Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 520 online users.
» 0 Member(s) | 518 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  முருகன் தமிழ் கடவுளா? இல்லை தமிழரை காத்த போர் வீரனா?
Posted by: Mathuran - 03-13-2005, 02:06 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (37)

முருகன் தமிழ் கடவுள் என பலர் சொல்ல கேள்விப்பட்டது உண்டு. ஆனால் சிலரோ முருகன் என்பவர் ஆதிதமிழரை பிற எதிரிகளிடம் இருந்து காத்திட்ட மலையோன் என சொல்கின்றார்கள். இவற்றுள் ஏதும் உண்மை உண்டா? அவற்றிற்கான ஆதாரங்கங்ள் எங்கு பெற்றுக்கொள்ளலாம்?

:roll: :roll: :roll:

Print this item

  உலகத் தமிழினமே!
Posted by: hari - 03-13-2005, 06:58 AM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

<span style='color:red'>உலகத் தமிழினமே!
முழக்கம் இங்காகட்டும்.
முரசு உனதாகட்டும்.

[size=14]
வெளியில் வராத குரல்களாக
விழுங்கப்படுகிறது எம் வாழ்வு.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட தீராப்பிணியனின்
சிரிப்பு போலாச்சு எம் இருப்பு
யாரோடு நோகலாம்?
யார்க்கெடுத்துரைக்கலாம்?
எத் தெய்வம் சபித்தது எம் தலையில்?
தீவொன்றில் தனித்து விடப்பட்டவர்களாக நாங்கள்.
எவரெம் குரல்களை உலகுக்குச் சொல்வரோ?
எம்மை நோக்கி வையக விழிகள் எப்போ திறக்கும்?
இருபத்தோராம் நூற்றாண்டுக்கு
தாலி கட்டத் தயாராகிறது உலகம்.
பதினாறாம் நூற்றாண்டிற் படுத்துக் கிடக்கின்றோம் நாம்.
நிரவ முடியாத அகழி.
நினைக்க முடியாத தொலைவு.
குறுக்கு வெட்டாக துண்டிக்கப்பட்டவனே உயிர்க்கும் போது
நெருப்புச் சுட்ட புண்ணுக்கே எங்களுக்கு மருந்து கிடையாது.
உலகெங்கும் அடித்து விரட்டப்பட்ட மலேரியா கூட
ஓடிவந்து இங்கே தான் ஒதுங்கிகொண்டது
தடிமல் மருந்துக்கே தட்டுப்பாடு.
இங்கு மருத்துவர்கள் கைபிடிப்பது
வைத்தியம் செய்யவல்ல.
வெறும் மன நிறைவுக்கே.
சுக்கும், மிளகும், சுடுநீருமே உயிரைத் தாங்கிக்கொள்கிறது.
எத்தனைக்கென்று தான் அழுவது?
ஊற்றடைத்துக் கொண்டது விழிக்கிணறு.
உலகமேன் ஊமையானது?
பூமிப்பந்தின் பரப்பெங்கும் தமிழன் இருக்கின்றான்.
எம் குரல்கள் மட்டும் ஏன் கேட்கவில்லை?
உறக்கம் கலைக உலகமே.
இங்கே சேடமிழுத்துக் கிடக்கிறது மனிதப் பிண்டம்.
எமக்காகவும் எவரெனினும் பேசுங்களேன்.
உரிமைக் குரல் கொடுக்கும் ஒரு இனத்துக்கு
இதுதானா கதி?
ஆரோகணித்திருக்கச் சிம்மாசனமா கேட்டோம்?
கால் மடித்திருக்கக் கதிரை தானே கேட்கின்றோம்.
இதற்காகவா இந்தப் பாரச்சிலுவை?
இயக்கர்களாக அவர்களும்...
நாகர்களாக நாங்களும்..
இல்லையெனில்...
அவர்களாக அவர்களும்.....
