| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 519 online users. » 0 Member(s) | 517 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| வெள்ளைப்புலியே வெளியேறு |
|
Posted by: thamilvanan - 03-12-2005, 07:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
என்ன நடக்கிறது ? எல்லாமே முரணுக்குள் முரண். சாமாதானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இப்போது விஸ்வருபம் எடுத்து எங்கே சென்று முடியபோகிறது என்பதில் எல்லோருக்கும் பயம் கலந்த எதிர்பார்ப்பு. இந்தியா என்றும் அமெரிக்கா என்றும் மாறி மாறி திட்டிக்கொண்டிருந்த ஜேவிபியினர் ( இங்கு ஜேவிபி என்பது தனியே ஒரு கட்சி என்று கருதாமல் சிங்கள கடும்போக்குவாத கூட்டுகள் என்பதே பொருத்தம். சுருக்கமாக அவ்வாறான நிலைப்பாட்டை கொண்டவர்களுக்கு அந்தப்பெயர் இந்ந ஆண்டோடு சிறப்புப்பெயராகிவிடும் )
இப்போது நோர்வேயை திட்டி தற்போது உதவி வழங்கும் நிறுவனங்கள் மீது அதனது பார்வை திரும்பியுள்ளது. உலகவங்கியின் இலங்கை வதிவிட பரதிநிதி பீற்றர் கெரால்ட் தற்போது இப்பேரினவாதிகளினால் கடும் அவமதிப்புக்குள்ளாகியுள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின்போது அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என கோரியும் பல்வேறு சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஜேவிபி பிரசாரசெயலாளர் விமல்வீரவன்ச வின் வழிகாட்டலில் பல சிங்கள "தேசாபிமான பிக்குகளும்" கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அவரது உருவம் போன்று வடிவமைக்கப்பட்ட பொம்மை எரிபூட்டப்படுவதை படத்தில்காணலாம்.இவ்வாறு ஜேவிபிக்கு கடுப்பேற அவர் என்னதான் செய்தார்?
ஆறாம்திகதிய சண்டேரைம்ஸ் இதழில் நேர்காணலின்போது "நான் பல தடவைகள் சில ஊடகங்களாலும் தேசாபிமான பற்றுள்ள அமைப்பினராலும் "எரியூட்டப்பட்டு" இருக்கிறேன். அதற்கான காரணம் என்னவென்றால், உத்தியோகபூர்மற்ற ஓருமாதிரியான தனிமாநிலமாக, ஒரு அதிகாரபூர்வமான விடுதலைப்புலிகளுடைய கட்டுப்பாட்டு பிரதேசம் இருக்கிறது என்ற அடிப்படையிலும், அரசாங்கத்துடன் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை செய்துகொண்ட ஒரு அமைப்பு என்ற ரீதியில் அவர்களும் சட்டரீதியான ஒரு பங்காளிகள் என்ற அடிப்படையிலும் விடுதலைப்புலிகளுடானான எமது தொடர்புகள் பொருத்தமற்றது" என அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்கு முன்னரும் ஒரு தடவை இவ்வாறு இவரது உருவபொம்மை எரிக்கப்பட்டதுதெரிந்ததே அப்போது அவர் பிபிஸிக்கு அளித்த பேட்டியில்; "என்னுடைய பொம்மையை உண்மையில் அழகாக செய்திருந்தார்கள்" என்றார்.
(கொடும்பாவி எரித்தல் என சொல்வது ஆனால் இது சரியா பிழையா என்ற குழப்பத்தில் உருவபொம்மையென குறிப்பிட்டுள்ளேன்.)
தமிழ்ச்சங்கமம்
|
|
|
| பெயர் மாறுகிறது.. |
|
Posted by: vasisutha - 03-12-2005, 06:41 AM - Forum: சினிமா
- Replies (10)
|
 |
பி.எப். பெயர் மாறுகிறது..
