Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 499 online users.
» 0 Member(s) | 496 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,557
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  மகளீர் தினம் எதற்கு.. ??
Posted by: shiyam - 03-08-2005, 01:33 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (103)

என்ன தமிழினி மகளிர் தினத்திற்கு உங்கள் ஆக்கங்கள் எதையும் காணேல்லை ???

Print this item

  அனைத்துலக மகளீர் தின வாழ்த்துக்கள்
Posted by: shobana - 03-08-2005, 12:25 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (14)

யாழ் இணையத்தின் இணைந்துள்ள அனைத்து பெண் அங்கத்தவர்கருக்கும் இன்று அனைத்துலக மகளீர் தினத்தை ஒட்டி எனது இனிய மகளீர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்

நட்புடன்
சோபனா

----------------------- ------------------ -----------------

இளமை உள்ளமை புதுமை செய்திடவே

Print this item

  அகதிகள் மீது நடுக்கடலில் கொடுமை....!!!
Posted by: thivakar - 03-08-2005, 11:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

<b> தமிழகத்தில் இருந்து திரும்பிய அகதிகள் மீது நடுக்கடலில் கொடுமை </b>

ஆயுதபாணிகள் ஆண்களைக் கட்டிவைத்து பெண்கள் மீது பாலியல் இம்சை

தமிழ் நாட்டிலிருந்து படகில் தாயகம் திரும்பிய 50 இலங்கைத் தமிழ் அகதிகள் தலைமன்னார் கடற்பரப்பிலுள்ள மணல் திட்டொன்றில் இறக்கி விடப்பட்டதால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்களிடமிருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு பெண் அகதிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கொடுமையும் சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கிறது.

அகதிகள் மணல் திட்டில் நிராதரவாக இறக்கிவிடப்பட்டு ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் படகொன்றில் துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களுடன் வந்திறங்கிய மூவரே கொச்சைத் தமிழில் பேசியபடி நகை, பணம் உட்பட பெறுமதியான பொருட்களை அபகரித்ததுடன் பெண்களைத் தனிமைப்படுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;

இராமேஸ்வரத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் 50 அகதிகளும் தலா மூவாயிரம் இந்திய ரூபா வீதம் செலுத்தி இந்திய மீன்பிடிப் படகொன்றில் புறப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் சனிக்கிழமை காலை 7 மணியளவில் இந்திய கடற்பரப்பிலுள்ள மணற்திட்டியொன்றில் பலவந்தமாக இறக்கிவிட்டு இந்திய படகோட்டிகள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, நண்பகல் 11.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்த தனுஷ்கோடி மீனவர்கள் மீன்பிடிப்படகொன்று 4,500 இந்திய ரூபாவைப் பெற்று இலங்கைக்கு அண்மையிலுள்ள இன்னொரு மணற்திட்டியில் இவர்களை இறக்கிவிட்டுச் சென்றுள்ளது.

பசி, தண்ணீர்த் தாகம் என்பவற்றால் மணற்திட்டியில் பெண்கள், சிறுவர்கள் மயக்கமடைந்து தவித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பகுதிக்கு வந்த இன்னொரு இந்திய மீன்பிடி ரோலர் படகொன்று இவர்களிடம் 10 பவுண் தங்க நகை, 20 ஆயிரம் இந்திய ரூபா என்பவற்றைப் பெற்று தலைமன்னார் அருகேயுள்ள மணற்திட்டியொன்றில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளது.

சனிக்கிழமமை இரவு 9 மணியளவில் அவ்விடத்தில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட அகதிகள் தாகத்தாலும் களைப்பாலும் மயக்கமுற்றிருந்த வேளையில் திடீரென அங்கு படகொன்றில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் வந்திறங்கிய மூவர் அங்கிருந்தோரை விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து, 50 அகதிகளில் 23 ஆண்களையும் துப்பாக்கி முனையில் தனியாக அழைத்துச் சென்று அவர்களின் ஆடைகளைக் களைந்து அவற்றால் கைகளையும் கால்களையும் கட்டித் தாக்கிய பின்னர் அவர்களிடமிருந்த பணத்தை அபகரித்துள்ளனர்.