நாங்களாக நாங்களும்
இதுவும் இல்லையெனில்
ஏதோ ஒரு வழியில்
ஒன்றாய் இருந்த வீட்டிற்தானே உரிமை கேட்கின்றோம்.
பாதிவீட்டை தந்தால் போதும்
மீதிவீடு அவர்களுக்குத்தானே
இந்தப் பிரிவிடுதலுக்கேன் இத்தனை கொதிப்பு?
மிஞ்சிய சோறுவாங்கிக் கும்பிடுபோடுவதற்கு
நாங்கள் இராப்பிச்சைகாரர்கள் அல்ல.
தாம்பத்தியம் தள்ளாடும் போது
விவாகரத்துத்தான் விமோசனம் அளிக்கும்.
சமாதானத் தூதர்கள் தோற்றுப்போனபோதும்,
பேச்சுவார்த்தை மேசையின் பூச்சழிந்த பின்னருமே
நாங்கள் போருக்கெழுந்தோம்.
இடிக்க வந்தது மாடு.
அடித்தோம்.
மாட்டுக்கு அடித்தல் பாவமென மனுப்போடுபவர்களே!
எங்கள் கூட்டையே குலைத்தது குரங்கு.
குரங்கையேன் நீங்கள் குற்றங் காணவில்லை?
யானை வந்தழிக்கிறது எங்கள் புலவை.
வெடிகொழித்திப் போடுகின்றோம்.
மிதிக்கும் போது ஊமையான வாய்கள்.
கலைக்கும் போது மட்டும் கண்டிக்கின்றன.
எருமைத்தோல் உடுத்தவனா தமிழன்?
சுரணையற்று கிடப்பதற்கு
உதைத்த காலுக்கு முத்தமிட்டுக் கிடந்த
ஒரு இனத்தின் ஓரத்தில்
நெருப்பு பொறியொன்று நீறுபூத்துக் கிடந்தது.
அது....... பிரபாகரன்.
கோபம் உரசிய போது தீக்குச்சி பற்றிக்கொண்டது.
இன்று தீச்சுவாலை முளாசி எறிகிறது.
தர்மயுத்தமென்பதே தமிழீழப்போரானது.
பாய்ச்சல் நடக்கும் போது
பாவ புண்ணியக் கணக்கு கொஞ்சம் கூடும், குறையும்.
அதற்கேன் இத்தனை ஒப்பாரி?
மரங்களை தறிக்காதே,
சூழலை மாசு செய்யாதே,
மிருகங்களை வதையாதே,
பூக்களை கிள்ளாதே என்று
குரல்கள் கேட்கின்றனவே.
ஈழத்தமிழனை எறித்து முடிக்காதேயென்று
உலக முகடையிடிக்கும் குரல்கள் எப்போது எழும்?
அவலக்குரலை எப்போது உலகமறியும்?
எல்லைகளை,
வேலிகளை,
வரம்புகளை கடந்து
ஈழத்தமிழரைத்தாங்க நீளும் கரங்கள்
எப்போது கிட்டும்?
அழியும் வரை போராடுவோம் என்பதில் அர்த்தம் கிடையாது.
கிட்டும் வரை எட்டுவோம்.
உயிரெனப்படுவது மானம்.
அதையிழந்து வாழ்வதென்பது சாவுக்குச் சமம்.
பெரும்புயலில் அல்லாடுகிறது எம் போர்ப்படகு.
கரையேறக் கயிறெறியுங்கள்
உலகத் தமிழனமே!
உன்போர் இது... உனக்கான போரிது.
முழக்கம் இங்காகட்டும்.
முரசு உனதாகட்டும்
எம்மை காசுக்கு யாசிக்கவிடாதே.
வாரிவழங்கு.
தாங்கும் தோள்களிலொன்று உந்தோளுமாகட்டும்.
மூட்டம் போட்ட மேகத்தைக் கலைத்து
உரிமைப் போருக்கு ஊட்டம் கொடு.
வாழ்ந்தான் தமிழனென வரலாறு எழுதப்படும் போது
முன்னுரையில் உன் பெயர் இருக்கட்டும்.
பரணிக்கு நாயகர்களைப் பாட
உலகெங்கும் உள்ள புலவர்களே எழுக.
பொய்மைத்திரி அணைந்து போக
உண்மையை வாயால் ஊதுங்கள்.
சத்தியம் ஜெயம்.</span>

புதுவை இரத்தினதுரை
புரட்டாதி, ஐப்பசி 1997

இக்கவிதை பற்றிய உங்கள் மதிப்பீட்டுக்கு இங்கு சொடுக்குங்கள்!

