Yarl Forum
கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது (/showthread.php?tid=4723)



கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது - eelapirean - 03-19-2005

கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது குறித்த அறிக்கை தயாரிக்கவே இலங்கை சென்றோம்: கனடிய தூதுக்குழு
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 20 மார்ச் 2005ää 1:55 ஈழம் ஸ
இந்த தகவலை அங்கு விஜயம் செய்துள்ள கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் சார்பில் செனட் சபை உறுப்பினர் டெரக் லீ தெரிவித்துள்ளார்.

தமது குழுவினர் பிரதமமந்திரி மஹிந்த ராஜபக்சää எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசி;ங்க மற்றும் ஜே.வி.பி.யின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்ததாக டெரக் லீ குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணிலின் கருத்துப்படிää நாட்டின் சமாதான நகர்வில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்சமயம் இணைந்துள்ளனர்ää எனவே அவர்களை கனடா தடைசெய்வது பொருத்தமானதல்ல என அவர் விளக்கமளித்ததாகவும் செனட் உறுப்பினர் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் துணை அரசியல்துறைப் பொறுப்பாளரை தாம் சந்தித்து அவர்களின் விளக்கத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட கனேடிய செனட் உறுப்பினர்ää அதன்பின்னர் தங்களது குழுவிற்கு தற்போதைய பிரச்சனைகள் குறித்து தெளிவான விளக்கம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளைக் கனடாவில் தடை செய்வது குறித்து ஆராய சிறீலங்கா சென்ற இந்த தூதுக் குழுவில்ää கனடாவில் வாழும் ஒருசில தமிழ்ää இஸ்லாம் மற்றும் சிங்கள இனத்தின் பிரதிநிதிகளும் சென்றுள்ளார்கள். இவ்வாறு இத்தூதுக் குழுவுடன் இணைந்து சென்ற சில தமிழ் ஊடகவியலாளர்கள்ää ஏற்கனவே கனடாவில் விடுதலைப் புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
8) 8) 8)


Re: கனடாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்வது - anpagam - 03-19-2005

eelapirean Wrote:.............விடுதலைப் புலிகளைக் கனடாவில் தடை செய்வது குறித்து ஆராய சிறீலங்கா சென்ற இந்த தூதுக் குழுவில் கனடாவில் வாழும் ஒருசில தமிழ் இஸ்லாம் மற்றும் சிங்கள இனத்தின் பிரதிநிதிகளும் சென்றுள்ளார்கள். இவ்வாறு இத்தூதுக் குழுவுடன் இணைந்து சென்ற சில தமிழ் ஊடகவியலாளர்கள் ஏற்கனவே கனடாவில் விடுதலைப் புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
:roll: :roll: :roll:


- Magaathma - 03-20-2005

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Confusedhock: :? :x Cry :evil: :evil: :evil:


- yalie - 03-20-2005

சென்ற வாரம் கனடாவில் விடுதலைப்புலிகளைத் தடை செய்து விட்டார்கள் என்று ஒரு கதை உலாவியதே :roll: :?: :roll: