Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 665 online users.
» 0 Member(s) | 661 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,443
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,679
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  அவளுக்கு கல்யாணம்....
Posted by: ஆனந்தன் - 03-20-2005, 07:30 AM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

அவளுக்கு கல்யாணம்
என் கை பிடித்து
என் கண் பார்த்துக் காதல்
சொன்ன கண்மணிக்கு
கல்யாணம்

கூடித் திரிந்து
ஆடிச் சிரித்து
பேசிப் பழகி
பறக்கும் முத்தம் தந்து
நாளை சந்திப்போம் என்று
சொல்லிப் போன என்
தேவதை

முகூர்த்தம் பார்த்து
பந்தலிட்டு
மணவறையில் இருக்க
மணமகளாய் கோலம்
பூண்டு போகிறாள்
என்னவள்!

மனம் விட்டுப் பேசி
என் மடிமீது சாய்ந்து
மணமாலை சூடப் போகும்
என்நாள் என எனைக்
கேட்டவள்
தேதி குறித்து விட்டு

என்னைத்
தேடுகிறாள் தன்
திருமண அழைப்பிதழ்
கொடுப்பதற்கு!

கொஞ்சிப் பேசிய
காலம் இன்னும்
கசிந்து கொண்டிருக்கிறது
இதயத்தின் ஓரமாய்

என் இனியவள்
மனதிலோ மாறுதல்
ஏதும் இன்றி
மங்களக் காட்சிகள்
இதயத்திரையில்

மௌனமாய்
என்னை
அழ வைத்து விட்டு
நானத்தின்
நடையோடு நாயகி
வலம் வரப் போகிறாள்

இதயத்தில் எழுதி
வைத்த காதலை
அழிப்பதென்பது கடினம்
என்று பலர் சொல்லக்
கேட்டதுண்டு

நியத்தில் அது
சுலபம் என்று
நிரூபித்து விட்டாள்
என்னவள்

சிரித்துக் கொண்டு
என் செல்லப்பூ
வாழ்க்கைக்குப் போகும
;போது நான் மட்டும்
எப்படி அழுது கொண்டு
வாசலில் நிற்பது

மறப்போம் என்ற
சொல்லைக் கேட்ட போது
இதயத்தில் விட்டு விட்டு
வந்தது வலி

ஆனால்
மணக்கப் போகிறாய்
என்ற சொல்லைக்
கேட்ட போது இதயத்தில்
விழுந்ததடி இடி

சரி !
அன்பே
விட்டுக் கொடுத்த
இந்தக் காதலனின்
வாழ்த்துத் தான்
நிறைவான வாழ்த்து
வாழி!

www.eelakkathir.de

Print this item

  மின்னூல் உருவில் 'பூவரசு'
Posted by: sOliyAn - 03-20-2005, 05:37 AM - Forum: நூற்றோட்டம் - Replies (10)

ஜேர்மனியிலிருந்து வெளிவரும் பூவரசு சஞ்சிகையின்..

தை, மாசி 2000 சிறப்பிதழ்
http://www.tamilamutham.net/index.php?opti...start=0&limit=5

பங்குனி, சித்திரை 2000 சிறப்பிதழ்
http://www.tamilamutham.net/index.php?opti...start=0&limit=5

Print this item

  துப்பாக்கிச்; சூடு நடத்திய புளொட் உறுப்பினர் தலைமறைவு:
Posted by: வியாசன் - 03-20-2005, 03:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

துப்பாக்கிச்; சூடு நடத்திய புளொட் உறுப்பினர் தலைமறைவு: பொலிஸ் தேடுதல் தீவிரம்!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சைக்கிள் பாதுகாப்பு நிலைய தொழிலாளி ஜெயராஜா ராஜூ மீது நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்; சூட்டு சம்பவம் தொடர்பாக புளொட் உறுப்பினர் ஒருவர் காவல்துறையால் தேடப்பட்டு வருகின்றார்.