மாட்டவே மாட்டேன், முடியவே முடியாது.. நாங்கெல்லாம் யாருக்கும் பணிய மாட்டோம் என்று வடிவேலு மாதிரி மார்தட்டிய எஸ்.ஜே. சூர்யா அந்தரத்தில் அப்படியே ஒரு அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
பி.எப் என்ற தனது படத்தின் பெயரை மாற்ற முன் வந்திருக்கிறார். படத்துக்கு நல்ல தமிழ் பெயர் சூட்டுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு தரப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
படத்துக்கு பி.எப் என்று சுருக்கி பெயர் வைத்து தமிழகத்தில் வாய்களை விரிவாக விரிய வைத்தவர் சூர்யா. அய்யோ, இப்படி ஒரு பெயரா என்று அலறியவர்களுக்கு, இதுக்கு அர்த்தம் பெஸ்ட் பிரண்ட் தான். நீங்க நினைக்கிற மீனிங் இல்ல என்று வியாக்கியானம் சொன்னார்.
இதையடுத்து ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். சூட்டிங் ஸ்பாட்டுக்கே போய் சூர்யாவை 'செல்லமாய்' மிரட்டி வந்தனர் விடுதலைச் சிறுத்தைகள்.
இதைத் தொடர்ந்து படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் வைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவே, சூர்யா ரொம்ப குஷியானார்.
ஹீரோயின் நிலாவும் சூர்யாவும் சேர்ந்து கவர்ச்சி டொர்னடோவை தமிழகத்தில் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்ததால், படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இமயமான ஒரு இயக்குனர், சூர்யாவிடம் பேசியதாக சொல்கிறார்கள். தமிழின் அருமை பெருமைகள் குறித்து தனக்கேயுரிய பாணியில் யார் உணர்ச்சிக் கொந்தளிப்பாய் அவர் முழங்கியிருக்கிறார்.
தமிழிக்கு தமிழன் கேடு செய்யக் கூடாது என்று அவர் சொல்லி முடித்தபோது, மாத்திர்றேன் சார்.. மாத்திர்றேன் என்று பதில் தந்திருக்கிறார் சூர்யா.
சொன்ன மாதிரியே படத்தின் பெயரை தமிழில் மாற்றிவிடும் முடிவுக்கு வந்திருக்கிறார். இந்தப் பொறுப்பை ரசிகர்களிடமே விட்டிருக்கிறார். படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசையும் அறிவித்திருக்கிறார் சூர்யா.
இது குறித்து சூர்யா கூறுகையில், எல்லோரையும் குஷிப்படுத்த படம் எடுப்பவன் நான். அப்படித்தான் இதுவரை இருந்தேன். இனியும் அப்படியே இருப்பேன்.
நான் இயக்கி, தயாரித்து, நடிக்கும் படத்துக்கு பெஸ்ட் பிரண்ட் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தது தெரிந்தோ, தெரியாமலோ சிலரது உணர்வுகளைக் காயப்படுத்திவிட்டது. எல்லோரையும் மகிழ்விக்க முயல்பவன் நான். என்னால் யாரும் காயப்படக் கூடாது.
இதனால் தலைப்பை மாற்ற முடிவு செய்துவிட்டேன். பொறுப்பை தமிழக மக்களிடமே ஒப்படைத்துவிட்டேன் என்றார்.
எங்கே.. சூர்யாவுக்கு எல்லோரும் ஜோரா ஒரு ஓ.. போடுங்க.
அப்படியே ஒரு நல்ல தலைப்பச் சொல்லுங்க பார்ப்போம்.
thatstamil
|
|
|
| மன்னர் Jokes - 1 |
|
Posted by: vasisutha - 03-12-2005, 04:28 AM - Forum: நகைச்சுவை
- Replies (177)
|
 |
<b>மன்னர் Jokes</b>
<img src='http://img189.exs.cx/img189/5351/p904gn.jpg' border='0' alt='user posted image'>
வாள் முனையைவிட பேனா முனை வலிமையானது என்பது உண்மைதான் என்று சொல்கிறீர்களே... எப்படி அமைச்சரே?
