Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 591 online users.
» 0 Member(s) | 589 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,443
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,679
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  பிரிட்டிஷ் அரசு நிர்பந்தம் தொடர்பான ஊடகச் செய்திகள்
Posted by: வியாசன் - 03-22-2005, 05:38 PM - Forum: புலம் - No Replies

பிரிட்டிஷ் அரசு நிர்பந்தம் தொடர்பான ஊடகச் செய்திகள்: பாலசிங்கம் மறுப்பு

இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரை தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞரும்ää தத்துவாசிரியருமான அன்டன் பாலசிங்கத்தை பிரிட்டிஷ் அரசு நேரில் அழைத்து நிர்பந்தித்ததாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து தமிழ்நெட் இணையத்தளம் மூலம் அன்டன் பாலசிங்கம் அளித்துள்ள விளக்கம்:

கொழும்பிலிருந்து வெளியாகும் ~சண்டே லீடர்| பத்திரிகையில் ஜெயதேவன் என்பவரை தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டும் என்று என்னை பிரிட்டிஷ் அரசு நிர்பந்தித்தாக கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தவறான தகவல்.

எந்தச் சூழ்நிலையிலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜெயதேவன்ää சிறீலங்கா மற்றும் இங்கிலாந்தில் செயற்பட்டது குறித்து என்னிடம் பேசியது இல்லை.

அமைதிப் பேச்சுகளின் தலைமைப் பொறுப்பில் உள்ள வகையில் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டுவருகிறேனே தவிர ஜெயதேவன் விவகாரம் குறித்து ஒருபோதும் கேள்வி எழுப்பப்படவில்லை.

அண்மையில் ~சண்டே லீடர்| ஆசிரியர் என்னைத் தொடர்பு கொண்டு நீண்ட நேர்காணல் குறித்து பேசினார். அப்போதுகூட இப்பிரச்சினை குறித்து என்னிடம் ~சண்டே லீடர்| ஆசிரியர் கேள்வி எழுப்பாதது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

1999 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இங்கிலாந்துக்குப் போனது முதல் அது என் வீடாகவும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் சுமூக உறவையுமே கொண்டு இருக்கிறேன் என்றார் அவர்.

சுட்டபழம்
நனறி புதினம்

Print this item

  பாண் பிரட்டல்
Posted by: thamizh.nila - 03-22-2005, 12:23 PM - Forum: சமையல் - Replies (17)

பாண் பிரட்டல்

பாண் துண்டுகள் - 10
உருளை கிழங்கு - 1
கரட் - 1
வெங்காயம் - 1
பீன்ஸ் - 5

கடுகு - 1/2 தே.க
பெரும் சீரகம் - 1/2 தே.க
உப்பு
மிளகாய்தூள்

பாண் துண்டுகளை சிறிய துண்டுகளாக்கவும்.
உ.கி, கரட்,பீன்ஸ்,வெங்காயத்தை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு தாளியில் சிறிதளவு எண்ணெய்விட்டு பாணை விடுத்து மற்றயைவற்றை வதக்கவும்.
கடுகு,பெரும் சீரகம் சேர்க்கவும். 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
உப்பு, தூள் சேர்க்கவும்.
பாண் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கவும்.
பாண் பிரட்டல் ரெடி !

Print this item

  விதவைகள் மறுமணம் புரியலாமா.............?
Posted by: MUGATHTHAR - 03-22-2005, 11:24 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (22)

இண்டைய காலத்திலை சீதனம் , தகுந்த வரன் பொருந்தாமை காரணமாக நிறைய பிள்ளைகள் முதிர் கன்னிகளாகவே இருக்குதுகள் அதை ஒரு சைட்டிலை விடுவம்.....நம்மடை சமுதாயத்திலை இன்னுமோரு பிரச்சனை இருக்கிறது நிறைப்பேருக்கு தெரியாது....அதுதான் விதவைகள் மறுவாழ்வு.........இண்டைக்கு நம்ம நாட்டிலை யுத்தத்தாலையும் , அண்மையில் ஏற்பட்ட அனத்தத்தாலையும் நிறைய பொம்பிளை பிள்ளைகள் தங்கடை வாழ்க்கை துணையை இழந்து நிக்கிறாங்க (ஆண்களும் தான் அதை பிறகு பாப்பாம்)..இப்ப நான் உங்கக்கிட்டை கேக்கிற விசயம் எண்ணெண்டால்

<b> 1. இந்தப் பிள்ளைகள் மறுமணம் புரியலாமா.............?

2. இவர்களை மறுமணம் புரிய இளைஞர்கள் முன்வருவார்களா..?

