Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 665 online users.
» 0 Member(s) | 661 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,443
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,679
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  தமிழ் மழை பெய்யாதோ? -அ.இரவி-
Posted by: Thaya Jibbrahn - 03-19-2005, 01:25 PM - Forum: சினிமா - Replies (9)

இப்பொழுது ஓர் இடர் தமிழ்நாட்டு தமிழ்த்திரை உலகை இம்சைப்படுத்துகின்றது. அதனை நச்சுச்சுழல் என்றும் சொல்லலாம். அது என்னவெனில் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தலைப்பு இடுவது. மற்றும் ஆங்கிலச் சொற்கள் அதிகம் கலந்து தமிழ்த் திரைப்படப் பாடல்கள் இயற்றுவது.

சினிமா (Cinema) என்கின்ற சொல் தமிழ் அல்ல. சினிமா தமிழ் பண்பாட்டினுள் புகுந்தபோது அதற்குத் தோதாக தமிழில் சொல் கிடைக்கவில்லை. தமிழாக நாம் அடையாளம் காணக்கூடிய ஏனைய மொழிச் சொற்களிலும் கூட (ஞானம் போன்ற) சினிமாவுக்கு நெருங்கி வரத்தக்க சொல் ஏதும் இல்லை. அது இருபதாம் நூற்றாண்டின் தொழில் நுட்பக்கலை. சினிமா தமிழினுள் வரும்போது தமிழும் தன்னைத் தயார்ப்படுத்தி அதனை எதிர்கொள்ள முயன்றது. ஒத்துவரக்கூடிய ஓரளவுக்கு பொருள் பொருந்தி வரக்கூடிய சொல்லை சினிமாவுக்கு இட்டுப் பார்த்தது. சினிமாவை திரைப்படம் என்றது. திரையில் தெரியும் படம் என்பதுதான் அதன் விளக்கம்.

அது மிகப்பொருத்தமானது தானா? இல்லை என்று நாம் மறுக்கää இன்னும் உதாரணங்கள் உள்ளன. றெயினை (Train) புகையிரதம் என்று முதலில் சொன்னோம். நெற்றியில் குழாய் வைத்து புகை கக்கியதால் அது சரி. ஆனால் இப்பொழுது இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று ஏனைய வாகனங்களும் புகை கக்குகின்றனவே! அப்படியானால் அவை புகையிரதம் இல்லையா? இரண்டு றெயின் (Train) மின்சாரத்தில் ஓடுகின்றபோது புகை கக்கவில்லையே! அங்ஙனமாயின் புகையிரதம் என்று சொல்லுதல் முறைதானா? அப்படிப் பார்க்கின்றபோது றெயினுக்கு தொடரூந்து என்ற சொல் ஓரளவு பொருந்தி வருகின்றது இல்லையா? ஓம்தான் எனில் ட்ராம் (Tram) வாகனத்தை என்ன பெயர் கொண்டு அழைப்போம்? இப்படி இன்னும் இன்னுமென்று கேள்விகள் உள்ளன.

மொழி என்பது கணிதம் போல நிறுவப்பட்ட ஒன்றல்ல. விஞ்ஞானம் போல-காரிய காரணத்தொடர்பு கொண்ட விளக்கமும் அல்ல. மொழி மாற்றம் பெற்றுக்கொண்டே இருப்பது. கொள்வனவும் செய்கின்றது. கொடுப்பனவும் செய்கின்றது. வாங்கியும் வளம் பெறுகின்றது வழங்கியும் வளம் பெறுகின்றது. இவைதாம் சரியெனில் வேற்று மொழிப் பண்பாடு கலை தொழில்நுட்பம் இன்னோரன்னவை நம்மொழியில் புகும்போது நம்மொழி அவற்றை இருகரம் நீட்டி வரவேற்பது மாத்திரமல்ல அவற்றை நம் மொழிப் பண்பாட்டுக்குத் தோதாக மாற்றுவது மகாமுக்கியம்.

அத்துடன் நம்மொழியில் அதன் பொருள்படும் சொல்லைக் கண்டுபிடித்தலும் முக்கியம்;. இல்லையோää பிறமொழியில் இருந்து இரந்து கடன் கேட்போம். உவந்து தரும் ஏனைமொழி. இல்லையென்றுää தனித்தமிழ்தான் முக்கியமென்று ஹஜ்ஜுப் பெருநாளை கச்சுப்பெருநாளாக்கி (இடைக்கச்சா மார்புக்கச்) மொழியையும் இனத்தையும் உணர்வையும் கொச்சைப்படுத்துதல் மகாகுற்றம். தமிழ் வளமான மொழி அல்ல என்று யாருமே சொல்லமுடியாது.

எல்லா மதத்தவர்களும் தானே ஆண்டவனைத் தொழுகிறார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு மாத்திரம்தான் 'தொழுகையைக் கொடுத்துவிட்டு மற்றவர்களை வணங்க விட்டது தமிழ். தலைவர் இருக்கும் இடம்தான் கோயில் என்றாலும் அதை இந்துக்களிடம் கொடுத்துவிட்டு தேவனின் ஆலயம்-தேவாலயம் என்று அதை கிறீஸ்த்தவர்களிடம் விட்டது தமிழ். அந்நியராக வந்து ஆக்கிரமித்தவை தாம் என்றாலும் மத உணர்வையும் மதப் பண்பையும் மதித்தது தமிழ்.

