Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 494 online users.
» 0 Member(s) | 492 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,756
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  வணக்கம்
Posted by: thamilvanan - 03-11-2005, 04:15 PM - Forum: அறிமுகம் - Replies (38)

அனைவருக்கும் தமிழ்வாணனின் வணக்கங்கள். முதலில் தமிழில் எனது பெயரை அமைத்து யாழ்தளத்தில் காலடிவைக்க முயற்கசித்தபோது என்னால் உள்நுழைய முடியவில்லை. இதனால் ஆங்கிலத்தில் பெயரை எழுதி எப்படியாவது போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பனின் உதவியுடன் உள்நுழைந்துவிட்டேன். அதுசரி கருத்து போகுமா?....

Print this item

  கருத்துக்களில் திருத்தம் செய்வது எப்படி?
Posted by: Kalai - 03-11-2005, 03:29 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (5)

I had posted a message but it has some spell mistake. please help me to edit the post. Can anyone do?

Print this item

  மாயாவி
Posted by: Kalai - 03-11-2005, 03:25 PM - Forum: சினிமா - Replies (6)

மாயாவி



'பிதாமகனி'ல் உதிரி பூந்தியாய் இருக்கும் சூர்யா கேரக்டரை ஒன்று திரட்டி மாயாவியாய் லட்டு பிடித்திருக்கிறார் இயக்குனர் சிங்கப்புலி.



வெளிநாட்டு பயணிகளை சிரிக்க சிரிக்க மகாபலிபுரத்தை ரசிக்க வைக்கும் டூரிஸ்ட் கைடான சூர்யா அதன்மூலம் வரும் வருமானம் போதவில்லையென்றால் சின்ன சின்ன 'கைவரிசை'யும் காட்டுவதில் கெட்டிக்காரர்.



சங்கிலி முருகனிடம் வாங்கிய தண்டலை கட்டமுடியாத தெண்டமாக இருப்பது பற்றி கவலைப்படும் சூர்யாவுக்கு "ஆம்லேட் போடணும்னா முட்டையை உடைச்சுதான் ஆகணும்" என்று கூட்டாளி சத்யனின் சூப்பர் தத்துவம் மண்டையில் ப்ளாஷாகி நடிகை ஜோதிகா வீட்டில் புகுந்து திருட முயல போலீஸிடம் மாட்டுகிறார்.



போலீஸிடம் மாட்டவைத்த கடுப்பில் இருக்கும் சூர்யா, ஜோதிகாவுக்கு டார்ச்சர் மேல் டார்ச்சர் கொடுக்கிறார். தலைவலி தாங்கமுடியாத ஜோதிகா தன் மேனேஜர் மூலமாக சூர்யா மேல் மீண்டும் பொய் புகார் செய்கிறார். மூன்று மாதம் 'மாமியார்' வீட்டுக்கு போய் திரும்பும் சூர்யா இந்த முறை கொஞ்சம் விபரீதமாகவே யோசனை செய்து ஜோதிகாவை கடத்தி செல்ல, அடுத்தடுத்து என்ன நிகழ்கிறது என்பதே கதை.

<img src='http://cinesouth.com/images/new/11032005-TRV0image2.jpg' border='0' alt='user posted image'>
சந்திரபாபு ஸ்டைலில் ஆரம்ப பாடல் காட்சியில் தரிசனம் தரும் சூர்யா சுருள் முடி, பென்சில் மீசை, சர்க்கஸ் கோமாளி போன்ற உடையில் படத்தின் பன்னிரெண்டு ரீல்கள்வரை பொட்டலம் பொட்டலமாய் காமெடி பக்கோடாவை கொடுத்து ரசிகர்களை கொறிக்க வைக்க, வாயெல்லாம் பல்லாக படம் பார்ப்பவர்கள் பாராட்டுவதை பார்க்க முடிகிறது.



