![]() |
|
பிரிட்டிஷ் அரசு நிர்பந்தம் தொடர்பான ஊடகச் செய்திகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: பிரிட்டிஷ் அரசு நிர்பந்தம் தொடர்பான ஊடகச் செய்திகள் (/showthread.php?tid=4698) |
பிரிட்டிஷ் அரசு நிர்பந்தம் தொடர்பான ஊடகச் செய்திகள் - வியாசன் - 03-22-2005 பிரிட்டிஷ் அரசு நிர்பந்தம் தொடர்பான ஊடகச் செய்திகள்: பாலசிங்கம் மறுப்பு இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரை தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞரும்ää தத்துவாசிரியருமான அன்டன் பாலசிங்கத்தை பிரிட்டிஷ் அரசு நேரில் அழைத்து நிர்பந்தித்ததாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். இது குறித்து தமிழ்நெட் இணையத்தளம் மூலம் அன்டன் பாலசிங்கம் அளித்துள்ள விளக்கம்: கொழும்பிலிருந்து வெளியாகும் ~சண்டே லீடர்| பத்திரிகையில் ஜெயதேவன் என்பவரை தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டும் என்று என்னை பிரிட்டிஷ் அரசு நிர்பந்தித்தாக கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல். எந்தச் சூழ்நிலையிலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜெயதேவன்ää சிறீலங்கா மற்றும் இங்கிலாந்தில் செயற்பட்டது குறித்து என்னிடம் பேசியது இல்லை. அமைதிப் பேச்சுகளின் தலைமைப் பொறுப்பில் உள்ள வகையில் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டுவருகிறேனே தவிர ஜெயதேவன் விவகாரம் குறித்து ஒருபோதும் கேள்வி எழுப்பப்படவில்லை. அண்மையில் ~சண்டே லீடர்| ஆசிரியர் என்னைத் தொடர்பு கொண்டு நீண்ட நேர்காணல் குறித்து பேசினார். அப்போதுகூட இப்பிரச்சினை குறித்து என்னிடம் ~சண்டே லீடர்| ஆசிரியர் கேள்வி எழுப்பாதது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. 1999 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இங்கிலாந்துக்குப் போனது முதல் அது என் வீடாகவும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் சுமூக உறவையுமே கொண்டு இருக்கிறேன் என்றார் அவர். சுட்டபழம் நனறி புதினம் |