இஃது இவ்வாறிருக்க தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத் தலைப்புத்தான் வைப்போமென்று அடாவடித்தனம் புரிகின்றார்களே சிலர்! இது என்ன நியாயம்? இது எதில் சேர்த்தி? சிலர் திரைக்கதையின் தேவை கருதி நியாயப்பாடு கருதி வைக்கிறார்கள். உலகம் முழுவதுமே அவ்வாறு நிகழ்வதுண்டு. தமிழில் மிகச் சமீபத்திய உதாரணம் வேண்டுமென்றால் சேரனின் 'ஆட்டோகிராப்" என்னும் தலைப்பினைக் கூறலாம்.

சேரன் இந்தத் தலைப்பினை தனது திரைப்படத்துக்கு இட்டபோது சக இயக்குனரும் தமிழ்மொழிப் பற்றாளருமான தங்கர் பச்சான் (அழகி சொல்ல மறந்தகதை தென்றல் இயக்குனர்) 'ஞாபகக்கையெழுத்து" என்று பெயர் சூட்டலாமே எனக் கேட்டுள்ளார். திரைக்கதைக்குப் பொருத்தமானதும் அனைவருக்கும் புரியும் என்பதும் சேரனின் உடனடிப் பதில். இந்தப் பதிலில் ஓரளவு நியாயப்பாடு இருப்பதனை நாம் புரிந்துகொள்ளலாம்.

தீவிர இனப்பற்றாளராக தன்னை இனம் காட்டிக்கொள்ளும் நடிகர் கமல்காசன் கூட தனது 'மும்பை எக்ஸ்பிரஸ்" என்னும் ஆங்கிலத் தலைப்பிட்ட திரைப்படத்திற்கு அதே காரணத்தையே சொல்கின்றார். இவையெல்லாம் எப்போது ஏற்றுக்கொள்ளப்படுமெனில் எல்லாம் சரியாக நிகழும்போது. யாவும் உண்மையாக இருக்கும்போது. செயலில் நேர்மை தெரியும்போது. அப்போது மாத்திரமே. என்ன நிகழ்கின்றதென்றால் ஆங்கிலத் தலைப்பிடுவதை ஒரு மோடி (குயளாழைn) யாக நினைத்து விடுகின்றோம்.

அவ்வாறு தலைப்பிட்டால்தான் படம் 'பிய்ச்சுக்கிட்டு" ஓடும் என்று அசட்டு நம்பிக்கை வேறு. மற்றும் தமிழ்மொழி மீதான தீராக்காதல் கொள்ளாதவர்கள் இவர்கள். சுருக்கமாகச் சொன்னால் 'யாவாரிகள்" இதைத்தான் செய்வார்கள். ஆங்கில மோகம் என்பது நமது தாழ்வுச் சிக்கலையே காட்டுகின்றது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளம் கர்நாடகா ஆந்திரப்பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களில் ஆங்கிலத் தலைப்பிட்ட திரைப்படங்கள் இல்லையென்றே சொல்லலாம். இன்னும் சொன்னால் வேற்றுமொழித் தலைப்பிற்கு அவர்கள் எதிராகவே இயங்குகிறார்கள்.

ஆனால் சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி தமிழ்த்திரைப்படங்களுக்கான தலைப்பில் சுமார் எழுபது வீதமானவை ஆங்கிலத்தில் அமைந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நம்மூர்க் கவிஞரான சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஒரு கவிதைதான் இப்போது என் ஞாபகத்தில் வருகின்றது.

'எங்கள் ஆணுடம்பு ஏன் எழுவதில்லை எங்கள் யோனிகளில் ஏன் அரிப்புக் குதிர்வதில்லை இன்றைய பேப்பரைப்பார் எகிப்தின் தெருக்களிலே... என்று போகிறது அந்தக் கவிதை. அதாவது எகிப்தில் அதிகாரத்தின் அட்டூழியம் கண்டு மக்கள் கிளர்ந்தெழும்போது இங்கு நாம் அதிகாரத்தின் அட்டூழியம் கண்டும் வாளாவிருக்கின்றோம் என்பதைச் சொல்ல வந்தது இந்தக் கவிதை. இதையே தமிழ்நாட்டுச் 'சனங்களும்" செய்கிறார்கள் என்னும் ஆதங்கத்திலேயே இக்கவிதை இங்கு குறிக்கப்பட்டது.

எல்லா மக்களையும் இங்கு நாம் குறிப்பிடவில்லை. பெரும்பாலானோர் என்கின்றோம். ஆங்கில மோகம் அதை ஊதி வளர்க்க பிராமணிய சக்திகள் அடிமை மனோபாவம் அசண்டையீனம் என்னும் காரணங்கள் தமிழ்த்திரைப் படங்களுக்கு ஆங்கிலத் தலைப்பிடும் ஊக்கத்தைக் கொடுக்கின்றது. இதை எதிர்த்து உணர்வு மிக்க தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் போராட வேண்டும். அவர்கள் போராடாதபோதுதமிழின உணர்வாளர்கள் போராட்டத்தைக் கையில் எடுப்பது தவிர்க்க முடியாதது.

