![]() |
|
ஞாபகங்களுடன் இன்றும்....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஞாபகங்களுடன் இன்றும்....! (/showthread.php?tid=4756) |
ஞாபகங்களுடன் இன்றும்....! - shanthy - 03-15-2005 ஞாபகங்களுடன் இன்றும்.... மீண்டும் சந்திப்பதாய் ஒரு மாலைநேர ஈரக்காற்றின் உவர்ப்போடு அழுததாய் ஞாபகம். தாஜ்மகால் பற்றியும் தலைசிறந்த காதல் இலக்கியம் தந்த ஜிப்ரான் பற்றியும் நிறையவே பகிர்தல்கள். ஒரு தாஜ்மகால் ஒரு முறிந்த சிறகு எங்களுக்காயும் எழுதப்படுமெனும் எண்ணமேயில்லை கௌரவப் பிரிதலாய் அது நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது. என்றாவது நினைவு வரும் சிறுவயது ஞாபகம் போல் எப்போதாவது வந்துபோகும் ஞாபகங்களுடன் இன்றும்.... காதல் பற்றிய இன்றைய இளையோர் கருத்துக்களைக் கேட்கும் நொடிகள் ஒவ்வொன்றும் காதலென்ற சொல்லுக்காய் செய்து கொண்ட சத்தியங்கள் நினைவு இடுக்குகளிலிருந்து கழன்று விழுகிறது. காதலின் வலி துயர் யாவையும் ஒருசேரத்தின்று தோற்றுப்போன வார்த்தையை இன்றிந்த இளசுகள் போற்றவும் பாடவும்...... மெலிதாய் ஒரு சிரிப்பு முகத்தில் அவிழ்கிறது. சத்தியம் ää சபதம் சாத்தியமில்லாக் கனவுகள் எல்லா மனசிலும் காதலின் வலி உணர்வாயும் நினைவாயும் நிசம் உணர மனம் மறுத்து நடிப்புகள் மேலாக.... 'காதல் ஒருதரம்தான்" மறுபடி மறுபடி வரும் காதல் என்பது கவர்ச்சியென்ற சத்தியங்களெல்லாம் சாத்தியமில்லையென்றா சபதமிட....? 12.03.05 .... - KULAKADDAN - 03-15-2005 அக்கா அருமை...... Quote:காதலின் வலி துயர் நல்ல வரி ஆமா உண்மையிலுமப்படியா............ - tamilini - 03-15-2005 Quote:'காதல் ஒருதரம்தான்" நல்ல கவிதை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- yalie - 03-16-2005 மிகவும் நன்றாயிருக்கிறது கவிதை! தொடருங்கள் சாந்தி! முதல் வார்தை வாசிக்கும் போது தாயகத்தில் நிற்பதாய்....ஒரு உணர்வு!! ------சத்தியம் சபதம் சாத்தியமில்லாக் கனவுகள் எல்லா மனசிலும் காதலின் வலி உணர்வாயும் நினைவாயும் நிசம் உணர மனம் மறுத்து நடிப்புகள் மேலாக.... அனேகமாக காதலின் பிரிவைப்பார்த்த அனைவருக்கும் பொருந்தும் வசனங்கள்!! - hari - 03-16-2005 மிகவும் நன்றாயிருக்கிறது கவிதை! வாழ்த்துக்கள அக்கா! Re: ஞாபகங்களுடன் இன்றும்....! - Thusi - 03-16-2005 shanthy Wrote:'காதல் ஒருதரம்தான்" சத்திய வரிகள். அண்மையில் படித்த பிடித்துப் போன வரிகள்: [size=18]"சாதல் சாதாரணம், காதல் சதாரணம்"
- kavithan - 03-19-2005 வாழ்த்துக்கள் சாந்திஅக்கா மீண்டும் யாழ் களத்தில் உங்கள் கவிதை மலர்வதை இட்டு மகிழ்ச்சி. தொடர்ந்து மலரவேண்டும் என்பதே என் விருப்பம் - shanthy - 03-20-2005 கருத்துத் தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். - shanthy - 03-20-2005 [quote="KULAKADDAN"]அக்கா அருமை...... [quote] காதலின் வலி துயர் யாவையும் ஒருசேரத்தின்று தோற்றுப்போன வார்த்தையை இன்றிந்த இளசுகள் போற்றவும் பாடவும்...... மெலிதாய் ஒரு சிரிப்பு முகத்தில் அவிழ்கிறது. [/quote] [quote]நல்ல வரி ஆமா உண்மையிலுமப்படியா............[/[/quote]quote] <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: ஞாபகங்களுடன் இன்றும்....! - shiyam - 03-20-2005 Quote:சத்தியம் சபதம்<img src='http://img83.exs.cx/img83/1201/2328100g19yo.gif' border='0' alt='user posted image'> - shanmuhi - 03-21-2005 மீண்டும் யாழ் களத்தில் உங்கள் கவிதை மலர்வதை இட்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்களும்... |