Yarl Forum
விஜயகாந்த்-திரிஷா ஜோடி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: விஜயகாந்த்-திரிஷா ஜோடி (/showthread.php?tid=4784)

Pages: 1 2


விஜயகாந்த்-திரிஷா ஜோடி - Mathan - 03-13-2005

சினிமா ஜோடிப்பொருத்தம் எப்படி இருக்கு?
-புழுங்கும் சினிமா ரசிகனின் மனநிலை

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2004/GAJENDRA.JPG' border='0' alt='user posted image'>

"அந்தப் பையனும், பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப பொருத்தமா இருக்கும்" -இரண்டு பெண்கள் தங்கள் கண்ணில்பட்ட ஜோடிகளுக்கு பொருத்தம் பார்த்து விவாதிப்பது ஒவ்வொரு வீட்டு வாசலிலும்,. தெருச்சந்திப்புகளிலும் நடக்கும் நிகழ்ச்சி. அதுவும் தாங்கள் பார்த்த தமிழ்சினிமாவின் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் உள்ள பொருத்தங்களை இவர்கள் அலசும் விதமே தனி. சில சமயங்களில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது வெகுஜனங்களின் அலசல்களில் பெரிய பூகம்பமே வெடிக்கும். அந்தளவுக்கு தாங்கள் பார்க்கும் ஆண்,பெண் இடையே பொருத்தங்களைப் பற்றி பேசாவிட்டால் சாப்பிட்ட உணவு நமக்குச் செரிக்காது. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த நம்மை திரைத்துறை நாயகர்களும் நாயகிகளும் ஏமாற்றாமல் உண்மையான தங்கள் வயதைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களா?

கமல்-ஸ்ரீதேவி மாதிரி ஒரு ஜோடி வருமா? சே. என்ன அருமையான ஜோடி என்று வியந்து பேசும் ஆண்-பெண்களுக்கு இன்றைய தமிழ்த்திரையின் ஜோடிப்பொருத்தம் பற்றி என்ன மனஓட்டம் இருக்கிறது?முகத்தின் சுருக்கங்களை மறைக்க ரோஸ் பவுடரைப் பூசிக்கொண்டு உதட்டைச் சுளித்தவாறு ஹீரோயின்களின் மனத்தைக் ஹீரோக்கள் கவர்ந்திழுப்பார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் மரங்களுக்குப் பதிலாக குரூப் டான்சர்களைச் சுற்றி ஓடுவதும், சில்மிஷங்களில் ஈடுபடுவதுமான கணங்களில் பாலின பேதம் பார்க்காமல் மக்கள் அனைவரும் சொக்கிவிடுவார்கள். உண்மையில் இன்றைய நாயகர்கள் தங்கள் வயதுக்குச் சமமான அல்லது பொருத்தமான நாயகிகளுடன் ஜோடி சேர்கிறார்களா?அந்தக்காலம் முதல் இன்று வரை ரசிகர்களுக்கு உண்மை கசப்பானதாகவே உள்ளது.

சமீபத்தில் வெளிவந்த சத்யராஜின் மகாநடிகன் படத்தில் நமீதாவும், மும்தாஜீம் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இந்த இரண்டு நடிகைகளும் அவரது மகன் சிபிராஜ் வயதுள்ள ஒருவருடன் ஜோடியாக நடிக்கும் கனவுடன்தான் கோலிவுட் ரயிலைப் பிடித்திருப்பார்கள். இதே போன்று 52 வயதான சரத்குமார் 18 வயது நயன்தாராவுடன் 'ஐயா' படத்தில் நடித்திருக்கிறார். விஜயகாந்த் 16 வயது ப்ரீத்தாவுடன் இணைந்து 'தர்மா' படத்தில் நடித்தார். கடைசியாக வெளிவந்த அவரது 'நெறஞ்ச மனசு'வில் நடித்த இரு நாயகிகளும் கல்லூரியில் படிப்பவர்கள் என்பதை பத்திரிகைகளுக்கு அந்தப் படத்தின் தயாரிப்புக்குழு பெருமையுடன் சொன்னது.