இதனையடுத்து, மணற்திட்டியின் வேறொரு பகுதிக்கு பெண்களையும் சிறுவர்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி அழைத்துச் சென்று பெண்களின் ஆடைகளைக் களைந்தெறிந்து சுமார் இரு மணிநேரம் பாலியல் இம்சையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், அழுது கூக்குரலிட வேண்டாமென்று தமது கைகளிலிருந்த பெரிய ரோச்லைட்டுகளால் பெண்கள் மீது கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இவர்களில் 5 பெண்கள் மிக மோசமான பாலியல் இம்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

சுமார் இரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண்களிடமிருந்த சுமார் 30 பவுண் தங்க நகைகள், பெறுமதியான பல பொருட்கள் என்பவற்றையும் அபகரித்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்ற போதிலும், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பசி, தாகத்தால் மயக்கமடைந்து மிகவும் பரிதாபகரமான நிலையில் கைவிடப்பட்டிருந்த இவர்களின் நிலையை அறிந்து உள்ளூர் மீனவர்கள் தலைமன்னார் பங்குக் குருவிற்கு வழங்கிய தகவலையடுத்தே பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தலைமன்னார் பங்குக்குருவின் ஏற்பாட்டில் 3 படகுகளில் சென்ற உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் இவர்கள் அனைவரையும் மீட்டுள்ளனர்.

தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் தமக்கு நேர்ந்த இந்த அவலங்கள் தொடர்பாக பொலிஸாரிடம் தெரிவிக்காமல் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிபதியிடமே தெரிவித்துள்ளனர்.

மன்னார் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்ட அகதிகள் தமக்கு நேர்ந்த அவலங்கள் தொடர்பாக முறையிட்டதையடுத்து, இவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக வாக்குமூலங்களைப் பெற்று எதிர்வரும் 18 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிப்பதுடன் குறிப்பிட்ட சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று நண்பகல் அகதிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியான வாக்குமூலங்களைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அகதிகளின் சார்பில் சட்டத்தரணிகள் ஏ.ஜே.ஜோன்தாசன், மாஷா ஜபருல்லா, ஜெபநேசன் லோகு ஆகியோர் ஆஜராகினர்.

மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களைச் சேர்ந்த இந்த அகதிகள் அனைவரும் 1990 களில் இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள ஈரோடு, சேலம், திண்டுக்கல் அகதிமுகாம்களில் வசித்தவர்கள் என்றும் தெரியவருகிறது.

தினக்குரல்

Print this item

  ஹரிணி
Posted by: Mathan - 03-08-2005, 11:46 AM - Forum: சினிமா - Replies (17)

ஜெனிலியா டிஸோஸா - ஒரு சுயபுராணம்

<img src='http://www.cise.ufl.edu/~dcc/tmp/genelia/genelia-dsouza-2.jpg' border='0' alt='user posted image'>

ஜெனிலியா டிஸோஸா! யார்யா இந்த அயல்நாட்டு மோகினி? 'பாய்ஸ்' படம் பார்த்தீர்களா.. அதன் நாயகி ஹரிணிதான் இந்த ஜெனிலியா டிஸோஸா. அம்மணியின் ஒரிஜினல் பெயர். சச்சினில் விஜய்யின் குட்டி இதயத்தில் காதல் சூடம் ஏற்றும் காதல் தேவதை. மொத்த ஊட்டியையும் ஏர் கண்டிஷன் செய்தமாதிரி 'ஜில்'லென்றிருக்கிறார். அழகான பெண்களின் அகராதியை தெரிவிப்பதை விட வேறு வேலை என்ன இருக்கிறது நமக்கு.

'பாய்ஸ்' படம் முடிந்ததும் தெலுங்கில் சில படங்கள் செய்தார் ஹரிணி. தமிழுக்கு இவரை மீண்டும் தள்ளிக் கொண்டு வந்த புண்ணியவான் இயக்குனர் ஜான்.

ஜெனிலியா டிஸோஸா, ஹரிணி என ஒன்றுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாலும் நெருக்கமானவர்கள் அழைப்பது சீனு. செல்லப் பெயராம்.

அவதரித்த நாள் ஆகஸ்ட் 5. வருடம்? அழகான உதடுகளை கடித்து அடிக்க வருகிறார்.

சரி, படிப்பு?

மேனேஜ்மென்ட் பட்டதாரி. நடிகைக்கு இதுவே அதிகம் என்பதால் இத்தோடு படிப்புக்கு டாட்டா. காதலுக்கு...?

பையன் இன்னும் மாட்டலையாம். அந்த அதிர்ஷ்டக்கார பையன் அட்ஜஸ்ட் பண்ண வேண்டிய இரண்டு ஜீவன்கள் இருக்கின்றன. பெப்பர் அண்டு லைக்கா. சாப்பிடுற ஐட்டமா என்று கிட்டே நெருங்கினால் நம்மை சாப்பிட்டு விடும். பெப்பரும், லைக்காவும் ஹரிணி வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிகள்.

இவரின் ஒரே அலர்ஜி செல்போன். இது வழியாகத்தான் நிறைய லவ் அப்ரோச்சர்ஸ் வருகிறதாம்.

ஸோ, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹரிணியின் மொபைல் நம்பர் சொல்வதற்கில்லை -- ஸாரி!

