| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 472 online users. » 0 Member(s) | 470 Guest(s) Baidu, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,441
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,264
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| HTML கற்போம் |
|
Posted by: thamilvanan - 03-14-2005, 03:20 PM - Forum: இணையம்
- Replies (76)
|
 |
இது ஒரு முயற்சி. HTML தொடர் ஒன்று எழுதுவோம் என்று ஒரு விசப்பரீட்சை . ஏன் விசப்பரீட்சை என்றால் நான் இப்பகுதியில் கற்றுக்கொண்டது எல்லாம் அனுபவம் தான். ஒரு பொழுதுபோக்காக கற்றுக்கொண்டதுதான். எனவே முழுமையிருக்காது. நான் முன்னர் 50 -100 ரூபாக்கு என்று நினைக்கிறேன் "HTML கற்றுக்கொள்வது எப்படி?" என்று புத்தகம் வாங்கி படித்துவிட்டு ஆகா HTML படித்துவிட்டேன் என திருப்திப்பட்டேன். ஆனால் பின்னர் ஓரு வருடத்துக்கு பின்னர்தான் இன்னும் பலவிடயங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டேன்.
இணையத்தள வடிவமைப்பை பொறுத்தளவில் HTML அடிப்படையானது. பின்னர் கொஞ்சம் CSS கொஞ்சம் Javascript அறிந்து கொண்டால் தற்போது வலைத்தளம் வைத்திருப்பவர்கள் பல வடிவமைப்பை தங்களுக்கு ஏற்றவிதத்தில் ஏற்படுத்திக்கொள்ளலாம். எனவே முதலில் HTML தொடரை தொடர்கிறேன். இங்கு நான் HTML தொடரை முழுமையாக கற்றவனல்லன் என்பதையும் திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன என்பதையும்கவனத்தில் கொள்க.
முதலில் இணையத்தள வடிவமைப்புக்கு ஓரு பக்கத்தை வடிவமைப்பதை சம்பிராதயபூர்வமாக சொல்லவேண்டும் என்பதற்காக அதனை சொல்கிறேன். மற்றைய விடயங்களை ஒவ்வொரு தலைப்புகளாகவே தொடரும்.
001. முதல்பக்கம் வடிவமைத்தல்
<html>
<head>
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>
<body>
வணக்கம் இது HTML தொடர் - 01.
</body>
</html>
Notepad இல் பின்வரும் மீயுரையை பதிவுசெய்து அதனை உதாரணத்துக்கு myfirstpage.html என சேமித்துக்கொள்ளுங்கள். சேமித்துக்கொள்ளும்போது File Name என்ற பகுதியில் myfirstpage.html எனவும் Encoding எனும் இடத்தில் UTF-8 என்பதையும் தெரிவுசெய்துவிட்டபின்னர் Save ஐ அழுத்தவும்.
இங்கு மீயுரை இரண்டு முக்கியபகுதிகளை கொண்டுள்ளதை கவனிக்கலாம். ஒன்று body பகுதி மற்றயது head பகுதி ஆகும்.
<title>, </title> இவ்விரண்டுக்கும் இடையில் எழுதப்படும் பகுதி பிறவுசர் மேற்பகுதியில் தோன்றும். <body>, </body> இவ்விரண்டுக்கும் இடையில் எழுதப்படும் பகுதியே இடைமுகத்தில் தோன்றும்.
இப்போது சேமிக்கப்பட்ட கோப்பின் மீது இரட்டைகிளிக் செய்வதன் மூலம் இன்ரனெற் எக்ஸ்புளோறறில் உங்களுடைய முதல்பக்கத்தை பார்க்கலாம்.
|
|
|
| சர்பத் |
|
Posted by: thamizh.nila - 03-14-2005, 03:17 PM - Forum: சமையல்
- Replies (55)
|
 |
சர்பத்
ரோஸ் சர்பத் சிரப் -- 5 மே.க
கட்டிப்பால் -- 5 மே.க
அன்னாசி பழ துண்டுகள் --ஒரு கப்
நீர் - 5கப்
சினீ [இனிப்பு அதிகம் தேவை எனில்]- 1 மே.க
ஐஸ் கட்டிகள் [சின்ன கட்டி, பெரிச போட்டு, கப்பையே உடைக்க வேண்டாம்]
அனைத்தையும் நன்றாக, ஒன்றாக போட்டு கலக்கவும்.
