Yarl Forum
HTML கற்போம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: HTML கற்போம் (/showthread.php?tid=4771)

Pages: 1 2 3 4


HTML கற்போம் - thamilvanan - 03-14-2005

இது ஒரு முயற்சி. HTML தொடர் ஒன்று எழுதுவோம் என்று ஒரு விசப்பரீட்சை . ஏன் விசப்பரீட்சை என்றால் நான் இப்பகுதியில் கற்றுக்கொண்டது எல்லாம் அனுபவம் தான். ஒரு பொழுதுபோக்காக கற்றுக்கொண்டதுதான். எனவே முழுமையிருக்காது. நான் முன்னர் 50 -100 ரூபாக்கு என்று நினைக்கிறேன் "HTML கற்றுக்கொள்வது எப்படி?" என்று புத்தகம் வாங்கி படித்துவிட்டு ஆகா HTML படித்துவிட்டேன் என திருப்திப்பட்டேன். ஆனால் பின்னர் ஓரு வருடத்துக்கு பின்னர்தான் இன்னும் பலவிடயங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டேன்.

இணையத்தள வடிவமைப்பை பொறுத்தளவில் HTML அடிப்படையானது. பின்னர் கொஞ்சம் CSS கொஞ்சம் Javascript அறிந்து கொண்டால் தற்போது வலைத்தளம் வைத்திருப்பவர்கள் பல வடிவமைப்பை தங்களுக்கு ஏற்றவிதத்தில் ஏற்படுத்திக்கொள்ளலாம். எனவே முதலில் HTML தொடரை தொடர்கிறேன். இங்கு நான் HTML தொடரை முழுமையாக கற்றவனல்லன் என்பதையும் திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன என்பதையும்கவனத்தில் கொள்க.

முதலில் இணையத்தள வடிவமைப்புக்கு ஓரு பக்கத்தை வடிவமைப்பதை சம்பிராதயபூர்வமாக சொல்லவேண்டும் என்பதற்காக அதனை சொல்கிறேன். மற்றைய விடயங்களை ஒவ்வொரு தலைப்புகளாகவே தொடரும்.

001. முதல்பக்கம் வடிவமைத்தல்


<html>
<head>
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>

<body>
வணக்கம் இது HTML தொடர் - 01.
</body>
</html>

Notepad இல் பின்வரும் மீயுரையை பதிவுசெய்து அதனை உதாரணத்துக்கு myfirstpage.html என சேமித்துக்கொள்ளுங்கள். சேமித்துக்கொள்ளும்போது File Name என்ற பகுதியில் myfirstpage.html எனவும் Encoding எனும் இடத்தில் UTF-8 என்பதையும் தெரிவுசெய்துவிட்டபின்னர் Save ஐ அழுத்தவும்.
இங்கு மீயுரை இரண்டு முக்கியபகுதிகளை கொண்டுள்ளதை கவனிக்கலாம். ஒன்று body பகுதி மற்றயது head பகுதி ஆகும்.
<title>, </title> இவ்விரண்டுக்கும் இடையில் எழுதப்படும் பகுதி பிறவுசர் மேற்பகுதியில் தோன்றும். <body>, </body> இவ்விரண்டுக்கும் இடையில் எழுதப்படும் பகுதியே இடைமுகத்தில் தோன்றும்.

இப்போது சேமிக்கப்பட்ட கோப்பின் மீது இரட்டைகிளிக் செய்வதன் மூலம் இன்ரனெற் எக்ஸ்புளோறறில் உங்களுடைய முதல்பக்கத்தை பார்க்கலாம்.


- Mathan - 03-14-2005

தமிழ்வாணன், உங்களுடைய கருத்தை பிரித்து HTML கற்போம் என்ற தலைப்பில் தனியாக உருவாக்கியுள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள் .... வாழ்த்துக்கள்.


- yalie - 03-14-2005

நன்றி தமிழ்வாணன்!! ஆனால் இந்த மக்கு மண்டைக்கு ஆரம்பமே புரியவில்லை :roll:


- tamilini - 03-14-2005

முதல் பக்கத்தை எப்பவும் index.html அப்படி என்று சேமிக்க வேண்டும் அப்படியா..?? :roll:


- thamilvanan - 03-14-2005

தற்போது கற்கும் போது அனைத்தையும் சொல்லி குழப்பவிரும்பவில்லை. சாதாரண HTML இணையத்தளத்தில் index.html ஆனது முதல்பக்கமமாகும் . கற்கும்போது இப்போது தேவையில்லை. பின்னர் அங்கு செல்லலாம் அக்கா.


