![]() |
|
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாய்க்கு உதவ அனுமதி ஆனால்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: சுனாமியால் பாதிக்கப்பட்ட நாய்க்கு உதவ அனுமதி ஆனால்.. (/showthread.php?tid=4750) |
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாய்க்கு உதவ அனுமதி ஆனால்.. - வியாசன் - 03-16-2005 கடல்கோளால் பாதிப்புற்ற நாய்களுக்குகூட சர்வதேச சமூகம் உதவலாம் புலிகளுடன் தொடர்பு கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது ஜே.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீரவன்சகடல்கோளால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சர்வதேச சமூகம் உதவுவதை அனுமதிக்கலாம். ஆனால் பிரிவினைவாத புலிகளுக்கு உதவுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் இணைத்தலைவருமான விமல்வீரவன்ச தெரிவித்தார். இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசப்பற்றுள்ள தேச இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் விமல்வீரவன்ச தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சர்வதேச ரீதியில் கிடைத்த நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பான கணக்கறிக்கை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த வேண்டும். ஈழத்தை தோற்றுவிப்பதற்காக பிரபாகரனுக்கு நேரடியாக உதவி வழங்கும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் தகவல்களை திரட்டியுள்ளோம். எதிர்வரும் 21 ஆம் திகதி இதன் பெயர் பகிரங்கப்படுத்தப்படும். கடல்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியாது அரசாங்கம் திண்டாடுகிறது என்ற பிரசாரத்தை தமிழ்ச்செல்வன் வெளிநாடுகளில் மேற்கொள்கிறார். அவருடன் இணைந்து குமார் ரூபசிங்இ பாக்கிய சோதி சரவணமுத்துஇ ஜெயதேவ உயன்கொட போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் ஜாம்பவான்களும் அந்நிறுவனங்களும் இதே பிரசாரத்தையே மேற்கொண்டு வருகின்றன. திருகோணமலையில் யாருக்குமே தெரியாத கேள்விப்படாத பௌத்த தேரர் ஒருவரும் இவர்களின் பிரசாரத்தையே உண்ணாவிரதிகளுடன் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறானவர்களை தமது செயற்பாட்டை முன்னெடுக்க டொலர்களை கொடுத்து என். ஜீ. ஓ.க்கள் வாங்குகின்றன. இந்த என்.ஜீ.ஓ. மாபியாக் கும்பல் இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு நேரடியாக உதவி வருகின்றன. கடல்கோள் நிதிக்காக கிரிக்கட் போட்டி நடத்தப்பட்டதுஇ வேறு பல விதங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பணம் வந்து குவிந்தன. ஆனால்இ அனைத்தும் மீட்கப்படாத புலிகளின் பிரதேசங்களிலேயே செலவு செய்யப்படுகின்றன. முன்னைய காலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியில் ஈடுபட்டவர்களும்இ அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து பிரிவினைக்கான சதித்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எனவேஇ இவர்களின் செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்கக்கூடாது. கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதிக்கு முன்னர் 400 அரசசார்பற்ற நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருந்தன. இன்று அது 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவது தடைசெய்யப்பட்ட நிலையிலும் ஒரு நிறுவனம் "கம்பனி" என்ற பெயரில் பதிவு செய்து பிள்ளைகளை கடத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார். எல்லே குணவன்ச தேரர் இலங்கையை ஆட்சி செய்தவர்கள் செய்த தவறுகளால் இன்று எமது நாட்டின் உரிமையாளர்கள் யாரென்பதை கண்டுபிடிக்க முடியாதுள்ளது. கலைஇ கலாசாரம்இ பொருளாதாரம் அனைத்தும் சீரழிந்துவிட்டன. கடல்கோளுக்குப் பின்னர் உதவி