| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 492 online users. » 0 Member(s) | 490 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,756
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| தவிப்பு...... |
|
Posted by: KULAKADDAN - 03-10-2005, 08:09 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (1)
|
 |
என்னெண்டு தொ¤யல நா£¤ போட்டு விண்விண்ணென்று குத்திஇ உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற தசை இறுகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ... கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சுட்டு வந்தனான்.நல்ல வெக்கையாய் இருக்குது. குளிச்சிட்டு வந்தாலும் உடம்பு பிசு பிசுத்தபடி. அப்பாட்மென்கா£¤ கீற்றரை நல்லாக் கூட்டிப் போட்டாள் போல இருக்கு. அவ கூட்டினாப் போல என்ன எங்கட கீற்றரால குறைச்சால் சா¤யாய் போய்விடும் எண்டு நினைச்சுத்தான் குளிச்சிற்று வெளியில வரக்கில கீற்றரை நல்லாக் குறைச்சுப் போட்டு வந்தனான். அப்படியிருந்தும்இ இப்புடி வெக்கையாய் இருக்கு.... உடம்பிலே வேற சேட்டு போட்டிருக்க வேண்டிய நிலை. மாமி எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருக்கும் அதனால் என்டில்லஇ ஊ£¤ல இருக்கும்போது கூட அப்படித்தான் எந்த வெக்கையாய் இருந்தாலும் உடம்பில் இருக்கிற சேட்டை கழட்ட மாட்டேன். அது என்ர பரவனி புத்தியெண்டு அம்மா சொல்லுவ. இப்ப முப்பது வயதாகிட்டுஇ உடம் பெல்லாம் மசுக்குட்டி மயிர் படர்ந்து கிடக்கிறது போல. என் உடம்பு முழுவதும். அதுவும் கூச்சத்துக்கு காரணமாயிருக்கலாம். சீச்...சீ... அப்படியும் சொல்ல ஏலாது. நான் பிறப்பாலே கொஞ்சம் கூச்சப்பட்டவன் தான். ஒரு தாழ்வுச் சிக்கல் எண்டுகூட சொல்லலாம். என்ர மனசு தேவையில்லாமல் எதை எதை யோவெல்லாம் அலட்டிக்கொண்டு இருக்குது என்று என் மனம் சொல்லியது.
தொங்கப் போடப்பட்ட என் தலையை மேலே து£க்கிக் கொண்டு சோபாவில் இருந்த மாமியை நோக்கி என் கண்களின் பார்வையை நிலை நிறுத்தினேன். ஏதோ ஆழ்ந்த யோசினையிலிருந்த மாமி என்னை நோக்கி பார்வை வீச்சால் ஒரு தடவை உலாவவிட்டுவிட்டுஇ ”தம்பி ஏதும் குடியுமென்?” என்று கேட்டாள்.
”வேண்டாம் மாமி. காலையில எழும்பின கையோடு ஒரு தேத்தணீ போட்டுக் குடிச்சிட்டன். நேற்று ஸ்£¦ல் பக்கமாக வேலைக்கு அலைஞ்சதில கால் சாடையாய் நோகுது”.
”நேற்று நீங்க வேலை தேடப் போய்ற்றேங்க எண்டுதான் சொன்னனான். அதுக்கு அவள் என்னைத் தீண்டு போட்டாள். நீங்க வேலை தேடப் போறதில்லையாம்இ ஊர் சுற்றிப் போட்டு சாப்பாட்டு நேரம் பார்த்து வாறியளாம் எண்டு கவிதா சொல்லுறாள். கல்யாண றெஐ¤ஸ்ரேசன் வருகிற திங்கக்கிழமை ஸ்காபரோ ரவுண் சென்ரலில பதிவு செய்கிறதாம். கல்யாணம் மா¤யகொறற்றி சேச்சிலை ஒழுங்கு பண்ணியிருக்கிறாளாம். கல்யாணக்காட்டு அடிக்கிறதுக்கு பரடைஸ் அச்சகத்தில குடுத்திட்டாளாம். என்னமோ எனக்கு பயமாக இருக்குது. தம்பி உன்ர போக்குக்கும் அவளின்ர போக்குக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள்இ நான் குறுக்கிட்டுஇ
”இதெல்லாத்தையும் என்னோடு கதைச் சிருக்கலாம்தானே.... அவ ஏன் என்னோட முகம்விட்டு கதைக்கிறாவில்ல நான் என்ன அவவ திண்டா போடுவன்...?”
”தொண்ணு£று நாட்களில்ல ஏதாவது செய்தே ஆகனும். இல்லையென்றால் அது பொ¤ய சிக்கலில வந்து முடியும்.” மாமி சொல்லும் போதே கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.