மத்திய அரசு இந்தியைத் திணிக்க அதை எதிர்த்து போராடுவது சரியெனில் இதுவும் மெத்தச் சரியே. படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுதல் தவறென்போருக்கு பதில் சொல்லல் இங்கு அவசியமில்லை. தமிழ்மொழி மூலத் திரைப்படம். தமிழர் வாழ்வைச் சொல்லும் திரைப்படம். தமிழர்களைப் பார்வையாளர்களாகக் கொண்ட திரைப்படம். மொத்தத்தில் தமிழ்த்திரைப்படம். இதற்கு ஆங்கிலத்தில்தான் தலைப்பிடுவேன் என அடாவடித்தனம் புரிவதன் பெயர் படைப்பாளியின் சுதந்திரம் தானென்றால் அதில் உணர்வாளர்கள் யாரும் தாராளமாகத் தலையிடலாம். அதுவென்ன தமிழ்த் தேசிய அரசியலை கிண்டல் செய்து தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் திரைப்படங்கள் தயாரிக்கலாமென்றால் (பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை மணிரத்தினத்தின் இருவர் ஆயுத எழுத்து இன்னும் பல) தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் தமிழ்த்தேசிய எதிர்ப்புணர்வைக் கேள்வி கேட்டு போரில் இறங்குவதில் என்ன தவறு கண்டீர்?

இறுதியாக ஒன்று சொல்லலாம்: திரைக்கதைக்கு ஏற்ப தமிழில் பொருத்தமான தலைப்பு கிடையாது என்போருக்காக. ஜெயராஜ் என்கின்ற மலையாளத் திரைப்பட இயக்குனர் 'கருணம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி உலகத்திரைப்பட விழாவில் முதலாம் திரைப்படத்திற்கான தங்கமயில் விருது பெற்றவர். அவர் சொல்கின்றார் அதை என் மொழியில் சொல்கின்றேன். தமிழ் மிக வளமான மொழி. மொழிப்பஞ்சம் கிடையாது மலையாளத்தில் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பிடுவது என்றால் அதற்குப் பொருத்தமான சொல்தேடி அலைய வேண்டும்.

எனக்குப் பல மொழி தெரியும். அதனால் சொல்கின்றேன். தமிழில் அம்பாரம் சொற்கள் குவிந்துள்ளன. உதாரணத்திற்கு மற்றயை மொழிகளில் மழை பெய்கிறது அவ்வளவும்தான். தமிழில் மழை என்ன செய்கிறது? மழை-பெய்கிறது பொழிகிறது கொட்டுகிறது சிணுங்குகிறது சீறுகிறது துமிக்கிறது தூவானமிடுகிறது தூறுகிறது தெறிக்கிறது அடிக்கிறது சாரல் தெறிக்கிறது.

ஒரு மழை பெய்யும் விதத்தில் உள்ள வகைகளுக்கேற்ப தமிழில் சொற்கள் உள்ளன. அதன் மொழியும் கூட கவித்துவமான மொழி. 'தூறல் நின்னு போச்சு" என்பது தமிழின் ஒரு திரைப்பட தலைப்பு. எவ்வளவு கவித்துவமான தலைப்பு. தமிழில்தான் இப்படியெல்லாம் தலைப்பு வைக்கமுடியும். இது மலையாள இயக்குனர் ஜெயராஜ் சொன்னது என்றால் ஆங்கிலத் தலைப்பு இடுவோருக்கு இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை.

'ப்ரென்ட்ஸ்" என்று தமிழ்த்திரைப்படம் ஒன்றிற்குப் பெயர் வைக்கிறார்கள். அதற்கு தமிழில் பொருத்தமான தலைப்பு இல்லையா? 'நிய10" என்கின்ற ஆங்கிலத் தலைப்புக்கும் அந்தத் தமிழ் திரைப்படத்துக்கும் என்ன சம்பந்தம்? இன்னும் நிறையக் கேள்விகள் கேட்கலாம். கிழிய கிழியக் கேட்கலாம். விடுவோம். இவர்களெல்லோரும் தானாகத் திருந்தவேண்டும். இல்லை தடியெடுத்தால்தான் திருந்துவோம் என்றால் தடியெடுக்கவும்தான் வேண்டும். தடியெடுக்க வேண்டியவர்கள் தமிழர்கள். அவ்வளவும்தான் சொல்வேன்.
- அ.இரவி-

நன்றி: ஈழமுரசு


சுடுவதில் உதவி; தமிழ்நாதம்.கொம்.

Print this item

  காட்சியும் கானமும் - 1 [ தடம் மாறிய காதல் பயணம் ]
Posted by: kavithan - 03-19-2005, 12:50 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (23)

<b>[size=18]கவிதைத்தோட்டத்தில் இன்று புதிதாக மலர்வது காட்சியும் கானமும்.

[b]பதினைந்து நிமிட நேர ஒலிப்பதிவு நிகழ்ச்சி, உங்களுக்காக முதலாவது காட்சியும் கானமும் ஆகா கவிதைத்தோட்டத்தில் மலர்வது


[b]எழுத்துருவாக்கம் :- எழிலன்
குரல்வடிவம்:- தென்னவன், உமா


[b]இதோ இணைப்பு.......</b>


http://kavithan.yarl.net/

இது குறித்த உங்கள் கருத்துக்களை கூறுங்கள் .

Print this item

  தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஏமாற்றி நிதிமோசடி
Posted by: eelapirean - 03-19-2005, 07:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஏமாற்றி நிதிமோசடி
செய்தமையை ஒத்துக்கொண்ட நபர் விடுதலை
மோசடி நிதியை மீள வழங்கவும் இணக்கம்

(த.தர்மாஇ ரி.வில்சன்)

தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஏமாற்றி நிதி மோசடி செய்ததாக கூறி பொலிஸாரிடம் சரணடைந்த எம்.பயாஸ் என்ற நபரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

மோசடியாக பெறப்பட்ட 4000 அமெரிக்க டொலர்களை தமிழர் புனர்வாழ்வு கழகத்திடம் ஒப்படைப்பதாக நீதிமன்றத்தில் உறுதியளித்ததையடுத்தே அவர் விடுவிக்கப்பட்டார்.

