Yarl Forum
கருத்துக்களில் திருத்தம் செய்வது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: கருத்துக்களில் திருத்தம் செய்வது எப்படி? (/showthread.php?tid=4803)



கருத்துக்களில் திருத்தம் செய்வது எப்படி? - Kalai - 03-11-2005

I had posted a message but it has some spell mistake. please help me to edit the post. Can anyone do?


- tamilini - 03-11-2005

நீங்கள் உறுப்பினர் ஆகி சில காலத்தின் பின்னர் தான் உங்கள் கருத்தை நீங்கள் திருத்தும் தகுதி பெறுவீர்கள். இப்பொழுது.. அந்தப்பகுதிக்குரிய மட்டுறுத்தினரிடம் அல்லது மோகன் அண்ணாவிடம் விவரத்தைச்சொன்னால் மாற்றி விடுவார்கள் என்று நினைக்கிறன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-11-2005

வணக்கம் கலை,

நீங்கள் ஆரம்பநிலை குழுவில் இருக்கின்றீர்கள், ஆரம்ப நிலையில் கருத்துக்களில் திருத்தம் செய்ய முடியாது. நீங்கள் இடைநிலை தகுதியை பெற்ற பின்பே உங்களுக்கு கருத்துக்களில் திருத்தம் செய்யும் வசதி கிடைக்கும். தற்சமயம் உங்கள் கருத்தில் உள்ள எழுத்துபிழைகளை அந்த பகுதிக்குரிய மட்டுறுத்துனர் யாழினி மூலம் சரி செய்து விடுகின்றேன்.

இடைநிலை குழுவில் அனுமதி பெறுவது குறித்த விபரத்தை கீழே பாருங்கள். உங்களுக்கு இடைநிலை குழுவில் அனுமதி வழங்குவது குறித்து மோகன் அண்ணா முடிவு செய்வார்.

Quote:இடை நிலை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும், தமது கருத்துக்களில் பிழை திருத்தம் செய்யவும் முடியும். மற்றும் இங்கு அங்கத்துவர்களாக இருப்பவர்களால் மட்டுமே கோப்புகளை (படங்கள்) தரவேற்றம் செய்ய முடியும்.

தேர்வு முறை:
ஆரம்பநிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் கருத்துக்களத்தில் 50 கருத்துக்களைப் பதித்தபின் இடை நிலை அங்கத்துவத்துக்காக நிர்வாகத்தினரிடம் விண்ணப்பிக்கலாம். அதன் பின் உங்கள் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எட்டப்படும்.

நிபந்தனை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தாம் எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் மட்டுமே செய்ய முடியும். கருத்தின் பொருளில் எந்தவித மாற்றங்களோ, எழுதிய கருத்தை இல்லாமலாக்கி, வெறுமையாக்குவதையோ செய்யக்கூடாது. அப்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, இரண்டாம் தடவை, ஆரம்ப நிலை அங்கத்துவராகக் கீழிறக்கப்படுவீர்கள்.

இங்கே இடை நிலை அங்கத்துவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 கருத்துக்களுக்கு மேலாகப் பதிவு செய்தவர்களாகவும், சிலவேளை கருத்துக்கள் குறைவாக இருந்தாலும், முன்னைய கருத்துக்களத்தில் பண்பாகவும், பயனுள்ளதாகவும் நிறைய கருத்துக்களை வைத்தவர்களாவர்.

மற்றும் நீங்கள் முன்பு களத்தில் தமிழில் எழுதியிருக்கின்றீர்கள். உங்கள் சந்தேகங்கள் கேள்விகளையும் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்.

நட்புடன்
மதன்


- Vasampu - 03-12-2005

சீ சீ நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாதேங்கோ நீங்கள் தையிரமாய் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் மற்றதை மோகன் இராவணன் போன்றோர் பார்த்துக் கொள்ளுவார்கள். :roll: :roll: :roll: :roll:


- Kalai - 03-12-2005

உங்களுடைய கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி மதன்.


- Mathan - 03-12-2005

உங்களுடைய கருத்துக்களின் எண்ணிக்கை 50ஐ எட்டிய பின்பு உங்களுக்கு இடைநிலை குழு அனுமதி வழங்கப்படும். தொடர்ந்து களமாடி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்,