![]() |
|
பெயர் மாறுகிறது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: பெயர் மாறுகிறது.. (/showthread.php?tid=4791) |
பெயர் மாறுகிறது.. - vasisutha - 03-12-2005 பி.எப். பெயர் மாறுகிறது.. மாட்டவே மாட்டேன், முடியவே முடியாது.. நாங்கெல்லாம் யாருக்கும் பணிய மாட்டோம் என்று வடிவேலு மாதிரி மார்தட்டிய எஸ்.ஜே. சூர்யா அந்தரத்தில் அப்படியே ஒரு அந்தர் பல்டி அடித்திருக்கிறார். பி.எப் என்ற தனது படத்தின் பெயரை மாற்ற முன் வந்திருக்கிறார். படத்துக்கு நல்ல தமிழ் பெயர் சூட்டுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு தரப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். படத்துக்கு பி.எப் என்று சுருக்கி பெயர் வைத்து தமிழகத்தில் வாய்களை விரிவாக விரிய வைத்தவர் சூர்யா. அய்யோ, இப்படி ஒரு பெயரா என்று அலறியவர்களுக்கு, இதுக்கு அர்த்தம் பெஸ்ட் பிரண்ட் தான். நீங்க நினைக்கிற மீனிங் இல்ல என்று வியாக்கியானம் சொன்னார். இதையடுத்து ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். சூட்டிங் ஸ்பாட்டுக்கே போய் சூர்யாவை 'செல்லமாய்' மிரட்டி வந்தனர் விடுதலைச் சிறுத்தைகள். இதைத் தொடர்ந்து படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் வைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவே, சூர்யா ரொம்ப குஷியானார். ஹீரோயின் நிலாவும் சூர்யாவும் சேர்ந்து கவர்ச்சி டொர்னடோவை தமிழகத்தில் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்ததால், படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இமயமான ஒரு இயக்குனர், சூர்யாவிடம் பேசியதாக சொல்கிறார்கள். தமிழின் அருமை பெருமைகள் குறித்து தனக்கேயுரிய பாணியில் யார் உணர்ச்சிக் கொந்தளிப்பாய் அவர் முழங்கியிருக்கிறார். தமிழிக்கு தமிழன் கேடு செய்யக் கூடாது என்று அவர் சொல்லி முடித்தபோது, மாத்திர்றேன் சார்.. மாத்திர்றேன் என்று பதில் தந்திருக்கிறார் சூர்யா. சொன்ன மாதிரியே படத்தின் பெயரை தமிழில் மாற்றிவிடும் முடிவுக்கு வந்திருக்கிறார். இந்தப் பொறுப்பை ரசிகர்களிடமே விட்டிருக்கிறார். படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசையும் அறிவித்திருக்கிறார் சூர்யா. இது குறித்து சூர்யா கூறுகையில், எல்லோரையும் குஷிப்படுத்த படம் எடுப்பவன் நான். அப்படித்தான் இதுவரை இருந்தேன். இனியும் அப்படியே இருப்பேன். நான் இயக்கி, தயாரித்து, நடிக்கும் படத்துக்கு பெஸ்ட் பிரண்ட் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தது தெரிந்தோ, தெரியாமலோ சிலரது உணர்வுகளைக் காயப்படுத்திவிட்டது. எல்லோரையும் மகிழ்விக்க முயல்பவன் நான். என்னால் யாரும் காயப்படக் கூடாது. இதனால் தலைப்பை மாற்ற முடிவு செய்துவிட்டேன். பொறுப்பை தமிழக மக்களிடமே ஒப்படைத்துவிட்டேன் என்றார். எங்கே.. சூர்யாவுக்கு எல்லோரும் ஜோரா ஒரு ஓ.. போடுங்க. அப்படியே ஒரு நல்ல தலைப்பச் சொல்லுங்க பார்ப்போம். thatstamil - hari - 03-12-2005 "வாழ்க தமிழ்" எப்படி பெயர்? தயவுசெய்து 1 லட்சத்தை அனுப்பிவையுங்கள்! - வியாசன் - 03-12-2005 hari Wrote:"வாழ்க தமிழ்" எப்படி பெயர்? தயவுசெய்து 1 லட்சத்தை அனுப்பிவையுங்கள்!