![]() |
|
கிழக்கே விஜயம்செய்ய வேண்டாமென அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கிழக்கே விஜயம்செய்ய வேண்டாமென அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக் (/showthread.php?tid=4725) |
கிழக்கே விஜயம்செய்ய வேண்டாமென அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக் - Nitharsan - 03-19-2005 இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்வது தொடர்பாக அமெரிக்கா, அதன் பிரஜைகளுக்கு பிரயாண எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்கா கோரியுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக குறிப்பாக அரசியல் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க மக்களுக்கு ஆலோசனை செய்ய விரும்புகின்றது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அமெரிக்கப் பிரஜைகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அரசியல் செயற்பாடுகளும் கூட்டங்களும் இப்பகுதியில் வன்முறைகளுக்கு காரணமாக மாறக் கூடும். அமெரிக்கப் பிரஜைகளை மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். கிழக்கு மாகாணத்தில், தனிப்பட்ட தொண்டர்களாக அமெரிக்க பிரஜைகளை பணிபுரிய வேண்டாமெனக் கேட்கிறோம். நன்றி: தினக்குரல்.கொம் நேசமுடன் நிதர்சன் |