தங்கள் மகள் வயதுள்ள நடிகையுடன் ஜோடி சேர்வதை திரையில் பார்க்கும்போது உண்டாகும் அபத்தத்தை இவர்கள் உணரவில்லையா? அல்லது இதுதான் எனது புகழுக்கான அங்கீகாரம். இந்த சிறு தவறுகள் தனது இமேஜினால் ரசிகர்கள் மனதிலிருந்து மழுங்கடிக்கப்படும் என்று நம்புகிறார்களா? உண்மையில் இது பட்டியலிட்ட நடிகர்கள் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டு இல்லை. இதே நிலைமைதான் ஒவ்வொரு மொழியிலும் மூத்த தலைமுறை நடிகர்களின் படத்தில் நடிக்கும் நாயகிகளின் நிலை உள்ளது.

'ஒரு படத்திற்கான கதாநாயகியைத் தேர்வுசெய்யும்போது, கான்வென்ட் யூனிபார்மோடு இருக்குற போட்டோவா கொடுப்பா' எனக்கேட்டு வாங்கும் இன்றைய படத்தயாரிப்பு பெருச்சாளிகளின் சிந்தனையை எந்தப் பெரியாரை அழைத்துவந்து திருத்துவது? அப்படிப்பட்ட இளம் நாயகிகளைக் கொண்டு துள்ளும் இளமைப்படங்களை இவர்கள் எடுக்கப்போவதில்லை. பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லிவிட்டு வரும் பெரியமனிதரைக் காதலிக்கவோ. பத்துபேரை அடித்துப்போட்ட வீரத்தில் சொக்கிப்போய் விரகதாபம் ஏற்படும் பெண்ணாகத்தான் காண்பிப்பார்கள். இதனைப் பார்த்துவிட்டு அந்த ஜோடி சூப்பர் என்று சொல்லிவிட்டு தன் காதில் தானே பூவைச்சூடும் சாமன்ய மனிதனை என்னவென்று சொல்வது?

இந்த மாயச்சுழற்சி இப்போது மட்டும் உண்டானதில்லை. 1970களில் வெளிவந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் லதாவும் மஞ்சுளாவும் பின்பு அம்பிகா, ராதாவும் நடித்த கதை தனியே உண்டு. முதுமையில் வீட்டில் பேரன் பேத்திகளை கொஞ்சுபவர்கள் கேமிரா முன்னால் அதே வயதுள்ள குமரிகளுடன் கொஞ்சுவது கொஞ்சம் இடைவெளி விட்டு தற்போது தொடர்கதையாகியுள்ளது.

இதற்கு ஆணாதிக்கம் சார்ந்த, அடக்குமுறைகள் அதிகமுள்ள, நம் சமுதாயமும் ஒரு காரணம். 45 வயதுள்ள நடுத்தரவயது மனிதர் 18 வயதுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதை, மனதினுள் பல கிண்டல்களோடு வெளிப்பார்வையில் மகிழ்ச்சியோடு அட்சதை போடும் சமுதாயம் இது. இந்த ஏற்றுக்கொள்ளல்கள் முன்னதைக் காட்டிலும் பயங்கரமானது. அதன் தொடர்ச்சிதான் சினிமாத்திரையின் இந்த அபத்தங்களையும் நம்மை ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. அதனால் மாயத்திரையில் மரங்களைச் சுற்றி ஆடிப்பாடும் கிழவன்-குமரி வித்தியாசத்தை அவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் கவலைப்படுவதில்லை.

தற்போதுள்ள நம் தமிழ்க்கதாநாயகிகளில் ரம்யாகிருஷ்ணன், நதியா, சமீபத்தில் மறைந்த சௌந்தர்யா தவிர்த்து வயதானாலும் முக்கியத்துவமுள்ள பாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் மிகக்குறைவு.

ஆங்கிலப்படங்களில் 40 வயது ஜுலியாராபர்ட்ஸ், கேத்ரீன், நிக்கில் கிட்மேன் என்று இன்றும் கதையின் நாயகிகளாக நடிக்கும் பெரும் பட்டாளமே ஹாலிவுட்டில் உள்ளது. இங்கு? வடக்கே தயாராகும் ஹிந்திப்படங்களில் கூட இந்த நிலைமை அவ்வளவாக இல்லை. அங்கே நாற்பதைக் கடந்த ஷப்னா ஆஸ்மி, ரேகா, டிம்பிள் கபாடியா என்று மத்திய வயது நாயகிகளுக்கான முக்கியத்துவமும், வயதுக்கேற்ற நாயகி பாத்திரங்களும் குறையவில்லை. அவர்களுக்கென்று ஒரு இடம் எளிதில் கிடைத்து விடுகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகை ஒப்பிடும்போது இந்த மாதிரி அபத்தங்கள் அங்கு குறைவு. இங்கு அதே வயதுள்ள அல்லது குறைவான ஒரு நடிகை சக நடிகருக்கு அக்காவாகவோ, அண்ணியாகவோ, அம்மாவாகவோதான் நடிக்க முடியும். அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்த ராதா அப்படத்தின் கதாநாயகனான கார்த்திக்குடன் தற்போது நடித்தால் அம்மாவாகத்தான் நடிக்கமுடியும்.

