அறுவடை செய்ய என்னை தடை செய்வது யார்? என்று கேட்டான் விவசாயி.

``நான்தான் தடை செய்கிறேன். என் பெயர் வேதாளம். இந்த வயலை இப்போது நான் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறேன்! என்றது வேதாளம்.

``என் வயல் இது. நான் பாடுபட்டு பயிர் வளர்த்திருக்கிறேன். இது எனக்கு உரியது. என் வயலில் ஆக்ரமிப்பு செய்யவோ, என்னை அறுவடை செய்யாதே என்று தடுக்கவோ சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது! என்று சொன்ன விவசாயி அறுவடை செய்ய இடது கையால் ஒரு கொத்துக் கதிரை பிடித்தான்.

``என் சாபத்துக்கு ஆளாகாதே! என்று கத்தியது வேதாளம்.

``என்ன சாபம் கொடுப்பாய்? என்று கேட்டான் விவசாயி.

``அறுவடை செய்து நீ கட்டும் ஒவ்வொரு கட்டிலில் இருந்தும் உனக்கு ஆழாக்கு நெல் மட்டுமே கிடைக்க சாபமிடுகிறேன்! என்றது வேதாளம்.

அதைக்கண்டு திகைத்துப் போய்விட்டான் விவசாயி. அறுவடை செய்தால் நாப்பது ஐம்பது கட்டுதான் தேறும். ஒவ்வொரு கட்டிலிருந்து இந்த வேதாளம் சாபமிட்டபடி ஒரு ஆழாக்கு நெல் மட்டுமே கிடைக்கும் என்றால் மொத்தம் பத்துப்படி நெல் கூடத் தேறாதே என நினைத்தான் விவசாயி.

``என்ன யோசனை செய்கிறாய்? என் சாபத்தின் விளைவைப் பற்றி யோசிக்கிறாயா? என்று கேட்டது வேதாளம்.

``ஆமாம்! என்று மெல்ல முனகினான் விவசாயி.

``இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்? ஆளுக்குப் பாதி எடுத்துக் கொள்வோமா? என்று கேட்டது வேதாளம்.

``என்ன சாபம் கொடுத்தாய்? என்று கேட்டான் விவசாயி.

``ஒவ்வொரு கட்டுக்கும் ஒவ்வொரு ஆழாக்கு நெல்மட்டுமே கிடைக்கும்! என்றது வேதாளம்.

`சரி என்று சொல்லிவிட்டு விவசாயி நெற்கதிர்களை அறுக்கத் தொடங்கினான்.

வேதாளம் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது நான்கு கதிர்களை அறுவடை செய்து முடித்துவிட்ட விவசாயி அதை ஒரு கட்டு கட்டினான். இப்படி நான்கு நான்கு கதிர்களாக அறுப்பதும் அதை ஒரு கட்டாக கட்டி வைப்பதுமாக இருந்தான் அவன்.

வேதாளம் அவனைப் பார்த்து ``ஏன் இப்படி செய்கிறாய்? என்று கேட்டது.

``சிறியதாக கட்டினாலும் பெரிதாக கட்டினாலும் கட்டு கட்டுதானே. பெரிய கட்டை சின்னச்சின்ன கட்டாக கட்டினாலும் உன் சாபப்படி ஒரு கட்டுக்கு ஆழாக்கு நெல் கிடைக்குமே!... என்றான் விவசாயி.

இவனிடம் நம் பாச்சா பலிக்காது என்று வயல் காட்டிலிருந்து கிளம்பி ஓட்டம் பிடித்தது அந்த ஏமாந்துபோன வேதாளம்.

Print this item

  கொடிகாமத்தில் !
Posted by: anpagam - 03-08-2005, 02:36 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

கொடிகாமத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பணிமனைக்குள் சிறீலங்கா காவல்துறையினர் அத்துமீறி உள்நுழைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் பணிமனை சிறீலங்கா காவல் துறையினரால் சோதனைக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை 10.45 மணிக்கு விடுதலைப் புலிகளின் பணிமனையை முற்றுகையிட்ட சிறீலங்கா காவல்துறையினர் போர்நிறுத்த விதிகளுக்கு முரணாக பணிமனைக் கதவுகளை கட்டாயமாகத் திறந்து சோதனை செய்துள்ளனர்.

பணினையில் பொறுப்பாளர் இல்லாத சமயம் கடமையில் ஈடுபட்டிருந்த போராளிகளின் ஆட்சேபனையைக் கருத்தில் எடுக்காது பணிமனை பொறுப்பாளரது அறையையும் சோதனை செய்துள்ளனர். சிறீலங்கா காவல்துறையினரது இத்தகைய செயலை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டித்ததுடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

நன்றி: பதிவு.

Print this item

  விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய
Posted by: வியாசன் - 03-08-2005, 02:31 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஓன்றியத்திடம் சந்திரிகா வேண்டுகோள்

சிறீலங்கா அரசாங்கத்துடன் விரைவில் நேரடிப்பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம் பேச்சுக்களை விரைவில் ஆரம்பிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி எவ்வாறாயினும் சில விடயங்கள் தொடர்பாக நிலவும் கருத்து வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுகள் தொடர்பான ஆணையாளர் பெனிற்றா பெரெராவை நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோது ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

ஒஸ்லோ பிரகடனத்திற்கு ஏற்ப இலங்கையில் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண்பதில் தற்போது காணப்படும் முரண்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

சுட்டபழம்
நன்றி புதினம்

Print this item