அச்சம் படர்ந்த பார்வையோடு மாமியின் முகத்தைப் பார்த்தேன். பாவம் மனிசி. ஒரேயொரு பிள்ளை. நல்ல அழகான பெயர் கவிதா. நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகுது. ஒரு நாள் கூட குண்டி குத்தி இருந்துஇ என்கூட கதைச்சது கிடையாது. எங்கட வீட்டாரும்இ மாமியும் விரும்பித் தான் இந்தக் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணினவியஇ என்ன மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வருடம்தான் இந்த உறவு தொடங்கிஇ எனக்கு நல்லாய் நினைவுகூட இருக்கு. மன்னா£¤லே பனங்கட்டிக் கொட்டிலில் அகதியாய் அம்மமாக்களோடு இருக்கக்கேல ஒரு நாள் இரவு ஒன்பது மணியிருக்கும் எண்டு நினைக்கிறேன். மாமி ரெலிபோன் எடுத்து அம்மாக்கிட்ட கல்யாணம் சம்மந்தமாக கேட்டா. அம்மா என்னட்ட கேக்காமலே ஓமெண்டு சொல்லிப்போட்டா.... வெளிநாட்டுச் சம்மந்த மல்ல! அதுமட்டுமல்ல அம்மா சொல்லுத் தட்டாத பிள்ளையல்ல. நான்இ எப்படியோஇங்க வந்து சேர்ந்துட்டன். வாழ்வுதான் திசை தொ¤யாமல்இருக்கிறது. கவிதாவை கல்யாணம் செய்வதா....? நினைக்கவே மனசு எ£¤ச்சல அடைகிறது. வாழ்வின் நௌ¤வு சுழிவு தொ¤யாத எனக்குஇ வாழ்க்கைத் துணைவியாய் வருபவள்..? எந்தக கோணத்தில் பார்த்தாலும்இ அவளின் அந்நிய கலாச்சாரத்துக்குள் என் மனம் அடங்க மறுக்கிறது. நெஞ்சு நொந்து சுருங்குகிறது.
”தம்பி என்ன மோன கடுமையாய் யோசிக்கிறியள்?” மாமி கேட்டதும் நினைவிலிருந்து சுயத்திற்கு வந்தேன்.
”என்ன தம்பி எத்தனை நாளாய் போய்ச்சு....ஒருநாள் கூட மனம் திறந்து கதைச்சது கிடையாது. வேலைக்கு போறாள்இ வாறாள்இ சாப்பிறாள்இ தன்ர பாட்டில போய் நெத்திர கொள்ளுறாள். விடிய எழும்பினா வேலைக்கு போறாள். இதென்னெண்டு ஒண்டுமா பு£¤யல....? இங்க என்ன தம்பி....பொ¤ய மனுசங்க எண்டு யாரையும் மதிப்பதில்லை. எத்தனை தாய் தேப்பன்மார் பெத்துப்போட்ட பிள்ளைகளை நினைச்சு கண்ணீர் வடிக்கிறாங்க....நான் என்னால ஆனமட்டும் அவளுக்கு புத்திமதி கூறிப்போட்டேன் அவளும் கிறுங்கிற மாதி£¤ தொ¤யல....”
சற்று மௌனித்து விட்டு மீண்டும் தொடங்கினா...
”கல்யாணம் பேசும் போதே இவள் விருப்பமில்லையெண்டு சொல்லிந்தால் இந்தளவுக்கு வந்திருக்காது. இப்ப என்னண்டால் நீங்க வந்த பின்ன மூஞ்சியைக் காட்டிக் கொண்டு தி£¤யிறாள். என்ர இவர் இருந்திருந்தாலும் ஏதாவது சொல்லிக்கில்லி சா¤க்கட்டிப் போடுவார். அவரை கோதா£¤யில வீழந்து போனஇ பிரண்டு போனஇ ஆமிக்காரன் கடலுக்கு போய்விட்டு வரக்கில சுட்டுப் போட்டானுங்க. அதிலயிருந்து ஊரக்குள்ள இருக்கவே பிடிப்பில்லாமல் போய்ச்சுது. எனக்கு அப்பதான் கவிதா ஸ்பொன்சர் பண்ணி எடுத்தவள். வந்ததிலிருந்து ஒருதாய் எண்டு என்ன மதிச்சு நடந்தது கிடையாது. என்ன செய்யிறது. “..தென்னையைப் பெற்றால்இளநீருஇ பிள்ளையப் பெற்றால் கண்ணீரு என்று தொ¤யாமல்தானா பாடினாங்க...” மாமியின் கண்கள் கலங்கியது. நான் கண் வெட்டாதுஇ மாமியின் பேச்சையே உன்னித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தால மாமி விம்மி....விம்மி அழத்தொடங்கினா. அழுது கொண்டே...