குவளைகளில் இடவும்.
குடிக்கவும்/நல்ல மனம் இருந்தால் மற்றவர்களுக்கும் குடுக்கலாம்.
[நிறைய குடித்தால் சீனி வியாதி வரும்]
|
|
|
| அன்பின் சியாம் அண்ணாவுக்கு |
|
Posted by: thamizh.nila - 03-14-2005, 03:09 PM - Forum: சமையல்
- Replies (10)
|
 |
என்ன, தலைப்ப பார்த்து எல்லரும் ஓடி வாறியள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சியாம் அண்ணா, உங்கட கொத்துரொட்டி செய்முறையை எழுத முடியுமா? நன்றி. எழுதியவுடன், தலைப்பை மாற்றவும்.
|
|
|
| ஈழத் தாலாட்டு! |
|
Posted by: hari - 03-14-2005, 07:57 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
<b>ஈழத் தாலாட்டு!</b>
தென்னிலங்கைச் சீமையிலே
செந்தமிழன் காணியிலே
என்னுயிரே! இன்னமுதே!
ஏனழுதாய், கண்ணே!...
பாடுகடல் சூழ்ந்திருக்க,
பட்டுமணல் பாய்விரிக்க,
ஏடுகொள்ளும் என்தமிழே!
ஏனழுதாய், கண்ணே!...
ஏழுகடல் வென்றெடுத்த
எங்கள்தமிழ் மாமணியே!
யாழ்உறங்கும் பூமியிலே
யாரடித்தார், கண்ணே!...
தேன் ஈயும் தேனீயும்
தேனடையில் தூங்கையிலே
யானீன்ற யாழிசையே,
யாரடித்தார், கண்ணே!...
செந்தமிழார் சிந்தைதனைச்
செப்பனிடும் சேய்வடிவே!
அந்தமிலாப் பொன்னழகே!
ஆரிரரோ, கண்ணே!...
தௌ;ளுதமிழ்ச் சித்திரமே!
தேன்மழலைப் பாசுரமே!
அள்ளியுனை நானணைத்தேன்:
ஆரிரரோ, கண்ணே!...
வாரியுனைக் கையணைக்க,
வண்ணமுலை பால்கொடுக்க,
காரிருளும் கண்விழிக்க,
கண்ணுறங்கு, கண்ணே!...
உச்சிமுதல் பாதம்வரை
உன்னழகோ தீர்த்தக் கரை!
கச்சிதமாய் என்மடியில்
கண்ணுறங்கு, கண்ணே!...
தூயகுலம் பெற்றெடுத்த
தும்பையிதழ்ப் பூவனமே!
நீயழுதால் யார்துயில்வார்?
நித்திரை கொள், கண்ணே!...
நாளையொரு வேளைவரும்:
நல்லதமிழ்க் காவலரும்
ஆளவரும் காலம்வரும்:
ஆறுதல் கொள், கண்ணே!...
சிற்றினத்தார் வஞ்சகமும்
சிங்களத்தார் நாடகமும்
சற்றொருநாள் சாகசம்தான்:
சஞ்சலம் ஏன், கண்ணே?...
காலமெல்லாம் காத்துவந்த
கன்னித் தமிழ்க் கோயிலுக்குள்
காலனைப் போல் கள்வன் வந்தான்:
காரணம் ஏன், கண்ணே?...
எங்கிருந்தோ வந்தவரும்
இங்கிருக்கும் வஞ்சகரும்
தந்திருக்கும் வெங்கொடுமை
தாங்குவதோ, கண்ணே?...
