Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 496 online users.
» 0 Member(s) | 493 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,441
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  சுனாமியால் பாதிக்கப்பட்ட நாய்க்கு உதவ அனுமதி ஆனால்..
Posted by: வியாசன் - 03-16-2005, 11:10 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (12)

கடல்கோளால் பாதிப்புற்ற நாய்களுக்குகூட சர்வதேச சமூகம் உதவலாம் புலிகளுடன் தொடர்பு கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது

ஜே.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீரவன்சகடல்கோளால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சர்வதேச சமூகம் உதவுவதை அனுமதிக்கலாம். ஆனால் பிரிவினைவாத புலிகளுக்கு உதவுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் இணைத்தலைவருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசப்பற்றுள்ள தேச இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் விமல்வீரவன்ச தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சர்வதேச ரீதியில் கிடைத்த நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பான கணக்கறிக்கை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஈழத்தை தோற்றுவிப்பதற்காக பிரபாகரனுக்கு நேரடியாக உதவி வழங்கும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் தகவல்களை திரட்டியுள்ளோம். எதிர்வரும் 21 ஆம் திகதி இதன் பெயர் பகிரங்கப்படுத்தப்படும்.

கடல்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியாது அரசாங்கம் திண்டாடுகிறது என்ற பிரசாரத்தை தமிழ்ச்செல்வன் வெளிநாடுகளில் மேற்கொள்கிறார். அவருடன் இணைந்து குமார் ரூபசிங்இ பாக்கிய சோதி சரவணமுத்துஇ ஜெயதேவ உயன்கொட போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் ஜாம்பவான்களும் அந்நிறுவனங்களும் இதே பிரசாரத்தையே மேற்கொண்டு வருகின்றன.

திருகோணமலையில் யாருக்குமே தெரியாத கேள்விப்படாத பௌத்த தேரர் ஒருவரும் இவர்களின் பிரசாரத்தையே உண்ணாவிரதிகளுடன் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறானவர்களை தமது செயற்பாட்டை முன்னெடுக்க டொலர்களை கொடுத்து என். ஜீ. ஓ.க்கள் வாங்குகின்றன.

இந்த என்.ஜீ.ஓ. மாபியாக் கும்பல் இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு நேரடியாக உதவி வருகின்றன. கடல்கோள் நிதிக்காக கிரிக்கட் போட்டி நடத்தப்பட்டதுஇ வேறு பல விதங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பணம் வந்து குவிந்தன. ஆனால்இ அனைத்தும் மீட்கப்படாத புலிகளின் பிரதேசங்களிலேயே செலவு செய்யப்படுகின்றன.

முன்னைய காலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியில் ஈடுபட்டவர்களும்இ அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து பிரிவினைக்கான சதித்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எனவேஇ இவர்களின் செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்கக்கூடாது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதிக்கு முன்னர் 400 அரசசார்பற்ற நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருந்தன. இன்று அது 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவது தடைசெய்யப்பட்ட நிலையிலும் ஒரு நிறுவனம் "கம்பனி" என்ற பெயரில் பதிவு செய்து பிள்ளைகளை கடத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எல்லே குணவன்ச தேரர்

இலங்கையை ஆட்சி செய்தவர்கள் செய்த தவறுகளால் இன்று எமது நாட்டின் உரிமையாளர்கள் யாரென்பதை கண்டுபிடிக்க முடியாதுள்ளது. கலைஇ கலாசாரம்இ பொருளாதாரம் அனைத்தும் சீரழிந்துவிட்டன. கடல்கோளுக்குப் பின்னர் உதவி என்ற பெயரில் நாட்டிற்குள் புகுந்தவர்கள் நேரடியாக பிரிவினைக்கு உதவி வருகின்றனர். இது தொடர்பான தகவல்களை பகிரங்கமாக வெளியிடுவோமென்றும் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார்.

சுட்டபழம் நன்றி புதினம்

Print this item

  முகத்தாரும் யாழ் வலையில்
Posted by: MUGATHTHAR - 03-16-2005, 10:50 AM - Forum: அறிமுகம் - Replies (48)

எல்லாருக்கும் பெரிய கும்பிபோட்டுக்கிறன்....நேற்றுதான் பேரன் கொம்பிட்டர் பெட்டி ஒன்டை வாங்கிக்கொண்டு வந்தவன்....யாழ்வலையிலை நிறைய சனம் வருகுது எண்டும் சொன்னான் அதுதான் ஒருக்கா தட்டிப்பாப்பம் எண்டு வெளிக்கிட்டனான்....எப்பிடி பிள்ளைகள் சுகமா இருக்கிறியலோ?????