”என்ர இவர் தங்கப்பவுண். நான் கல்யாணம் செய்யிறத்து முதல் அவர்கூட பேசியதே கிடையாது. ஒரு முறையில் பார்த்தால் அவர் சொந்தம் தான். எங்கட வீட்டுக்காரரும்இ அவங்கட வீட்டுக்காரரும் பேசித்தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க நான் கூட பொ¤சாப் படிச்சது கிடையாது. இவர் களங்கண்ணி வலைத் தொழில் சாகிற வரையும் செய்தவர். சிகரட் குடிப்பழக்கம் கிடையாது. வெத்திலை பாக்குக்கூட போடுறது கிடையாது. சா¤யாய் உங்களைப் போல தான் அவற்ற குணம். வலைஇழுக்க சாமத்தில போகக்கில என்ன எழுப்புங்கோ. நான் தேத்தண்ணீ போட்டுத் தாறன் எண்டு சொன்னா அவர் சொல்லுவார்இ “நீ ஏன்£¤ அந்தச் சாமத்தில எழும்பி உன்ர நித்திரையை குழப்பிறாய். நான் போகக்கில சந்தியில காக்கவட கடையில ஒரு தேத்தண்ணீ குடிச்சிட்டு போறனடி” எண்டு சொல்லுவார். நல்ல மனுசன். வீட்டில சும்மா எண்டு இருக்க மாட்டார். விறகு கொத்தித் தருவார். மிளகாய்த்து£ள் இடிச்சுத் தருவார்இ வலை பொத்துவார். நான் கொஞ்ச நேரம் கூட அவர விட்டிட்டு இருக்க மாட்டன். எங்கயும் வெளியால அவர் போனவரென்டால் எப்ப வருவார்.... எப்ப வருவார் எண்டு வாசலிலேயே பார்த்துக் கொண்டிருப்பேன். அவரும் அப்படித்தான் எங்கயும் போனால் நேரத்தமினக் கெடுத்தாமல் சுறுக்கென்று வந்துடுவார்.இதென்ன இந்தக் காலத்து புள்ளயல நினைச்சாலே கவலையாய் இருக்குது. இவள் கவிதாவிக்குப் புறகு எங்களுக்கு ஒரு புள்ளயும் பிறக்கேல அதால அவளை கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்திட்டோம். மாமியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு வந்தது. கனத்த அழுகுரல் அடங்கிப் போகவும். தொலைபேசி கிணுகிணுக்கவும் சா¤யாய் இருந்தது. மாமி தொலைபேசி இருக்கும் இடம் தேடிப் போய் தொலைபேசியை எடுத்து “கலோ” என்று மாமி சொல்ல....மறுமுனையிலிருந்து ஏதோ குரல் வர....
“ஆரு கவிதாவ?” என்று மாமி கேட்டா.
இனியும் இந்தக் கதிரையில் தொங்கிக் கொண்டிருக்க மனம் இடம் கொடுக்கல. சடக்கென எழும்பி படுக்கை அறைக்குள் வந்தேன். இனம்பு£¤யாத சந்தேகம் இதயத்துள் குடிகொண்டது. குந்திதேவி கர்ணனைப் பெற்றதும் தன்மான உணர்ச்சி காரணமாய் தான் பெற்ற மகனேயே கங்கையில் விட்டது போல் கவிதாவையும் பிறந்தவுடன் அவள் குணத்தை மாமி அறிந்திருந்தால் கட்டையடி முனங்கால எறிந்திருப்பாளோ கவிதாவை....
என்னுள் தேங்கிக் கிடந்த தேக அலுப்பும்இ வேதனையும் கண்ணீர் வழி கசிந்தது. உடலுழைப்பில் உரமேறிய உடலில் சந்தேக வலை மாயமாய் வந்து மடிந்து கொண்டது. கவிதாவின் வாழ்வின் மேல் இருந்த என் மதிப்பீடுகள் மங்கிப்போய் மாமியின் மீது சந்தேகம் படர்ந்தது.
மாமி வேணு மெண்டு திட்டமிட்டு இந்தக் கதை கதைக்கிறவ...? அச்சம்இ அருவருப்புத் தன்மையோடு என்னுள் அ£¤யாசனம் ஏறியது.இவகாட்டும் பா¤வும் பாசமும் என்மீது எதற்காக....? ஆர்வத்தை நாசுக்காக புலப்படுத்தி தன்மனதில் இடம் பிடிக்கிற முயற்சியா?
அறுபதோஇ அறுபத்தெட்டோ தொ¤யல.இந்தக் கிழட்டு வயதுக்கு ஒரு பொடியன் தேவையாக்கும். தன்ர புருசன்ர குணம் மாதி£¤ எண்டு என்னைப் பார்த்து எந்தத் துணிவில சொல்லுவா? கனடாவில பொம்பிளையல் சா¤யில்ல எண்டு ஊ£¤ல இருக்கேக்க சொன்னவிய அது சா¤யாய்ப் போச்சு. நேற்று தலையிடிக்குது எண்டு சொன்னவுடன் பாஞ்சு விழுந்து ஓடிவந்து நெத்தியில விக்ஸ் தடவி விட்ட வடிவை பார்த்தாலே அவ வேற பிளான்னில என்ன மடக்கப் பாக்கிற போல. எனக்குள் இருந்த கோபம் ஐயமற்று மாமியில் முடங்கியது. இன்டைக்கு இரண்டில் ஒண்டு பார்க்கத்தான் வேணும் எண்டு நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியால் வருவதற்கும்இ திடீரென வந்த ஒப்பா£¤ச் சத்தத்துடன் நான் திறக்க வந்த கதவை மாமி தட்டவும் சா¤யாய் இருந்தது.