வடக்குகிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்க பால்டிமோர் தேவாலயத்தால் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதில் உதவிய போதே பதிவு செய்யப்பட்ட முகவரான தான் இம் மோசடியை புரிந்ததாக நீதிமன்றில் தெரிவித்து மோசடியாக பெறப்பட்ட பணத்தை மீள ஒப்படைப்பதாக நீதிவானுக்கு கூறினார்.

இதையடுத்தே கொழும்பு பிரதான நீதிவான் சரோஜினி குசல வீரவர்தன மேற்படி நபரை வழக்கிலிருந்து விடுவித்தார்.

ஆனால் இந்நிதி மோசடி குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி எதிர்வரும் 30ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இவ்விசாரணையின் போது தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஆஜரானார்.


--------------------------------------------------------------------------------
சுட்டது லீரகேசரி

Print this item

  இரவில் உலகம் எப்படி இருக்கும்?
Posted by: vasisutha - 03-19-2005, 03:13 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (15)

இரவில் உலகம் எப்படி இருக்கும்?

இதோ நாசா எடுத்த புகைப்படம்.
சில நாடுகளில் இரவாக இருக்கும் சில நாடுகளில் பகலாக
இருக்கும் எனவே தனித்தனியாக ஒவ்வொரு கண்டத்தையும்
இரவில் எடுத்து பின்னர் இணைத்துள்ளனர்.
அதிக வெளிச்சமாக உள்ள இடங்கள் நகரங்களாகவும்
இருட்டான பகுதிகள் காடுகளாவும் வயல்களாவும்
இருக்கின்றன.

<img src='http://img69.exs.cx/img69/8657/earthlights33xx.jpg' border='0' alt='user posted image'>

A map of the night-time city lights of the world constructed from images taken by the Defense Meteorological Satellite Program's Operational Linescan System.

படத்தை இன்னும் பெரியதாக பார்க்க சிறிய படத்தில் Click செய்யுங்கள்..

<img src='http://img94.exs.cx/img94/5967/earthlights2dmspbig7oa.th.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  புளொட் உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இளைஞர் காயம்
Posted by: வியாசன் - 03-18-2005, 10:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

புளொட் உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இளைஞர் காயம்

மட்டக்களப்பு சேத்துக்குடா பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இன்று மாலை புளொட் உறுப்பினர் ஒருவரின் துப்பாக்கிச்; சூட்டிற்கு இலக்காகி 22 வயது இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீச்;சுக் கல்முனையைச்; சேர்ந்த ஜெயராஜா ராஜூ என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு வைத்தியசாலை சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தொழில் புரிந்து வருகின்றார்.

வைத்தியசாலையிலிருந்து தனது வீட்டிற்கு துவிச்;சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

இந்த இளைஞர்களில் ஒருவர் புளொட் அமைப்பைச்; சேர்ந்த அலன் என படுகாயமடைந்த இளைஞர் அடையாளம் கண்டுள்ளார். மட்டக்களப்பு விமானப்படை முகாம் பாதுகாப்பு வலயத்தை ஒட்டிய பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட்டபழம்

நன்றி புதினம்

Print this item

  கிளிநொச்;சி திரும்பினர் குவேனி உள்ளிட்ட 3 போராளிகள்!
Posted by: வியாசன் - 03-18-2005, 10:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கிளிநொச்சி திரும்பினர் குவேனி உள்ளிட்ட 3 போராளிகள்!

கொழும்பிலுள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்;சை பெற்று வந்த விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி உட்பட மூன்று பெண் போராளிகளும் இன்று மாலை கிளிநொச்;சி திரும்பினர்.

சிறீலங்கா போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் கிளிநொச்;சி திரும்பிய இவர்களுக்கு ஓமந்தை வரை இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.

கடந்த மாத இறுதியில் அக்கரைபற்று - பொத்துவில் வீதியில் ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்த போது தம்பட்டையில் இனந் தெரியாத நபர் ஒருவரினால் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனி துணை பொறுப்பாளர் அகநிலா மற்றும் சசிமதி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சுட்டபழம்
நன்றி புதினம்

Print this item

  ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம்
Posted by: eelapirean - 03-18-2005, 06:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம் - 11
'இரண்டாவது அலை அடிப்பதற்கிடையில்
ஐம்பது பேருக்கு மேல் மீட்டுவிட்டோம்"
-அ.லோகீசன்-

ஆழிப் பேரலைகள் முல்லையில் ஏற்படுத்திய கோரத்தில் சிக்கி உயிர் தப்பிய ஒருவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபொழுது அவர் எங்களுக்கு ஒரு போராளியைப் பற்றி எங்களிடம் கூறினார். கடல் அலை குமுறி அடித்து வந்துகொண்டிருந்தபொழுது அந்தப் போராளி அதில் சிக்கித் தவித்தவர்களை மீட்டுக்கொண்டிருந்தார். ஆவரைச் சந்தித்தீர்கள் என்றால் நிறையவே அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றார். அதன்படி அந்தப் போராளியைச் சந்தித்தோம். அவர் எங்களுடன் பகிர்ந்தவற்றை உங்களுக்காகத் தொடர்கிறோம்.