3.அப்பிடி முன்வரும் இளைஞர்களை இந்த சமுதாயம் எத்தகைய கண்ணோட்டத்துடன் பார்க்கும்........?</b>

சும்மா ஆக்கள் பாக்கிற களம் எண்டுட்டு அள்ளி விடாமல் உங்கடை சொந்தக் க்ருத்துக்ளைச் சொல்லுங்கோ.........

[b](குறிப்பு:----இப்பிடி முன்வரும் இளைஞர்களிடமிருந்து புரோக்கர் கொமிசன் அறவிடப்படமாட்டாது---முகத்தார்)

Print this item

  சைனீஸ் மட்டன் சூப்
Posted by: hari - 03-22-2005, 08:02 AM - Forum: சமையல் - Replies (32)

<b>சைனீஸ் மட்டன் சூப்</b>

மட்டன் அரை கிலோ
கேரட் 2
உருளைக்கிழங்கு 2
பெரிய வெங்காயம் 1
மைதா 2 மேசைக்கரண்டி
பச்சைபட்டாணி அரை கப்
கிராம்பு 5
ஏலக்காய் 3
பட்டை சிறுதுண்டு
மிளகு 5
பால் அரை கப்
உப்பு தேவையான அளவு



உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, ஏலம், மிளகு, பட்டை, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
அதில் நறுக்கி வைத்துள்ள காய்களையும், கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு பாலையும், மைதாமாவினையும் சேர்த்து கலந்து வேகவிடவும்.
அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பச்சைபட்டாணியுடன் குக்கரில் போட்டு வேகவிடவும்.
வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

Print this item

  புகலிடப்பெற்றோர் பிள்ளைகளின் கல்வியில் அக்கறைப்படுகின்றனரா?
Posted by: Nitharsan - 03-22-2005, 02:16 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (6)

இன்று புகலிடத்திலே தமிழர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று அசைப்படுகின்றனர் ஆனால்? இதில் அவர்கள் அக்கறைப்படுவது மட்டுமே உண்மை. எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக அறிந்துள்ளனர்? இது விடை தேட முடியாத வினாத்தான். இருப்பினும் சில பெற்றோர் தமது விருப்பு வெறுப்புக்களை (அதாவது நீ வைத்தியருக்குப் படிää நீ வழக்கறியருக்கு படிää நீ வேறு ஏதாவதுக்கு படி) தமது பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். கனடாவில் தமிழப் பெற்றோர்கள் பற்றி ரொன்ரோ உயர் கல்விகூட அதிபர்கள் மிகவும் அதிப்பதி அடைந்துள்ளனர் என்று சொல்லாhம் காரணம்.. பெற்றோர் ஆசிரியர் சங்ங கூட்டத்திற்க்கு தமிழ்ப் பெற்றோர்கள் போவது நூற்றுக்கு இரண்டு வீதம் இதனால் அதிபருக்கோ ஆசிரியருக்கோ நட்டம் எதுவுமில்லை. அனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றி அறிய அவர்களது ஆசிரியர்களுடன் கலந்துரையாடாமல் விட்டால் அது அவர்களுக்கே நட்டம். எனது பாடசாலை ஆசிரியரிடம் நான் சொன்னேனர் அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்கலாம் அதனால் அவர்கள் வருவதற்க்கு சங்கடப்படுகிறார்கள் பொல என்றேன் அதற்க்கு அவர் இங்கு தமிழ் ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதை விட் அவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று தெரிந்தால் நாங்கள் நிச்சயம் மொழி உதவியாளரை அழைப்போம் என்றார். இவ்வாறு அவர்கள் எங்கள் மீது காட்டும் அக்கறையில் ஒரு பங்காவது தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது காட்டுகின்றனரா?என்பது சந்தேகமே!
எனவே; கள உறுப்பினர்களின் கருத்து என்ன? ....

நேசமுடன் நிதர்சன்

Print this item

  பிரபல பழைய நடிகர் ஜெமினி கணேசன் இன்று காலமானர்.
Posted by: stalin - 03-22-2005, 01:58 AM - Forum: சினிமா - Replies (13)

பிரபல பழைய நடிகர் ஜெமினி கணேசன் இன்று காலமானர். இவா இறக்கும் போது வயது 85 .

Print this item

  கலக்கும் கருப்பு ராஜா!
Posted by: vasisutha - 03-21-2005, 11:08 PM - Forum: சினிமா - Replies (1)

கலக்கும் கருப்பு ராஜா!

<img src='http://i134.exs.cx/img134/4911/17black2ok.jpg' border='0' alt='user posted image'>



சாதாரண கிராமத்து ஆள் போன்ற உருவம். ஓரிரு வார்த்தை பேசினாலே தெரிகிறது மதுரைக்காரர் என்பது. சமீபத்தில் வெளியான "ராம்' திரைப்படத்தில் "வாழவந்தான்' கதாபாத்திரத்தில் நகைச்சுவையில் கலக்கியவர்தான் இவர். "கஞ்சா' கருப்பு.