பாருங்களேன்... போரென்றால் கூடப் பயப்படாத நம் மன்னர், இந்தப் புலவர் ஒரு கவிதை எழுதிக்கொண்டு வருவதாகத் தகவல் வந்ததும் அலறியடித்து ஓடுகிறாரே!
000000
<img src='http://img189.exs.cx/img189/5840/p90a5fo.jpg' border='0' alt='user posted image'>
மன்னர் கோபமாக இருக்கிறாரே... ஏன்?
அவர் போரில் எதிரிகளைப் பூண்டோடு ஒழித்துக் கட்டுவேன் என்று சூளுரைத்ததைக் கேட்டு, ஜோக் அடிக்கிறார் என நினைத்து எல்லோரும் சிரித்து விட்டார்களாம்!
00000
<img src='http://img189.exs.cx/img189/8839/p90b2zk.jpg' border='0' alt='user posted image'>
எங்க மன்னர், உறையிலிருந்து வாளை எடுத்து வேகமா வீசினா...
பல தலைகள் உருளுமோ?
இல்லை! வாள் சில அடி தூரம் போய் விழும்!
00000
<img src='http://img189.exs.cx/img189/6797/p913pd.jpg' border='0' alt='user posted image'>
தளபதியாரே உடைவாள் நுனியில் என்ன ரத்தக்கறை?
ஹி...ஹி..! இங்கே வருமுன், வீட்டில் சமையலுக்கு பீட்ரூட் நறுக்கிக் கொடுத்தேன் அரசே!
00000
<img src='http://img189.exs.cx/img189/4959/p91a3ik.jpg' border='0' alt='user posted image'>
மன்னர் புறாக்களை எல்லாம் ரோஸ்ட் செய்யச் சொல்லிவிட்டாரே, ஏன்?
புதுசா செல்போன் வாங்கிட் டாராம்!
00000
thanx to vikatan
|
|
|
| கடலம்மா |
|
Posted by: AJeevan - 03-12-2005, 03:39 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/dsc00288.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><i>குழந்தைகள் உன்னிடம் ஓடி வந்தார்கள்.
காதலர்கள் கால் நனைத்து ஓடித் திரிந்தார்கள்
முதியோர்கள் தன் பழமைக் காலத்தை பகிர்ந்து கொண்டார்கள்
இப்போது உன்னிடம் வர மட்டுமல்ல
உன்னைப் பார்க்கவே அஞ்சுகிறார்கள்</i>
கொலை பாதகர்களை கூண்டில் நிறுத்தி தண்டிக்கலாம்
உன்னை எங்கே நிறுத்தித் தண்டிப்பது?
முடிந்தால்
வழி சொல்
வழக்கொன்று தொடுத்து
உன்னை சிறையில் தள்ள.............</span>
|
|
|
| புலத்தில் ஒரு நாள் - சுதந்திர வேட்கையும் 800 டொலரும் |
|
Posted by: Mathan - 03-12-2005, 02:02 AM - Forum: புலம்
- Replies (6)
|
 |
சுதந்திர வேட்கையும் 800 டொலரும்
மெல்பேர்ணில் பகுதி நேரமாக வாரத்தில் இரண்டு நாட்கள் Fuel station ஒன்றில் வேலை செய்கிறேன். ஒரு பகலும் மற்றுமொரு இரவுமாக எனது கடமை நேரம் இருக்கும்.
பகல் வேளைகளில் வேலை செய்வதும் நேரம் போவதும் பெரிதாக தோற்றுவதில்லை.
ஆனால் இரவு இருக்கிறதே.. நேரம் அதன் அரைவாசி வேகத்தில் நகர்வது போல இருக்கும். 12 மணியாச்சா? 2 மணியாச்சா? 4 மணியாச்சா.. ம்.. இன்னும் 2 மணிநேரம் தான் என அடிக்கடி எண்ணிக் கொண்டே நேரம் கழியும்.
பொதுவாக அந்த வேலை ஒப்பீட்டளவில் இலகுவானது தான். ஆனால் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாக இரவுகளில்!