தமிழீழ கடற்படை அரசியல் போராளி அரவிந்தன்


கடல் புவி நடுக்கத்தால் எழுந்த பேரலைகள் முல்லைத்தீவைத் தாக்கிய வேளை கடற்கரைக்கு அண்மையில் இருந்த தமிழீழ கடற்படை அரசியல் அலுவலகத்தில் இருந்து உயிர்தப்பிய அதேவேளை அலையுடன் அடிபட்டுப்போய்க்கொண்டிருந்த பலரை மீட்டு உயிர்காத்த தமிழீழ கடற்படை அரசியல் போராளி அரவிந்தன் தான் நேரில் பார்த்தவற்றையும் தனது மீட்பு அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.

நானும் இன்னும் ஒரு போராளியும் எங்கள் முகாமில் இருந்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று கடற்பக்கமாக பெரும் சத்தம் ஒன்று கேட்டது. சத்தத்தைக் கேட்டதும் நாங்கள் வெளியே வந்து பார்த்தோம்.வெளியே வரும்போது ஒன்றும் தெரியவில்லை. மரங்களும் கட்டடங்களும் விழுந்துகொண்டிருந்தது.

~அப்போது கடல் வருகுது 'எங்களைக் காப்பாற்றுங்கோ காப்பாற்றுங்கோ" என்று கத்திக்கொண்டு எங்கள் முகாமுக்கு முன்னால் உள்ள வீட்டுக்காரர் ஓடிவந்தார்கள். அவர்கள் சொல்லித் தான் கடல் பெருகிய விடயம் எங்களுக்குத் தெரியும். அவர்களில் ;நான்குபேரும் காப்பாற்றங்கோ காப்பாற்றுங்கோ என்று கத்தினார்கள். என்னால் அவ்வளவு பேரையும் எப்படிக் காப்பாற்ற முடியும். ஒரு அம்மா சின்னப்பிள்ளையை தூக்கி வைத்திருந்தார். தண்ணீர் எங்களடிக்கு வர அந்த அம்மா தனது பிள்ளையயை என்னிடம் தந்து தம்பி இந்தப் பிள்ளையைப் பக்குவமாய்க் கொண்டு காப்பாற்று என்றார்.

அவர் பிள்ளையைத் தந்து காப்பாற்று தம்பி என்று சொல்லி முடிக்கவில்லை தண்ணி என்னை மேலே தூக்கி அடித்துக் கொண்டு போனது. அதோடு அவர்களை நான் பிரிந்துவிட்டேன். என்னை அலை வேகமாக இழுத்துக்கொண்டு போனது. இப்படி அலை
இழுக்கும் எண்டு நான் நினைக்கவேயில்லை. அப்படி மூர்க்கமாக அலை இழுத்தது. அந்த அம்மா என்னிடம் தந்த அவரின் பிள்ளையை அலைபறிப்பது போல இழுத்தது. நான் பிள்ளையை விடவில்லை.

என்னுடன் இறுகப்பிடித்து வைத்துக்கொண்டிருந்தேன். அலையுடன் அடிபட்டுப் போய்க் கொண்டிருந்த நான் பிறப்பு இறப்புச் செயலகத்துக்குப் பக்கத்தில் உள்ள பூவரசம் மரத்தை எட்டிப்பிடித்து ஏறி அந்தப் பிள்ளையைப் பத்திரமாக இருத்திவிட்டு கீழே பார்த்தேன். கடல் வேகமாக வந்துகொண்டிருந்தது. அதற்குள் சிலர் மூழ்கி தத்தளித்துக் கொண்டு மூழ்கி மூழ்கி வந்தனர். இப்படியான காட்சியை நான் ஒருநாளும் கண்டதேயில்லை. அவர்களை நான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும். காப்பாற்றாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

உடனே கீழ் இறங்கி மரத்தைப் பிடித்துக்கொண்டு அவர்களை ஒவ்வொருவராகப்பிடித்து மரத்தில் ஏற்றிவிட்டேன் ஒரு அக்காவாக இருக்க வேண்டும். எனது கைக்கெட்டாத தூரத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தார். அவரின் தலைமையிரில் எட்டிப்பிடித்திழுத்து மரத்தில் ஏற்றினேன். நான் இப்படிச் செய்தேனா என்று கூட இப்போது நம்ப முடியவில்லை. நான் மரத்தில் ஏற்றியவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து 'காப்பாற்றுங்கள் என்று கூறியவர்கள்தான் அவர்கள்". இப்படியே நான்கு உயிர்களைக் காப்பாற்றி விட்டேன். நாங்கள் ஏறிநின்ற பூவரசம்மரம் ஒரு 15 அடி உயரம் இருக்கும். அந்த மரத்தில் எங்களின் கால்களைத் தொட்டது போல கடல்நீர் ஓடிக்கொண்டிருந்தது. மரத்தில் ஏறி இருந்தவர்கள் பயத்தால் கதறிக்கொண்டிருந்தனர்.

சிறிது நிமிட நேரத்தி;ல் தண்ணீரின் மட்டம் குறைந்துவிட்டது. உடனடியாக நான் மரத்தில் இருந்து கீழே இறங்கிப் பார்த்தேன். கழுத்தளவு தண்ணீர் நின்றது. அவர்களை மரத்திலிருந்து கீழே இறக்கி புட்டியான இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனேன். அவர்களைக் கூட்டிக்கொண்டு போய்க் கொண்டிருக்கும்போது காலுக்குள் சடலங்கள் மிதிபட்டுக்கொண்டிந்தது. தண்ணீர் நின்றபடியால் அவை எங்கள் கண்ணுக்குள் தெரியவில்லை. அப்படியே அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டேன்.

