Yarl Forum
தமிழும் கேரளமும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழும் கேரளமும் (/showthread.php?tid=4779)



தமிழும் கேரளமும் - stalin - 03-13-2005

இலங்கை தமிழ் மக்களின் உணவு பழக்கங்களும் கேரள மக்களினது ஒரேமாதிரியானவை. அதே போல் கல்வி அறிவு திரவியம் தேடும் முறை ஒத்துபோகிறது கேரளாவை சேரநாடு எனறு கூறுவார்கள். அத்துடன் அவர்களின் கண்ணகி வழிபாடு தாய் வழி பரம்பரை சொத்துமுறை அப்படி பல வாழ்க்கை முறைகள் அவர்களுடன் ஒத்துபோவதை ஈழத்தமிழர்களிடம் காணலாம்.எனது கேள்வி என்னெவெனில் தமிழ்நாட்டு மக்களை விட எப்படி கேரளாவுடன் ஒத்துபோகிறது


- thamilvanan - 03-13-2005

பல பழக்கங்கள் ஒத்துப்போகும் இலங்கைத்தமிழரகள் இந்தியா அல்லது மலேசியா போனால் இந்தியதமிழர்கள் கேட்பார்கள் உங்களுடைய பேச்சு மலையாளம் போல் இருக்கிறது என்பார்கள்.

அதுபோல ஈழத்தில் பாவனையில் உள்ள சொற்கள் மலையாளத்தில் இருக்கின்றன்.
உதாரணம். பறையடா - சொல்லடா
அம்மாவாணை - அம்மா மேல் சத்தியம்
இவை நான் ஒரு மலையாள படத்தில் பார்த்தேன்.

நல்ல விடயம் ஸ்ராலின்அண்ணா பாராட்டுகள்.


- KULAKADDAN - 03-13-2005

இதை பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் அவ்வாறான ஓரு எண்ணப்பாடு இருக்கிறது.
அதிகளவில் தேங்காய் பாவிப்பது
சோறு கறி எனும் சொற்பிரயோகம்-தமிழ் நாட்டில் சாதம் என்பர்
வீடுகளை சூழ வேலியடைக்கும் பழக்கம்
தமிழின் ழ உச்சரிப்பை அவ்வறே உச்சரிப்பது. நாம் சரியாக உச்சரிப்பதில்லை
ஈழத்தில் காணப்படும் மருத்துவிச்சியின் நாட்டர் பாடலான

மிளகு பொதியோடும் வந்தீரோ தம்பி மிளகு மலை நாடும் கண்டிரோ தம்பி ....................
போன்றவற்றை கூறுவர்


- eelapirean - 03-13-2005

தமிழில் இருந்து தானே மலையாளம் பிறந்ததாக கூறுகிறார்கள்.


- Mathuran - 03-13-2005

இருந்தும் ஈழத்தமிழர்களுக்கும் மலையாழத்தமிழர்களுக்கும் ஒற்றுமை அதிகம்போலத்தான் தோன்றுகின்றது. எனென்றால் அவர்களின் தொழில் முறைக்கும் ஈழத்தமிழர்களின் தொழில்முறைக்கும் சரியான ஒற்றுமை உண்டு. அதே போன்று ஈழத்தில் பாவிக்கபடும் சொல்லாம பறைதல் என்னும் சொல் தமிழ் நாட்டில் பாவனையில் இல்லாததை போன்று உணருகின்றேன். இவற்றினை கொஞ்சம் ஆழமாக ஆராய்தல் வேண்டும்.


tamil and kerala - stalin - 03-13-2005

ஈழ கேரள மக்களிடம் ஒத்து போகும் தன்மையை எமது விடுதலை போரட்டத்துக்கு எதிரான கருத்துக்கொணட பிராமணிய அரசியல்வாதிகளான சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் தப்பா பயன்படுத்தியதுணடு. ஒருமுறை சோ துக்ளக் கேள்வி பதிலில் கேரளத்தில் இருக்கும் ஈழவர் எனற தொழில் முறை பிரிப்பில் இருக்கும் இனத்துடன் இணைத்து கேலி செய்ததுணடு


பாம்பையோ பார்ப்பனீயத்தையோ முதலில் அடிக்க வேண்டுமென்றால் பார்ப்பனியத்தைத்தான் முதலில் அடக்கவேண்டும்----பெரியார்


tamil and kerala - stalin - 03-13-2005

ஈழப்பிரியன் தமிழிலிருந்து தான் மலையாளம் பிறந்தது தமிழ் மொழி தொன்மையானது. மலையாளம் புதிதாக உருவான மொழி . வடநாட்டு பிராமணரர்களின் ஆதி்க்கத்தின் பின் எழுத்து வடிவம் மாற்றப்பட்டது. இன்றும் கேரளாவில் சேர காலத்து கல்வெட்டுக்களில் பழைய காலத்து தமிழ் எழுத்து வடிவங்களை காணலாம்


- Jude - 03-13-2005

கேரளாவின் வரலாறு

கிறிஸ்துவுக்கு பின் 9ம் நூற்றாண்டில் மலையாளத்தின் வரலாறு ஆரம்பமானது. இந்த பிரதேசத்தில் உள்நாட்டு போரை தொடர்ந்து சேரமான் பெருமாள் சேர ஆட்சியை ஆரம்பித்தான். 1498ல் போர்த்துக்கேயர் கலிகட்டுக்கும் 1502 ல் கொச்சிக்கும் வந்தார்கள். இவர்கள் ஆட்சியை கைப்பற்றியதனால் கேரளா மலபார் அரசு, கொச்சி அரசு, திருவாங்கூர் அரசு என மூன்றாக பிரிந்தது. 1776ல் மலபார் அரசு ஹைடர் அலியின் ஆட்சியில் இருந்தது. 1792ல் திப்பு சுல்தான் பிரித்தானியரிடம் மலபாரை இழந்தான். மலபார் நேரடியாக பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வந்தது. கொச்சியும் திருவாங்கூரும் இளவரசர்களால் ஆளப்பட்டாலும் பிரித்தானியருக்கு கப்பம் செலுத்தி வந்தனர். 1949ல் மூன்று அரசுகளும் மீண்டும் ஒன்றாகி 1956ல் கேரள மாநிலமாக இந்திய இணையாட்சியில் இணைந்து கொண்டது.
ஆதாரம்: http://www.webindia123.com/kerala/history/history.htm