காயமடைந்த குறிப்பிட்ட நபர் பொலிசாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தன்னைச்; சுட்டவர் புளொட் உறுப்பினர் அலன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

இவரது வாக்குமூலத்தையடுத்து புளொட் உறுப்பினரான அலன் என்பவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

இவரை தேடும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

சுட்டபழம்
நன்றி புதினம்

Print this item

  கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது குறித்த ...............
Posted by: வியாசன் - 03-20-2005, 03:14 AM - Forum: புலம் - Replies (3)

கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது குறித்த அறிக்கை தயாரிக்கவே இலங்கை சென்றோம்: கனடிய தூதுக்குழு

இந்த தகவலை அங்கு விஜயம் செய்துள்ள கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் சார்பில் செனட் சபை உறுப்பினர் டெரக் லீ தெரிவித்துள்ளார்.

தமது குழுவினர் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சää எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசி;ங்க மற்றும் ஜே.வி.பி.யின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்ததாக டெரக் லீ குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணிலின் கருத்துப்படிää நாட்டின் சமாதான நகர்வில் தமிழீழ விடுதலைப்புலிகள் தற்சமயம் இணைந்துள்ளனர்ää எனவே அவர்களை கனடா தடைசெய்வது பொருத்தமானதல்ல என அவர் விளக்கமளித்ததாகவும் செனட் உறுப்பினர் கூறினார்.


தமிழீழ விடுதலைப்புலிகளின் துணை அரசியல்துறைப் பொறுப்பாளரை தாம் சந்தித்து அவர்களின் விளக்கத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட கனேடிய செனட் உறுப்பினர்ää அதன்பின்னர் தங்களது குழுவிற்கு தற்போதைய பிரச்சனைகள் குறித்து தெளிவான விளக்கம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுட்டபழம்
நன்றி புதினம்

Print this item

  கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது
Posted by: eelapirean - 03-19-2005, 11:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது குறித்த அறிக்கை தயாரிக்கவே இலங்கை சென்றோம்: கனடிய தூதுக்குழு
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 20 மார்ச் 2005ää 1:55 ஈழம் ஸ
இந்த தகவலை அங்கு விஜயம் செய்துள்ள கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் சார்பில் செனட் சபை உறுப்பினர் டெரக் லீ தெரிவித்துள்ளார்.

தமது குழுவினர் பிரதமமந்திரி மஹிந்த ராஜபக்சää எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசி;ங்க மற்றும் ஜே.வி.பி.யின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்ததாக டெரக் லீ குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணிலின் கருத்துப்படிää நாட்டின் சமாதான நகர்வில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்சமயம் இணைந்துள்ளனர்ää எனவே அவர்களை கனடா தடைசெய்வது பொருத்தமானதல்ல என அவர் விளக்கமளித்ததாகவும் செனட் உறுப்பினர் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் துணை அரசியல்துறைப் பொறுப்பாளரை தாம் சந்தித்து அவர்களின் விளக்கத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட கனேடிய செனட் உறுப்பினர்ää அதன்பின்னர் தங்களது குழுவிற்கு தற்போதைய பிரச்சனைகள் குறித்து தெளிவான விளக்கம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளைக் கனடாவில் தடை செய்வது குறித்து ஆராய சிறீலங்கா சென்ற இந்த தூதுக் குழுவில்ää கனடாவில் வாழும் ஒருசில தமிழ்ää இஸ்லாம் மற்றும் சிங்கள இனத்தின் பிரதிநிதிகளும் சென்றுள்ளார்கள். இவ்வாறு இத்தூதுக் குழுவுடன் இணைந்து சென்ற சில தமிழ் ஊடகவியலாளர்கள்ää ஏற்கனவே கனடாவில் விடுதலைப் புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
8) 8) 8)

Print this item

  உதவி
Posted by: eelapirean - 03-19-2005, 10:59 PM - Forum: கணினி - Replies (6)

LEXMARK PRINTER க்கு INK REFILL பண்ணினேன்.BLACK வேலை செய்கிறது.கலர் எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை செய்யவில்லை.முடிந்தால் யாராவது உதவி செய்யவும்.

Print this item

  கிழக்கே விஜயம்செய்ய வேண்டாமென அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்
Posted by: Nitharsan - 03-19-2005, 10:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்வது தொடர்பாக அமெரிக்கா, அதன் பிரஜைகளுக்கு பிரயாண எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்கா கோரியுள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக குறிப்பாக அரசியல் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க மக்களுக்கு ஆலோசனை செய்ய விரும்புகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அமெரிக்கப் பிரஜைகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அரசியல் செயற்பாடுகளும் கூட்டங்களும் இப்பகுதியில் வன்முறைகளுக்கு காரணமாக மாறக் கூடும்.