"லாக்கப்பில் இருந்தபடி இனுசுபெட்டரே நாங்க யாரு தெரியுமா? ஜோதிகா பேரவை தலைவராக்கும். எங்கள வெளியில விடலேன்னா நாடே கொந்தளிக்கும். ஒழுங்கா கேஸ சிபிஐக்கு மாத்திடுங்க" என 'உள்ளே' போன வருத்தம் கொஞ்சமும் இன்றி இன்ஸ்பெக்டரை கலாய்க்கும்போது காது செவிடாகும் அளவிற்கு கைதட்டல் சப்தம்.




திருடபோன வீட்டில் ஜோதிகாவை பார்த்துவிட்டு 'மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது..' பாடலை பாடியபடி குஷி ஸ்டைலில் ஒரு ஆட்டம் போடும்போது திருஷ்டி சுற்றி போடுமளவிற்கு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அஜித், விஜய்யின் காற்று சூர்யா மேலும் அடித்துவிட்டது போலும். பஞ்ச் டயலாக் பரமசிவமாக மாறி 'எனக்கு யாரும் போட்டி இல்லை நானும் யாருக்கும் போட்டி இல்லை; நான் பிளாஸ்டிக் மாதிரி. அழியவும் மாட்டேன் என்னை யாரும் அழிக்கவும் முடியாது' என சந்தடி சாக்கில் பொறிந்து தள்ளுவது ஏன் என்று புரியவில்லை.



ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்ததே காமெடியாகிவிட்டதை சத்யன் உணர்ந்து கொண்டதாலோ என்னவோ நிஜமாகவே காமெடி கேரக்டர் பண்ண ஆரம்பித்திருக்கிறார். சூர்யாவின் காமெடி கச்சேரிக்கு பக்காவான பக்கவாத்தியமாகி பாராட்டு பெறுகிறார்.



நிஜ கேரக்டரில் (நடிகையாக), ரியல் வாய்ஸில் ஜோதிகா வித்தியாசப்பட்டிருக்கிறார். ஆனாலும் கடத்தப்பட்ட இடத்தில் முகத்தை அஷ்ட கோணலாக்கி அழுது புலம்பும்போது கஷ்டக்காலம்தான். ஒரு காட்சியில் "ஜோதிகா மேடம் நீங்க ஓவர் ஆக்டிங் பண்ணுவதாக ஊர்ல பல பேர் சொல்றாங்க" என சத்யன் பேசும் டயலாக்கூட இந்தப் படத்தை பொறுத்தவரை ஜோதிகாவுக்கு நிஜமாகவே பொருந்துகிறது.

<img src='http://cinesouth.com/images/new/11032005-TRV0image1.jpg' border='0' alt='user posted image'>
கை, வாய் கோணியபடி வரும் சிகப்பி கேரக்டர் கல்யாண வீட்டில் கருப்பு தோரணம் கட்டியது போல தேவையில்லாத திணிப்பு. ஊனமுள்ள கேரக்டரை காட்டி சென்டிமெண்டில் ஜமாய்த்துவிடலாம் என்று இயக்குனர் போட்ட கணக்கு, சோகத்திற்கே ஊனம் வந்த மாதிரி உறுத்தலாக இருக்கிறது.



தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை காமெடி காட்சிகளுக்கு ரொம்பவே கைக்கொடுத்திருக்கிறது. புஷ்பவனம் குப்புசாமி குரலில் 'காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற....' பாடல் தியேட்டரில் இளசுகளை டப்பாங்குத்து ஆடவைக்கிறது.



விரல்விட்டு எண்ணக்கூடிய லொகேஷன்கள் என்றாலும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் காமிரா வித்தையில் கண்களுக்கு விதவிதமான விருந்து. வீட்டிற்குள் லைட்டெல்லாம் ஆஃப்பாகி கேரக்டர்கள் ஷேடோவாக தெரிவதை ரசிக்கமுடிகிறது.



முன்பாதியில் காமெடியில் பயணிக்கும் கதை இரண்டாம் பாதியில் ட்ராக் மாறி ரசனையை தடம் புரள வைக்கிறது. முழுக்க நனைந்தபின் முக்காடு போட்டதுபோல் உள்ளது இயக்குனர் சிங்கப்புலியின் க்ளைமாக்ஸ்.