Print this item

  தமிழீழ விளையாட்டு தொடக்க விழா இன்று
Posted by: Mathuran - 03-13-2005, 04:19 AM - Forum: விளையாட்டு - Replies (1)

தமிழீழ விளையாட்டு தொடக்க விழா இன்று



http://www.tamilnaatham.com/photos/tro20050313/

நன்றி தமிழ்நாதம்

Print this item

  நான் யாழி
Posted by: yalie - 03-13-2005, 03:58 AM - Forum: அறிமுகம் - Replies (48)

Vanakam!
Naan Yalie! Miga neenda naatkala yarl kalathil nulaiya muyatchi seikinren. Innumey mudiyavillai. Neengal eppidiyo ulley vanthu vitirkal. Santhosam. Naan eppidi ulley varallm?????
:roll:

Print this item

  விஜயகாந்த்-திரிஷா ஜோடி
Posted by: Mathan - 03-13-2005, 01:54 AM - Forum: சினிமா - Replies (28)

சினிமா ஜோடிப்பொருத்தம் எப்படி இருக்கு?
-புழுங்கும் சினிமா ரசிகனின் மனநிலை

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2004/GAJENDRA.JPG' border='0' alt='user posted image'>

"அந்தப் பையனும், பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப பொருத்தமா இருக்கும்" -இரண்டு பெண்கள் தங்கள் கண்ணில்பட்ட ஜோடிகளுக்கு பொருத்தம் பார்த்து விவாதிப்பது ஒவ்வொரு வீட்டு வாசலிலும்,. தெருச்சந்திப்புகளிலும் நடக்கும் நிகழ்ச்சி. அதுவும் தாங்கள் பார்த்த தமிழ்சினிமாவின் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் உள்ள பொருத்தங்களை இவர்கள் அலசும் விதமே தனி. சில சமயங்களில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது வெகுஜனங்களின் அலசல்களில் பெரிய பூகம்பமே வெடிக்கும். அந்தளவுக்கு தாங்கள் பார்க்கும் ஆண்,பெண் இடையே பொருத்தங்களைப் பற்றி பேசாவிட்டால் சாப்பிட்ட உணவு நமக்குச் செரிக்காது. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த நம்மை திரைத்துறை நாயகர்களும் நாயகிகளும் ஏமாற்றாமல் உண்மையான தங்கள் வயதைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களா?

கமல்-ஸ்ரீதேவி மாதிரி ஒரு ஜோடி வருமா? சே. என்ன அருமையான ஜோடி என்று வியந்து பேசும் ஆண்-பெண்களுக்கு இன்றைய தமிழ்த்திரையின் ஜோடிப்பொருத்தம் பற்றி என்ன மனஓட்டம் இருக்கிறது?முகத்தின் சுருக்கங்களை மறைக்க ரோஸ் பவுடரைப் பூசிக்கொண்டு உதட்டைச் சுளித்தவாறு ஹீரோயின்களின் மனத்தைக் ஹீரோக்கள் கவர்ந்திழுப்பார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் மரங்களுக்குப் பதிலாக குரூப் டான்சர்களைச் சுற்றி ஓடுவதும், சில்மிஷங்களில் ஈடுபடுவதுமான கணங்களில் பாலின பேதம் பார்க்காமல் மக்கள் அனைவரும் சொக்கிவிடுவார்கள். உண்மையில் இன்றைய நாயகர்கள் தங்கள் வயதுக்குச் சமமான அல்லது பொருத்தமான நாயகிகளுடன் ஜோடி சேர்கிறார்களா?அந்தக்காலம் முதல் இன்று வரை ரசிகர்களுக்கு உண்மை கசப்பானதாகவே உள்ளது.

