![]() |
|
விதவைகள் மறுமணம் புரியலாமா.............? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: விதவைகள் மறுமணம் புரியலாமா.............? (/showthread.php?tid=4700) Pages:
1
2
|
விதவைகள் மறுமணம் புரியலாமா.............? - MUGATHTHAR - 03-22-2005 இண்டைய காலத்திலை சீதனம் , தகுந்த வரன் பொருந்தாமை காரணமாக நிறைய பிள்ளைகள் முதிர் கன்னிகளாகவே இருக்குதுகள் அதை ஒரு சைட்டிலை விடுவம்.....நம்மடை சமுதாயத்திலை இன்னுமோரு பிரச்சனை இருக்கிறது நிறைப்பேருக்கு தெரியாது....அதுதான் விதவைகள் மறுவாழ்வு.........இண்டைக்கு நம்ம நாட்டிலை யுத்தத்தாலையும் , அண்மையில் ஏற்பட்ட அனத்தத்தாலையும் நிறைய பொம்பிளை பிள்ளைகள் தங்கடை வாழ்க்கை துணையை இழந்து நிக்கிறாங்க (ஆண்களும் தான் அதை பிறகு பாப்பாம்)..இப்ப நான் உங்கக்கிட்டை கேக்கிற விசயம் எண்ணெண்டால் <b> 1. இந்தப் பிள்ளைகள் மறுமணம் புரியலாமா.............? 2. இவர்களை மறுமணம் புரிய இளைஞர்கள் முன்வருவார்களா..? 3.அப்பிடி முன்வரும் இளைஞர்களை இந்த சமுதாயம் எத்தகைய கண்ணோட்டத்துடன் பார்க்கும்........?</b> சும்மா ஆக்கள் பாக்கிற களம் எண்டுட்டு அள்ளி விடாமல் உங்கடை சொந்தக் க்ருத்துக்ளைச் சொல்லுங்கோ......... [b](குறிப்பு:----இப்பிடி முன்வரும் இளைஞர்களிடமிருந்து புரோக்கர் கொமிசன் அறவிடப்படமாட்டாது---முகத்தார்) - shobana - 03-22-2005 வணக்கம் இங்கு இது என்னுடைய சொந்தக்கருத்துத்தான்... நான் நேரே பார்த்த உண்மைச்சம்பவம் ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார் இறக்கும் போது அவர்களுக்கு 3 பிள்ளைகள்.. அப்பெண்ணின் ஒருவர் மறுமணம் செய்ய விரும்பி அப்பெண்ணின் குடும்பத்தினரின் விருப்பத்துடன் அப்பெண்ணை மறுமணம் செய்து இப்போது மிகச்சந்தோசமாக இருக்கிறார்கள்.. அப்பெண்ணின் 3 பிள்ளைகளும் பெண்ணின் சகோதரங்களுடன் தான் வளர்ந்தார்கள் இப்போதும் இப்படித்தான் இருக்கிறார்கள்... அப்பிள்ளைகள் கூட நல்ல நிலையில ;தான் இருக்கிறார்கள்.... ஆனால் ஆரம்பத்தில் இந்த மறுமணத்தை சுற்றம் வெறுத்தது இப்போது அப்படியில்லை... என்னுடைய கண்ணோட்டத்தில் பார்க்கப்போனால் மறுமணம் என்பது வரவேற்கத்தக்கவிடயம்.... ஆனால் இந்த சமுதாயத்தல் அதை வெறுக்கும் குறுகிய மனங்கொண்ட மக்கள் இருக்கிறார்கள் என்பது கவலைப்படவேண்டிய ஒரு விடயம் தான்.... பெண்ணிற்கு மட்டுமன்றி ஆணுக்கும் மறுமணம் என்பது வரவேற்கத்தக்க விடயம் தான்... - வியாசன் - 03-22-2005 முகத்தார் நல்ல விடயத்தை தொட்டிருக்கிறீர்கள். திருமணமாகி மனைவிகளை இழந்த ஆண்கள் சும்மாவா இருக்கிறார்கள். அந்திரிட்டி முடிஞ்சகையோடை பெண் பார்க்க தொடங்கி விடுகினம். பிள்ளையள் இருந்தால் அதை பார்க்க (?) தாய்வேணுமெண்டு கதை விடுவம். .