Print this item

  வட்டத்துக்குள் சதுரம்
Posted by: thamizh.nila - 03-16-2005, 06:44 AM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

வட்டத்துக்குள் சதுரம் படத்தில் வரும் "இதோ இதோ என் நெஞ்சிலே" என்ற பாடலில் எம் பீ 3 யாரிடமாவது இருக்கிறதா?

Print this item

  தமிழ் வாசிக்கும் இலவச மென்பொருள்
Posted by: hari - 03-16-2005, 05:50 AM - Forum: கணினி - Replies (9)

தமிழ் வாசிக்கும் இலவச மென்பொருள்

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை நாம் வாசிக்கப் பல மென்பொருட்கள் இருக்கின்றன. உதாரணமாக அடோபி PDF Reader-ன் சமீபத்திய வெளியீடுகள் PDF கோப்புகளை நாம் கேட்கும்படி வாசிக்கும். மைக்ரோசாப்ட் ரீடர் மென்பொருளும் இதுபோன்ற செயல்பாட்டுக்கு உதவுகிறது. MS reader கோப்புக்களாக ஆயிரக்கணக்கான ஆங்கில மின்னூல்கள் வர்ஜினியா பலகலைக்கழக மின்னிலக்கநூலகத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதை கொஞ்ச நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.

தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிக்க இதுபோன்ற வாசிப்பிகள் இல்லாமல் இருந்தது. குறள் சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தற்போதைய குறள் மென்பொருள் தொகுப்பில் உள்ள கவிதை செயலி தமிழை வாசிக்கிறது. இந்தக் "கவிதை செயலி" மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற ஒரு செயலி. தமிழ் வாசிப்பி என்பது இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கிறது. யுனிகோடில் எழுதப்பட்டுள்ளவற்றை அதனால் வாசிக்க இயலவில்லை. ஆனால் TSCII -யில் எழுதப்பட்டுள்ளவற்றை மழலை மொழியில் வாசிப்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. விரும்புபவர்கள் இந்த இலவசச் செயலியை முயற்சித்துப் பார்க்கலாம்.

நன்றி முத்து

Print this item

  புது உறுப்பினர்
Posted by: Raguvaran - 03-16-2005, 03:17 AM - Forum: அறிமுகம் - Replies (28)

Hi, i am new to the site.
would you guys welcome me.

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது - மதன்

Print this item

  ஆட்சிக் கவிழ்ப்பில் மங்கள சமரவீர உடந்தை
Posted by: வியாசன் - 03-16-2005, 01:04 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

ஆட்சிக் கவிழ்ப்பில் மங்கள சமரவீர உடந்தை?: சந்திரிகா அதிரடி நடவடிக்கை!

சிறீலங்கா ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள செயலணி ஒன்று ஊடகத்துறை விடயங்களை கையாளும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகத்துறை அமைச்;சர் மங்கள சமரவீர மற்றும் ஊடகத்துறை அமைச்;சின் செயலர் கணேகொட ஜனாதிபதியின் செயலாளர் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ள இருவரும் இந்த செயலணியில் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ஊடகத்துறை அமைச்;சர் மங்கள சமரவீரவுடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்கவில்லை என தெரியவருகின்றது.

ஊடகத்துறையில் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் பதவி உயர்வுகள் இடமாற்றங்கள் என அனைத்து விடயங்களும் இந்த செயலணியின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்த தகவல்கள் எழுத்து மூல ஆவணமாக ஊடகத்துறை அமைச்;சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான இந்த செயலணி நாளை தனது முதலாவது சந்திப்பை நடத்தவுள்ளது.

ஜனாதிபதிக்கும் ஜே.வி.பியினருக்கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள நிலையில் ஜே.வி.பியினருக்கு சர்பாக செயல்படும் அமைச்;சர் மங்கள சமரவீரவிடம் ஊடகத்துறை அமைச்;சு இருப்பது அரசியல் நலன் சார்ந்த விடயங்களுக்கு பாதகமாக அமையும் என ஜனாதிபதி கருதுவதாகவும் இதனை அடுத்தே இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஜே.வி.பியினர் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டுவர எத்தனிப்பதாகவும் இதற்கு ஊடகத்துறை அமைச்;சின் பங்களிப்பு அவசியம் என்பதால் அமைச்;சர் மங்கள சமரவீரவுடன் நல்லுறவை தொடர்ந்து பேணி வருவதாகவும் வெளியான தகவல்கள் ஜனாதிபதி தரப்பை பீதியடையச்; செய்துள்ளன.

