Yarl Forum
þò¾¡Ä¢Â¢ø 2 ¾Á¢ú ¦Àñ¸û «ÊòÐ즸¡¨Ä.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: þò¾¡Ä¢Â¢ø 2 ¾Á¢ú ¦Àñ¸û «ÊòÐ즸¡¨Ä.. (/showthread.php?tid=4708)



þò¾¡Ä¢Â¢ø 2 ¾Á¢ú ¦Àñ¸û «ÊòÐ즸¡¨Ä.. - Danklas - 03-21-2005

இத்தாலியில் இலங்கை தமிழ்ப் பெண்கள் இருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் ரோம் நகரில் இடம் பெற்றுள்ள இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஹற்றன் வட்டவளையைச் சேர்ந்த குணவதி மேரி டயஸ் (வயது 50) அவரின் மகளான வயலட் மேரி தயாளன் (வயது 28 ) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

அண்மையில் திருமணம் செய்து ரோமில் வேறொரு இடத்தில் தனது கணவருடன் வாழ்ந்து வரும் குணவதியின் இன்னுமொரு மகளான அக்னஸ் மேரி வழங்கிய தகவலையடுத்தே பொலிஸாருக்கு இக் கொலைச் சம்பவங்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் வைத்து இவர்கள் இருவரும் அடித்து கொடுமைப்படுத்தப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கொலை செய்தவர்கள் யாரென இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தப் படுகொலை இடம்பெற்ற தினம், கணவருடன் வாழ்ந்து வரும் அக்னஸ் மேரி தாயாருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தொலைபேசி மணி தொடர்ந்து அடித்த போதும் பதில்கள் எதுவும் வரவில்லை. இதனால் குழப்பமடைந்த அவர், தாயார் வேலை செய்யும் இடத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அன்று வேலைக்கு வரவில்லை என்று பதில் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மறுநாள் அவர் தாயார் வீட்டுக்கு நேரில் சென்று, பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தாயும் சகோதரியும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டுள்ளார்.

உடனடியாக இதுபற்றி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குணவதியின் சகோதரியான புஸ்பராணி என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

7 வருடங்களுக்கு முன்னரே இவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து இத்தாலிக்கு சென்று குடியேறியுள்ளனர். கொலை செய்யப்பட்டுள்ள குணவதியின் குடும்பத்திற்கும் புஸ்பராணியின் குடும்பத்திற்கும் இடையில் பிரச்சினைகள் இருந்து வந்ததும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.


- tamilini - 03-21-2005

:? Confusedhock: Confusedhock: Confusedhock:


- shobana - 03-21-2005

சனம் இன்னும் திருந்தல....


- MUGATHTHAR - 03-21-2005

தம்பி டண் உன்ரை புலனாய்வு துறையை ஒருக்கா இத்தாலிக்கு அனுப்பினி எண்டால் அந்த பொலிஸ்காரங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்...


- KULAKADDAN - 03-21-2005

:evil: :evil:


- hari - 03-21-2005

Confusedhock: Confusedhock:


- shanmuhi - 03-21-2005

Confusedhock: Confusedhock: Confusedhock:


- yalie - 03-22-2005

பொது எதிரிக்குப் பயந்து இங்க ஓடி வந்து இப்பிடி அநியாயமா சாக வேண்டிக் கிடக்கு. தீர விசாரிச்சு அறியிற வரைக்கும் யாரையும் குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது.
அவர்கள் இருவரினதும் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்!


- sinnappu - 03-22-2005

ம் ம் திருந்தமாட்டான் பிடி பந்தயம் எண்டுறவங்களை என்ன செய்ய
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: