![]() |
|
கிளிநொச்;சி திரும்பினர் குவேனி உள்ளிட்ட 3 போராளிகள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கிளிநொச்;சி திரும்பினர் குவேனி உள்ளிட்ட 3 போராளிகள்! (/showthread.php?tid=4734) |
கிளிநொச்;சி திரும்பினர் குவேனி உள்ளிட்ட 3 போராளிகள்! - வியாசன் - 03-18-2005 கிளிநொச்சி திரும்பினர் குவேனி உள்ளிட்ட 3 போராளிகள்! கொழும்பிலுள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்;சை பெற்று வந்த விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி உட்பட மூன்று பெண் போராளிகளும் இன்று மாலை கிளிநொச்;சி திரும்பினர். சிறீலங்கா போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் கிளிநொச்;சி திரும்பிய இவர்களுக்கு ஓமந்தை வரை இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் அக்கரைபற்று - பொத்துவில் வீதியில் ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்த போது தம்பட்டையில் இனந் தெரியாத நபர் ஒருவரினால் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனி துணை பொறுப்பாளர் அகநிலா மற்றும் சசிமதி ஆகியோர் படுகாயமடைந்தனர். சுட்டபழம் நன்றி புதினம் |