ஆட்சி கவிழ்ப்பு ஒன்று இடம்பெறலாம் எனவும் சில ஊகங்கள் வெளியாகிய நிலையில் ஜனாதிபதி அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் விரைவில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Print this item

  ஞாபகங்களுடன் இன்றும்....!
Posted by: shanthy - 03-15-2005, 11:40 PM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

ஞாபகங்களுடன் இன்றும்....

மீண்டும் சந்திப்பதாய்
ஒரு மாலைநேர
ஈரக்காற்றின் உவர்ப்போடு
அழுததாய் ஞாபகம்.

தாஜ்மகால் பற்றியும்
தலைசிறந்த
காதல் இலக்கியம் தந்த
ஜிப்ரான் பற்றியும்
நிறையவே பகிர்தல்கள்.

ஒரு தாஜ்மகால்
ஒரு முறிந்த சிறகு
எங்களுக்காயும்
எழுதப்படுமெனும்
எண்ணமேயில்லை
கௌரவப் பிரிதலாய் அது
நீண்டதொரு தசாப்தம்
நிறைவாகிறது.

என்றாவது நினைவு வரும்
சிறுவயது ஞாபகம் போல்
எப்போதாவது வந்துபோகும்
ஞாபகங்களுடன் இன்றும்....

காதல் பற்றிய இன்றைய
இளையோர் கருத்துக்களைக்
கேட்கும் நொடிகள் ஒவ்வொன்றும்
காதலென்ற சொல்லுக்காய்
செய்து கொண்ட சத்தியங்கள்
நினைவு இடுக்குகளிலிருந்து
கழன்று விழுகிறது.

காதலின் வலி துயர்
யாவையும் ஒருசேரத்தின்று
தோற்றுப்போன வார்த்தையை
இன்றிந்த இளசுகள்
போற்றவும் பாடவும்......
மெலிதாய் ஒரு சிரிப்பு
முகத்தில் அவிழ்கிறது.

சத்தியம் ää சபதம்
சாத்தியமில்லாக் கனவுகள்
எல்லா மனசிலும்
காதலின் வலி உணர்வாயும்
நினைவாயும் நிசம் உணர
மனம் மறுத்து
நடிப்புகள் மேலாக....

'காதல் ஒருதரம்தான்"
மறுபடி மறுபடி வரும் காதல்
என்பது கவர்ச்சியென்ற
சத்தியங்களெல்லாம்
சாத்தியமில்லையென்றா
சபதமிட....?

12.03.05
....

Print this item

  ஊறுகாய் செய்தல்..!
Posted by: tamilini - 03-15-2005, 10:52 PM - Forum: சமையல் - Replies (15)

ஊறுகாய் செய்யும் முறை சொல்லுறன். நாங்க செய்கிறது தான் தப்பா றைட்டா தெரியாது.

தேவையான பொருட்கள்
தேசிக்காய் -- 10, 20
மிளகாய்த்தூள் - அளவாய்
கொஞ்சம் சரக்கு தூள்
உப்பு
நல்லெண்ணை
வேறை என்ன வாசனைத்திரவியங்கள் போடவிரும்பிறியளோ அதை சரக்கு தூளுடன் அரையுங்கள்

முதல் தேசிக்காயை நாளாக பிளந்து அதனுள் நன்றாக உப்பு தடவி வெயிலில் காய வையுங்கள். வெயில் இங்கு இல்லை என்கிறீர்களா அவனில் நன்றாய் வைத்து அவியவிடுங்கள். நன்றாய் காய்ந்து உப்பு ஊறிய பின் அதை எடுத்து (நன்றாய் காயாவிட்டால் பூஞ்சனம் பிடிச்சிடும்) சரக்கு மற்றும் மிளகாய் எடுத்து நீங்கள் காயவைத்த அளவு தேசிக்காயை பிழிந்து சாற்றை எடுத்து அதனுள் கரையுங்கள். கரைத்துப்போட்டு. காயவைத்த தேசிக்காயை எடுத்து அதனுள் கொட்டி நன்றாய் கலக்குங்கள். அதனுள் உப்பையும் தேவையான அளவு (ஏற்கனவே தேசிக்காயில் உப்பு இருப்பதால் பாத்து அளவாய்) பின்பு கொஞ்ச மிளகாய் எழுத்து அதனை தனியாக அருவள் நொருவளாய் அரையுங்கள். கொஞ்ச நல்லெண்ணையையும் கொதிக்க வைத்து அதையும் ஊற்றி நன்றாய் கிளறி. மசிச்சு சூடு எல்லாம் ஆறியபின்னர். அதை போத்தல் அல்லது கூஜாவில் போட்டு நன்றாய் மூடிவிடுங்கள். அதன் பின் ஒரு சில வாரங்களிற்கு திறந்து பார்க்காதீர்கள். நன்றாய் ஊறி ஊறுகாய் ஆனபின் எடுத்து சரப்பிடுங்கள். அதிகமாய் செய்யாதீங்க அப்புறம் சக்குப்பிடிச்சிடும். நம்ம ரெசபியாச்சா அது தான்.