அமெரிக்கப் பிரஜைகளை மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில், தனிப்பட்ட தொண்டர்களாக அமெரிக்க பிரஜைகளை பணிபுரிய வேண்டாமெனக் கேட்கிறோம்.
நன்றி: தினக்குரல்.கொம்

நேசமுடன் நிதர்சன்

Print this item

  எங்கடை தமிழும் உங்கடை தமிழும்!
Posted by: Mathan - 03-19-2005, 09:07 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (1)

எங்கடை தமிழும் உங்கடை தமிழும்!

ஈழத்தமிழ் குறித்து நமது சகோதரர்களின் மெச்சுகை அவ்வப்போது வலைப்பதிவுகளில் வரும். ஆஹா அதுவெல்லோ தமிழ் என்கிற மாதிரியான பாராட்டுக்கள் ஒருவித பெருமையைத் தருவது உண்மைதான். ஈழத்தமிழ் என்கிற அடைமொழியில் அவர்கள் குறிப்பிடுவது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மொழியைத்தான் என நான் உணர்கிறேன்.

தமிழக சினிமாக்களிலும் இலங்கைத் தமிழ் என யாழ்ப்பாணத்து பேச்சு வட்டார மொழி தான் பயன்படுகிறது. அதாவது யாழ்ப்பாண பேச்சு வட்டார மொழியை நெருங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறுகிறார்கள் இல்லை.

தமிழ்ச் சினிமாக்கள் பார்த்து வளர்ந்தவன் என்றாலும் (யாழ்ப்பாணத்தில் அவை தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் சத்தியமாய்ப் பார்க்கவில்லை!!!) அவற்றில் வரும் பேச்சு மொழி வழக்கு பெரிய அளவில் என்னளவில் கவனத்துக்குரியதாக இருந்திருக்கவில்லை.

(ஆயினும் உண்மையான சென்னைத் தமிழிற்கும் படங்களில் பேசப்படுகின்ற சென்னை சார்ந்த மொழிப் பேச்சு வழக்கிற்கும் என்னால் வித்தியாசம் உணர முடிகிறது. நேரடியாக தமிழக தமிழரோடு பேசும் வேளையில் நாம் பிறிதொரு பேச்சு வழக்கினை உடைய ஒரு நபரோடு பேசுகிறோம் அவர் பேசுவதை கேட்கிறோம் என்கிற உணர்வு வருகிறது. ஆனால் திரைப்படங்களில் அப்படி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை)

யாழ்ப்பாணத்து தமிழ் என பொது மொழியினூடு பேசினாலும் யாழ்ப்பாணத்திலும் வட்டார வழக்குகள் இருந்தன.

எங்கள் கிராமத்திற்கு அருகிருந்த ஒரு கிராமம்!

முழுதும் வேறுபாடாக கதைப்பார்கள்.

பேசும் போது ஒரு சுருதியில் பேசுவார்கள். (சில வேளை நாம் பேசுவதும் அவர்களுக்கு அப்பிடித்தான் தெரிகிறதோ என்னவோ?)

ஐம்பது சதம் என்பதை அம்பேயம் என்பார்கள். அது எங்களுக்கு சிரிப்பாயிருக்கும். (நாங்கள் அம்பேசம் என்று சொல்வது ஏதோ சரி என்ற நினைப்பு எங்களுக்கு இருக்கும்)

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி சென்ற பின்னர் தான் படங்களில் கவனிப்பு பெறாத தமிழகத்தின் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வட்டார வழக்கு மொழியை எதிர் கொண்டேன்.

வன்னியில் நாமிருந்த பகுதிகளில் பெருமளவு வசித்தவர்களின் பூர்வீகம் இந்தியா!

மலையகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இலங்கையின் இனக்கலவரங்களோடு வன்னிப் பகுதிகளுக்கு வந்து காடு வெட்டி வாழ்விடம் அமைத்து இன்று அந்த மண்ணின் குடிகளாகி இருக்கிறார்கள்.