சில காலங்களுக்கு தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினி ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் முத்து படத்தில் நடித்த மீனாவே தனக்கு அம்மாவாகவும் நடிக்க வேண்டும் என்று சொன்னது அவர் மனதில் இந்தப்பிரச்சினை குறித்த தெளிவான பதிலைத் தருகிறது.

ஹிந்திப்படங்களிலும் அமிதாப்பச்சன் கொய்ராலாக்களுடனும், ஷிரோத்கர்களுடனும் ஆடிப்பாடிக் களைத்த பிறகுதான் நரைத்த தலை கதாபாத்திரங்களுக்கு மாறினார். சிறிது தாமதமானாலும் அதே போன்ற நல்ல முடிவை இங்குள்ள நாயகர்களும் எடுத்தால் தேவலை. வீட்டில் கல்லூரி செல்லும் பையனுக்கு பாக்கெட் மணி கொடுத்துவிட்டு, அவன் கையில் சுற்றிக்கொண்டிருந்த நோட்புக் போன்ற ஒன்றை வாங்கிக்கொண்டு ஷ§ட்டிங் கிளம்பும் மூத்த தலைமுறை நாயகர்கள் தான் இங்கு அதிகம்.

சின்னத்திரையில் இதற்கு நேர் எதிரான காட்சி. முதிர்கன்னிகளான பின்பும் பெரிய திரை நாயகிகள் தங்கள் பெரிய சரீரத்துடன் சின்னத்திரையை ஆட்டுவிக்கிறார்கள். சமீபத்தில் முடிவடைந்த 'அண்ணாமலை' தொடரில் ராதிகாவின் ஜோடியாக நடித்தவர் ஷ்யாம் கணேஷ். இவர் வயதையத்த விஜய்யும் அஜீத்தும் இன்று இளமை நாயகர்களாக பெரியதிரையில் அடையாளம் காணப்படும் நிலையில் இவருக்கு இந்த நிலை. இதே போல் குட்டி பத்மினியின் துணையாகச் சில இளம் நாயகர்கள் நடித்ததுண்டு. பின் அவரும் சின்னத்திரையின் பின் இயக்கச் செயல்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். மீசை அரும்பும் இளைஞர்கள் இது போன்ற பெரிய கதாநாயகிகளின் கையில் சிக்குவது மெகா சீரியலின் தினசரிக் கொடுமை. அந்தக் கொடுமையை கண் இமைக்காமல் ரசித்து, முடிந்தால் அழுதும் விடுவார்கள் நம் ரசிகக் கண்மணிகள்.

கல்வியறிவு வளர்ச்சியடைந்து தன் வயதொத்த எதிர்பாலின இணையைத் தேடும் ஹை-டெக் கலாச்சாரத்தில் இதுபோன்ற அபத்தங்கள் கவனிக்கப்படுவதில்லையா? இல்லை., இது ஒன்றும் புதிதல்ல என்று புறக்கணிக்கிறார்களா? பெண்களின் மனதைப்போல் தமிழ்சினிமா ரசிகர்களின் தராசும் எப்போது எந்தப்பக்கம் சாயுமென யாருக்கும் தெரிவதில்லை.