சமீபத்தில் வெளிவந்த சத்யராஜின் மகாநடிகன் படத்தில் நமீதாவும், மும்தாஜீம் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இந்த இரண்டு நடிகைகளும் அவரது மகன் சிபிராஜ் வயதுள்ள ஒருவருடன் ஜோடியாக நடிக்கும் கனவுடன்தான் கோலிவுட் ரயிலைப் பிடித்திருப்பார்கள். இதே போன்று 52 வயதான சரத்குமார் 18 வயது நயன்தாராவுடன் 'ஐயா' படத்தில் நடித்திருக்கிறார். விஜயகாந்த் 16 வயது ப்ரீத்தாவுடன் இணைந்து 'தர்மா' படத்தில் நடித்தார். கடைசியாக வெளிவந்த அவரது 'நெறஞ்ச மனசு'வில் நடித்த இரு நாயகிகளும் கல்லூரியில் படிப்பவர்கள் என்பதை பத்திரிகைகளுக்கு அந்தப் படத்தின் தயாரிப்புக்குழு பெருமையுடன் சொன்னது.

தங்கள் மகள் வயதுள்ள நடிகையுடன் ஜோடி சேர்வதை திரையில் பார்க்கும்போது உண்டாகும் அபத்தத்தை இவர்கள் உணரவில்லையா? அல்லது இதுதான் எனது புகழுக்கான அங்கீகாரம். இந்த சிறு தவறுகள் தனது இமேஜினால் ரசிகர்கள் மனதிலிருந்து மழுங்கடிக்கப்படும் என்று நம்புகிறார்களா? உண்மையில் இது பட்டியலிட்ட நடிகர்கள் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டு இல்லை. இதே நிலைமைதான் ஒவ்வொரு மொழியிலும் மூத்த தலைமுறை நடிகர்களின் படத்தில் நடிக்கும் நாயகிகளின் நிலை உள்ளது.

'ஒரு படத்திற்கான கதாநாயகியைத் தேர்வுசெய்யும்போது, கான்வென்ட் யூனிபார்மோடு இருக்குற போட்டோவா கொடுப்பா' எனக்கேட்டு வாங்கும் இன்றைய படத்தயாரிப்பு பெருச்சாளிகளின் சிந்தனையை எந்தப் பெரியாரை அழைத்துவந்து திருத்துவது? அப்படிப்பட்ட இளம் நாயகிகளைக் கொண்டு துள்ளும் இளமைப்படங்களை இவர்கள் எடுக்கப்போவதில்லை. பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லிவிட்டு வரும் பெரியமனிதரைக் காதலிக்கவோ. பத்துபேரை அடித்துப்போட்ட வீரத்தில் சொக்கிப்போய் விரகதாபம் ஏற்படும் பெண்ணாகத்தான் காண்பிப்பார்கள். இதனைப் பார்த்துவிட்டு அந்த ஜோடி சூப்பர் என்று சொல்லிவிட்டு தன் காதில் தானே பூவைச்சூடும் சாமன்ய மனிதனை என்னவென்று சொல்வது?

இந்த மாயச்சுழற்சி இப்போது மட்டும் உண்டானதில்லை. 1970களில் வெளிவந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் லதாவும் மஞ்சுளாவும் பின்பு அம்பிகா, ராதாவும் நடித்த கதை தனியே உண்டு. முதுமையில் வீட்டில் பேரன் பேத்திகளை கொஞ்சுபவர்கள் கேமிரா முன்னால் அதே வயதுள்ள குமரிகளுடன் கொஞ்சுவது கொஞ்சம் இடைவெளி விட்டு தற்போது தொடர்கதையாகியுள்ளது.