பிள்ளையள் இல்லையெண்டால் சந்ததி இல்லாமல் போய்விடும் அதுக்காக கலியாணம் செய்யவேணும் எண்டு கதைவிடுவம். இந்த பிரச்சனைகள் பெண்களுக்கும் உண்டு. முகத்தார் எங்கடை சனங்கள் இப்ப மாறிக்கொண்டு வருகினம். முழுவதுமாக மாறகொஞ்சக்காலம் செல்லும். விவகாரத்து செய்தவர்கள் விடயத்தில் சில பிரச்சனைகள் வர இடமுண்டு .ஆனால் விதவைகளை திருமணம் செய்வதால் பிரச்சனைகள் வராது.ஒரு கன்னிப்பெண்ணை திருமணம் செய்தால் கூட அவர்களுக்கு முன்னால் ஒரு கதையும் போகவிட்டு ஒரு கதையும் கதைக்கிற உலகம் இது. முகத்தார் ஒரு பெண் திருமணத்துக்கு வாழ்ந்த வாழ்கையைவிட திருமணத்துக்கு பிறகு எப்படி வாழ்கிறாள் என்பதுதான் முக்கியம். எனக்கு தெரிந்த இடத்தில் ஒரு தம்பதிகள் இருக்கிறார்கள். அவருக்கு ஒரு தம்பி இருக்கிறார். அண்ணனுக்கு இரவுவேலை வரும்போதுதான் தம்பி வந்து தங்குவார். இப்படி அசிங்கமாக வாழ்வதைவிட ஒரு ஒழுங்கான விதவையை திருமணம் செய்து வாழ்வது எவ்வளவோ நல்லது. திருமணம் செய்தபிறகு ஆணோ பெண்ணோ திருமணபந்தத்தில் இருந்து கொண்டு வேறொருவரை நாடுதல் குடும்பத்திற்கு உகந்தது அல்ல. இதுதான் அவமானம். பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடித்தால் யாருக்கும் தெரியாதா? பெரும்பாலும் துணையை இழந்தவர்கள் இன்னொரு துணையை இழந்தவர்களை திருமணம் செய்தால் கூடுதலான ஆறுதலாக இருக்குமென நினைக்கிறேன். - kirubans - 03-22-2005 விதவைகளும், தபுதாரர்களும், விவாகரத்து புரிந்தவர்களும் தற்போது தனியாகத்தான் வாழவேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாடு இல்லை. முன்பு சமூகத்தில் இருந்து ஒதுக்கிவிட்டனர், இப்போது அப்பிடி இல்லை. மனமொத்த வாழ்வுதான் முக்கியம். என்றாலும் குழந்தைகள் உள்ளவர்களை திருமணம் புரியும் ஆண்களை "மாட்டையும் கண்டையும் அவிழ்த்துக் கொண்டு வந்திட்டார்" என்று சொல்லுபர்கள் சிலர் இப்போதும் உண்டு. - Velu - 03-22-2005 Not brothers Not sisters Not parents Not neighbours Not city council Not the president Not you Not me BUT the WOMEN DECIDE ON THIS ISSU. Thank U, Velu - thivakar - 03-22-2005 இளைஞர்கள் தயார் தான் ஆனால் இந்த சமுதாயத்துக்கு அதை ஏற்றுக்கொள்ள இன்னும் காலமாற்றங்கள் தேவைப்படுகிறது - manimaran - 03-22-2005 சுனாமியால் தமது மனைவிமாரை இழந்து தவிக்கும் தபுதாரர்களைப்பற்றிய செய்தியொன்று http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4360345.stm - ammuu - 03-22-2005 என்னுடைய கண்ணோட்டத்தில் பார்க்கப்போனால் மறுமணம் என்பது வரவேற்கத்தக்கவிடயம்.... - anpagam - 03-22-2005 நாகரீகம் தொழில்நுட்பம் சமுதாயவளர்சிகளை எந்த இன மொழி மத அரச இயக்கங்களாலும் கட்டுப்படுத்தவோ தடைசெய்யவோ (முற்றாக) முடியாது. :| - eelapirean - 03-22-2005 கன்னியாகவே இருந்து விட்டு கோகலாம்.