நாமிருந்த தென்னங்காணியின் முழுப் பராமரிப்புப் பொறுப்பிலிருந்தவரின் பூர்வீகம் இராமநாதபுரம்! அது போலவே அங்கு பணிபுரிந்த பலர் தமிழகத்தோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களிடம் தமிழக ஊர்களின் பேச்சு வழக்கு மொழியினை அறிந்து கொண்டேன். அப்போதும் அவர்களை நையாண்டி செய்வதற்காகத் தான்.

அவர்கள் ஏதாவது சொன்னால்.. அப்படியா என்று இழுக்க ஓமோம் அப்பிடித்தான் என்பார்கள் அவர்கள்.

(இந்த ஓமோம் என்ற சொல்லை தெனாலியில் ஜெயராம் ஓமம் என்பார்)

எங்கள் பேச்சு வழக்கில் தேனீர் குடிப்பது என்றே பழகி வந்ததால் அவர்கள் அதை சாப்பிடுவதாய்ச் சொல்கின்ற போது அதையும் கிண்டலடிப்பேன்.

தேத்தண்ணி சாப்பிட்டு விட்டு சோறு குடிக்கிறீர்களா?

அவர்களும் ஏதாவது நாம் பேசும் போது திடீரென பேந்தென்ன (பிறகென்ன) என்பார்கள்.

அவர்களிடம் பேசியதும் பழகியதும் எனக்கு இந்தியாவில் பயன்பட்டது.

மண்டபம் முகாமில் எமக்கான பதிவுகள் முடிந்து 'நம்ம ரூம் எங்கேருக்கு சார்" என்று அங்கிருந்த ஒரு அதிகாரியைக் கேட்ட போது அவர் ஒரு மாதிரியாக பார்த்தார்.

நீ ஆல்ரெடி இந்தியாக்கு வந்திருக்கியா?

ஐயோ இது வேறை பிரச்சனையளைக் கொண்டு வந்துவிடும் எண்டதாலை இல்லையில்லை.. இப்பதான் முதல்த்தரம் வாறன் என்று என் வாலைச் சுருட்டிக்கொண்டேன.

ஆனாலும் திருச்சியில் கடைகளில் வலிந்து தமிழக வழக்கில்த்தான் பேசுவேன். (ஒரு பாதுகாப்பிற்குத்தான்.)

அங்கு மாற்றிக் கொண்ட சில ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்புக்களை திரும்பவும் வழமைக்கு கொண்டு வர எனக்கு சில காலம் எடுத்தது. (உதாரணங்கள்: சேர் (Sir) வோட்டர் (Water) சொறி (Sorry) இவற்றை சார், வாட்டர் சாரி என தமிழகத்திற்கு ஏற்றால்ப்போல மாற்ற வேண்டியிருந்தது.)

இப்பொழுதும் தமிழக வழக்கு என் பேச்சில் அவ்வப்போது இருக்கும். என்னால் அவதானிக்க முடிந்த ஒரு மாற்றம் இது. யாழ்ப்பாண பேச்சு வழக்கில் கேள்விகளின் இறுதியில் ஓ சேர்த்து முடிப்பார்கள். அதாவது அப்பிடியோ உண்மையோ என்பது போல. ஆனால் எனது வழக்கில் அவை அப்படியா உண்மையா என்றே வந்து விழுகின்றன. இது தமிழக பாதிப்பாகத்தான் இருக்கும்.

மீண்டும் கொழும்பு வந்து பள்ளியில் சேர எங்கேயும் கேட்டிராத இன்னுமொரு வழக்கு கேட்க கிடைத்தது. அது என்னோடு படித்த இஸ்லாமிய நண்பர்களினது. இருக்கிறாரா இருக்கிறாரோ இருக்காரா என்பது போலவே அவர்கள் ஈக்காரா என்பார்கள்.

சதிலீலாவதி படம் பார்த்த காலத்தில் அந்த கோயம்புத்தூர் தமிழ் அப்படியே பற்றிக் கொண்டு விட கொஞ்சக் காலம் அது போலவே நண்பர்களோடு பேசித் திரிந்தேன்.

என்ட்ரா பண்ணுறா அங்க..? ஆ... சாமி கும்பிர்றன் சாமி..