செங்குருதி நெய்சொரிந்து
செய்வதொரு வேள்விதனைக்
கண்களில்யாம் ஏந்திநின்றோம்:
கண்ணுறங்கு, கண்ணே!...
ஈட்டிமுனைக் கூர்மைதனை
ஈட்டிவரும் நம்மவரைக்
காட்டினும்ஓர் சேனையில்லை:
காண்கிலையோ, கண்ணே?...
ஞாலமெங்கும் வீரத்திலே
நம்மவர்போல் யாருமில்லை!
சீலமிகு செய்தி இது:
கேட்டிலையோ, கண்ணே?...
கூர்த்தமதி போர்த்தி நிற்கும்
கொள்ளையெழில் யாழ்மறவன்
பார்த்திடுவான் (இ)ரண்டில் ஒன்று:
பள்ளி கொள்வாய், கண்ணே!...
தம்பியர்தம் தானைகளும்
தானைகளின் தளபதியும்
தம் பணிகள் தான்முடிப்பார்..
தாலேலோ, கண்ணே!...
வீரர்குலம் தோற்பதில்லை!
வெற்றியொன்றும் தூரமில்லை!
நேரம் வரும்: நிச்சயமே!
நீயுறங்கு, கண்ணே!...
ஈழமெனும் செம்பரிதி
எம்மவர்க்கே - இது உறுதி!
காலமகள் கண்திறப்பாள்:
கண்ணுறங்கு, கண்ணே!...
¦¾¡.ݨºÁ¢ì§¸ø (tsmina2000@yahoo.com)
|
|
|
| கேரள பால் பாயசம் |
|
Posted by: hari - 03-14-2005, 07:11 AM - Forum: சமையல்
- Replies (58)
|
 |
<b>கேரள பால் பாயசம்</b>
அரிசி ஒரு கப்
பால் 4 கப்
சர்க்கரை 2 கப்
முந்திரிப்பருப்பு 12
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
அரிசியை இரண்டு மேசைக் கரண்டி நெய் விட்டு சிவந்து விடாமல் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் நீரில் நன்றாக களைந்து, ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பால் என்ற விகிதத்தில் ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவிடவும்.
பாலும், தண்ணீரும் கொதித்த பின் அரிசியைக் களைந்து போட்டு சீரானத் தீயில் வேக விடவும்.
பாலிலேயே அரிசி வெந்து நன்கு கரைய வேண்டும். அதற்காக அரிசி நன்கு வெந்தபின், பாலை விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் நன்றாக சுண்டியப் பிறகு தீயை முழுவதுமாகக் குறைத்து, அதில் சர்க்கரைச் சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்தவுடன் தளர்ந்து விடும். தேவையெனில் மீண்டும் அடுப்பில் வைத்துக் கிளறலாம்.
பிறகு ஏலப்பொடி போட்டு, முந்திரியை வறுத்துப் போடவும்.
கொதிக்கும் போது அடிப்பிடிக்காமல் இருக்க விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
இதையே குக்கரிலும் செய்யலாம். குக்கரில் வைக்கும்பட்சத்தில் கூடுதலாக கால் கப் தண்ணீரும், கால் கப் பாலும் சேர்த்துக் கொள்ளவும்.
அதாவது, ஒரு கப் அரிசிக்கு, பாலும் தண்ணீருமாக இரண்டரைக் கப் சேர்க்கவும்.
அரிசி வெந்த பின் இறக்கி, மேல் சொன்ன முறையில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் விட்டு பாலைச் சேர்த்து காய்ச்ச வேண்டும். நன்கு கரைந்ததும் சர்க்கரை சேர்த்து, முந்திரி, ஏலப்பொடி சேர்க்கவும்.
«ùÅÇ×¾¡ý À¡ø À¡Âºõ ¾Â¡÷!