அதன்பிறகு யாராவது தப்பியிருப்பவர்களை மீட்போம் என்று திரும்பி வந்தேன். நான் வந்தபோது மூன்று பேர் தங்கள் உறவினரைப் பார்க்கவந்து பேரூந்து நிலையத்தில் தவித்துக்கொண்டு நின்றார்கள். அவர்களும் என்னுடன் கூடவே மீட்பு வேலைகளுக்கு வந்தார்கள். நாங்கள் முதலாவது அலை அடித்த கையோடு சமாசக் கட்டடத்தைத் தாண்டி கடலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது கட்டடங்களின் மேலும்ää மரங்களின் மேலும் சடலங்கள் வெளவால்கள் தொங்கிக் கொண்டிருப்பதுபோல தொங்கிக் கொண்டிருந்தன.

அதைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. எல்லா இடமும் அழுகுரலும் அபாயச்சத்தங்களும் தான் கேட்டுக்கொண்டிருந்தது. இப்படியே கையில் அகப்படுபவர்களை மீட்டு பஸ்நிலையப் புட்டியில் கிடத்தினோம். நாங்கள் மீட்ட அனைவரும்உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை வெளியால் கொண்டு செல்வதற்கு வாகனவசதிகள் அந்த கண நேரத்தில் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் தண்ணீருக்குள் தவித்துக்கொண்டிருந்தவர்களை வெளியே எடுத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் சடலங்கள் எதையும் உடனடியாக மீட்கவே இல்லை. உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தவர்களைத் தான்மீட்டோம்.

அப்படியே மணல் குடியிருப்புப்பக்கமாக அதாவது அந்தோனியார் கோயில் பக்கமாக வந்து கொண்டிருந்தோம். முதல் அலை அடித்த உடனே இந்தப்பகுதிக்கு வந்தோம். கட்டடங்கள் எல்லாம் இடிந்து போய் இருந்தது. கால்களுக்குள் வீட்டுத் தளபாடங்களும்ää கல்லுகளும்ää மரங்களும் மனித உடல்களும் மிதிபட்டுக்கொண்டிருந்தது. வேதக்கோயிலும் நொருங்கி விழந்திருந்தது. மொத்தத்தில் முல்லைத்தீவின் தோற்றமே மாறியிருந்தது.

நாங்கள் வித்தியாசமான ஒரு உலகத்தில் நிக்கிறோம் என்றுதான் நினைத்தேன். அதனுள்ளாலும் பெரும் சிரமத்தின் பின் சேச்அடிக்கு வந்தோம். சேக்சுக்குப் பக்கத்தில் வந்தபிறகு பின்னால் திரும்பிப் பார்த்தேன் வயது முதிர்ந்த அம்மா பட்ட மரம் ஒன்றின் உச்சியில் பிடித்துக்கொண்டு நின்;றார். உடனடியாகவே ஓடிப்போய் அந்த மரத்தில் ஏறி அம்மாவைக் கீழே இறக்கினோம். அந்த மரம் அம்மாவின் வீட்டின் பின் மூலையில் இருந்தது. அது வீட்டை விட உயரமான மரம் அம்மாவால் மரத்திலிருந்து இறங்கத் தெரியவில்லை.

ஒருகையால் அம்மா வைப்பிடித்துக் கொண்டு ஒருவாறு கீழ் இறங்க அம்மா என்னையும் பிடித்துக் கொண்டு மரத்தின் கீழ் இருந்த கிடங்கில் விழுந்து விட்டார். கடல் வந்து விழுந்த வேகத்தில் தான் அந்தக்கிடங்கு வந்திருக்க வேண்டும். நானும் தாண்டு அந்த அம்மாவும் தாண்டு போய்விட்டோம். ஒரு மாதிரி நான் கரையைப் பிடித்து மேலே வந்து அந்த அம்மாவையும் பிடித்துக் காப்பாற்றி விட்டேன்.

அம்மாவைக்காப்பாற்றி புட்டிக்குக் கொண்டு வரும்போது அவரின் வீட்டுக்குப் பின்னால் உள்ள ஒரு பெரிய வீட்டில் இருந்து பெண் ஒருவர் 'ஐயோ என்ர பிள்ளையைக் காப்பாற்றுங்கோ" என்று பரிதாபமாகக் கதறிக் கொண்டிருந்த குரல் கேட்டது. உடனே அந்த இடத்துக்குப் போய் வீட்டிற்குள் பார்த்தோம். அந்தக் காட்சி என்னைத் திகைக்க வைத்தது. நான் திகைத்துப் போனேன். முப்பது வயது மதிக்கத்தக்க தாய் அலை வந்தவுடன் தனது பிள்ளையை ஏணையில் படுத்தி ஏணையின் கயிற்றை இழுத்து பிள்ளையை வீட்டு முகட்டளவுக்கு உயர்த்தியபடி தான் யன்னலில் ஏறி நின்றிருந்தார். நாங்;கள் அவர்களையும் மீட்டுக்கொண்டு நெஞ்சளவு தண்ணீக்குள்ளால் புட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த போது அம்மா ஒருவர் நெஞ்சளவு தண்ணீருக்குள் அங்கும் இங்குமாகத் தளம்பியவாறு பஸ் நிலையப் புட்டியை நோக்கி நடந்து போய்க்கொண ;டிருந்தார். அவர் எங்கிருந்து வந்தார் என்பது எனக்குத் தெரியாது. அவரின் கையிலிருந்த குழந்தை கதறி அழுது கொண்டிருந்தது.