இப்பவும் அந்தப் படம் எனக்குப் பிடிக்கும். அது போலத் தான் திருநெல்வேலி வட்டார வழக்கில் ஏலே என்னலே சொல்லுற என்பது போலவும் நண்பர்களுக்குள் பேசியிருக்கிறேன்.

தெனாலி வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயம்! கமல் யாழ்ப்பாணத்து தமிழில் பேசுகிறாராம் என்ற போது சந்தோசமாகத் தான் இருந்தது. அதே நேரம் இது புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கான வர்த்தக குறி என்ற எண்ணமும் வராமல் இல்லை.

தெனாலி பார்த்து சிரித்தேன். மற்றும் படி அந்த யாழ்ப்பாணத் தமிழை நான் யாழ்ப்பாணத்தில் கேட்டதே இல்லை. இலங்கை வானொலி நகைச்சுவை நாடகங்களில் கேட்டிருக்கிறேன்.

காற்றுக்கென்ன வேலி என்னும் ஒரு படம். அதில் யாழ்ப்பாணத்தவர்கள் எல்லாரும் இலக்கண பாடம் நடாத்தும் தமிழாசான்கள் போல எடுத்திருந்தார்கள்.

கன்னத்தில் முத்தமிட்டாலில் நந்திதாவோடு வருகிற பெண்கள், அம்மாளாச்சி காப்பாத்துவா என்று சொன்ன அந்த முதியவர் இவர்கள் ஓரளவுக்கு யாழ்ப்பாணத்தமிழில் பேச வேண்டும் என்ற தமது ஆசையை நிறைவேற்றினார்கள்.

நளதமயந்தியில் பேசிய குடிவரவு அதிகாரி மௌலி மிக அழகாக பேசினார்.

ஆக இந்த தமிழ் கேட்பவர்கள் எல்லாம் இதில் தேன் ஒழுகுகிறது, பால் வடிகிறது என்னும் போது இது கொஞ்சம் மிகையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்தமிழை சுத்தமான தமிழ் என்று சொல்ல முடியுமா? தமிழக நண்பர்கள் வாங்க என்கிறார்கள். நாம் வாங்கோ என்கிறோம். இதிலே எங்கு வந்தது சுத்தம்? பேசும் லயத்திலா? ஒரு வேளை இருக்கலாம். எங்களுக்கும் கோயம்புத்தூர் தமிழ் ஒரு லயத்தில்த் தானே கேட்கிறது.

ஒன்றைச் சொல்ல முடியும்!

இலங்கையின் எந்தப் பகுதி வட்டார மொழியாக இருப்பினும் அவர்கள் அதிகமாக ஆங்கிலம் கலப்பதில்லை. அதற்காக மகிழூந்து பேரூந்து என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனாலும் தொடர் பேச்சு ஒன்றில் சில வசனங்கள் தமிழிலும் சில வசனங்கள் ஆங்கிலத்திலுமாக பேசுவதில்லை.

அதாவது "Do you know something? yesterday நான் கோயிலுக்கு போனன். I couldn't Believe it.. என்னா நடந்திச்சின்னா wow.. what a surprise" என்ற மாதிரி..

இப்படி பேசுபவர்கள் குறித்து நான் அடிக்கும் ஒரு கருத்து! அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. அதனால்த்தான் அடிக்கடி தமிழ் கலந்து கதைக்கிறார்கள்.

அது போலவே தமிழ் தெரிந்த இன்னொருவரோடு தமிழில் பேசுவது தாழ்வானது என்ற எந்தச் சிக்கலும் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் இல்லை.

இலங்கையில் தொடர்ந்து இந்த நிலை சாத்தியப் படக்கூடும். வெளிநாடுகளில் இப்போது பிறந்து வளரத் தொடங்கிவிட்ட இலங்கையைச் சேர்ந்த அடுத்த தமிழ்த் தலைமுறையிலும் இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.

என்னைக் கேட்டால் உதட்டைப் பிதுக்கிக் கொள்வேன்.