”தம்பி....தம்பி....” என்று தலையில அடிச்சபடி நின்ற மாமியின் கோலத்தைக் கண்டதும்இ கொப்பளித்துக் கொண்டு வந்த கோபம் பெட்டிப் பாம்பாய் அடங்கியது. என்னங்க....என்னங்க.... என்னங்க நடந்துட்டெண்டு சொல்லிப் போட்டுத் தான் அழுங்களன்?
அது ஏன் கேப்பான்..? அந்த தலையால தெறிச்சுப் போவாள்இ கவிதா யாரோ கயனாக் காரனோடு வேலை செய்யிற இடத்தில பழக்கமாம். அவனோடயே தான் இருக்கப் போறன் எண்டு சொல்லிப் போட்டுப் போறாள். குறுக்கால விழுந்து போவாள். பெத்து வளத்துவிட்ட நன்றியையும் மறந்துட்டு எளியன்தனமான வேலை செய்து போட்டாள். “..அவள் செத்துப் போய்ற்றாள்...அவள் செத்துப் போய்ற்றாள்....” என்று சொல்லி நெஞ்சில அடிச்சு அழுது கொண்டிருந்தா மாமி. நான் மலைத்துப் போனேன்....எதுவும் பேசாமல் ஊமையாய் நின்றேன். பிள்ளையைப் பி£¤ந்த பி£¤வு ரேகை முகத்தில் இழையோடியது .விழிகள் சிவந்து வீங்கியது . அழுகை நின்ற பாடில்லைஇ அவ அவமானப்பட்டது போல் துடித்து அழுதுகொண்டே பார்வை என்னில் நிலை நிறுத்திக் கொண்டுஇ “நான் செத்துப் போனால்..இ கொள்ளி வைக்கிறது நீங்க தான். என்னுடைய பிள்ளை நீங்கதான். நான் லோயரோட கதைச்சு இங்கேயே இருக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுறேன். நான் தனிக்கட்டையில்ல எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில வாழந்து செத்துப் போவேன்.மாமி சொல்லும்போது என் மனக் கண்கள் என்னையறியாமல் அழுதது. என் தவறான கணிப்பு தகர்ந்துஇ கோபங்களெல்லாம் சிதிலமாகி..இ கழிவிரக்கம் கொண்டது. நான் இழந்த தாயே என் முன்னால் நிற்பது போல் தோன்றியது. ஜயமும்இ அச்சமும் அகன்று அகல் விளக்கொளியொன்று என்னுள் படர்ந்தது.
நாவாந்துறை டானியல் ஜிவா
<span style='font-size:25pt;line-height:100%'>இக்கதை பற்றி உங்கள் கருத்து..............</span>
சிறிய நெருடலை தந்தாலும்.......
|
|
|
| இராணுவ ஆக்கிரமிப்பு சின்னங்கள் எரிப்பு |
|
Posted by: eelapirean - 03-10-2005, 07:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இராணுவ ஆக்கிரமிப்பு சின்னங்களை பாடையில் தூக்கிச் சென்று தீயிட்டு எரித்த பெண்கள்
-யாழ்.குடாநாட்டு இராணுவத்தினருக்கு துண்டுப் பிரசுரமும் விநியோகம்
சர்வதேச பெண்கள் எழுச்சி நாளான செவ்வாய்க்கிழமை பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் தடையாக இருப்பதை எதிர்த்து, இராணுவ ஆக்கிரமிப்புச் சின்னங்களை பாடை கட்டி எடுத்துச் சென்ற யாழ். மாவட்ட பெண்கள் பண்பாட்டு மையத்தினர், கந்தர் மடம் பகுதியில் வைத்து அதனைத் தீயிட்டு எரித்தனர்.
அத்துடன், "ஸ்ரீலங்கா இராணுவ வீரருக்கு" எனத் தலைப்பிட்ட கடிதம் ஒன்றினையும் கந்தர் மடம் ஆலடிச் சந்தியில் உள்ள இராணுவ காவலரணில் உள்ள இராணுவத்தினரிடம் அவர்கள் கையளித்தனர்.
செவ்வாய் மாலை 6.30 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பெண்கள் பண்பாட்டு மையத்திலிருந்து தீப்பந்தங்களை ஏந்தியவாறு, இராணுவ ஆக்கிரமிப்புச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ள பாடையை பெண்கள் சுமந்து சென்றனர். பல்கலைக்கழக இராமநாதன் வீதி, பலாலி வீதி வழியாக இப் பாடையை சுமந்தவாறு இவர்கள் சென்றனர்.
செல்லும் பாதைகளில் முன்கூட்டியே வைக்கப்பட்டிருந்த "உயர் பாதுகாப்பு வலயம்", "அனுமதியின்றி பிரவேசித்தால் தண்டனை", "அப்பக்கடை", போன்ற வாசகங்கள் அடங்கிய சின்னங்களை பாடையிலே எடுத்துச் சென்றனர்.