மொத்தமாக எரிபொருள் நிரம்பும் 30 இயந்திரங்கள் இருக்கின்றன. உள்ளே உட்கார்ந்திருந்து எந்த இயந்திரம் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது அவதானிக்க வேண்டும்.
அப்படி பயன்படுத்தியவர்கள் எல்லோரும் உள்ளே வந்து கட்டணம் செலுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஏதாவது சந்தேகத்திற்கிடமானவர்கள் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தால் அவர்களது வாகனத்தின் இலக்கத்தை குறித்துக் கொள்ள வேண்டும். (சந்தேகத்திற்கிடமானவர்களை எப்படி அடையாளம் காண்பது என எனக்கு இன்னமும் தெரியவில்லை)
எரிபொருள் நிரப்பி விட்டு உள்ளே பணம் செலுத்த வருபவர்களிடம் மகிழ்ச்சியாக நாலு வார்த்தை பேசி விட்டு கணணித் திரையில் காட்டப்பட்டுள்ள அவர்களுக்கான கட்டணத்தை பணமாகவோ Cards மூலமாகவோ அறவிட்டு விட்டு see ya சொல்லி அனுப்பி விட்டு Next please சொல்ல வேண்டியது தான்.
வேலைக்குச் சேர்ந்த ஆரம்பத்திலேயே ஒஸ்ரேலியாவில் திருடர்கள் தான் அதிகம் என ஒஸ்ரேலியரான Boss சொல்லி விட்டார். அது என்னை அவதானமாக இருக்க சொல்லிய அறிவுறுத்தல்.
இருப்பினும் குட்டி குட்டியாக தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் அந்தப் பெரியயய தவறு நடக்கும் வரை!
ஆரம்பத்தில் 40 டொலர் செலுத்த வந்த ஒருவரின் கடன் அட்டையிலிருந்து இலக்கம் அழுத்துகையில் தவறுதலாக 400 டொலரினை அறவிட அந்த வாடிக்கையாளர் என்னை ஒரு வழி பண்ணி விட்டார்.
தவறு என்னுடையது தான் மிகுதி மேலதிக தொகையை பணமாக தந்து விடுகிறேன் என சொல்லியும் அந்த நண்பர் என்னை விடுவதாகவில்லை.
கடந்த வாரத்துக்கு முந்திய வாரத்தின் புதன் கிழமை. அது எனது இரவு வேலை நாள்.
இரவு பன்னிரண்டு மணி தாண்டி விட்டது. பொதுவாக 12 மணிக்கு பின்னர் அதிகாலை 4 மணிவரை அமைதியாக இருக்கும். பெரியளவில் யாரும் வர மாட்டார்கள்.
முடிந்த நாளுக்கான வரவு செலவுகளை கணணி முடித்துத் தர எல்லாம் கிட்டத்தட்ட (மிகச் சரியாக எனக்கு ஒரு போதும் அது இருந்ததில்லை) சரியாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டு.....
விட்டு..... நான் அடேல் பாலசிங்கம் எழுதிய சுதந்திர வேட்கையை (இரண்டாம் தரம்) வாசிக்க தொடங்கினேன்.
தமிழகத்துடன் இந்தியாவுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தொடர்புகள் அரசியல் வாதிகளின் உதவிகள் என அது ஆர்வமாய்ச் சென்றது.
ஒரு 30 நிமிடம் கழிந்திருக்குமோ?
எதேச்சையாக கணணித்திரையை நோக்கினேன். எரிபொருள் நிரப்பும் இயந்திரங்கள் 27 மற்றும் 29 இலிருந்து மொத்தம் 800 டொலருக்கு டீசல் அடிக்கப்பட்டிருப்பதாக அது சிவத்த எழுத்தில் சொன்னது.
அப்பவே சின்னதாக ஒரு பதட்டம் மனதில் குடி கொண்டு விட்டது.
விழுந்தடித்துக் கொண்டு எழுந்து இயந்திரங்களைப் பார்த்தேன்.
அங்கு எவருமோ எந்த வாகனமுமோ இல்லை.