ÌÈ¢ôÒ: ±í¸ÙìÌõ ¦¸¡ôÀ¢ §ÀŠð ¦ºö ¦¾Ã¢Ôõ º£...º¨Áì¸ ¦¾Ã¢Ôõ, þÉ¢ ¿ì¸ÄÊì¸¢È §Å¨Ä¦ÂøÄ¡õ ¨Å츧Åñ¼¡õ ¦º¡øÄ¢ð¼ý. ÌÈ¢ôÀ¡¸ ¾Á¢ú ¿¢Ä¡×ìÌ
:evil:
|
|
|
| உனக்காயே நான்...! |
|
Posted by: kuruvikal - 03-14-2005, 05:19 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (50)
|
 |
<img src='http://img92.exs.cx/img92/4327/kagayaphoenix8jp.jpg' border='0' alt='user posted image'>
<b>சுதந்திர வான் நோக்கி
தனிப் பறவையாய் நான்
இணைச்சிறகடித்து பறந்திட
மலரே உன்னை
மலர்ச் சிறகாக்கி
என்றோ என்
நினைவுச் சிலையில்
செதுக்கி வைத்தேன்...!
தோப்பிருந்து புறப்பட்டு
இலக்கு நோக்கிப் பறக்கும் வேளை
மலரே உன் நினைவு மட்டும்
மனதோடு இல்லைக் கண்டால்
அடிக்கும் என் சிறகும்
ஓய்தல் காண்கிறேன்
அதற்காய் நான் உன்னடிமையில்லை...!
உன் அன்புக்கு அடிமையாகி
உன்னினைவின் சக்தியில் பறப்பதாய்
மட்டுமே உணர்கிறேன் பார்...!
அதுவும் ஓர் நிலை உந்துசக்தியாக....!
நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுதி
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் அன்பு மட்டும்
எனைத் தாங்கும் கோலம் கண்டால்
மீண்டும் எழுவேன்...!
வேற்றுமையில்லா உன்னன்பு
போதுமடி என் சிறகுகள் இயங்க....!
தேவதையாய் அல்ல
சக தோழியாய் என்னருகிரு
தாயவள் பக்கத்துணை போல்
நீ வருவாய் எனும் நினைவிரு
உனக்காய் நானும் வாழ்வதாய்
சத்தியம் கூட வேண்டாம்...
உன் வார்த்தையில்
உன்னளவில் சத்தியம் வை
அது போதும்
நீயும் என் உறவாய்
என்னோடு சிறகடிக்க....!
மாயக் கோலம் போட்டு
புலக்கண்ணும் மனக்கண்ணும்
ஏமாற்ற நினைக்காதே....
பருவக் கோலம் காட்டி
புத்தி கிறங்கடிக்க எண்ணாதே...
பறவையாயினும் பதறாமல்
பண்பட்ட உள்ளம்
பசப்புகள் அறிந்தால்
உதிர்க்கும் உன் நினைவுச் சிறகும்
என்னைப் பலமாக்கும்
அறிந்து கொள் தோழியே....!
இப்போதே....
உண்மைக்கு உதாரணமாய்
என்னோடு வா....
அகிலத்தின் அன்பின்
போரொளி காட்டுறேன்
அதுவரை உற்சாகமாய்
என் சிறகுகள் அடித்தபடி
உனக்காயே நான்...!</b>
(குருவிகளின் கிறுக்கல் காணத்துடிக்கும் உள்ளங்களுக்காக... நேரம் கிடைத்த இந்த வேளையில் மனதோடு மலர்ந்திட்ட மலரவளின் நினைவோடு....வரும் கிறுக்கல்...!)
|
|
|
| சிறுவர் கதை |
|
Posted by: VERNON - 03-13-2005, 09:42 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (4)
|
 |
சிறுவர் கதை
அவலபுரத்து மன்னன் மிகவும் பவசாலியும் வீரனும் ஆவான். அவனை சுற்றியுள்ள அனைவரும் தினமும் அவனை புகழ்ந்து கூறி மன்னனின் பாராட்டையும் பரிசையும் பெற்றுச் சென்றனர். ஓரு நாள் மன்னன் நகர் வலம் சென்றார் மன்னன் மிகவும் ஆடம்பரமான ஆடையை அணிந்தான். தன் மந்திரி பிரதானிகளிடம் தன் ஆடை அலங்காரம் குறித்து வினாவ அனைவுரும் ஆகா அற்புதம் ஆகா அழகோ அழகு என
பாராட்டவும் மன்னனும் மகிழ்வுடன் அனைவருக்கும் பரிசளித்து நகர் வலம் சென்றார்.
