![]() |
|
தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஏமாற்றி நிதிமோசடி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஏமாற்றி நிதிமோசடி (/showthread.php?tid=4731) |
தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஏமாற்றி நிதிமோசடி - eelapirean - 03-19-2005 தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஏமாற்றி நிதிமோசடி செய்தமையை ஒத்துக்கொண்ட நபர் விடுதலை மோசடி நிதியை மீள வழங்கவும் இணக்கம் (த.தர்மாஇ ரி.வில்சன்) தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஏமாற்றி நிதி மோசடி செய்ததாக கூறி பொலிஸாரிடம் சரணடைந்த எம்.பயாஸ் என்ற நபரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. மோசடியாக பெறப்பட்ட 4000 அமெரிக்க டொலர்களை தமிழர் புனர்வாழ்வு கழகத்திடம் ஒப்படைப்பதாக நீதிமன்றத்தில் உறுதியளித்ததையடுத்தே அவர் விடுவிக்கப்பட்டார். வடக்குகிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்க பால்டிமோர் தேவாலயத்தால் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதில் உதவிய போதே பதிவு செய்யப்பட்ட முகவரான தான் இம் மோசடியை புரிந்ததாக நீதிமன்றில் தெரிவித்து மோசடியாக பெறப்பட்ட பணத்தை மீள ஒப்படைப்பதாக நீதிவானுக்கு கூறினார். இதையடுத்தே கொழும்பு பிரதான நீதிவான் சரோஜினி குசல வீரவர்தன மேற்படி நபரை வழக்கிலிருந்து விடுவித்தார். ஆனால் இந்நிதி மோசடி குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி எதிர்வரும் 30ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இவ்விசாரணையின் போது தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஆஜரானார். -------------------------------------------------------------------------------- சுட்டது லீரகேசரி - tamilini - 03-19-2005 :evil: :evil: :evil: - hari - 03-19-2005 :evil: :evil: |