தமிழ் இலக்கியத்தில் பொருந்தாக் காமம் என்கிற பெயரில் குழு மற்றும் வயது வித்தியாசத்துடன் காதல் கொள்வோரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.
இன்றைய தமிழ்த்திரையின் நாயக, நாயகியர்களின் ஜோடிப்பொருத்தம் அப்படிப்பட்ட பொருந்தாக் காதல்களின் ஒரு வகை நீட்சிதான். இடையறாது இது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே, நம் தமிழ் சினிமாவின் தற்போதைய மூத்த தலைமுறை ஜாம்பவான்களான ரஜினியுடனும் கமலுடனும் நடிப்பது பற்றி இளம் கதாநாயகிகள் சிலாகித்துப் பேட்டி கொடுப்பார்கள்? அருகிலேயே போன வருடத்து கல்லூரி அல்லது பள்ளிக்கால அனுபவங்களும் கேள்விகளாகக் கேட்கப்பட்டிருக்கும்.

எல்லாம் கலிகாலம்டா சாமி!

- உதய் பாடகலிங்கம் / தமிழ் சினிமா


- KULAKADDAN - 03-13-2005

என்ன மதனுக்கும் வயிறெரியிற மாதிரிகிடக்கு போல........ :wink: .
இந்த அவலத்தை இப்ப தான் இவங்களுக்கு புரியுதோ........... :evil: :evil:


- kavithan - 03-13-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kirubans - 03-13-2005

தமிழ்நாட்டுத் தலைவரின் புதுப்படத்திலும் நயந்தரா என்ற இளவயது நடிகை நாயகியாக வருகிறார். :roll: கையைச் சுற்றவே சுளுக்கிக்கொள்ளும் தலைவருக்கு 20 வயது ஜோடி. :wink: :mrgreen:


- Mathuran - 03-13-2005

கட்ட்டுரையாளர் எதையோ உள் மனதில் வைத்து கல்லை எறிகின்றார். சிறுவயது பென்களுடன் வயதில் கூடிய ஆண்கள். அதாவது அப்பெண்களின் தகப்பன் வயதினை ஒத்தவர்கள் சேர்ந்து நடிப்பது மிகவும் தவறு என்பதை சுட்டிகாட்டியிருக்கின்றமையால் அவரைப்பாராட்டலாம். அதே நேரத்தில் கட்டுரையாளர் கமலையும் றஜனியையும் காப்பாற்றிட முயன்றாரோ என்கின்ற சந்தேகம் வலுக்கின்றது. எடுத்த எடுப்பிலேயே கமலை பாராட்டியும் சத்தியராஜை விமர்சிக்கும் போக்கினை காட்டிட முனைந்தார். அதாவது சிறீதெவிக்கும் கமலகாசனுக்கும் அன்றய நாட்களில் இருந்த சோடிப் பொருத்தம். சத்திய ராஜ் போன்ற நடிகர்களுக்கு இல்லை என்பதைப்போல காட்டிட முயன்றிருக்கின்றார். கமலகாசனுக்கும் சத்தியராஜுக்கும் பெரிய வயது வித்தியாசம் அல்ல. கமல் இன்று அடிக்கும் கூத்தை விமர்சிக்காமல் கட்டுரையாளர் விட்டது எதேர்ச்சியாக நடந்த ஒரு விடயமல்ல. அடுத்தது விஜயகாந்த் 16 வயது பெண்களுடன் நடித்தார் ( இது கண்டிக்கப் பட வேண்டிய விடயம்) என்பதனை வரிக்கு வரி விடாமல் விளாசித்தள்ளும் கட்டுரையாளர். நயன் தாரவுடன் சந்திரமிகியில் றஜனி அடிக்கும் கூத்தினையோ. றஜனி அங்கிள் என்கின்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுடன் எஜமான் மற்றும் முத்து போன்ற படங்களில் அடித்த கூத்தினையோ, கூறாது விட்டது தவறுதலாக நடந்த ஒன்று அல்ல. அதாவது பாலச்சந்தரின் சீடர்களை காப்பாற்றுவதில் குறியாக இருக்கின்றன சில இந்திய திரை இணைய பத்திரிக்கைகள்.

வயதில் மிகவும் குறந்த நடிகைகளுடன், வயதில் முதிர்ந்த நடிகர்கள் நடிப்பதை தமிழ் ரசிகர்கள் என்றுமே விரும்ப மாட்டார்கள். தமிழ்த்திரை உலகம் இப்படியான கேலிக்கூத்திக்களை கை விட்டு மனிதத்துடன் நடந்துகொண்டால் அனைவரும் மகிழ்வர்.