என்ற பெயரில் நாட்டிற்குள் புகுந்தவர்கள் நேரடியாக பிரிவினைக்கு உதவி வருகின்றனர். இது தொடர்பான தகவல்களை பகிரங்கமாக வெளியிடுவோமென்றும் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். சுட்டபழம் நன்றி புதினம் - Danklas - 03-16-2005 «¼ôÀ¡Å¢ Å£ÃÅýº¡.. þùÅÇ× ¿¡Ùõ ¿¡Ûõ ¿£Ôõ ¿ñÀ÷¸Ç¡¸ þÕ󧾡Áö¡.. þÕó¾¡Öõ ¿£ þùÅÇ× ¦Àâ ¦À¡ö¨Â Á¨Èò¾¢Õì¸ Ü¼¡Ð.. «Ð¾¡ý þÄí¨¸Â¢ÖûÇ «ò¾¨É (¦º¡È¢¿¡ö, ¦ÅÈ¢¿¡ö)¿¡ö¸ÙìÌõ ¿£ ¾¡ý «ôÀ¡ ±ñÎȨ¾.. :oops: :evil: - MUGATHTHAR - 03-16-2005 கட்டேலை போவான்...முந்தி சோகுவரா பிரச்சனை காலத்திலை உவங்கடை பெரியவன் தாடி வள்த்தவன் பேரும் மறந்துபோச்சு...இங்கை சுன்னாகத்திலை தான் வந்து இருந்தவன் இப்ப எங்கடை பெடியளை பாத்து நாய் எண்ணவோ.....மவனே இஞ்சாலை பக்கம் வந்திஎண்டால் சங்குதான் உனக்கு... - Nilavan - 03-16-2005 இந்த நாய் தான் அது முகத்தார்! உவன்ர பெயர் ரோகண <img src='http://www.geocities.com/jvpsite/Rohana3.jpg' border='0' alt='user posted image'> இவனுகளுக்கு என்ன தகுதி இருக்கென்று கதைக்கிறாங்கள் என்று தெரியேல்ல நிலவன் - tamilini - 03-16-2005 யாரிவர்..?? நீதிபதியா..?? எங்கையோ பாத்த மாதிரியிருக்கு. :roll: . - ஊமை - 03-16-2005 இல்லை தமிழினி இவரைப் பார்க்க வில்லன் நடிகன் ஆனந்தராஜிற்கு திருடன் வேசம் போட்டமாதிரி இருக்கு. - shiyam - 03-17-2005 j v p யினை ஆரம்பித்தவர் ஆரம்பத்தில்இலங்கை தொழிலாளர் கட்சி தலைவர் சங்கானை சண்முக நாதனுடன் இணைந்து செயற்பட்டு தமிழருக்கு சுயாட்சிதேவையென்று சொன்னவர்பின்னர் வழமைபோல இனவாதியாக மாறி தமிழருக்கு இந்த நாட்டில் எதுவுமில்லையென்று சொன்னவர்.1965ல் இவரது கட்சி தொடங்கபட்டது என நினைக்கிறேன்.கட்சி தொடங்கிய காலத்திலிருந்து குழப்பம் தான் இவர்களது கொள்கை80களில் இலங்கை இராணுவம் மற்றும் போலீஸ் தேடியபோது plot இயக்கத்தால் சுண்ணாகத்தில்கொத்தியாவத்தை பகுதிகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்தவர் - vasisutha - 03-17-2005 Quote:இல்லை தமிழினி இவரைப் பார்க்க வில்லன் நடிகன் ஆனந்தராஜிற்கு திருடன் வேசம் போட்டமாதிரி இருக்கு<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Thusi - 03-18-2005 ரோகண விஜேவீரா இருந்த காலத்தில JVP இனவாதப் போக்கில் நடந்துகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர் ஓரளவிற்கு புரடச்சிகர முற்போக்கான சிந்தனையாளராய் இருந்திருக்கவேணும். ஆனால் இப்ப இருந்திருந்தால் என்ன மாதிரி மாறியிருப்பாரோ தெரியேல்லை? - Mathan - 03-19-2005 துசி குறிப்பிட்டது போல் ரோகண விஜயவீர காலத்தில் ஜேவிபி இனவாத போக்கை வெளிக்காட்டவில்லை. அப்போது அவர்களுடைய கொள்கை முதலாளித்துவத்திற்கும் அரசிற்கும் எதிராக இருந்தது. வேலை கிடைக்காத மற்றும் வறுமையில் வாடும் இளைஞர்கள் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள். பெரும்பாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் விரக்தியுற்று ஆள்பவர்களுக்கு எதிரான மனப்போக்குடன் ஜேவிபியில் சேர்ந்த இளைஞர்களிடையே மன உறுதி குறைவாக இருந்தது. இந்நிலையில் இலங்கை அரச படைகள் ஓரிரு ஜேவிபி உறுப்பினர்களை கைது செய்தால் அதன் தொடர்ச்சியாக பலரை கைது செய்ய கூடியதாக இருந்தது. உறுப்பினர்களிடையே மன உறுதியின்மை, பலமான தகவல் தொடர்பு கட்டமைப்பும் இல்லை. இவற்றை சாதகமாக வைத்து அரச படைகள் ஜேவிபியின் ஆயுத கட்டமைப்பை முறியடித்தன. அந்த நேரத்தில் இந்திய படைகள் தமிழர் பகுதிகளின் நிலைகொண்டிருந்ததால் இலங்கை அரச படைக்களுக்கு தெற்கில் மட்டும் கவனத்தை செலுத்த கூடியதாக இருந்தது. ஜேவிபியின் ஆயுத கட்டமைப்பு முறியடிக்கப்பட்ட பின்பு அது மெல்ல அரசியலில் இறங்கியது. அவர்கள் தாங்கள் ஊழல் அற்ற