இந்தக் கோர அலைக்குள் எப்படித் தப்பினார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதோ ஒருவாறு தப்பிவிட்டார். தனது பிள்ளையைக் காப்பற்ற வேண்டும் என்ற ஓர்மத்தில் அவர் தளம்பியவாறு நடந்து போய்க்கொண்டிருந்தார். சமாச கட்டடத்தின் அருகில் போயிருக்க வேண்டும். திடீரென அவரைக்காணவில்லை. என்ன நடந்திருக்கும் விரைவாக அந்த இடத்துக்கு வந்தோம் தாயும்பிள்ளையுமாகத் தண்ணீருக்குள் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தனர். உடனே அந்த அம்மாவையும் தூக்கிää அவரின் குழந்தையையும் தூக்கிக் கொண்டு பஸ்தரிப்பு நிலையத்துக்குக் கொண்டுபோனோம். அந்த அம்மா மயங்கி விட்டார். பிள்ளையைத் தூக்கிப் பார்த்தேன். உடல் சூடாக இருந்தது. ஆனால் அந்தப் பிஞ்சுப் பாலகனின் உயிர் மட்டும் பிரிந்து விட்டது. கொடுமையான அந்த அலையிலும் பக்குவமாய் தான்பெற்ற குழந்தையைக் காப்பற்றிக் கொண்டு வந்து கடைசியில் பறிகொடுத்துவிட்டார்.

இப்படியே மீட்பு வேலைகளைச் செய்து கொண்டு போய்க்கொண்டிருந்தபொழுது
வண்ணாங்குளம் பகுதியில் தந்தையார் தனது பிள்ளையை ஒரு பனை மரத்தில் தூக்கி ஏற்றியவாறு பிடித்துக்கொண்டிருந்தார். அவராலும் இயலாமல் இருக்க வேண்டும். அவரை மீட்பதற்காக போய்க் கொண்டிருக்க தண்ணீரும் கூடிக்கொண்டிருந்தது. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க அந்த அலை அண்ணையை அடிச்சுக் கொண்டு போனது.

மரத்தில் இருந்த பிள்ளை தந்தையை அலை இழுத்துக்கொண்டு போக பார்த்துக் கதறிக் கொண்டிருந்தான். அவன் கதறி என்ன செய்ய முடியும். தண்ணீர் கேட்குமா? இல்லையே நாங்கள் அந்த இழுவைத் தண்ணீருக்குள்ளாலும் போய் மரத்தில் பிடித்திருந்த சின்னப்பிள்ளையை மரத்தில் இருந்து காப்பற்றி தூக்கிக்கொண்டு திரும்ப கடல் பக்கம் இருந்து தண்ணீரைக் கிழித்துக்கொண்டு ஒரு பூஸ்ரார் படகு எங்களுக்கு நேராக வந்தது.

நான் அதை பார்த்தவுடனே அந்தப் பிள்ளையுடன் தண்ணீருக்குள் இருந்துவிட்டேன். சிறிது கழித்து மேலே எழும்பிப் பார்த்தபோது அந்தப் படகு எங்கே போனது என்று கூடத் தெரியவில்லை. அந்தளவுக்கு அதன் வேகம் இருந்தது. தண்ணீருக்குள் மூழ்கியதால் அந்தப்பிள்ளையும் நானும் தண்ணி குடித்துவிட்டோம். அந்தப் பிள்ளையின் குடும்பமே அழிஞ்சுபோச்சுது. அவர்களின் குடும்பத்தில் தப்பிய ஒரே ஒருவர் இந்தப் பிள்ளைதான். இந்தளவும் ஒரு சில நிமிடங்களில் நடந்துவிட்டது. முதலாவது அலை அடித்து இரண்டாவது அலை அடிப்பதற்கிடையில் ஐம்பது பேருக்குமேல் காப்பாற்றிவிட்டோம். முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையில் ஏழு நிமிடங்களாவது இடைவெளி இருந்திருக்கும்.

மரங்களுக்கு மேல் பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் கீழே இறக்கிப் பாதுகாத்தோம். காயமடைந்தவர்களும் சரி பலர் இப்படி படகுகளும் மரங்களும் அடிச்சுத்தான் செத்தவர்கள். நாங்கள் அலை அடிச்ச பிறகு இஞ்சவந்தபோது பாதை எது கட்டடம் எது எண்டு எதுவுமே தெரியேல்ல. ஆனால் நான் கனகாலமாகப் பழகின இடம் எண்;டதால குறிப்பிலதான் போனனான். எங்குமே கடல்தான் தெரிஞ்சது. இதுக்குள்ளால போய் மீட்டுக்கொண்டிருக்கேக்க இரண்டாவது தரம் கடல் எழும்பியது. திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள். கடல் இரண்டாவது தரம் எப்படி வந்தது அதன்பிறகு என்ன நடந்தது அடுத்தபகுதியில் தொடர்வோம்.