வருமுன் காப்பான் தோழன் - kavithan - 03-14-2005 hari Wrote:"வாழ்க தமிழ்" எப்படி பெயர்? தயவுசெய்து 1 லட்சத்தை அனுப்பிவையுங்கள்! மன்னா தமிழில் பெயர் வைக்க வேண்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 03-14-2005 kavithan Wrote:என்ன "வாழ்க தமிழ்!" தமிழ் பெயரில்லையா? என்ன இழவு இது ?சரி வேற பெயர் வைப்போம்.. "வாழ்க உஜாலா" இது எப்படி இருக்கு?hari Wrote:"வாழ்க தமிழ்" எப்படி பெயர்? தயவுசெய்து 1 லட்சத்தை அனுப்பிவையுங்கள்! - vasisutha - 03-14-2005 'வால்க தமில்' இது சரியா கவிதன்?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->ஹரி நீங்க உஜாலாக்கு மாறிட்டீங்களா? :wink: - hari - 03-14-2005 உஜாலாவுக்கு மாறி இப்ப நான் பஜாருல குஜாலாக இருக்கிறன்! வசி இன்றில் இருந்து நாங்கள் இப்படியே சுத்த தமிழில் பேசுவோம். எவ்வளவு பசுந்தா இருக்கு! - Danklas - 03-14-2005 1.¡, 2.°, 3.², 4.àù, 5.«¼îº£, 6.ºí¸Ã¡Ó¸¢, þôÀÊ þ¾¢ø ¯ûÇ ¦ÀÂÕ¸û ²¾¡ÅÐ ¦À¡Õó¾¢É¡ø ¿ýÉ¡ þÕìÌõ. «øÄÐ «Îò¾ À¼òÐìÌ (Í÷¡Ţ§É¡ «øÄÐ ºí¸Ã¢ý) ¨Åì¸ ÓÂüº¢ ¦ºöÂÄ¡õ.. «ôÀʧ «ó¾ 1Äðºõ (2 Äðºõ þÄí¨¸ åÀ¡¨Å) ±ÉÐ À¢É¡Á¢ þóÐ Àò¾¢Ã¢¨¸ áõ þ¼õ ¦¸¡Îì¸×õ.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 03-15-2005 vasisutha Wrote:'வால்க தமில்' இது சரியா கவிதன்?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->ஹரி நீங்க உஜாலாக்கு மாறிட்டீங்களா? :wink: ஆகா..ஆகா.. வ்சி என்ன தமிழ்.. அசத்திட்டீங்க...மன்னருக்கு தமிழில் பெயர் சொல்ல சொன்னால் ஏதோ சொல்கிறார்... நான் சூரியாவாய் இருந்தால் உங்களுக்கு தான் ஒரு இலட்சம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆங்கிலப் பெயர் வைத்த தமிழ்ப் திரைப்படங்களுக்கு கனடாவில் தடை! - Nitharsan - 03-16-2005 ஆங்கிலப் பெயருர்களுடன் வரும் தமிழ் திரைப்படங்கள் கனடாவில் திரையிடப்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கழகத்தின் செயற்க்குழு கூட்டத்தில் இவ் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடாத்தும் ஆங்கிலப் பெயர்களுக்கெதிரான இப்போராட்டத்தை புகலிடத்தில் தமிழ் படைப்பாளிகள் கழகம் முன்னெடுக்க விருக்கிறது. தற்போது கனடாவில் நிறைவேற்றப்பட்டடுள்ள இத்தீர்மாம். தொடர்ந்து பிரித்தானியாவிலும் கொண்டு வரப்பட விருப்பதாக தமிழ் வார இதழ் ஒன்றிற்க்கு தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏனைய நாடுகளில் இருக்கும் சமுதாய நோக்கமுள்ள அமைப்புக்கள் ஆங்கிலப் பெயர் வைத்த தமிழ் திரைப்படங்களை எதிர்க்க முன்வரவேண்டும் என் வேண்டுகொள் விடுக்கிறோம். எதிர்வரும் இந்து வருடப்பிறப்பின் பொது வெளிவரவிருக்கும் இரண்டு ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் படங்களின் வெளியீட்டுக் கெதிராக தமிழ் நாட்டில் மட்டுமன்றி கனடாவிலும் போராட்டங்கள் நடைபெறவிருக்கிறது. நன்றி: வன்னித்தென்றல் நேசமுடன் நிதர்சன் அ ஆ - vasisutha - 04-09-2005 <b>சூர்யா படப்பெயர் மாறியது.</b> <img src='http://img107.exs.cx/img107/3978/p1772kc.jpg' border='0' alt='user posted image'> புதிய தலைப்பு <b>அ ஆ</b> ஆனந்தவிகடன் நடத்திய போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட இத்தலைப்பினை 191 பேர் எழுதி அனுப்பியிருந்தார்களாம். |