நாட்டை பற்றி சிந்திக்கும் அரசியல்வாதிகள் என்று மக்களுக்கு ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். ஐதேக மற்றும் சுதந்திர கட்சி மேல் அதிருப்தியுடன் இருப்பவர்கள் இவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள். ஜேவிபியின் ஒரே நோக்கம் ஆட்சியை கைப்பற்றுவது. அதற்கு அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதமே தமிழர்களுக்கு எதிரான போக்கு. மக்கள் மனதில் இனவாதத்தை விதைத்து பகைமையுணர்சியை தூண்டி அதில் தங்கள் ஆதரவை வளர்த்து ஆட்சியை பிடிக்க எத்தனிக்கின்றார்கள். நாளை சமாதானம் பேசி தமிழர்க்கு சுயாட்சி கொடுத்தால்தான் மக்கள் ஆதரவு கிடைக்கும் ஆட்சியை பிடிக்கலாம் என்றால் அதனையும் செய்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் புலிகளை எதிர்க்கவேண்டும் என்றோ அல்லது ஆதரிக்க வேண்டும் என்றோ கொள்கை ஏதும் இல்லை. எதை செய்தால் ஆட்சியை பிடிக்கலாமோ அதை செய்கின்றார்கள் செய்வார்கள். இதைதான் ஐதேக, சுதந்திரகட்சி முன்னர் செய்தார்கள். - Nitharsan - 03-19-2005 அவர்களை இலங்கைப் படைககளை விட ஐக்கய தேசியக் கட்சியின் குண்டர்களே அழித்தனர் என்று சொல்வரர்கள். கடந்த 2000 ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஒரு முறை ரணில் பேசுகையில் பழைய டயர்களை ஜே.வி.பி மறந்திருக்காது என்று? ஜே.வி.பியின் பிரச்சார செயலாளராய் இருக்கும் விமல் வீரவன்ச ஒரு சிறந்த சபச்சாளர் அவர் ஜே.வி.பியில் ஏற்ப்பட்ட கருத்து முரண்பாடுகளால் ஜே.வி.பியில் இருந்து வெளியேறினாார். பின் ஏனோ மீண்டும் அதில இணைந்து கொண்டார். அவர்களிடமிருந்து வெளியேறியவர்கள் தான் கிரு வானொலியை நடாத்தி வருகின்றனர். அவர்களின் ஏற்ப்பாட்டில் கடந்த வருடம் ஒரு உறவுப்பாலம் நிகழ்ச்சி நடைபெற்றபோது ஜே.வி.பியினர் தாக்குதல் நாடாத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பியில் உண்மையான கொள்கை மாறிவிட்டது. அதனையே இப்போது ஹிரு குழுவினர் தமது கொள்கையாக முன்னெடுக்கின்றனர்.... நேசமுடன் நிதர்சன் - Mathan - 03-19-2005 ஜேவிபி அழிப்பு நடவடிக்கைகள் தெற்கில் தொடர்ந்த போது பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் சந்தேகத்தில் பேரில் டயர் போட்டு எரித்து வெட்டி ஆற்றீல் வீசியும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் தெற்கு சோதனை சாவடிகளில் அடையாள அட்டையை பரிசோதித்து தமிழர்கள் என்றால் போக சொல்லிவிடுவார்கள். சிங்களவர்களை தடுத்து வைத்து சோதனை நடக்கும். சில சிங்களவர்கள் தமிழரை போல் வீபூதி அணிந்து சென்றதும் உண்டு. காலப்போக்கில் நிலைமை தலைகீழாக மாறி தமிழர்கள் கோயிலை விட்டு வெளில் வர முன்பு வீபூதியை அழித்து விட வேண்டியிருந்தது. - manimaran - 03-20-2005 Thusi Wrote:ரோகண விஜேவீரா இருந்த காலத்தில JVP இனவாதப் போக்கில் நடந்துகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர் ஓரளவிற்கு புரடச்சிகர முற்போக்கான சிந்தனையாளராய் இருந்திருக்கவேணும். ஆனால் இப்ப இருந்திருந்தால் என்ன மாதிரி மாறியிருப்பாரோ தெரியேல்லை? நான் கேள்விப்பட்டதிலிருந்து: JVPயில் அங்கத்தினராக சேர்வதற்கு முன்னர் அவர்களுக்கு ஆறு வகுப்புக்கள் நடாத்தப்பட்டது. அதில் ஆறாவது வகுப்பு இந்திய எதிர்ப்பினை அடிப்படையாக கொண்டது. இந்திய எதிர்ப்பில் தமிழின எதிர்ப்பு ஒரு முக்கிய அம்சம் என்பதை குறிப்பிடத்தேவையில்லை. எனது கருத்தின்படி ரோகணவின் காலத்தில் அவர்களால் தமிழின எதிர்ப்பை முற்றுமுழுதாக நடாத்தமுடியாததன் பிரதான காரணம் அவர்கள் அந்தக் காலத்தில் சிறிலங்கா அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தமையால் அவர்களால் தமிழின எதிர்ப்பை பெரிய உத்வேகத்துடன் கொண்டுநடாத்த முடியாதிருந்திருக்கலாம். |