மக்களும் மன்னனை வணங்கிச் சென்றனர். மன்னர் அப்பால் சென்றதும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். அக் கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் மன்னனை கண்டு பரிகாசம் செய்து கை கொட்டிச் சிரித்தான். ஆத்திரம் அடைந்த மன்னன் சிறுவனை பிடித்து என்னில் என்ன குறை கண்டாய் என ஆத்திரத்துடன் வினாவினான் ?
அச்சிறுவனும் பணிவுடன் மன்னனிடம் கூறினான்
மாமன்னாää தங்களின் பட்டுப் பீதாம்பரத்தில் பெரிய கிழிசல் உள்ளது. அது உங்களை அரை நிர்வாணமாக காட்டுகிறது. என்றான். மன்னா தங்களை புகழ்ந்து பரிசு பெற்றவர்கள் தங்களின் ஆடையில் இருந்த குறையையும் கூறியிருந்தால் நீங்கள் இவ்வாறு அவமானப்பட வேண்டியிருக்காது என்று கூறினான். ஆத்திரமும் அவமானமும் அடைந்த மன்னன் அன்று முதல் தன்னை வாழ்த்துபவர்களிற்கு பரிசளிப்பதை நிறுத்திää தன் குறைகளை கண்டு விமர்சிப்பவர்ளை மகிழ்வுடன் வரவேற்று தன் ஆட்சியில் உள்ள குறைகளை களைந்து நீதியான நல்லாட்சி செய்தான் .
முகமன் கூறும் நண்பனை விட உன்; குறைகளை துணிவுடன எடுத்துரைப்பவனே உன்னில் மிக அக்கறையாக உள்ளான்
தலைப்பு சீர்செய்யப்பட்டுள்ளது --யாழினி
|
|
|
| HTML தொடர் |
|
Posted by: thamilvanan - 03-13-2005, 04:40 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (15)
|
 |
[size=18]<b>HTML தொடர் ஒன்று எழுதலாம் என்று யோசிக்கிறேன். பின்னர் இதனை தேவைக்கேற்றவாறு இணையத்தள வடிவமைப்பது சம்பந்தமாக நீட்டிச்செல்லலாம்.
ஓரு சந்தேகம். ஏற்கனவே இதனை யாரும் செய்துவருகிறார்களா என்பதே. எனவே யாழ்தள அண்ணாக்கள் அக்காக்கள் சொன்னால் நல்லது.
இன்று எல்லோரும் ஒரு சின்னவீடு வைத்திருக்கிறார்கள் ஏன் நீங்கள் வைத்திருக்ககூடாது. நான் சொல்லுறது குடிலைத்தான். </b>
|
|
|
| தமிழும் கேரளமும் |
|
Posted by: stalin - 03-13-2005, 03:52 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (7)
|
 |
இலங்கை தமிழ் மக்களின் உணவு பழக்கங்களும் கேரள மக்களினது ஒரேமாதிரியானவை. அதே போல் கல்வி அறிவு திரவியம் தேடும் முறை ஒத்துபோகிறது கேரளாவை சேரநாடு எனறு கூறுவார்கள். அத்துடன் அவர்களின் கண்ணகி வழிபாடு தாய் வழி பரம்பரை சொத்துமுறை அப்படி பல வாழ்க்கை முறைகள் அவர்களுடன் ஒத்துபோவதை ஈழத்தமிழர்களிடம் காணலாம்.எனது கேள்வி என்னெவெனில் தமிழ்நாட்டு மக்களை விட எப்படி கேரளாவுடன் ஒத்துபோகிறது
|
|
|
|