'மாயாவி' க்ளைமாக்ஸில் கொட்டாவி.

நன்றி சினிசௌத்.கொம்

திருத்தப்பட்டுள்ளது யாழினி

Print this item

  ஈழத்தில் மக்கள் தொடர் போராட்டம் ஆரம்பமா?
Posted by: வியாசன் - 03-11-2005, 02:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (15)

வடமராட்சியிலும் நேற்று சிங்கள இராணுவக் காடையன் வெறித்தனம்!

வடமராட்சி துன்னாலை கலிகைச்; சந்தியில் சிறீலங்காப் படைமுகாமைச்; சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் நேற்று நள்ளிரவு முகாமுக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் புகுந்துள்ளார்.

பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கும் நோக்கில் அவ்வீட்டிற்குள் படையினர் நுழைந்துள்ளார்.

இதனையடுத்து அவ்வீட்டின் குடும்பத்தலைவர் சத்தமிட்டு அயலவர்களின் உதவியுடன் படையினனை பிடிக்க முற்பட்டபோது சிப்பாய் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து துன்னாலை மக்கள் சிறீலங்காப் படையினருக்கெதிராக இன்று காலை 6 மணியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படையினரின் முகாம் ஒன்றை ஆத்திரமடைந்த மக்கள் தீயிட்டு எரித்துள்ளதுடன் படைமுகாம் முன்பாக ரயர்களைப் போட்டு எரிய10ட்டி படையினரை வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளதால் அங்கு பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மக்கள் படையினரை நோக்கி கற்களால் வீசி தாக்கி வருவதாகவும்ää பெருமளவான மக்கள் திரண்டு படையினருக்கெதிரான தமது எதிர்ப்பைக் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அங்கு பெருமளவான ஆயுதம் தாங்கிய சிறீலங்காப் படையினரும்இ சிறீலங்கா காவல்துறையினரும கலகம் அடக்கும் கவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சுட்டபழம்
நன்றி புதினம்
....................................................................................................................

ஏ 9 வீதியில் இராணுவ வாகனம் ஒரு உந்துருளியில் மோதியதனால் மக்கள் வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதாக உலகத்தமிழர் இணையவானொலியில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

Print this item

  யாழ்நெற் குடில்களுக்கான பினூட்டப்பேழையை நீங்களும் அமைக்க
Posted by: kavithan - 03-11-2005, 11:32 AM - Forum: இணையம் - Replies (5)

யாழ்குடில்களுக்கான பின்னூட்டப் பேழைகளை நீங்களும் அமைத்துக்கொள்ள அது குறித்து சிறிய விளக்கம் வழங்கியுள்ளேன். அதனை பின்பற்றி உங்கள் குடில்களுக்கும் சுரதா அண்ணாவின் யுனிக்கோட் ஆங்கில செயலியை பின்னூட்டத்தில் பொருத்தி தமிழில் உங்கள் கருத்துக்களை பறைந்திடுங்கள் இதோ இணைப்பு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  ஆறுமுகநாவலர் பற்றி வரலாற்றுக் குறிப்புக்கள்.
Posted by: shanthy - 03-11-2005, 11:04 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (4)

ஆறுமுகநாவலர் பற்றி வரலாற்றுக் குறிப்புக்கள் இருப்பவர்கள் தந்துதவுமாறு வேண்டுகிறேன்.
இப்பகுதியூடாக அல்லது தனிமடல் ää மின்னஞ்சல் ஊடாகவும் தந்துதவுங்கள். விரைவில் தந்தால் உதவியாக இருக்கும்.

Print this item

  Dvd யில் இருந்து Avi க்கு மாற்ற
Posted by: ragavaa - 03-11-2005, 06:33 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (3)

<b>Dvd யில் இருந்து Avi க்கு மாற்றும் முறை</b>


தேவையான மென்பொருட்கள்
A1 Dvd ripper http://www.dvdapp.com/dvd_ripper.htm
Divx codec http://www.divx.com/divx/divxpro/download/

மென்பொருட்களை தரவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
Avi க்கு மாற்ற Hard Disk ல் அதிக இடம் தேவை.