:evil: :evil: :evil: :evil:


- kirubans - 03-13-2005

கவனித்தேன். ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு என்று கட்டுரையாளர் நினைத்திருக்கலாம். விசிலடிச்சான் குஞ்சுகள் கண்டாலும் ஆபத்தல்லவா.


- Mathuran - 03-13-2005

வணக்கம் கிருபான்ஸ் அண்ணா,

ஏன் சத்தியராச்சுக்கும் விஜயகாந்துக்கும் விசிலடிக்கும் குஞ்சுகள் இல்லையோ? இல்லை அவர்கள்தான் சின்ன இடமோ?


- Mathan - 03-13-2005

KULAKADDAN Wrote:என்ன மதனுக்கும் வயிறெரியிற மாதிரிகிடக்கு போல........ :wink:

போகிற போக்கில் விஜயகாந்த் திரிஷாவுடனும் நடித்துவிடுவார் போல் இருக்கின்றது :evil:


- thamizh.nila - 03-13-2005

அவை நடிச்சத பார்க்கிறதுவள தான் சொல்லனும்... :twisted:


- Mathan - 03-13-2005

Mathuran Wrote:கட்ட்டுரையாளர் எதையோ உள் மனதில் வைத்து கல்லை எறிகின்றார். சிறுவயது பென்களுடன் வயதில் கூடிய ஆண்கள். அதாவது அப்பெண்களின் தகப்பன் வயதினை ஒத்தவர்கள் சேர்ந்து நடிப்பது மிகவும் தவறு என்பதை சுட்டிகாட்டியிருக்கின்றமையால் அவரைப்பாராட்டலாம். அதே நேரத்தில் கட்டுரையாளர் கமலையும் றஜனியையும் காப்பாற்றிட முயன்றாரோ என்கின்ற சந்தேகம் வலுக்கின்றது. எடுத்த எடுப்பிலேயே கமலை பாராட்டியும் சத்தியராஜை விமர்சிக்கும் போக்கினை காட்டிட முனைந்தார்.

எனக்கு அவர் ரஜனி கமலை காப்பாற்றிவிட முனைகின்றார் போல தெரியவில்லை. கமல் ஆரம்ப நாட்களில் ஜோடி பொருத்தம் நன்றாக இருந்தது என்று சொல்கின்றாரே தவிர தற்போதும் நன்றாக உள்ளது என்று சொல்லவில்லை, அது தவிர ரஜனியின் சிறுவயது பெண்களுடன் நடிக்கும் ஆர்வத்தை அவரின் கருத்து மூலமே வெளிப்படுத்துகின்றார்,

Quote:சில காலங்களுக்கு தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினி ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் முத்து படத்தில் நடித்த மீனாவே தனக்கு அம்மாவாகவும் நடிக்க வேண்டும் என்று சொன்னது அவர் மனதில் இந்தப்பிரச்சினை குறித்த தெளிவான பதிலைத் தருகிறது.

ரஜனி மகளாக நடித்த மீனாவும் ஜோடியாகவும் நடித்துவிட்டார், இப்போது மீனா தனக்கு தாயாக நடிக்கவேண்டும் என்று ரஜனிக்கு ஆசை என்றால் மீனாவை விட மிக குறைந்த வயதுள்ள நடிகையுடன் அவர் ஜோடியாக நடிக்க முயல்கின்றார் அல்லவா? :evil:


- Mathan - 03-13-2005

kirubans Wrote:கவனித்தேன். ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு என்று கட்டுரையாளர் நினைத்திருக்கலாம். விசிலடிச்சான் குஞ்சுகள் கண்டாலும் ஆபத்தல்லவா.

மதுரன் சொன்னதுபோல் விஜயகாந்திற்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றார்களே, அவர்களால் ஆபத்தில்லையே கட்டுரையாளருக்கு?
இந்த ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்துதான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து சுருட்டலாமா என்று யோசிக்கின்றார்,


- thamizh.nila - 03-13-2005

அவரின்ட மகளுக்கே வயது குறைந்த ஆணை தானே திருமணம் செய்து வைத்துள்ளார். இது குடும்ப பழக்கம் போல, எங்களுக்கு எதுக்கு வம்பு


- Mathan - 03-13-2005

ஐஸ்வர்யாவுக்கும் சிம்புவுக்கும் வயது வேறுபாடு அதிகமில்லை என்று நினைக்கின்றேன். அது தவிர பெண்ணுக்கு ஆணைவிட ஒரு சில வருடங்கள் வயது அதிகம் என்பதில் பிரைச்சனை ஏதும் இல்லை,


