![]() |
|
ஈழப்பிரச்சனையும் தமிழ் சினிமாவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஈழப்பிரச்சனையும் தமிழ் சினிமாவும் (/showthread.php?tid=4816) |
ஈழப்பிரச்சனையும் தமிழ் சினிமாவும் - Mathan - 03-10-2005 ஈழப்பிரச்சனையும் தமிழ் சினிமாவும் அரை நூற்றாண்டாக நடந்து வரும் பிரச்சனை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்தான் நமக்கு உறைத்தது. 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'காற்றுக்கென்ன வேலி' படங்களில் ஈழப்பிரச்சனை அலசப்பட்டது. 'நந்தா'வின் பின்னணியும் இது சார்ந்ததே. ஆனால் ஈழப்பிரச்சனையை பிரதிபலிக்கும் முழுமையான படம் வெளிவந்துள்ளதா? இல்லை. அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் நெறியாள்கை தங்கர்பச்சான். இவரது 'தாய்மண்' புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றியது. அகதிகளாக பிறநாடுகளில் கரை ஒதுங்கிய தமிழர்கள் ஏராளம். இவர்கள் வழியாக ஈழப் பிரச்சனையை முன்வைக்கிறார் தங்கர். இதற்கான பூர்வாங்க வேலைகள் முடிந்துவிட்டன. தேவை ஒரு தயாரிப்பாளர். தங்கர்பச்சான் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் உள்ளது. அதனால் 'தாய்மண்' ஈழப்பிரச்சனை போலவே நீண்டு செல்கிறது. தங்கர்பச்சானைப் போல ஈழத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர் பாரதிராஜா. சில மாதங்களுக்கு முன் ஈழம் சென்றிருந்தார் இவர். பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தமிழ் என்று சொன்னால் தூக்கத்திலும் உணர்ச்சி வசப்படும் குணம் பாரதிராஜாவுக்கு. இவர் சென்றதோ தமிழர்கள் வதைப்படும் இலங்கை. கேட்க வேண்டுமா? ஈழப் பிரச்சனை குறித்து படம் எடுத்தே தீருவது என்ற வெறியில் இருக்கிறார் பாரதிராஜா. மண்ணை அதன் மணத்தோடும், ரணத்தோடும் தரும் வல்லமை தமிழில் பாரதிராஜாவுக்கு மட்டுமே சித்தித்திருக்கிறது. அவர் இயக்கத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய படம்.... காண கண் கோடி வேண்டும்! சினி சவுத் - Mathan - 03-10-2005 ஏற்கனவே வந்த படங்கள் ஈழப் பிரைச்சனையை சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை. இது எப்படியோ தெரியவில்லை. - வியாசன் - 03-10-2005 மதன் அவர்கள் உண்மையான பிரச்சனையை வைத்து எடுப்பார்கள் என்று வைத்துக்கொள்வோம். தயாரிப்பாளர்கள் பணம் பண்ணுகிறலேதான் குறியாக இருப்பார்கள். நாங்கள் அவர்களிடம் நிறைய எதிர்பார்க்கமுடியாது. ஒன்றை மட்டும் தத்துருபமாக எடுப்பார்கள் எங்கள் பெண்கள் சிங்கள வல்லூறுகளினால் சீரழிக்கப்படுவதை மட்டும் சிறப்பாக காட்டுவார்கள் பணம் பண்ணுவதற்காக நாங்கள்தான் எங்கள் பிரச்சனையை வெளியே கொண்டுவரமுடியும் மதன் உங்களுக்கு வருத்தம் என்றால் நீங்கள்தான் மருந்து சாப்பிடவேண்டும் உங்களுக்காக மற்றவர்கள் சாப்பிடமுடியாது - eelapirean - 03-10-2005 ஈழத்து பிரச்சனையை பாரதிராசா வெளிக்கொண்டுவரப் போவதாக கூறியிருந்தார். என்னாச்சு?மற்றவர்களை விட தமிழ் என்ற துணிவு பாரதிராசாவுக்கு கூடவே உள்ளது :roll: - anpagam - 03-10-2005 ம்ம்ம்ம்..... பார்ப்பம்... இப்போதைக்கு இல்லை.... நமது உண்மை பிரச்சனைகள் உணர்சிகளை சொல்லும் படம்... அங்கிருந்து...(இந்தியாவில்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> . யாருடனும் நான் எவ்வளவுபந்தயம்கட்டவேண்டுமோ கட்டுறன். ஆனால்.... நாம் எதிர்பார்காமலே உருவாக்கும் காலமும் உண்டு அது இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல... :|
- MEERA - 03-10-2005 எல்லாரும் வருமானத்திற்காகத்தான்....! |