A1 Dvd ripper ஐ இயக்கவும்.
Dvd ஐ dirve ல் இட்டபின் file->Open dvd root ஐ தெரிவுசெய்து வரும் window வில் Dvd drive ஐ தெரிவுசெய்து ok ஐ அழுத்தவும்.

A1 Dvd Ripper window வில் dvd ல் உள்ள படங்களின் விபரம் வரும்.

அதில் படம் அல்லது பாட்டு உள்ளவற்றை தெரிவு செய்யவும். (Length ஐ கவனித்து தெரிவு செய்யவும்)


<img src='http://img99.exs.cx/img99/5919/11ee.jpg' border='0' alt='user posted image'>


பின்பு Settings ->Video setting சென்று output format ல் AVI (Divx,MPEG4..) ஐ தெரிவு செய்யவும். codec option ல் Divx 5.2.1 codec ஐ தெரிவு செய்யவும். Divx 5.2.1 codec ஐ தெரிவு செய்யவும்.
configure அழுத்தவும்.


<img src='http://img99.exs.cx/img99/7002/24hh1.jpg' border='0' alt='user posted image'>


Divx codec properties window தோன்றும்
ஆதில் Average bitrate 2000 Kbps ஆக தெரிவு செய்யவும்.


<img src='http://img99.exs.cx/img99/976/37rz.jpg' border='0' alt='user posted image'>


ok ஐ அழுத்தவும். Apply ஐ அழுத்தவும்.



Average bitrate குறைவாக கொடுத்தால் கோப்பின் அளவு குறைவாகவும் படத்தின் தெளிவும் குறைவாகவும் வரும். உங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் அளவை கொடுக்கவும்.
(1500 Kbps க்கு தரமான படம் கிடைக்கும்.)


Output folder பகுதியில் >> ஐ அழுத்தி சேமிக்க வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்.

Convert ஐ அழுத்தி avi க்கு மாற்றவும.


மேலும் avi யில் இருந்து Vcd க்கு மாற்ற


A1 Dvd Ripper ன் பதிவு எண் வேண்டும் என்றால் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.

Print this item

  கலைச்செல்வன் பிரிந்து போனார்.
Posted by: Thaya Jibbrahn - 03-11-2005, 01:21 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - No Replies

கலைச்செல்வன் பிரிந்து போனார்.
இது கனமான பொழுது. நாம் நினைத்திருக்கவில்லை எமது நிகழ்வுகள் பகுதி ஒரு இலக்கியவாதியின் துயர்பகிர்வதில் ஆரம்பிக்கும் என்று. கலைச்செல்வன். பெயரோ நபரோ அறpமுகம் இல்லாமல் தனது படைப்புகளாலும் பதிப்பகத்தின் வெளியீடுகளாலும் எமக்கு உத்வேகம் தந்தவர். மறைந்த பின்தான் தெரிகிறது இவர்தான் அவர் என்று. என்ன செய்வது. நமது சந்ததி அவருடனான கருத்தாடல்களிற்கு பாக்கியதை இல்லாதது போலும். கலைச்செல்வன் -. பெயர் தான் மறைந்து போயிற்று. அவரின் தாகங்கள் அல்ல.
www.inayatamil.com/events.html

Print this item

  கொழும்பில் ஒரு சிவராத்திரி
Posted by: Mathan - 03-11-2005, 12:18 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

<b>சில ஆண்டுகளுக்கு முன்பு தாயகம் சென்றிருந்தபோது கொழும்பில் தான் பட்ட அனுபவங்களை ஒரு பதிவாக தந்துள்ளார்,</b>