கடவுளே.. 800 டொலர்!! எப்போதாவது யாராவது இருபதோ முப்பதோ டொலரிற்கு எரிபொருள் நிரப்பி விட்டு பணம் தராமல் ஓடக்கூடும் என்று ஏற்கனவே எண்ணியிருக்கிறேன். ஆனால் அது இப்படி 800 டொலர்களாக இருக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை.
800 டொலர்களிற்கு டீசல் அடித்துச் செல்வதென்றால் அது சிறிய வாகனமாக இருக்காது. ஏதாவது பார ஊர்தியாகத் தான் இருக்கும். அப்படியான ஒன்று வந்து செல்லும் வரை சுரணை அற்று இருந்திருக்கிறேனே என்று என் மேலே கோபம் வந்தது.
காலை 7 மணிக்கு Boss வந்தார். பொதுவாகவே கலகலப்பாக பேசுபவர். இன்று என்ன நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்தில் தொண்டை வரள வரள தண்ணி குடித்து குடித்து நடந்ததை விபரித்தேன்.
நித்திரை கொண்டு விட்டதாகத் தான் சொன்னேன். (சுதந்திர வேட்கை! மூச்!)
எவ்வளவு காசு என்று அவர் கேட்கும் வரை இயல்பாகத் தான் இருந்தார். ஒரு வேளை 20 அல்லது 30 ஆக இருக்க கூடும் என்று நினைத்தாரோ தெரியவில்லை.
800 டொலர் என்று சொன்னேன்.
மனிசன் தலையிலை கை வைச்சிது. நான் முழிசிக் கொண்டு நிண்டன்.
என்ன செய்யப் போகிறாய்?
எனக்கு எங்கேயிருந்தோ அவசரமாக பதில் வந்தது. என்னிலை தான் பிழை. ஆகவே எனது சம்பளத்திலை இருந்து எடுத்துக் கொள்ளுங்கோ.
எனக்கென்னவோ அப்பிடிச் சொல்வது தான் எனக்கு மரியாதையாகப் பட்டது.
சொல்லி விட்டேனே தவிர மனசுக்குள் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. கண்முழித்து (சுதந்திர வேட்கை படித்து??) உழைத்த சம்பளம். அநியாயமாய்ப் போயிட்டுதே என்ற கவலை.
அதன் பின் கடந்த வாரம் எனக்கு பதில் இன்னுமொருவரை அனுப்பி வைத்து விட்டு நான் வேலைக்கு லீவு போட்டிருந்தேன்.
நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு! boss பேசினார். நீ இன்னும் சம்பளம் எடுக்க வில்லையா?
எனக்கு சம்பளம் வங்கிக் கணக்கிற்கெல்லாம் போவதில்லை. (அதெல்லாம் Tax சம்பந்தப் பட்ட விடயங்கள். கண்டு கொள்ள வேண்டாம்) எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்தோமோ அதற்கேற்றவாறு சம்பளம் அங்குள்ள ஒரு இடத்தில் வைக்கப் படும். வாரா வாரம் அதிலிருந்து எடுக்க வேண்டியது தான்.
இல்லை என்றேன் நான்.
சரி நான் வைத்திருக்கிறேன். வந்து எடுத்துக் கொண்டு போ... என்று துண்டித்து விட்டார் அவர்.
ஆஹா...
நன்றி - சயந்தன்
|
|
|
| தமிழ் இளஞ்ஞ இளஞ்ஞிகளின் விளையாட்டு துறை பற்றிய உங்கள் கருத்த |
|
Posted by: Mathuran - 03-12-2005, 12:42 AM - Forum: விளையாட்டு
- Replies (6)
|
 |
தமிழ் இளஞ்ஞ இளஞ்ஞிகளின் விளையாட்டு துறை பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதனை இங்கே குறிப்பிட முடியுமா? கால்பந்து விளையாட்டாக இருந்தாலும் சரி மெய்வல்லுனர் விளையாட்டுக்களாக இருந்தாலும் சரி. தமிழர்கள் தங்கள் திறனை தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்வது சரியா? உலக அரங்கில் தமிழர்கள் தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்பௌத்தப்போவது எப்போது? முடிந்தால் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள், விவாதிக்கலாம்.
|
|
|
| தலைமன்னாரில் கடல்பேரலை தாக்குதல் |
|
Posted by: eelapirean - 03-11-2005, 07:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
தலைமன்னாரில் கடல்பேரலை தாக்குதல்
தலை மன்னார் பழையபாலம் கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் பேரலை எழுந்து கரையை தாக்கியுள்ளது.