இதற்கு ஆணாதிக்கம் சார்ந்த, அடக்குமுறைகள் அதிகமுள்ள, நம் சமுதாயமும் ஒரு காரணம். 45 வயதுள்ள நடுத்தரவயது மனிதர் 18 வயதுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதை, மனதினுள் பல கிண்டல்களோடு வெளிப்பார்வையில் மகிழ்ச்சியோடு அட்சதை போடும் சமுதாயம் இது. இந்த ஏற்றுக்கொள்ளல்கள் முன்னதைக் காட்டிலும் பயங்கரமானது. அதன் தொடர்ச்சிதான் சினிமாத்திரையின் இந்த அபத்தங்களையும் நம்மை ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. அதனால் மாயத்திரையில் மரங்களைச் சுற்றி ஆடிப்பாடும் கிழவன்-குமரி வித்தியாசத்தை அவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் கவலைப்படுவதில்லை.

தற்போதுள்ள நம் தமிழ்க்கதாநாயகிகளில் ரம்யாகிருஷ்ணன், நதியா, சமீபத்தில் மறைந்த சௌந்தர்யா தவிர்த்து வயதானாலும் முக்கியத்துவமுள்ள பாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் மிகக்குறைவு.

ஆங்கிலப்படங்களில் 40 வயது ஜுலியாராபர்ட்ஸ், கேத்ரீன், நிக்கில் கிட்மேன் என்று இன்றும் கதையின் நாயகிகளாக நடிக்கும் பெரும் பட்டாளமே ஹாலிவுட்டில் உள்ளது. இங்கு? வடக்கே தயாராகும் ஹிந்திப்படங்களில் கூட இந்த நிலைமை அவ்வளவாக இல்லை. அங்கே நாற்பதைக் கடந்த ஷப்னா ஆஸ்மி, ரேகா, டிம்பிள் கபாடியா என்று மத்திய வயது நாயகிகளுக்கான முக்கியத்துவமும், வயதுக்கேற்ற நாயகி பாத்திரங்களும் குறையவில்லை. அவர்களுக்கென்று ஒரு இடம் எளிதில் கிடைத்து விடுகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகை ஒப்பிடும்போது இந்த மாதிரி அபத்தங்கள் அங்கு குறைவு. இங்கு அதே வயதுள்ள அல்லது குறைவான ஒரு நடிகை சக நடிகருக்கு அக்காவாகவோ, அண்ணியாகவோ, அம்மாவாகவோதான் நடிக்க முடியும். அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்த ராதா அப்படத்தின் கதாநாயகனான கார்த்திக்குடன் தற்போது நடித்தால் அம்மாவாகத்தான் நடிக்கமுடியும்.

சில காலங்களுக்கு தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினி ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் முத்து படத்தில் நடித்த மீனாவே தனக்கு அம்மாவாகவும் நடிக்க வேண்டும் என்று சொன்னது அவர் மனதில் இந்தப்பிரச்சினை குறித்த தெளிவான பதிலைத் தருகிறது.

ஹிந்திப்படங்களிலும் அமிதாப்பச்சன் கொய்ராலாக்களுடனும், ஷிரோத்கர்களுடனும் ஆடிப்பாடிக் களைத்த பிறகுதான் நரைத்த தலை கதாபாத்திரங்களுக்கு மாறினார். சிறிது தாமதமானாலும் அதே போன்ற நல்ல முடிவை இங்குள்ள நாயகர்களும் எடுத்தால் தேவலை. வீட்டில் கல்லூரி செல்லும் பையனுக்கு பாக்கெட் மணி கொடுத்துவிட்டு, அவன் கையில் சுற்றிக்கொண்டிருந்த நோட்புக் போன்ற ஒன்றை வாங்கிக்கொண்டு ஷ§ட்டிங் கிளம்பும் மூத்த தலைமுறை நாயகர்கள் தான் இங்கு அதிகம்.