நன்றி - சக கள உறுப்பினர் சயந்தன்

Print this item

  need Java help ?
Posted by: VERNON - 03-19-2005, 07:55 PM - Forum: கணினி - No Replies

JAVA கட்டளை தொடரில் எழுதும் இணையப் பக்கத்தில்
தமிழ் எழுத்துக்கான கட்டளை எவ்வாறு உள்ளிணைக்க வேண்டும்
என்பதை கூறமுடியுமா ?

நன்றியுடன்
VERNON

Print this item

  அன்னைபூபதிக்காய்..!
Posted by: tamilini - 03-19-2005, 02:17 PM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

<img src='http://www.tamilnet.com/img/publish/2002/06/poopathi_memorial_1_190402.jpg' border='0' alt='user posted image'>
அகிம்சையின் நாயகியாய்
அன்னையவள்
ஆண்டுகள் பல சென்றபின்னும்
அழியாது நிலையாகி
அன்னையவளாய் யாவர்க்கும்

கணவன் என்றும்
பிள்ளைகள் என்றும்
தமக்காய் வாழந்த
பெண்களின் வாழ்வில்
தாய் மண்ணிற்காய்
தன்னை உருக்கி
விதையாகி
நினைவுகளில் விருட்சமாய்.

தெய்வங்கள் பற்றி இங்கு
ஆராய்ச்சி நடக்கிறதாம்
இதில் என்ன ஆச்சரியம்
உம்மைப்போன்ற
அற்பணிப்புள்ள ஆத்மாக்கள்
தெய்வத்தை விட
பல படிகள் மேல் அல்லவா..??

எத்தனை தியாகம்
எம் மண்ணிற்காய்
தன்னுயிர் உருக்கி
தியாகச்செம்மலாய்
இதயங்களில் நுழைந்துவிட்ட
தெய்வத்தாய் என்பதில்
மறுப்பென்னா..??

சமையல் அறையும்
அகப்பையும் தானா..??
பெண்ணின் ஆயுதம்
அகிம்சை எனும்
அற்புத மருந்தும்
எம்மவர்க்கு தெரியும்
என இடித்துக்கூறுவதில்
இறங்கிய வீரங்கனையல்லவா..??

காந்தியின் அகிம்சைப்போராட்டம்
விடுதலையில் முடிந்ததாம்
கோடிமக்கள் இன்னும்
இன்றும் போற்றுகிறார்.
உன் மைந்தனுக்கும்
உனக்கும் நடந்த
கதை அவர்களிற்கு
தலைகுனிவாய் தெரியவில்லையாம்.
நீதியின் வாழ்விடம் என
அவர்களே பிதற்றிக்கொள்ள
வேண்டியது தான்.!

வெறுமனவே வார்த்தையால் வாழாது
உயிர் போன தரணத்திலும்
செயலாலும் வாழ்ந்து காட்டிய
சத்தியம் நிறைந்த
வீரத்தமிழ்த்தாய் நீயம்மா.
நீ எமக்கு தந்துவிட்டுச்சென்றது
கண்ணீர் நிறைந்த
உண்மைகள் புதைந்த
வீரகாவியம் அல்லவா..??

எமக்கும் காலம் வரும்
எட்டி உதைத்தவர்
எண்ணற்ற உயிர்களை
கொண்டு குவித்தவர்
ஊனங்களாய் தமிழரை
ஆக்க நினைத்தவர்
உங்கள் உயிர்கள்
மெழுகாய் ஆகையில்
நகைத்தர்
பதில் சொல்லும் நேரம் வரும்..!
எத்தனை நினைவு தினங்கள் தான்
எம்மைத்தாண்டிச் சென்றாலும்
உங்களது உணர்வுகலந்திட்ட
உண்மைக்காவியம்
உங்களுக்கு இழைக்கப்பட்ட
துரோகங்கள்
உங்கள் நிலை கண்டும்
பாராமுகமாய்
பரிகசித்தவர் குணங்கள்
பசும்புண்ணாய் மனதில்
புதைந்து போய் இருக்கும்
வீரவரலாறாய் வீரகாவியமாய்
போய்விட்ட தமிழன் வரலாற்றில்
உயிர் கொண்டு எழுதிய
பல பக்கங்கில்
உங்கள் பகுதியையும்
நிறைத்துச்செல்லும்...!

தியாகதீபம் அன்னை பூபதியின் 17 ஆம் ஆண்டு நினைவாக..!

Print this item