ஆனால் வயதில் குறைந்தவர்கள் விதவைகளாக இருக்கவே கூடாது. :roll: :roll: :roll: - shobana - 03-22-2005 ஏன் அப்படிக்கூறுகிறீர்கள் - eelapirean - 03-22-2005 சொறி சிரங்கை சொறியாமல் இருக்கலாம்.சொறியத் தொடங்கினால் மீட்சி இல்லை. :roll: :roll: - shiyam - 03-22-2005 தாராளமாகவிதைவைகள் மறுமணம் புரியலாம் பலஇளைஞர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் சமூதாயம் என்பது தெருநாய் மாதிரி நீங்கள் ஒடினால் அது உங்களை விட்டு கலைக்கும் நின்று குனிந்து ஒரு கல்லை தூக்கினால் அது ஓடிவிடும். - kirubans - 03-22-2005 eelapirean Wrote:சொறி சிரங்கை சொறியாமல் இருக்கலாம்.சொறியத் தொடங்கினால் மீட்சி இல்லை.என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சாடையாக விளங்குகின்றது. திருமணம் செய்து விட்டுத் தனிய வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள் (விதவை, புருஷனை வெளிநாட்டுக்கு விட்டுவிட்டு ஊரில் தனிய இருக்கும் இளம்பெண்கள்), கட்டாயம் வேலி தாண்டுவினம் என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே. இதற்கு நான் பதில் எழுதினால் யாழ் களம் நாறிப் போயிடும். :twisted: - eelapirean - 03-22-2005 காய்த்த மரத்துக்கு தான் கல் எறி விழும். - வியாசன் - 03-22-2005 ஐயோ கிருபன் இஞ்சை சனங்கள் புருசனுடன் வாழும்போதே வேலிதாண்டுகினம். மனைவியரை விட்டுவிட்டு வெளிநாடு வந்த ஆண்கள் இங்கு சும்மாவா இருக்கினம் . கையிலை தாராளமாக பணம் புரளுது. விலைமாதர்கள் இருக்கினம் வடிகாலுக்கு. புருசன் வெளிநாடுகளில் 5 6 வருடங்கள் இருக்கும்போது அந்த பெண்களுக்கும் உணர்ச்சிகள் தூண்டப்படும் அவர்களுக்கும் ஆசைகள் வரும்தானே? இதை நான் சரியெண்டும் சொல்லவில்லை தப்பெண்டும் சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை திருமணத்தின் பின் வேறு உறவுகள் பிரச்சனைக்கு வழிவகுக்கும். வேலி நாங்களாகவே இட்டுக்கொள்வது. அதைத்தாண்டுவது சுலபம் வேலிக்குள் வாழ்வது கொஞ்சம் சிரமம். வாழப் பழகிக்கொண்டால் அது சொர்க்கம் - jeya - 03-22-2005 அருமையான கருத்தாடலுக்குள் தேவையற்ற விடயத்தை புகுத்தவேண்டாம் :evil: :evil:
- sinnappu - 03-22-2005 முகத்தார் நான் சொல்லுறன்டாப்பா கட்டாயம் மறுமணம் செய்யோனும் இதில எந்த மாற்றமும் இல்லை யடாப்பா ஆணால் துனிவு வேணுமடாப்பா ம்ம் அவர்களும் வாழத்தானே வேணும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எட முகத்தான் மற்றவனைப்பற்றி அதாவது எந்த நா.... என்ன சொன்னாலும் நாம் செல்லும் வளி நேர் வளி எண்டா எல்லாம் வெற்றி தான்டாப்பா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnappu - 03-22-2005 Quote:eelapirean அப்பு என்னப்பு செய்ய வேணும் எண்டா அப்பு விதவையா போகினம் காலமப்பு ம் ம்
- sinnappu - 03-22-2005 Quote:eelapirean திருத்தவே ஏலாதாக்கம் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil: |