Yarl Forum
உனக்காயே நான்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உனக்காயே நான்...! (/showthread.php?tid=4776)

Pages: 1 2 3


உனக்காயே நான்...! - kuruvikal - 03-14-2005

<img src='http://img92.exs.cx/img92/4327/kagayaphoenix8jp.jpg' border='0' alt='user posted image'>

<b>சுதந்திர வான் நோக்கி
தனிப் பறவையாய் நான்
இணைச்சிறகடித்து பறந்திட
மலரே உன்னை
மலர்ச் சிறகாக்கி
என்றோ என்
நினைவுச் சிலையில்
செதுக்கி வைத்தேன்...!

தோப்பிருந்து புறப்பட்டு
இலக்கு நோக்கிப் பறக்கும் வேளை
மலரே உன் நினைவு மட்டும்
மனதோடு இல்லைக் கண்டால்
அடிக்கும் என் சிறகும்
ஓய்தல் காண்கிறேன்
அதற்காய் நான் உன்னடிமையில்லை...!
உன் அன்புக்கு அடிமையாகி
உன்னினைவின் சக்தியில் பறப்பதாய்
மட்டுமே உணர்கிறேன் பார்...!
அதுவும் ஓர் நிலை உந்துசக்தியாக....!

நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுதி
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் அன்பு மட்டும்
எனைத் தாங்கும் கோலம் கண்டால்
மீண்டும் எழுவேன்...!
வேற்றுமையில்லா உன்னன்பு
போதுமடி என் சிறகுகள் இயங்க....!

தேவதையாய் அல்ல
சக தோழியாய் என்னருகிரு
தாயவள் பக்கத்துணை போல்
நீ வருவாய் எனும் நினைவிரு
உனக்காய் நானும் வாழ்வதாய்
சத்தியம் கூட வேண்டாம்...
உன் வார்த்தையில்
உன்னளவில் சத்தியம் வை
அது போதும்
நீயும் என் உறவாய்
என்னோடு சிறகடிக்க....!

மாயக் கோலம் போட்டு
புலக்கண்ணும் மனக்கண்ணும்
ஏமாற்ற நினைக்காதே....
பருவக் கோலம் காட்டி
புத்தி கிறங்கடிக்க எண்ணாதே...
பறவையாயினும் பதறாமல்
பண்பட்ட உள்ளம்
பசப்புகள் அறிந்தால்
உதிர்க்கும் உன் நினைவுச் சிறகும்
என்னைப் பலமாக்கும்
அறிந்து கொள் தோழியே....!

இப்போதே....
உண்மைக்கு உதாரணமாய்
என்னோடு வா....
அகிலத்தின் அன்பின்
போரொளி காட்டுறேன்
அதுவரை உற்சாகமாய்
என் சிறகுகள் அடித்தபடி
உனக்காயே நான்...!</b>

(குருவிகளின் கிறுக்கல் காணத்துடிக்கும் உள்ளங்களுக்காக... நேரம் கிடைத்த இந்த வேளையில் மனதோடு மலர்ந்திட்ட மலரவளின் நினைவோடு....வரும் கிறுக்கல்...!)


- eelapirean - 03-14-2005

நன்றாக இருக்கிறது கவிதை தொடரட்டும்


- hari - 03-14-2005

Å¡úòÐì¸û ÌÕÅ¢¸§Ç!


- kuruvikal - 03-14-2005

நேரமும் கிடைத்து கற்பனைக்கு அவகாசமும் கிடைச்சா கிறுக்கல் தொடரும்.... ஆர்வத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 03-14-2005

<b>நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுதி
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் அன்பு மட்டும்
எனைத் தாங்கும் கோலம் கண்டால்
மீண்டும் எழுவேன்...! </b>

கவிதை அருமை..
வாழ்த்துக்கள்....
அன்புக்கு இணை இந்த உலகில் எதுவும் இல்லை.

மீண்டும் தங்கள் கவிதை கண்டதில் மகிழ்ச்சி.
மேலும் தொடருங்கள்.