- yalini - 03-14-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- thamilvanan - 03-14-2005

யாழி(அக்காவோ அண்ணாவோ) நீங்கள் புரிந்துகொள்ள கஸரப்படுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்கிறேன். எங்கே விளங்கவில்லை என தெரியப்படுத்துங்கள். நன்றி.


- thamilvanan - 03-14-2005

HTML கற்பதற்கு குறைந்தளவு விடயங்கள்தான் உள்ளன. முதல் தொடரில் முதல் இணையப்பக்கத்தை தோன்ற செய்வதில் சிக்கல் இருப்பின் சொல்லவும்.


- hari - 03-14-2005

நன்றி தமிழ்வாணன்


- KULAKADDAN - 03-14-2005

நன்றி தமிழ்வாணன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Thusi - 03-14-2005

<body> வணக்கம் நல்வரவு ஆகுக </body>
இவ்வாறாக notepad இல் தமிழ் எழுத்துருவை மாற்றி அடிக்க முடியவில்லையே. :?: :?: :?:

:roll: :roll: :roll:


- Mathan - 03-14-2005

துசி,

நீங்கள் கீ மான் உபயோகித்தா தமிழில் எழுதுகின்றீர்கள்? அதில் பிரைச்சனை ஏதும் வராதே? என்ன பிரைச்சனை என்று விளக்கமாக சொல்லுங்கள்,


- kavithan - 03-15-2005

Thusi Wrote:<body> வணக்கம் நல்வரவு ஆகுக </body>
இவ்வாறாக notepad இல் தமிழ் எழுத்துருவை மாற்றி அடிக்க முடியவில்லையே. :?: :?: :?:

:roll: :roll: :roll:

துசியண்ணா எந்த மொழியிலாவது எழுதுங்கள் "வணக்கம் நல்வரவு" என்பது தமிழ்வாணன் இட்டது நீங்கள் அவர் சொன்ன கோட்டை மட்டும் கோட்டைவிடாமல் அடித்துவிட்டு மிகுதியை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி எழுதுங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- thamilvanan - 03-15-2005

<html>
<head>
<title></title>
</head>

<body>[/color]
வணக்கம் இது HTML தொடர் - 01.
</body>
</html>[/color]


மேலதிக விளக்கத்துக்காக மீண்டும் முதலாவது மீயுரையை மீண்டும் தருகிறேன்.
சிவப்பு எழுத்துக்களில் காட்டப்பட்டவற்றில் தற்போது எந்த மாற்றமும் செய்யவேண்டாம். நீல எழுத்துக்களில் காட்டப்பட்டவற்றில் நீங்கள் விரும்பியவாறு மாற்றம் செய்யலாம்.


- thamizh.nila - 03-15-2005

ஆரம்ப்பிச்சிடிங்களா? மிக்க நன்றி. நானும் வகுப்பில் உள்ளேன் அய்யா


- hari - 03-15-2005

ஈ-கலப்பையை பயண்படுத்தி தமிழில் எழுதும் போது இணையப்பக்கத்தில் தமிழ் எழுத்துரு தெரியவில்லை. ¬É¡Öõ ӾġÅÐ ¦¾¡¼÷ â÷ò¾¢¦ºöÐð¼ý!
<img src='http://img234.exs.cx/img234/9917/untitled9au.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 03-15-2005

Internet Explorerஇல் <b>View > Encoding > Unicode</b> என்று மாற்றம் செய்தீர்கள் என்றால் நீங்கள் வடிவமைத்த பக்கத்தை தமிழில் படிக்க கூடியதாக இருக்கும்


- hari - 03-15-2005

²ü¸É§Å «ôÀÊò¾¡ý þÕ츢ÈÐ!
<img src='http://img92.exs.cx/img92/4396/untitled4vj.jpg' border='0' alt='user posted image'>


- hari - 03-15-2005

யாழிலும் சில title இதே மாதிரி வருவதுண்டு,


- kavithan - 03-15-2005

மன்னா நீங்கள் பைலை சேவ் பண்ணும் போது UTF-8 என்று விட்டு பதுவு பண்ணுங்கள் சரியாகும்