பரமேஸ்வராச் சந்தியை சென்றடைந்த இவர்கள் அங்கு வைத்து பாடையை தீயிட்டுக் கொளுத்தியதுடன் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவக் காவலரணில் வைத்து இராணுவத்தினரிடம் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களுக்கு எனத் தலைப்பிடப்பட்ட கடிதத்தினைக் கையளித்தனர்.
யாழ். குடாநாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் பெண் செயலாளிகள் சர்வதேச மகளிர் தினமான இன்று ஒன்றுகூடினோம். பெண்களை அவர்களது பிரச்சினைகளிலிருந்து விடுவித்து ஆற்றலுள்ளவர்களாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் எமது செயலாளிகளில் எங்கள் தேச நிர்மாணப் பணியில் பங்கெடுப்பதற்கு பெண்கள் அனைவரையும் தயார்படுத்தி ஒன்று திரட்டுவதெனத் தீர்மானித்தோம். சர்வதேசத்திடமிருந்து கூட எமது தமிழ் தேச நிர்மாணத்தில் எமது பெண்களின் பங்கு என்ன என்ற கேள்வி ஒலித்துக்கொண்டிருப்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆனால், நாங்கள் பெண்கள் ஒன்று திரண்டு இந்தப் பணியில் ஈடுபடுவதற்கு நீங்கள் எங்கள் தெருக்களில் துப்பாக்கியோடும் சப்பாத்துக் கால்களோடும் நிற்பது எமக்குப் பெரும் தடையாகவுள்ளது.
நீங்கள் சிங்களக் கிராமங்களிலிருந்து இங்கு வந்து எங்கள் தேசத்தின் தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் எங்கள் வீடுகளிலும் வீட்டு முற்றங்களிலும் இராணுவ உடையுடனும் கைகளில் துப்பாக்கியுடனும் நிற்பது செய்யத்தகாத செயலெனவே நாம் எண்ணுகிறோம். எங்கள் குடிமனைகளில் சிங்கள இராணுவம் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் கால் பதித்து நடக்கும் மண்ணில் உங்கள் சப்பாத்துக் கால்கள் உலாவித் திரிவதை எங்கள் மனம் எற்றுக்கொள்ளவில்லை. எமது பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளை வீட்டிலிருந்து வெளியே விடுவதற்கு அஞ்சுகிறார்கள். நீங்கள் அந்நிய இராணுவம் என்பதை அவர்கள் எங்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். தங்கள் பெண் பிள்ளைகள் ஆற்றல் மிக்கவர்களாய் வளர்வதை அவர்கள் விரும்புகிறார்கள். எங்கள் பெண் பிள்ளைகளும் வெளியே வந்து ஆளுமை பெற்று சாதிக்கும் மனிதர்களாக உருவாகவே விருப்பம் கொண்டுள்ளார்கள். ஆனால், தமது பிள்ளையின் வளர்ச்சி மீது கொண்டுள்ள விருப்பத்தை விட நீங்கள் அந்நியர் எமது மண்ணில் இருக்கின்றீர்கள் என்ற ஞாபகம் தரும் பயமே எமது பெற்றோரை வழிநடத்துகிறது.
நீங்கள் எல்லா இடங்களிலும் நிற்பதும் சில வேளைகளில் உங்கள் அருகிலேயே நின்று எமது இளைஞர்கள் சிலர் பெண்களைக் கேலி பேசுவதும் எமது சுதந்திரமான நடமாட்டத்துக்கு தடையாகவுள்ளது. எனவே நீங்கள் உங்கள் ஊருக்குத் திரும்பிப் போவதையே நாம் விரும்புகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் ஒரு யுத்தம் வந்து விடும். அநியாயமாக இலங்கைத்தீவில் இரத்தம் சிந்தப்படுவதை நாம் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவதெல்லாம் எங்கள் வீடுகளிலும் எங்கள் தெருக்களிலும் நாம் சுதந்திரமாக நடமாடுவதையும் நாம் சுதந்திரமாக செயல்புரிவதையுமே. நீங்கள் இதை புரிந்துகொள்ளவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
உங்களது அரசியல் வாதிகள் (தெற்கின்) தங்கள் சுய பதவி மோகத்திற்காக உங்களைப் பலிக்கடாக்களாக அனுப்பியுள்ளார்கள். ஆனால், எம்மைப் போன்ற சக மனிதரான நீங்கள் பலிக்கடாக்களாகப் போய்விடக்கூடாதென நாம் கவலைப்படுகின்றோம். எனவே உங்கள் வீடுகளுக்கு நீங்கள் திரும்பிப்போய்விடுங்கள்.