- tamilini - 03-14-2005

கவிதை கண்டதில் மகிழ்ச்சி.
நன்றே சிறகடிச்சு.. நோக்கிடும் இலக்கை அடைந்திட வாழ்த்துக்கள் குருவிகளே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-14-2005

shanmuhi Wrote:<b>நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுதி
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் அன்பு மட்டும்
எனைத் தாங்கும் கோலம் கண்டால்
மீண்டும் எழுவேன்...! </b>

கவிதை அருமை..
வாழ்த்துக்கள்....
அன்புக்கு இணை இந்த உலகில் எதுவும் இல்லை.

மீண்டும் தங்கள் கவிதை கண்டதில் மகிழ்ச்சி.
மேலும் தொடருங்கள்.

பண்புக்கு இலக்கணமாய்
யாழ் களத்தின் அன்பு அக்காவாய்
வலம் வரும் சண்முகி அக்காவே
தம்பி இவன்
கிறுக்கல் காணும் போதெல்லாம்
தரமாய் தரும் உற்சாகமே
கிறுக்கலின் இதயத் துடிப்பாய்....!
நன்றி அக்கா...!


- kuruvikal - 03-14-2005

tamilini Wrote:கவிதை கண்டதில் மகிழ்ச்சி.
நன்றே சிறகடிச்சு.. நோக்கிடும் இலக்கை அடைந்திட வாழ்த்துக்கள் குருவிகளே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கவியால் உறவாடி
உணர்வுகள் பகரும் உறவே
உங்கள் ஆசீர்வாதம் பெற்றதில்
மகிழ்ச்சி...!
இதற்கு பரிசாய்
நன்றிகளுக்குள் சுருங்கிடா
எம் மொழிகள்
இருந்தும் வாழ்த்துக்கு
நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 03-14-2005

ஆகா ஆகா ஆகா.. எங்கையோ போய்விட்டீங்க.. கவியால் நன்றியோ.. உங்கள் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- yalie - 03-14-2005

தேவதையாய் அல்ல
சக தோழியாய் என்னருகிரு
தாயவள் பக்கத்துணை போல்
நீ வருவாய் எனும் நினைவிரு
உனக்காய் நானும் வாழ்வதாய்
சத்தியம் கூட வேண்டாம்...
உன் வார்த்தையில்
உன்னளவில் சத்தியம் வை
அது போதும்
நீயும் என் உறவாய்
என்னோடு சிறகடிக்க....! குருவிகளுக்குப் பாட மட்டுமே தெரியும் என்று நினைத்தேன்! நன்றாயிருக்கிறது கவிதை! தேவதைகள் கனவில் மட்டுமே! பக்கத்திலிருக்கும் தோழி மட்டுமே நிஜம். வார்த்தையில் வேண்டாம் சத்தியம். உண்மை அன்பைக் காட்டித் தாயாய் துணையிரு! நன்று! தொடரட்டும் உங்கள் கவிதைகள் குருவிகளே!!


- KULAKADDAN - 03-14-2005

மீண்டும் கவி கண்டதில் மகிழ்ச்சி..........................


- kuruvikal - 03-14-2005

கிறுக்கல் கண்டு கருத்துரைத்த யாழிக்கும்...மகிழ்ச்சி வெளியிட்ட குழைக்காட்டானுக்கும் நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டுமே கிறுக்கல்கள் இங்கு இட வாய்ப்புக்கிடைக்கும்...! ஆனால் இந்தப் பகுதியை தொடர்ந்து சுவாரசியமாக வைத்திருக்க வேண்டியது உங்கள் போன்ற கள உறவுகளின் பொறுப்பு...! எனவே உங்கள் ஆக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இங்கு இட்டு உங்கள் திறமைகளையும் மேன்மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்...! Idea


- Mathan - 03-14-2005

<b>பருவக் கோலம் காட்டி
புத்தி கிறங்கடிக்க எண்ணாதே... </b>

அர்த்தமுள்ள வரிகள். பெரும்பாலும் பருவத்தோற்றமே ஆண் பெண் இடையேயான ஈர்ப்புக்கு காரணமாக அமைகின்றது. அந்த பாலின கவர்ச்சி (infatuation) பின்னர் காதலாக மாறலாம். கவிதைக்கு வாழ்த்துகள் குருவி.