இதனால் அக்கடற் கரைப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் அவலக்குரல் எழுப்பியவாறு சிதறி ஓடியுள்ளனர். அவ் அலைத்தாக்கத்தால் உயிரிழப்புக்கள் எவையும் இடம்பெறாத போதிலும் கரையில் நின்ற இரு படகுகளை அலை அடித்துச் சென்றுள்ளது. சுமார் 5 நிமிடம் வரை அலையின்; தாக்கம் தரையை நோக்கி ஏற்பட்டுள்ளது.
நன்றி புதினம்
|
|
|
| கொஞ்சம் சிரிங்க |
|
Posted by: thamilvanan - 03-11-2005, 04:26 PM - Forum: நகைச்சுவை
- Replies (451)
|
 |
சரி கொஞ்சம் சிரிங்க.
சிரிக்க சிரிக்க - 2
அப்போது அதிகாலை பத்துமணி. மைக்கல் மிக வேகமாக தனது அலுவலகத்தை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் மனைவியின் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. " என்ன விசயம் " கேட்டார் மைக்கல். " நீங்கள் போற பாதை வழியாக ஒருவர் பக்கம் மாறி காரை செலுத்தி செல்வதை தற்போது ஐந்து நிமிடமாக நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவதானமாக செல்லுங்கள்" என மனைவி கூறினார். அதனை அதுவரை செவிமடுத்த மைக்கல் "ஓ ஒரு ஆளையா இவ்வளவு நேரமா காட்டுறான்கள். இஞ்ச என்னைத்தவிர எல்லாரும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறான்கள்" என்றார்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தீயன்னா என்பவர் பெரிய தொழிலதிபர். அவருக்கு பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவைகள் இருந்தபோதும் விமானங்களில் பயணம் செய்வதை விரும்பமாட்டார். அதற்கான காரணம் தான் சுவாரசியமானது. அவர் சர்வதேச விமான போக்குவரத்துகள் சம்பந்தமான புள்ளிவிபரம் ஒன்றே அவர் அவ்வாறு விமான பயணங்களை தவிர்த்து வேறு போக்குவரத்துகளையே பயன்படுத்துவதற்கான காரணம் ஆகும். அதாவது பத்தாயிரம் விமானங்களை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு விமானத்தில் குண்டுகள் இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்பதே அப்புள்ளிவிபரம்.
எனவே பத்தாயிரத்தில் ஒரு விமானமாக தன்னுடைய விமானம் இருந்து விடும் என்பதே அவரது விமானப்பயணத்தவிர்ப்புக்கு காரணம்.
ஆனால் அன்றைய தினம் தனது அவசர கூட்டத்துக்கு விமானத்திலேயே அவர் ஆச்சரியப்படத்தக்க வகையில் வந்திருந்தார். எனவே எல்லோரும் அதற்கான காரணத்தை அறிய ஆவலாக இருந்தனர்.அதற்கு பதில் அளித்த அவர்" குறிப்பிட்ட புள்ளிவிபரப்படி ஒரு குண்டு இருப்பதற்கான சாத்தியம் 10000 இல் 1. இரண்டு குண்டுகள் இருப்பதற்கான சாத்தியம் 100000000 இல் 1. அதனால் ஒரு குண்டை நான் வரும்போதே கொண்டுவந்தேன். "
(அடுத்த குண்டை வைப்பதற்கான சாத்தியம் 100000000 இல் ஒன்று அல்லவா.
ஆனால்ஒரு சந்தேகம்.கணிதப்புள்ளிமான்களே இது கணித ரீதியாக சரியா?)
தமிழ்ச்சங்கமம்
|
|
|
|