உங்கள் எதிர்காலத்திற்காகவும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் உங்கள் உறவுகளுக்காகவும் எங்களுடைய சுதந்திரமான வாழ்விற்காகவும் நீங்கள் திரும்பிப் போய்விடுங்கள்
தினகுரல்
|
|
|
| DVD to AVI |
|
Posted by: இளைஞன் - 03-10-2005, 07:14 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம்
- Replies (1)
|
 |
வணக்கம் நண்பர்களே...
DVD வடிவத்தில் இருக்கிற படங்களை AVI வடிவத்திற்கு மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள் ஏதேனும் தெரியுமா? அதாவது எந்த தரவிழப்பும் இன்றி அதே தரத்துடன் உருமாற்றக்கூடிய மென்பொருள் என்றால் நல்லது.
இணையத்தில் இலவசமாகக் கிடைக்காவிட்டாலும் நீங்கள் யாரேனும் வைத்திருந்தால் அதனை பகிர்ந்து கொள்ள முடியுமா? அறியத்தாருங்கள்.
நன்றி
|
|
|
| ஈழப்பிரச்சனையும் தமிழ் சினிமாவும் |
|
Posted by: Mathan - 03-10-2005, 03:16 PM - Forum: சினிமா
- Replies (5)
|
 |
ஈழப்பிரச்சனையும் தமிழ் சினிமாவும்
அரை நூற்றாண்டாக நடந்து வரும் பிரச்சனை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்தான் நமக்கு உறைத்தது. 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'காற்றுக்கென்ன வேலி' படங்களில் ஈழப்பிரச்சனை அலசப்பட்டது. 'நந்தா'வின் பின்னணியும் இது சார்ந்ததே.
ஆனால் ஈழப்பிரச்சனையை பிரதிபலிக்கும் முழுமையான படம் வெளிவந்துள்ளதா? இல்லை. அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் நெறியாள்கை தங்கர்பச்சான். இவரது 'தாய்மண்' புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றியது. அகதிகளாக பிறநாடுகளில் கரை ஒதுங்கிய தமிழர்கள் ஏராளம். இவர்கள் வழியாக ஈழப் பிரச்சனையை முன்வைக்கிறார் தங்கர்.
இதற்கான பூர்வாங்க வேலைகள் முடிந்துவிட்டன. தேவை ஒரு தயாரிப்பாளர். தங்கர்பச்சான் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் உள்ளது. அதனால் 'தாய்மண்' ஈழப்பிரச்சனை போலவே நீண்டு செல்கிறது.
தங்கர்பச்சானைப் போல ஈழத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர் பாரதிராஜா. சில மாதங்களுக்கு முன் ஈழம் சென்றிருந்தார் இவர். பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தமிழ் என்று சொன்னால் தூக்கத்திலும் உணர்ச்சி வசப்படும் குணம் பாரதிராஜாவுக்கு. இவர் சென்றதோ தமிழர்கள் வதைப்படும் இலங்கை. கேட்க வேண்டுமா?
ஈழப் பிரச்சனை குறித்து படம் எடுத்தே தீருவது என்ற வெறியில் இருக்கிறார் பாரதிராஜா. மண்ணை அதன் மணத்தோடும், ரணத்தோடும் தரும் வல்லமை தமிழில் பாரதிராஜாவுக்கு மட்டுமே சித்தித்திருக்கிறது. அவர் இயக்கத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய படம்....
காண கண் கோடி வேண்டும்!
சினி சவுத்
|
|
|
| நக்கிற நாய்க்கு செக்கென்ன |
|
Posted by: வியாசன் - 03-10-2005, 02:41 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (7)
|
 |
நீர்வேலிப்பகுதியில் வயோதிபத் தமிழ்ப் பெண் மீது பாலியல்
வன்புணர்வுக்கு சிங்களப் படை முயற்சி: மக்கள் ஆவேசம்!
யாழ். நீர்வேலிப்பகுதியில் வயோதிபப் பெண் மீது பாலியல் வன்புணர்வு முயற்சியில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்களுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். நீர்வேலி மடத்தடிப்பகுதியில் 63 அகவையுடைய வயோதிபப் பெண் ஒருவர் தனிமையில் இருந்தபோது இன்று பிற்பகல் 1.30 மணியளவில் அவரது வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறீலங்காப் படையினர் அவர் மீது பாலியல் வன்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்களால் படையினர் விரட்டப்பட்டனர். இதனைத் தொடர்ந்து படையினரின் இச்;செயலைக் கண்டித்து படையினருக்கு எதிராக மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் மீது படையினர் தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. இதனால் நீர்வேலி ஊடான பிரதான வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
படையினரின் இச்;செயற்பாடு காரணமாக அப்பகுதி மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதியிலும் அச்;சம் நிலவுகின்றது.