திருச்சியில் "ராம்' திரைப்படம் ஓடும் திரையரங்குக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார்.

""நான் நடிக்க வந்ததற்கு இயக்குநர் பாலா அண்ணேதான் காரணம். கருப்பு ராஜா என்பதுதான் என்னோட பேரு. பாலா எனக்கு அண்ணன் முறை. மதுரையில சுத்திக்கிட்டுத் திரிஞ்ச என்னை சென்னைக்குக் கூட்டிட்டு வந்தார். அவரிடம் ஆபிஸ் பாயா இருந்தேன்.

"பிதாமகன்' படத்தில் கஞ்சா வாங்கிக் குடிக்கும் கேரக்டருக்கு ஆள் கிடைக்கலே.

"நீ பண்ணு'ன்னு பாலாண்ணே சொன்னாரு.

பாலா அண்ணனிடம் பணிபுரிந்தவர் அமீர். "ராம்' படத்தில் அவர் எனக்கு வாய்ப்பு தந்தார். வாழவந்தான் கேரக்டர் நல்ல பேரு வாங்கித் தந்திருக்கு. அமீர் சார் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்தேன். ஏன்னா, எனக்கு நடிக்கத் தெரியாது. சொல்லித் தருவதை அப்படியே செய்வேன்.

பெரிய தயாரிப்பாளரான ஆர்.பி. செüத்ரி சார் பையன் ஜீவாவுடன் நடித்தேன். எனது நடிப்பை பார்த்து விட்டு அவுங்க வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போட்டு வாழ்த்தினாங்க. தன்னோட அடுத்த 3 படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக செüத்ரி சார் சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

படத்துல நடிச்சவுடன் நான் எந்த ஊருக்குப் போனாலும் கைகுலுக்கி பாராட்டுறாங்க.

ஆட்டோகிராப்பெல்லாம் வாங்குறாங்க. சென்னை போனவுடன், பாலா அண்ணனை பார்த்து நான் நடிச்சதைப் பாத்தீங்களான்னு கேட்கணும். எனக்குப் படிக்கத் தெரியாது. ஹோட்டலில் பணிபுரிந்தேன். இப்போ நடிகனாயிருக்கேன். நானெல்லாம் நடிகனானது பெரிய விஷயம்ண்ணே'' எனக் கூறிவிட்டு சிரிக்கிறார் கருப்பு ராஜா.

தினமணி.com

Print this item

  நவீன தொழில்நுட்ப நஞ்சூட்டல் மூலமே யசீர் அரபாத்
Posted by: eelapirean - 03-21-2005, 07:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

நவீன தொழில்நுட்ப நஞ்சூட்டல் மூலமே யசீர் அரபாத் கொல்லப்பட்டார் - இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கருத்து


Monday, 21 March 2005



--------------------------------------------------------------------------------
பலஸ்தீனத்தின் முன்னாள் அதிபர் யசீர் அரபாத் நவீன தொழில்நுட்ப நஞ்சூட்டல் முறை மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் அத்தலா குய்பா இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அரபாத் நோய் வாய்ப்பட்ட தினத்தன்று அவரைச் சந்தித்த இரு இஸ்ரேலியர்களும் லேசர் கருவி மூலம் யசீர் அரபாத் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்தே அரபாத் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய கடவுச் சீட்டை வைத்திருந்த இவர்கள் அரபாத் மீது லேசர் தாக்குதல் நடத்திய பின் தப்பி செல்ல முற்பட்ட வேளை பலஸ்தீன பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் பலஸ்தீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து உடனடியாக இஸ்ரேலிய அரசுக்கு தாங்கள் அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யசீர் அரபாத்தின் குருதி மாதிரிகள் 16 நாடுகளில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கைகள் அனைத்திலும் உயர் தொழில்நுட்ப நஞ்சூட்டல் மூலமே அரபாத் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் குயூபா தெரிவித்தார்.

நன்றி சூரியன்

Print this item

  புலிகள்பகுதி மக்களுக்கு அரசு உதவவேண்டிய அவசியமில்லை .சங்கடத்
Posted by: வியாசன் - 03-21-2005, 07:15 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (5)

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கில்லை

புலிகளின் ஆயுத பலத்திற்கு பயப்படவேண்டாமென்கிறார் ஆனந்த சங்கரி

கடல்கோள் அனர்த்த நிவாரண உதவிகளை விநியோகிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பே தவிர புலிகளின் ஆயுதப் பலத்திற்கு பயந்து அவர்கள் நினைத்தபடி இதனைச் செய்ய முடியாதெனத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆனந்த சங்கரிஇ நிவாரணப் பணிகளுக்கான பொதுக் கட்டமைப்பினால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளிதழொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள ஆனந்த சங்கரி மேலும் கூறியுள்ளதாவது:

கடல்கோள் நிவாரணப் பணிகளுக்கென அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் பொதுக் கட்டமைப்பிற்கு நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன். இதை ஏற்படுத்துவதற்கு முன்பு இதில் ஏன் புலிகளை தொடர்புபடுத்த வேண்டுமென்பதை நாம் பார்க்க வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருப்பது வட மாகாணத்தின் மிகச் சிறிய பிரதேசமே. ஏனைய பிரதேசங்கள் அரசின் நிர்வாகத்திலேயே உள்ளன. எனவேஇ இவ்வாறானதொரு பின்னணியில் புலிகளின் ஆதரவு இல்லாமல் அரசுக்கு உதவிகளை வழங்க முடியும். அதேபோன்று புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு உதவிகளை வழங்க வேண்டியது அவர்களின் பொறுப்பாகும். அரசு அதற்கு உதவி வழங்க வேண்டிய அவசியமில்லை.

அரசு குறைந்தபட்சம் புலிகள் அமைப்பிற்கு எவ்வித உதவிகளையும் வழங்க வேண்டியதில்லை. அழிவுகளின் போது அவர்களுக்கு மக்களை காப்பாற்ற முடியவில்லையெனின் ஏன் அவர்கள் அப் பகுதியை நிர்வகிக்கின்றனர்?

பொதுக் கட்டமைப்பின் மூலம் சரியான முறையில் உதவிகளை விநியோகிப்பதற்கான வாய்ப்பு இல்லை. அத்தோடுஇ அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் இந்த பொதுக் கட்டமைப்பு சம்பந்தமாக இதுவரையில் இணக்கப்பாடு எதுவும் காணப்படவில்லை. எனினும்இ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. இதன் மூலம் புலிகள் தான் இன்னும் பலமடைவர்.

இதேவேளைஇ கடல்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். எனினும்இ அவற்றை புலிகளின் ஆயுத பலத்திற்கு பயந்து அவர்கள் நினைத்த படி செய்ய முடியாது. உதவிகளை விநியோகிப்பது அரசின் பொறுப்பு. புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் போர் நிறுத்தக் காலப் பகுதிகளிலேயே அதிகரித்துள்ளன. அவை யாவும் அரச நிர்வாகப் பகுதிகளாகும். இந்த கபடத்தனமான செயற்பாடுகளுக்கு அரசு அகப்பட வேண்டியதில்லை.

சுட்டபழம்
நன்றி தினக்குரல்

Print this item

  þò¾¡Ä¢Â¢ø 2 ¾Á¢ú ¦Àñ¸û «ÊòÐ즸¡¨Ä..
Posted by: Danklas - 03-21-2005, 01:21 PM - Forum: புலம் - Replies (8)

இத்தாலியில் இலங்கை தமிழ்ப் பெண்கள் இருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் ரோம் நகரில் இடம் பெற்றுள்ள இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஹற்றன் வட்டவளையைச் சேர்ந்த குணவதி மேரி டயஸ் (வயது 50) அவரின் மகளான வயலட் மேரி தயாளன் (வயது 28 ) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

அண்மையில் திருமணம் செய்து ரோமில் வேறொரு இடத்தில் தனது கணவருடன் வாழ்ந்து வரும் குணவதியின் இன்னுமொரு மகளான அக்னஸ் மேரி வழங்கிய தகவலையடுத்தே பொலிஸாருக்கு இக் கொலைச் சம்பவங்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் வைத்து இவர்கள் இருவரும் அடித்து கொடுமைப்படுத்தப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கொலை செய்தவர்கள் யாரென இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தப் படுகொலை இடம்பெற்ற தினம், கணவருடன் வாழ்ந்து வரும் அக்னஸ் மேரி தாயாருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தொலைபேசி மணி தொடர்ந்து அடித்த போதும் பதில்கள் எதுவும் வரவில்லை. இதனால் குழப்பமடைந்த அவர், தாயார் வேலை செய்யும் இடத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அன்று வேலைக்கு வரவில்லை என்று பதில் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மறுநாள் அவர் தாயார் வீட்டுக்கு நேரில் சென்று, பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தாயும் சகோதரியும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டுள்ளார்.

உடனடியாக இதுபற்றி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குணவதியின் சகோதரியான புஸ்பராணி என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

7 வருடங்களுக்கு முன்னரே இவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து இத்தாலிக்கு சென்று குடியேறியுள்ளனர். கொலை செய்யப்பட்டுள்ள குணவதியின் குடும்பத்திற்கும் புஸ்பராணியின் குடும்பத்திற்கும் இடையில் பிரச்சினைகள் இருந்து வந்ததும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

Print this item