ஒரு சிவராத்திரி

ஆணடுகள் சில கழித்து தாயகம் சென்ற போது

கொழும்பு றோட்டில்
கொஞ்சத் தூரந்தான் போயிருப்பேன்

"வீட்டை போன உடனை
பொலிஸ்ரிப்போர்ட் எடுக்கப் போகோணும்."
மாமாதான் சொன்னார்

வீட்டுக்குப் போனவுடன்
குளித்துச் சாப்பிட்டு
40ரூபா ஓட்டோவுக்குக் கொடுத்து
கண்ணாடிகளோ கதவுகளோ இல்லாத
அதன் வேகத்தில்
தலை கலைந்து உடல் குலுங்கி
உண்டதெல்லாம் வெளிவரும் உணர்வுடன்
பொலிஸ்ஸ்ரேசன் போனால்
"லேற்றாகி விட்டது.
சில்வா போய் விட்டார். "
சிங்களத்தில் ஒருவன்
சிரிக்காமல் தடுத்தான்
நரசிம்மராவிடம் பயிற்சி பெற்றானோ...!

சிங்களத்தில் மாமா
சிரித்துக் கதைத்து
என் யேர்மனியப் பாஸ்போர்ட் காட்ட
மெல்ல அவன் முகமிளகி
துப்பாக்கியை விலத்தி
உள்ளே போக வழி விட்டான்

தென்னைகள் குடையாக விரிந்திருக்க
குரோட்டன்கள் அழகாய் பரந்திருக்க
கூரிய கண்கள் பல
என்னையே உற்று நோக்க
தூக்கிய துப்பாக்கிகள் மட்டும்
என் கண்களுக்குத் தெரிய
படபடக்கும் நெஞ்சுடன் படியேறி
பல் இளித்து
பத்திரங்களை நிரப்பி
பவ்வியமாய் சிங்களப் பெண்களிடம் கொடுத்து
வெளி வருகையில்

"இண்டைக்கு வவுனியாக்குப் போகேலாது
நாளைக்குத்தான் பொலிஸ்ரிப்போர்ட் கிடைக்கும்"
மாமாதான் சொன்னார்.

ஆளுடன் ஆளுரச
அவசர நடைபோடும் வெள்ளவத்தை றோட்டில்
இரண்டு இடத்தில் செக்கிங்
பாஸ்போர்ட் காட்டி
Flight time சொல்லி
வீடு திரும்புகையில்
யேர்மனியிலும் இல்லாமல்
வவுனியாவிலும் இல்லாமல்
வீணான நாளை எண்ணி
மனசுக்குள் சலிப்பு

இரவும் வந்தது...

யேர்மனிக்கும் வவுனியாவுக்குமாய்
மனசு அலைய
தூக்கம் என்பது தூர விலகி நிற்க
கட்டிலில் புரள்கையில்
"டொக்.. டொக்.. டொக்.. "

ஜன்னலினூடு இராணுவத்தலைகள்..!

நெஞ்சுக்குள் பந்து உருள
"ஆமி.. ஆமி.." என்று
மாமி கிசுகிசுக்க
இரவின் நிசப்தம்
இராணுவத்தால் குலைக்கப்பட்டு
வேண்டாமலே ஒரு சிவராத்திரி
வீடு தேடி வந்திருந்தது

மீண்டும்
பாஸ்போர்ட் காட்டி
Flight time சொல்லி...
சோதனை என்ற பெயரில்
வீடு குடையப் படுகையில்
குளிர்ந்த நிலவிலே
இரவுடையுடன் நிறுத்தப்பட்டு
அப்பாடா....
கூச வைத்தன இராணுவக் கண்கள்
மனம் குலுங்கி அழுதது
என் தேசப்பெண்களை எண்ணி...

நன்றி - சந்திரவதனா

Print this item

  அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழர்களுக்கான ஒன்றுகூடல்
Posted by: MEERA - 03-10-2005, 11:25 PM - Forum: புலம் - Replies (10)

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை 13-03-2005 மாலை 6 மணிக்கு ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் ஒன்றுகூடலில் ஒரு அமைப்பை உருவாக்கி அதனூடாக குடிவரவு அமைச்சுக்கு நமது பிரச்சனைகளை எடுத்துக் கூறும் நோக்கில் இடம்பெறுகிறது.
இந்த ஒன்று கூடலில் சட்டத்தரணி நாதன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

எனவே இவ் ஒன்றுகூடலில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும் சமூகமளிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Print this item