சுட்டபழம்
நன்றி புதினம்
|
|
|
| சுனாமி பற்றிய திரைப்படம் |
|
Posted by: AJeevan - 03-10-2005, 02:19 PM - Forum: குறும்படங்கள்
- Replies (24)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>சுனாமி </b>
பற்றிய
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.7.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின்
கடற்கோள் அனர்த்தத்தை
மையமாக்கி உருவான
திரைப்படத்தின் ஒளிப்பதிவுகள்
முடிவுற்ற நிலையில்
படத் தொகுப்பு வேலைகள் தொடங்கியுள்ளது.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.6.jpg' border='0' alt='user posted image'>
வெகு விரைவில்
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.2.jpg' border='0' alt='user posted image'>
திரைப்பட விழாக்களில்
கலந்து கொள்ள இருக்கும்
இத் திரைப்படத்தில்
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.1.jpg' border='0' alt='user posted image'>
இலங்கை, இந்திய, ஜெர்மன், டென்மார்க்
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.8.jpg' border='0' alt='user posted image'>
மற்றும்
சுவிஸ் கலைஞர்களும்
தொழில் நுட்பக் கலைஞர்களும்
கலந்து கொண்டிருக்கிறார்கள்.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.5.jpg' border='0' alt='user posted image'>
இது தவிர
அரசு சார்பற்ற
வெளிநாட்டு நிறுவனங்களில்
பணிபுரிபவர்களும்
இத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பு
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_wave.4.jpg' border='0' alt='user posted image'>
<b>Ajeevan Film Production</b>
Switzerland</span>
www.ajeevan.com
info@ajeevan.com
|
|
|
| கவணிப்பார் அற்றுப்போன முதியவர்! |
|
Posted by: தமிழரசன் - 03-10-2005, 07:36 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
அன்றுயாழ்பணம்அஆஸ்பத்திரிவீதியில்இராணுவவாகனத்தில்
பள்ளிமாணவிஉயிரிளந்ததுதெரிந்ததேஅதன்பின்
இடம்பெற்றகுளப்பத்தில்முதியவர்ஒருவரும்உயிர்இழந்தார்.
உயிர்இழந்தமாணவிக்குஜனாதிபதிநியத்தில்இருந்துஜந்துலட்சமும்
இராணுவம்ஒருலட்சமும்வளங்கியதுவரவேற்கத்தக்கது
ஆனால்அந்தமுதியவரைஒருவரும்கருத்தில்எடுக்வில்லை?அவ்முதியவர்உழைப்பவர்!அவரைநம்பிஎத்தனைபேரேh?இதுபற்றியாரும்சிந்திக்கததுஏன்?h
|
|
|
| "நவாலி நரபலி 1995" |
|
Posted by: hari - 03-10-2005, 07:27 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
<img src='http://img113.exs.cx/img113/1736/navali9ec.jpg' border='0' alt='user posted image'>
அதிகாலை விழிதிறந்த போது
எமன் ஊருக்குள் புகுந்தான்.
அசுரப்பறைவைகள்
இரை தேடி வானத்தில் அலைந்தன.
பீரங்கி பூட்டிய இயந்திர யானைகள்
குருதி வடியும் பற்களுடன் நிலமுழுது வந்தன.
கையில் எடுத்தவை மட்டுமே எடுத்தவையாக
ஊர்துறந்து ஓடியது ஒரு கூட்டம்.
பின்னாற் துரத்தி வந்தன எறிகணைகள்.
வாயுலர்ந்து போனது
நீருக்குத் தவித்தன நாக்குகள்.
ஆயினும் வேகத்தைக் குறைக்கவில்லை கால்கள்.
கூடுகலைந்த குருவிகள் " நவாலி" வந்தடைந்தன.
வரவேற்றது "சென் பீற்றர்ஸ் தேவாலயம்".
இனிக் கொஞ்சம் ஆறலாமென
சுவாசம் சீரானது.
"வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
நானுங்களுக்கு ஆறுதல் தருவேன்" என்றது அசரீரி.
வாருங்கள் என்று அகலத் திறந்து கிடந்தன
தெய்வத் திருச்சபையின் கதவுகள்.
அச்சமில்லை அமருங்களென்று
கட்டளையிட்டது கூரைச்சிலுவை.
"பேதுருவானவரே!
நாம் செய்த தவறென்ன?
ஏனெங்கள் கூடு கலைந்து போனது? என்றபடி
எல்லோரும் ஆறியிருந்த போதுதான்
அது நடந்தது.
இரைச்சலிட்டபடி வந்த கொலைப்பறவை
ஆறுகுண்டுகளைப் பீச்சிவிட்டுப் போக
"ஐயோ!" புழுதி மேகத்துள்ளே
உலகத்தை உலுக்கியது கதறல்
உணர்வு திரும்பிய போது
உலகமே இருண்டு கிடந்தது.
குப்பென்றடித்தது பிணவாடை.
நொடிக்குள் நூறு உடல்கள் குதறப்பட்டு
சிதறிக்கிடந்தன அவயவங்கள்.
அந்தச் சதைக் குவியலுக்குள்ளேதான்
ஒரு தாமரைப் பூவும் கிடந்தது.
புழுதி பூசப்பட்டு குருதி வழிந்தபடி
அழகிய கவிதையொன்று கிடந்து.
பஞ்சுப் பொதி போன்ற பிஞ்சொன்று
பிளந்து கிடந்தது.