இன்னொரு முறை என்னவென்றால் தேசிக்காயை வெட்டி கொஞ்ச தண்ணீர் விட்டு நன்றாய் அவிய விடுங்கள் அவிந்த பின்னர் வழமையான முறையில் செய்யுங்கள். செய்து பாத்துவிட்டு ஒரு பாட்டில் நமக்கும் அப்படியே.. :wink:

Print this item

  மாற்று கருத்தா அல்லது மட கருத்தா?
Posted by: Mathan - 03-15-2005, 05:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

மடத்தனமாய்..


எனக்கு உடன்பாடில்லாத எழுத்துக்களையும் கருத்துக்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் பெரும்பாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.

ஆயினும் அக்கருத்தின் தர்க்கவியல், அவ்வாறான ஒரு கருத்து தோன்றுவதற்கு காரணமாயிருந்த சிந்தனை இவற்றை ஆராய்வதுண்டு.

இவையே அக்கருத்துக்களின் சொந்தக் காரர்கள் மீது எனக்கு தனியான எந்த வெறுப்புணர்வும் தோன்றாமல் விடுவதற்குரிய காரணங்களாக இருக்கின்றன.

இதற்கப்பால் இன்னுமொருவகையான கருத்துக்களையும் எழுத்துக்களையும் நான் எதிர் கொள்வதுண்டு.

எழுதுகின்ற தங்களையும் சரியான மடையன்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டி அதை வாசிப்பவர்களையும் மடையர்களாக்கி எழுதுபவர்கள் மீது முழுதும் வெறுப்பே எஞ்சி நிற்கிறது.

தினக்குரல் பத்திரிகையில் வெளிவருகின்ற சிங்கள நாளேடுகளில் இருந்து என்னும் ஒரு பகுதி!

அதனை ஆரம்ப காலங்களிலிருந்தே வாசிப்பது வழமை. தமிழர் போராட்டம் அது சார்ந்த நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள இனவாதப் போக்கு என்ன கருதுகிறது என்பதனை அறிய அந்தப் பகுதி வழியாயிருந்தது.

சிங்கள இனவாத பத்திரிகையில் எழுதுபவர்கள் எதுவும் தெரியாத மடையர்கள் என்கிற கருத்து எனக்குள் மெல்ல மெல்ல உருவாகி இப்பொழுது முழுவதுமாக உறுதியாகி விட்டது.

அண்மைக் கால உதாரணங்கள் சிலவற்றைப் பாருங்கள்.

சுனாமியின் தாக்குதலுக்குப் பின் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தியொன்று கிளம்பியிருந்தது.

அத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்பதே அது!

எல்லா இனவாத சிங்கள பத்திரிகைகளும் உள்ளிருந்து பார்த்தது போல எழுதத் தொடங்கின.

கருணாவின் தகவலின்படி புலிகளின் தலைவர் இருக்கின்ற இடம் சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளான இடம் தான். அவர் மீண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவை எழுதின.

புலிகளும் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விட அந்த இனவாதக் காகிதங்களுக்கு குஷி தாங்க முடியவில்லை. தாம் என்ன நடக்க வேணும் என்று எதிர் பார்க்கிறார்களோ அது நடந்தது போலவே எழுதிக் கிழித்தன.

அந்த மேசைப் பத்திரிகையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே எங்கோ முல்லைத் தீவில் நடந்திருக்க கூடிய சம்பவத்தை பக்கத்தில் நின்று பாத்து எழுதினர்.

சில காலத்தின் பின்னர் சுனாமி மீள் கட்டுமானம் குறித்து புலிகளின் தலைவர் வெளிநாட்டு தமிழ் அறிஞர்களைச் சந்தித்தமை குறித்த செய்தியும் படங்களும் வெளிவந்த போது உண்மையில் அந்தப் பத்திரிகைகள் ஆற்றாமையினால் வெம்பியிருக்க வேண்டும்.

ஆனாலும் அவர்களுக்கு மீசையில் மண் ஒட்டவே இல்லை!