Re: உனக்காயே நான்...! - Mathuran - 03-14-2005

kuruvikal Wrote:நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுத
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் அன்பு மட்டும்
எனைத் தாங்கும் கோலம் கண்டால்
மீண்டும் எழுவேன்...!
வேற்றுமையில்லா உன்னன்பு
போதுமடி என் சிறகுகள் இயங்க....!

தொடர்ந்து பறந்து திரியாது.
கிளைகொப்புகளில் ஆறி விட்டு பறக்கலாமே!
இயலாமயால் இலட்சியத்தை உடைத்துவிடும்,
எண்ணம் தனை மாற்றி விடு.
அன்பிலும் மேலாம் இலட்சியம் என்பதை மற்வாதீர் குரிவிகளே.
வீழ்ந்தாலும் எழுந்து பறக்கும் துணிவினை இலட்சியம் உங்களுக்குத்தரட்டும்.
அதுவரை உங்கள் இலட்சியம் நோக்கிய பறப்பே சிறப்பு.


- kuruvikal - 03-14-2005

உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல மதுரன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மதுரன்...எந்த சாதாரண மனிதனுக்கும் சரி...இலட்சிய மனிதனுக்கும் சரி அன்பு வாழ்வின் ஆதாரம்...அன்பில்லாத சூழலில் உணவு கூடக் கசக்கும்...புசிக்கப் பசி கூட வராது...மனம் வேகும்...வெறுப்புப் பெருகும்...இனம் புரியாது நோய் தொற்றும்...பெற்றோரைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இளைய உறவுகளுக்குத்தான் அன்பின் கனதி அதிகம் புரியும்...சில வேளைகளில் நோய் தீண்ட அன்புக்காக ஏங்கும் நிலையில் இலட்சியம் கூட மறந்து போகும்...வாழ்வின் அர்த்தமே கேள்விக் குறியாகும்...இதையும் தாங்கி இலட்சியத்துக்காய் வாழும் இளையவர்கள் பலர்...இருப்பினும் அவர்களுக்குள் அன்புக்கான ஏக்கங்கள் இல்லை என்று முடிவெடுத்து விடாதீர்கள்...இருக்கு...அது அழிக்கப்பட்டால்...அடையப்படும் இலக்கும் இலட்சியமும் விரைந்ததாகவும் வலிமையானதாகவும் இருக்கலாம்...! அப்படியான ஒரு இளைய பறவையின் குரல் தான் அது....என்று வைத்துக்கொள்ளுங்களேன்...!

அன்பைத் தருவது அம்மாவாக அப்பாவாக சகோதரங்களாக உறவினர்களாக நண்பர்களாக மனைவியாக/கணவனாக காதலியாக/காதலனாக பிள்ளைகளாக எவராகியும் இருக்கலாம்...ஆனால் பெறப்படுவது உண்மை அன்பாக இருக்க வேண்டும்...அதைத் தரவல்லதைத் தேடிப் பெறுவது இலட்சியப் பாதையில் அடையப்படும் பல இலக்குகளில் ஒன்றாக இருக்கட்டுமேன்...! தவறில்லை...அன்பில்லாது நோய் கண்டு உடல் வீழ்ந்த பின்... வாழ்வு ஒடிந்த பின்... இலட்சியம் மட்டும் எப்படி வாழும்...இலட்சியம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு அடையப்பட வேண்டுமே தவிர வரியப்பட்டதாக மட்டும் இருக்கக் கூடாது...! :wink: Idea


- tamilini - 03-14-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 03-14-2005

அழகான கவிதை குருவி அண்ணா.... :wink: :wink: :wink:


- KULAKADDAN - 03-14-2005

Malalai Wrote::wink: :wink: :wink:
,இத பாத்தா எதிர் வழமா சொன்ன மாதிரி கிடக்கு........... :wink:


- Malalai - 03-14-2005

Quote:Malalai எழுதியது:


,இத பாத்தா எதிர் வழமா சொன்ன மாதிரி கிடக்கு...........
அது என்ன எதிர்வழம் குளம் அண்ணா? நீங்க குழப்புறதில மன்னன்....

குருவிஅண்ணாக்கு எனக்கும் இடையில ஆப்பு வைக்கிறிங்களா? அது நடக்காது குளம் அண்ணா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 03-14-2005

ஆப்பு வச்சு பழக்கமில்ல....ஆமா அதென்ன ஆப்பு ........