கருப்பை வாசல் கடந்து வந்து
ஆறுமாதங்கள் கூட ஆகாத "கற்பகப்பூ"
கருகிக் கிடந்தது.
உலகமெங்கும் அரசோச்சும்
மனித உரிமைகளின் மனச் சாட்சிகளே!
என்ன செய்யும் உத்தேசம்?
ஏவிவிட்ட பாவி இன்னும் இருக்கின்றாள்.
"ரீவி" யில் முகம் காட்டுகின்றாள்.
குளிர்ந்த நிலவின் பெயர் அவளுக்கு
அவளும் கருப்பை சுமந்தவள்.
அடையாளம் தெரிகிறதா?
அவளுக்கு என்ன தீர்ப்பு எழுதுவீர்?
புதுவை இரத்தினதுரை
ஆடி-ஆவணி, 1995
இக்கவிதை பற்றிய உங்கள் மதிப்பீட்டுக்கு இங்கே சொடுக்குங்கள்
|
|
|
| ICING ??? |
|
Posted by: thamizh.nila - 03-10-2005, 05:35 AM - Forum: சமையல்
- Replies (7)
|
 |
கேக் செய்தாகிவிட்டது. ஐஸிங் எப்படி தயாரிப்பது என்று கூறிங்களேன். நான் இங்கு இது பற்றி படித்தேன்...ஆண்டவா ஊருக்கு போனா அக்காக்கள் போடுற ஐஸிங் சுவை வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. வேறு வேறு இடங்களில் வித்தியாசமாக போடுவார்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
|
|
|
| பதில் தருமா உலகு? |
|
Posted by: Mathan - 03-10-2005, 01:47 AM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (3)
|
 |
பதில் தருமா உலகு?
<i>தமிழ் மக்களின் மனிதாபிமான அவசர பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதான புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி பகிரங்க பேச்சுக்களுக்கு அரசு தயார்!
இலங்கையில் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க இது சரியான தருணம் அல்ல. புதுடில்லியில் கதிர்காமர் தெரிவிப்பு
இடைக்கால நிர்வாக சபை குறித்துப் பேசி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டால் உடனடியாக அரசிலிருந்து விலகுவோம் ஜே வி பி யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எச்சரிக்கை.
சமஷ்டித் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்ப்பேன். சந்திரிகா சபதம்.</i>
மேற்குறித்த செய்திகள் கடந்த சில நாட்களுக்குள் குறித்த இடைவெளிகளில் இலங்கை அரசியல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான சில செய்திகள்.
மூன்றாம் தர அரசியல் நாகரீகம் பின்பற்றப் படும் நாடுகளில் ஓர் இறுதி முடிவு குறித்து ஆளும் கட்சிகள் எதிர்க் கட்சிகள் எதிரிக்கட்சிகள் என்பவற்றுக்கிடையில் எழும் முரண்கள் தான் இவை என எவரேனும் நினைப்பின் அது தவறு.
இலங்கையை ஆளும் சிறீலங்கா மக்கள் சுதந்திர முன்னணி என்னும் கூட்டுக் கட்சியின் பல்வேறு பட்ட தரத்து நிலையிலானவர்கள் இனப்பிரச்சனைத் தீர்வு என்னும் பொது விடயம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களே இவை. தெளிவான ஒருமித்த கருத்தேதும் இன்றி ஆளாளுக்கு வாய்க்கு வந்த படி இனப்பிரச்சனை தொடர்பாக செய்தி வெளியிடுகின்ற கேலிக் கூத்தே அது.
இறுதிக் கட்டத்தில் இது தமிழர் தரப்பில் இப்படி ஒரு சந்தேகமாக எழுந்திருக்கிறது. அதாவது நகர்த்தப்படாமல் இழுபட்டுக்கொண்டு போகின்ற சமாதாப் பேச்சுக்களுக்கு காரணம் கேட்கும் உலக நாடுகளுக்கு தமக்கிடையேயான உள் முரண்பாடு தான் காரணம் எனக்கூறி தொடர்ந்தும் இதனை இவ்வாறே இழுத்துச் செல்ல அரசு திட்டமிட்டு முயல்கிறதா என்பதே அது.
இது தவிர ஜே வி பி க்கும் சந்திரிக்கா கட்சிக்கும் இடையிலான இம் முரண்பாடு அடுத்த தேர்தலுக்கான பங்குப் போட்டியின் வெடிப்பாகவும் இருக்க கூடும்.
எதுவாகவேனும் இருக்கட்டும். யுத்தம் வன்முறையானது. அது பயங்கர வாதமானது. அது மனித நேயமற்றது. அதைக் கைவிட்டு பேச்சுக்கள் மூலம் தீர்வு காணலாம் என புலிகளுக்கு ஆலோசனை விடுத்த சர்வதேச நாடுகள் இப்பொழுது என்ன சொல்லப் போகின்றன என்பதே கேள்வி
நன்றி - சாரல்/சயந்தன்
|
|
|
|