சின்னத்திரையில் இதற்கு நேர் எதிரான காட்சி. முதிர்கன்னிகளான பின்பும் பெரிய திரை நாயகிகள் தங்கள் பெரிய சரீரத்துடன் சின்னத்திரையை ஆட்டுவிக்கிறார்கள். சமீபத்தில் முடிவடைந்த 'அண்ணாமலை' தொடரில் ராதிகாவின் ஜோடியாக நடித்தவர் ஷ்யாம் கணேஷ். இவர் வயதையத்த விஜய்யும் அஜீத்தும் இன்று இளமை நாயகர்களாக பெரியதிரையில் அடையாளம் காணப்படும் நிலையில் இவருக்கு இந்த நிலை. இதே போல் குட்டி பத்மினியின் துணையாகச் சில இளம் நாயகர்கள் நடித்ததுண்டு. பின் அவரும் சின்னத்திரையின் பின் இயக்கச் செயல்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். மீசை அரும்பும் இளைஞர்கள் இது போன்ற பெரிய கதாநாயகிகளின் கையில் சிக்குவது மெகா சீரியலின் தினசரிக் கொடுமை. அந்தக் கொடுமையை கண் இமைக்காமல் ரசித்து, முடிந்தால் அழுதும் விடுவார்கள் நம் ரசிகக் கண்மணிகள்.

கல்வியறிவு வளர்ச்சியடைந்து தன் வயதொத்த எதிர்பாலின இணையைத் தேடும் ஹை-டெக் கலாச்சாரத்தில் இதுபோன்ற அபத்தங்கள் கவனிக்கப்படுவதில்லையா? இல்லை., இது ஒன்றும் புதிதல்ல என்று புறக்கணிக்கிறார்களா? பெண்களின் மனதைப்போல் தமிழ்சினிமா ரசிகர்களின் தராசும் எப்போது எந்தப்பக்கம் சாயுமென யாருக்கும் தெரிவதில்லை.

தமிழ் இலக்கியத்தில் பொருந்தாக் காமம் என்கிற பெயரில் குழு மற்றும் வயது வித்தியாசத்துடன் காதல் கொள்வோரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.
இன்றைய தமிழ்த்திரையின் நாயக, நாயகியர்களின் ஜோடிப்பொருத்தம் அப்படிப்பட்ட பொருந்தாக் காதல்களின் ஒரு வகை நீட்சிதான். இடையறாது இது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே, நம் தமிழ் சினிமாவின் தற்போதைய மூத்த தலைமுறை ஜாம்பவான்களான ரஜினியுடனும் கமலுடனும் நடிப்பது பற்றி இளம் கதாநாயகிகள் சிலாகித்துப் பேட்டி கொடுப்பார்கள்? அருகிலேயே போன வருடத்து கல்லூரி அல்லது பள்ளிக்கால அனுபவங்களும் கேள்விகளாகக் கேட்கப்பட்டிருக்கும்.

எல்லாம் கலிகாலம்டா சாமி!

- உதய் பாடகலிங்கம் / தமிழ் சினிமா

Print this item

  உன் கண்கள் ஏன் இன்னும் கதை பேசுகிறது..??
Posted by: tamilini - 03-12-2005, 11:15 PM - Forum: கவிதை/பாடல் - Replies (76)

<b>என்றோ பழகியவன் நீ
என்னை விட்டுப்பிரிந்து
வருடங்கள் பல சென்றபின்
மீண்டும் கண்டேன்
மொட்டாகி காதல்
மலரானது எனக்குள் மட்டும்
எட்டாத தூரத்திற்கு - உன்னை
ஏற்றிச்சென்றது விதி
எங்கு சென்றாலும்
என்னை விட்டுப்பிரியாது
உன் நினைவு...
உனக்கென ஒரு
உறவு வந்தபின்
என்னை நான் மாற்றிக்கொண்டதாய்
எப்பவோ நினைத்துக்கொண்டேன்.
அது பொய் என
இன்று தான் புரிந்தேன்
உன்னைக்கண்டபின்
ஏக்கம் என் மனதில் தோன்றியபோது.

