![]() |
|
சமஷ்டித்தீர்வு அவசியம்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: சமஷ்டித்தீர்வு அவசியம்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் (/showthread.php?tid=4827) |
சமஷ்டித்தீர்வு அவசியம்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் - வியாசன் - 03-09-2005 சமஷ்டித்தீர்வு ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் ஒஸ்லோ பிரகடன வரைவிற்கு அமைய ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித்தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கைகளுக்கான ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வோல்ட்னர் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோது இதனை தெரிவித்துள்ளார். இந்த தீர்வுமூலம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் கைச்சாத்திட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக பல்வேறு நண்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனை கௌரவிக்கும் முகமாக வன்முறைச்சம்பவங்களையும் சிறுவர்களை யுத்த நடவடிக்கைகளுக்காக சேர்ப்பதையும் இடைநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கைகளுக்கான ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு குறித்தும் அவர் விளக்கியுள்ளார். மேலும் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனர்நிர்மாணப்பணிகள் குறித்து அவர் விரிவாக தெரிவித்துள்ளார். இவ் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து தங்களது பிரதிநிதிகள் இவ் விஜயத்தின்போது ஆராய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனர்நிர்மாணப்பணிகளுக்கு அவசியமான பொதுக்கட்டமைப்புக்குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார். இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாகுவது அவசியமானது என்றும் இதனை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சகல தரப்பினரையும் அவர் கேட்டுள்ளார். குறிப்பாக அரசாங்கம்ää விடுதலைப்புலிகள் எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவு இதற்கு மிகவும் அவசியம் என்று தெரிவிக்கும் அவர்ää தற்போது இது குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்றும் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுட்டபழம் நன்றி புதினம் - வியாசன் - 03-09-2005 சமஷ்டி முறைத்தீர்வு குறித்த மக்கள் கருத்தறிய விரைவில் தேர்தல் என்கிறார் ஜனாதிபதி நாட்டில் அறுபது சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு காணப்படுவதையே விரும்புகின்றனர் என்று சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மகளிர் அமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் பேசுகையில் - இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்படுத்த எனது ஜனாதிபதி பதவியை அர்ப்பணிக்கவே தயாரகவுள்ளேன். இந்த தீர்வுமுறை தொடர்பான சர்வஜன வாக்கெகெடுப்பையோ அல்லது தேர்தலையோ விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளேன். கடந்த காலத்தில் எனது அரசு முன்வைத்தது போன்ற தீர்வுப்பொதியை எந்த அரசும் முன்வைக்கவில்லை. அரசாங்கமோ புலிகளோ போரில் வெல்லமுடியாது. யுத்தம்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகளாகவே கருதப்படுவர்.எனது கட்சிக்குள்ளேயே இருந்து என்னை எதிர்ப்பவர்கள் உள்ளார்கள். எனது ஆளும் கூட்டணிக்குள் உள்ள கட்சியினர் என்னை வெளிப்படையாக வசைபாடுகின்றனர். இவர்கள் என்னை கொலை செய்யக்கூட முயற்சிக்கலாம். ஆனால் இவற்றுக்கொல்லாம் பயந்து சரியான முடிவெடுப்பதிலிருந்து நான் பின்வாங்கி விடமாட்டேன். நாட்டுக்கு வெளிநாட்டு உதவிகள் வரத்தொடங்கிவிட்டன. பொருளாதாரம் மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் வெளிநாட்டு உதவிகளை எதிர்த்துக்கொண்டு குரங்குகள் போல குளறும் சில ஆளும்கட்சி வகுப்பினர் வெளிநாட்டு உதவியின்றி நாட்டை முன்னேற்ற முடியும் என்று கனவு காண்கின்றனர் என்று தனதுரையில் குறிப்பிட்டார். சுட்டபழம் நன்றி புதினம் - Nilavan - 03-09-2005 அது எங்களுக்கும் தெரியும் அதை கொடுக்க எங்கட அம்மா தயாராமே? அதையும் கேட்டுச் சொல்லலாமே!!!!!! நிலவன்அறிக்கை விடுறவன் சலபமாய் விடலாம் ஆனால் யாதார்த்தத்தை புரிஞ்சு கொள்ள வேண்டும் நிலவன் - kuruvikal - 03-09-2005 இத்தச் செய்திகளில் பாருங்க சொல் மயக்கம் இருக்கே ஒழிய விசயம் இல்ல...புலிகள் சொல்லீட்டினம் ஒஸ்லோ பிரகடனத்தில அரசியல் தீர்வு குறித்து எதுவும் தெளிவா இல்ல...பேச்சைச் தொடர்வது பற்றித்தான் இருக்கென்று...! அப்ப ஒஸ்லோ பிரகடன சமஸ்டி என்றது என்னத்தை...இந்திய மாகாண சபையையோ....அதையே தனிநாடு கொடுக்கினம் என்று எதிர்த்தவையை பக்கத்தில வைச்சுக் கொண்டு சமஸ்டி என்று அம்மா உச்சரிக்கிறா என்றா....சமஸ்டி என்ன ஓட்டச் சட்டியா...???! :roll:
|