- Vasampu - 03-13-2005

ஐயோ ஐயோ ஆரம்பிச்சுட்டாங்க வயித்தெரிச்சலைக் கொட்ட. மதன் ஒரு பேச்சுக்கு கேட்கின்றேன் நீங்கள் குறிப்பிட்ட நடிகர்களெல்லாம் அவர்கள் வயலையொத்த பெண்களை கதாநாயகியாகப் போட்டால் எத்தனை பேர் படம் பார்ப்பீர்கள். பல பேர் கதாநாயகி கதைக்கு பொருந்துகின்றாவா என்பதை விட கதாநாயகியின் சதையைப் பார்க்கப் போவதால்த்தான் இந்த அவலம். பலருக்கு ஞாபகம் இருக்குமா தெரியவில்லை முன்பு எம்.ஜி.ஆர் எந்த இளம்நடிகையை தன்னுடன் ஜோடி போட்டாலும் உடன் அவரின் இரசிகர்கள் அந்த நடிகையை அண்ணி என அழைக்கத் தொடங்கி விடுவார்கள். நடிகர்கள் எதைச் செய்தாலும் வரவேற்க இரசிகர்கள் இருக்கும் மட்டும் இது தொடரும். இவற்றுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 03-13-2005

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...என்ன ஐஸ் அக்காவைப் பற்றி இதுக்க கதைக்கிறியள்...அவா உந்த லெவலுக்கெல்லாம் வரமாட்டா...ரஜனி தூண்டில் போடுத்தான் பாத்தவர்....போடா..நீயும் உன்ர சினிமாவும் என்று ராரா காட்டிட்டா அக்கா...! :wink:

திரிஷா என்ன சிநேகா என்ன...எல்லாம் துட்டுக்கு அலையிற...ஒருவகை துறவுகள்...அதுகளுக்கு உணர்ச்சியே இல்லாத போது பெரியவங்களச் குறை சொல்ல என்ன கிடக்கு....! இவை மாட்டம் எண்டா..இல்ல சினிமா வேண்டாம் என்றா..வா என்று கட்டாயமா படுத்தப் போறாங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- thivakar - 03-13-2005

Vasampu Wrote:நீங்கள் குறிப்பிட்ட நடிகர்களெல்லாம் அவர்கள் வயலையொத்த பெண்களை கதாநாயகியாகப் போட்டால் எத்தனை பேர் படம் பார்ப்பீர்கள். பல பேர் கதாநாயகி கதைக்கு பொருந்துகின்றாவா என்பதை விட கதாநாயகியின் சதையைப் பார்க்கப் போவதால்த்தான் இந்த அவலம்

அப்பிடி போடு மச்சி அருவாளை...எங்கடை அரைவாசி சனம் படம் பார்கிறதே..கண் கழுவுத்தான் இதில அரைகிழடுகளை போட்டு பணம் சம்பாதிக்கமுடியாதென தயாரிப்பாளர்களுக்கும் நல்லாவே தெரியும்


- thamizh.nila - 03-13-2005

எந்த ஐஸ்வர்யா பற்றி பேசுகிறீர்கள்?


- KULAKADDAN - 03-13-2005

Mathan Wrote:ஐஸ்வர்யாவுக்கும் சிம்புவுக்கும் வயது வேறுபாடு அதிகமில்லை என்று நினைக்கின்றேன். அது தவிர பெண்ணுக்கு ஆணைவிட ஒரு சில வருடங்கள் வயது அதிகம் என்பதில் பிரைச்சனை ஏதும் இல்லை,
என்ன மதன்.....தனுசிட்ட அடி வெண்டிற பிளானோ.............
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 03-13-2005

தவறுதலாக சொல்லிவிட்டேன் அது சிம்பு அல்ல தனுஷ்


- Mathan - 03-13-2005

thamizh.nila Wrote:எந்த ஐஸ்வர்யா பற்றி பேசுகிறீர்கள்?

ரஜனியின் மகள் ஐஸ்வர்யா. நீங்கள் அவரைத்தான் ஆரம்பத்தில் குறிப்படீர்கள் என நினைக்கின்றேன்.