வாய் மொழியின்றி
பார்வையால் கதை பேசும்
கண்களும்.
பல் தெரியாமல்
பலரையும் கவர்ந்திழுக்கும்
உன் சிரிப்பும்.
தானே என்னை
உன்னை
நினைக்க வைத்தது
இன்னும் அப்படியே
அவைகள் உன்னுடன்

உற்று உற்று பாத்தேன்
உன்னில் மாற்றம் ஏதும்
உண்டா என்று.
உனக்கென ஒருத்தி
உறவாய் வந்தபின்னும்
உன் கண்கள்
ஏன் இன்னும்
என்னுடன்
கதை பேசுகிறது...??
காரணம் என்
காதல் கண்களா..??
இல்லை உனக்குள்ளும்
இன்னும் காதலா...??
உண்மை எதுவாய் இருந்தாலும்
நீ இன்னொருத்தியின் அவன்
எட்டவே நிக்கும்
என் காதல் உன்னைச்சுற்றி
என்னால் முடிந்தவரை
உனக்கு தொந்தரவின்றி...!</b>

கற்பனையாய் என்றோ கிறுக்கியது கண்டபடி நினைச்சிடாதீங்க.. ! ( :wink: )

Print this item

  கவிதை எழுதுவது எப்படி...? ? ?
Posted by: shanmuhi - 03-12-2005, 11:00 PM - Forum: கவிதை/பாடல் - Replies (27)

[b]கவிதை எழுதுவது எப்படி...? ? ?

கவிதை எழுதுவதில் புலமை பெற்ற வித்தகர்கள் இதற்கு விடை தருவார்களா...?

பலருக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் இருக்கும். கூடவே எழுத முடியாத நிலையும் இருக்கும்.

இதற்கு ஆலோசனைகள் கருத்துக்கள் கூறுவதன் மூலம் பல கவிஞர்களை எம் மத்தியில் உருவாக்க முடியும் அல்லவா...

Print this item

  புலப்பெயர்வாழ்வில் காதல்?
Posted by: KULAKADDAN - 03-12-2005, 05:50 PM - Forum: புலம் - Replies (14)

புலத்து காதல் அனுபவ சாலிகள் பதிலிறுப்பர்கள். பொறுத்திருங்க சாத்தான். ஆனா நம்ம கேள்வி ஞானத்தில
உங்கள் புண்ணியத்தில் புலத்து காதல் போழுதுபோக்காக நடப்பதாக தகவல்........... :wink: :wink:

Print this item

  இணைய ஒலிபரப்பை பதிவு செய்வது எப்படி?
Posted by: thamilvanan - 03-12-2005, 05:07 PM - Forum: இணையம் - Replies (10)

பிபிஸியில ஒரு பெட்டக நிகழ்ச்சி. முல்லைத்தீவு பயணம் பற்றிய பதிவாக நேற்று ஒலிபரப்பானது. நான் அதனை ஆவணப்படுத்த முயன்றேன். சரிவரவில்லை. அதனுடைய அடுத்த தொடர் இன்று ஒலிபரப்பாகும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் எப்படி இலகுவாக அவ்வாறான பதிவை Record செய்யலாம்.

இன்னும் அண்ணளவாக 2 மணித்தியாலம் தான் இருக்கு. முடிந்தால் உதவி செய்யுங்கள்.

தலைப்பை மாற்றியுள்ளேன் - மதன்

Print this item

  உருளைக்கிழங்கு பொரியல்
Posted by: thamizh.nila - 03-12-2005, 02:57 PM - Forum: சமையல் - Replies (48)

உருளைக்கிழங்கு பொரியல்

உருளைக்கிழங்கு
உப்பு
மிளகாய்தூள்
எண்ணெய் [மண்ணெண்ணையை தவிர சாப்பிட கூடிய எண்ணையாக இருந்தால் சரி]

1. உ.கி , தோலை சீவி, சுத்தம் செய்து.சிறு துண்டுகளாக நறுக்கவும்.

2. தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

3. எண்ணை மெல்லிய சூட்டை அடைந்ததும், கலவையை போட்டு 5 நிமிடங்களுக்கு பொரித்து எடுக்கவும்.

4. சாப்பிடுங்கோ

Print this item