Yarl Forum
புலிகள்பகுதி மக்களுக்கு அரசு உதவவேண்டிய அவசியமில்லை .சங்கடத் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: புலிகள்பகுதி மக்களுக்கு அரசு உதவவேண்டிய அவசியமில்லை .சங்கடத் (/showthread.php?tid=4707)



புலிகள்பகுதி மக்களுக்கு அரசு உதவவேண்டிய அவசியமில்லை .சங்கடத் - வியாசன் - 03-21-2005

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கில்லை

புலிகளின் ஆயுத பலத்திற்கு பயப்படவேண்டாமென்கிறார் ஆனந்த சங்கரி

கடல்கோள் அனர்த்த நிவாரண உதவிகளை விநியோகிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பே தவிர புலிகளின் ஆயுதப் பலத்திற்கு பயந்து அவர்கள் நினைத்தபடி இதனைச் செய்ய முடியாதெனத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆனந்த சங்கரிஇ நிவாரணப் பணிகளுக்கான பொதுக் கட்டமைப்பினால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளிதழொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள ஆனந்த சங்கரி மேலும் கூறியுள்ளதாவது:

கடல்கோள் நிவாரணப் பணிகளுக்கென அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் பொதுக் கட்டமைப்பிற்கு நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன். இதை ஏற்படுத்துவதற்கு முன்பு இதில் ஏன் புலிகளை தொடர்புபடுத்த வேண்டுமென்பதை நாம் பார்க்க வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருப்பது வட மாகாணத்தின் மிகச் சிறிய பிரதேசமே. ஏனைய பிரதேசங்கள் அரசின் நிர்வாகத்திலேயே உள்ளன. எனவேஇ இவ்வாறானதொரு பின்னணியில் புலிகளின் ஆதரவு இல்லாமல் அரசுக்கு உதவிகளை வழங்க முடியும். அதேபோன்று புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு உதவிகளை வழங்க வேண்டியது அவர்களின் பொறுப்பாகும். அரசு அதற்கு உதவி வழங்க வேண்டிய அவசியமில்லை.

அரசு குறைந்தபட்சம் புலிகள் அமைப்பிற்கு எவ்வித உதவிகளையும் வழங்க வேண்டியதில்லை. அழிவுகளின் போது அவர்களுக்கு மக்களை காப்பாற்ற முடியவில்லையெனின் ஏன் அவர்கள் அப் பகுதியை நிர்வகிக்கின்றனர்?

பொதுக் கட்டமைப்பின் மூலம் சரியான முறையில் உதவிகளை விநியோகிப்பதற்கான வாய்ப்பு இல்லை. அத்தோடுஇ அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் இந்த பொதுக் கட்டமைப்பு சம்பந்தமாக இதுவரையில் இணக்கப்பாடு எதுவும் காணப்படவில்லை. எனினும்இ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. இதன் மூலம் புலிகள் தான் இன்னும் பலமடைவர்.

இதேவேளைஇ கடல்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். எனினும்இ அவற்றை புலிகளின் ஆயுத பலத்திற்கு பயந்து அவர்கள் நினைத்த படி செய்ய முடியாது. உதவிகளை விநியோகிப்பது அரசின் பொறுப்பு. புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் போர் நிறுத்தக் காலப் பகுதிகளிலேயே அதிகரித்துள்ளன. அவை யாவும் அரச நிர்வாகப் பகுதிகளாகும். இந்த கபடத்தனமான செயற்பாடுகளுக்கு அரசு அகப்பட வேண்டியதில்லை.

சுட்டபழம்
நன்றி தினக்குரல்


- eelapirean - 03-21-2005

:evil: :evil: :evil: :evil: :evil:


- pepsi - 03-21-2005

கயுத கசுமாளம் பேமாணி உன்மூஞ்சீல என் ...... கையவைக்க :twisted: :evil: :evil:


- hari - 03-22-2005

டக்ஸ் உங்கள் தோழர் செய்திருக்கின்ற காரியத்தை பார்த்தீர்களா? :evil:


- kavithan - 03-22-2005

hari Wrote:டக்ஸ் உங்கள் தோழர் செய்திருக்கின்ற காரியத்தை பார்த்தீர்களா? :evil:
:twisted:


- MUGATHTHAR - 03-22-2005

எங்களை போல வயசு வந்திட்டா..மனுசனுக்கு அறளை பேந்து போய் விடும் எண்டு சொல்லுவினம்...சங்கரியார் விசயத்திலை அது சரியாத்தான் கிடக்குதடா..............