அந்தப் புகைப்படத்தில் இருப்பது பிரபாகரன் இல்லை. அவர் போலத் தோற்றமுடைய இன்னொருவர். என்று அவை செய்தி எழுதின.

இனி இல்லை என்று சொல்லக்கூடிய மடத்தனத்தில் அந்தச் செய்திக்கு அவை சொல்கின்ற காரண காரியங்கள் இருந்தன.

அதாவது

உண்மையில் பிரபாகரன் இறந்து விட்டார். கிட்டத் தட்ட அவரைப் போல இருக்கின்ற 6 பேரை பொட்டம்மான் தெரிவு செய்து பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்து உரு மாற்றியிருக்கிறார். வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் வரும் போது அவர்களோடு எப்படி பேசுவது என்பதை பொட்டம்மான் நெறிப்படுத்துகிறார்.

இதனாலேயே அடிக்கடி பிரபாகரன் மீசையோடும் மீசையற்றும் தோன்றுகிறார். அது தவிர இறந்து போன புலிகளின் தலைவருக்கு கையில் ஒரு பெருவிரல் இல்லை. ஆனால் தற்போதுள்ளவருக்கு அது இருக்கிறது. ஆக மொத்தத்தில் புலிகளின் தலைவர் சுனாமியில் இறந்து விட்டார்.
என அந்த பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இன்று வரைக்கும் அதையே எழுதி வருகின்றன.

உண்மையை சொல்லுங்கள். இது ஒரு மாற்றுக் கருத்து. அதனைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்களும் நினைக்கிறீர்களா?

அண்மையில் கௌசல்யன் கொலை குறித்த ஒரு கற்பனை ஆக்கத்திலும் தலைவர் இப்போது இல்லை. ஆகவே நீ எங்களோடு வந்து இணைந்து விடு என கருணா தரப்பிலிருந்து கௌசல்யனைக் கேட்டதாக எழுதியிருக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களுக்கும் மடத்தனமான கருத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தில் இது இரண்டாவது வகை.

---மாற்றுக் கருத்துக்களை காது கொடுத்து கேட்கின்ற அதே வேளை அந்தக் கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்துக்களேயாதலால் அவையும் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும்.

மாற்றுக் கருத்துக்களில் இருக்கின்ற நியாயத் தன்மையை உணர்ந்து கொள்கின்ற அதே வேளை அந்த கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்தக்களேயாதலால் அவற்றில் உள்ள நியாயத் தன்மையும் உணர்ந்து கொள்ளப் பட வேண்டும்---

நான் சொன்ன வடிகட்டின மடைத்தனமான கருத்துக்களை எழுதி தங்களையும் பேயன்களாக்கி வாசிக்கிறவர்களையும் விசரர் ஆக்க முயற்சிக்கிற பத்திரிகைகளை நினைத்தால் கோபம் வருகிறது.

அதை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்களை நினைத்தால் கவலை வருகிறது.

பின்குறிப்பு: நடப்பது யுத்தம்! இதிலே இவ்வாறான கருத்துக்கள் வருவது சகஜம் தானே. புலிகள் மட்டும் இப்படி எழுதியதே இல்லயா என்று யாராவது கேட்டுப் பின்னூட்டம் இடுவார்களோ தெரியவில்லை.

நன்றி - சயந்தன்/சாரல்

Print this item

  ரெலிகொம் நிறுவனத்தின் இலவச இன்ரநெற் சேவை
Posted by: thivakar - 03-15-2005, 12:03 PM - Forum: இணையம் - Replies (2)

<b>ரெலிகொம் நிறுவனத்தின் இலவச இன்ரநெற் சேவை </b>

ஷ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் இலங்கையில் இன்ரநெற் பாவனையை அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறு இலவச இன்ரநெற் சேவைகளை தற்போது வழங்குகின்றது.

இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை புதிதாக இன்ரநெற் வசதிகளை பெற பதிவு செய்வோருக்கே இச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன. மாணவர்களுக்கும் தொழிற்துறையினருக்குமென விசேடமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்போது இ-மெயில், இ-பெக்ஸ் உட்பட கல்வி, வணிக துறை சார்ந்த பல விடயங்கள், இலவச சேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறிப்பிட்ட காலத்தில் பதிவுகளை மேற்கொள்வோருக்கு ஆரம்ப கட்டணம், இணைப்புக் கட்டணம் மார்ச் மாதத்திற்கான வாடகைக் கட்டணம் என்பன அறவிடப்படமாட்டாது என்பதுடன் பிற பல சலுகைகளும் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினக்குரல்

Print this item