(தொடரும்)

நன்றி: ஈழநாதம்




முன்னைய பாகங்கள்

http://www.tamilnatham.com/articles/lokees...an/20050314.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050310.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050307.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050302.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050225.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050222.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050217.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050212.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050207.htm


http://www.tamilnatham.com/articles/lokees...an/20050203.htm



--------------------------------------------------------------------------------



ஆயin Pயபந

Print this item

  தமிழில் புதுச்சொல்லாக்கம்
Posted by: thamilvanan - 03-18-2005, 05:21 PM - Forum: தமிழும் நயமும் - Replies (59)

[b][size=18]இன்று தமிழில் சொற்களை உருவாக்குவது என்பது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. எமக்கு தேவையான தமிழ்ப்புதுச்சொற்களை உருவாக்க வேண்டுமென்பதற்காக இப்பகுதியை திறக்கிறேன்.

இது பற்றி சிந்திக்க தூண்டிய சுவாரசியம் இதுதான். ஒறேஞ் என்பதற்கு என்ன தமிழ்ச்சொல் வைக்கப்படலாம் என சிந்தித்த போதுதான் தமிழின் துயர்நிலையை விளங்க முடிந்தது.

ஏன் என கேட்கிறீர்களா?

Orange என்ற சொல் பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையின் வடபகுதியிலும் பேசப்படும் தமிழ்மொழியிலிருந்து வந்ததாக ஆங்கில அகராதி கூறுகிறது.

எப்படி இருக்கிறது நிலைமை. அந்த சொல்லை உருவாக்கியவர்கள்; நாங்களே அதற்கு ( அதன் அடியை ) தற்போது அது ஆங்கில சொல் என்ற ரீதியில் புதுச்சொல் தேடுகிறோம்.

இப்பகுதியில் தேவையான ஆங்கில சொற்களை இடுவதன் மூலம் அதற்கு புதுச்சொல் உருவாக்குவது பற்றி கலந்துரையாடலாம்.

Print this item

  மட்டு. அம்பாறையில் &quot;சுனாமி' பீதியால்
Posted by: eelapirean - 03-18-2005, 07:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மட்டு. அம்பாறையில் "சுனாமி' பீதியால்
மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் நேற்றுக்காலை ஏற்பட்ட சுனாமி பீதி காரணமாக கரையோர மக்கள் மீண்டும் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனால், குறித்த பகுதிகளில் பெரும் அல்லோல கல்லோலம் ஏற்பட்டது.
கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டும் தாய்மார் தமது கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடியதால் வீதிகள் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தன.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
கிழக்குக் கடல் நேற்று சற்று கொந்தளிப்பாக காணப்பட்டதுடன், கடல் நீர் மட்டமும் உயர்ந்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்கரைப் பக்கம் சென்றவர்கள் ஓரளவு பெரிய அலை எழுவதைக் கண்டு கடல் பொங்கி வருகிறது என கத்தியுள்ளனர்.
இதனைக் கேள்வியுற்ற கரையோர மக்கள் மீண்டும் சுனாமி வந்து விட்டது என்ற அச்சத்தில் ஓட்டமெடுத்தனர்.
கல்முனைப் பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற மீன்பிடி தோணி ஒன்றும் இடைநடுவில் கவிழ்ந்துள்ளது. மட்டக்களப்பில் கல்லடி, திருச்செந்தூர், கல்லாறு, அமிர்தகழி போன்ற கரையோர கிராம மக்களே அதிகமாக ஓடிய அதேவேளை, பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் பாடசாலைகளை நோக்கிப் படையெடுத்தனர். இதேவேளை, பாடசாலைகளும் இழுத்து மூடப்பட்டன.
கல்முனையில் பிரபல கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலை விட்டு வீதியில் இறங்கி பதறி அடித்துக் கொண்டு ஓடியதையும் காண முடிந்தது. எனினும், இந்தப் பரபரப்பான சுழல் சற்று நேரத்தில் வழமைக்குத் திரும்பியது.
பல இடங்களில் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் சுனாமி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அது வதந்தி என்றும் அறிவித்தனர். எனினும், மக்கள் இன்னும் சுனாமி பீதியுடனேயே காணப்படுகின்றனர்.

Print this item

  ஜெயலலிதா இந்தியாவின் முதல்வராக...
Posted by: Danklas - 03-17-2005, 06:41 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (13)

முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டி, தனது உடலில் கத்தியால் குத்திக் கொண்டு ஒரு அதிமுக தொண்டர் நேர்த்திக் கடன் செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ளது தேன்கனிக்கோட்டை. இங்குள்ள யாரப் தர்ஹாவில், கந்தூரி உரூஸ் விழா நடந்தது. இத் திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு 8வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் பாசு என்கிற ஜோஷே இஸ்லாம், நீர் மோர்ப் பந்தல் அமைத்து நீர் மோர், குடிநீர் வழங்கி வந்தார்.
மாலையில் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்டுகள் வாழ வேண்டும், இந்தியாவின் பிரதமராக அவர் வர வேண்டும் என்று கூறி பந்தலுக்கு வந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் திருவிழாவுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்பு, திடீரென கத்தியை எடுத்து தனது மார்பில் பல முறை குத்திக் கொண்டார்.
இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நேர்ந்து கொண்டதாகவும், அதற்காகவே கத்தியால் குத்திக் கொண்டதாகவும் இஸ்லாம் கூறினார். அவரது செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
------------------------------------------------------------
நாமலும் ஏதாவது செய்தாகனும்.. (அட்லீஸ் **** சாதனைபடைக்கவேண்டும்)

Print this item