சினி சவுத்

Print this item

  AIDS
Posted by: tharma - 03-08-2005, 09:13 AM - Forum: மருத்துவம் - Replies (31)

AIDS ஏன் நுளம்பினால் பரவுவதில்லை,

Print this item

  யாழ் வலை வாசிகளுக்கு வணக்கம்.
Posted by: ஆனந்தன் - 03-08-2005, 08:14 AM - Forum: அறிமுகம் - Replies (43)

<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் வலை வாசிகளுக்கு வணக்கம்.
என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்</span>

Print this item

  வீணி என்ற படத்தை முற்றாக எடுத்திர்கள்
Posted by: simran2005 - 03-08-2005, 03:29 AM - Forum: குறும்படங்கள் - Replies (27)

யாழ் களம் நடத்தும் மோகனுக்கும் அதை சார்ந்த
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் எதை தணிக்கை
செய்வது அல்லது முற்றாக எடுப்பது என்று அறிந்து
உங்களுடைய களத்தை நடத்தவும்;


<span style='font-size:30pt;line-height:100%'>ஏன்வீணி என்ற படத்தை முற்றாக எடுத்திர்கள் உங்களை நினைத்து நான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  பாவிக்கப்பட்ட மின்கலங்களால் சூழல் மாசாக்கம்
Posted by: KULAKADDAN - 03-08-2005, 01:26 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

[size=18]பாவிக்கப்பட்ட மின்கலங்களால் சூழல் மாசாக்கம்

ஐரொப்பா மற்றும் வளர்ந்த நாடுகளில் காணப்படும் தரப்படுத்தி கழிவு சேகரிப்பு முறையைப் பார்த்தபோது எனது சிந்தனைக்கு எமது தாயகத்தில் பாவிக்கபட்ட மின்கலங்களை வீட்டு குப்பை கிடங்கில் எறிவதும் மனகண்ணில் நிழலாடியது.
இதை எழுதவும் துண்டியது.

பல்வேறுபட்ட மின்கலங்கள் பற்றி மேலோட்டமான ஒரு பார்வை
1. மூல மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
துத்த நாகம் ,மங்கனீரொட்சைட்டு, பொட்டாசியம் அல்லது சோடியம்ஐதரொட்சைட்டு

2. காபன் துத்த நாக மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
துத்த நாகம் . மங்கனீசு, அமோனியம் குளொரைட்டு, துத்த நாக குளொரைட்டு
3. ஈய அமில மின்கலம்
கொண்டுள்ள இரசாயனங்கள்
ஈயம், ஈயவீரோட்சைட், சல்பூரிக்கமிலம்
4. இலிதியம் மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
இலிதியம்-மங்கனீர்ஈரொட்சைட்டு, இலிதியம் சல்பரீரொட்சைட்,
தயோனைல் குளொரைட்ää இலிதியம்
5. மக்னீசிய மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
மக்னீசியம், மக்னீசியம் புரொமைட், அல்லது மக்னீசியம்
பேகுளோரைட்
6. பாதரச மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
பாதரசம், பாதரசஈரோட்சைட், பொட்டாசியம் ஐதரொட்சைட்
7. வெள்ளி மின்கலம்
கொண்டுள்ள இரசாயனங்கள்
நாகம் , வெள்ளி குளொரைட் இலிதியம் அல்லது துத்தநாக
குளொரைட், துத்தநாக சல்பைட்
8. நிக்கல்-கட்மிய மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
கட்மியம், நிக்கல் ஒட்சிஐதரோட்சைட், பொட்டாசியம்
ஐதரொட்சைட்
9. வெப்ப மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
கல்சியம், கல்சியம் குரொமேற், இலிதியம் குளொரைட், பொட்டாசியம் குளொரைட்

இம்மின்கலவகைகளில் பாதஇரசமின்கலங்கள் தற்போது பாவனையிலரிது.
தாயகத்தில் அதிகம் பாவனையிலுள்ளது காபன் துத்த நாக மின்கலங்கள் ,ஈய அமில மின்கலம் ஆகியவையாகும்.

இவை ஆங்காங்கு தரையில் வீசப்பட்டு கிடப்பது சாதாரணம். ஆதைவிட மண் வீடுகளில் சாணியுடன் காபன் துத்த நாக மின்கலங்களை உடைத்து பெறும் கரியை கலந்து கறுப்பு நிறத்துக்காக மெழுகுவார்கள்.
அமிலமின்கலத்தை வெட்டிதிறந்து அமிலத்தை தரையிலுற்றிவிட்டு , ஈயகழிவுகளையும் வீசிஎறிந்து விட்டு கோது துவிசக்கரவண்டித்திருத்தகங்களில் காற்று ஒழுக்கு சோதிக்க பயன்படும்.

இதன் பாதிப்பை அளவிட ஒரு சிறு கணிப்பு

உதாரணத்துக்கு யாழ்குடாநாட்டில் அனைத்து இடப்பெயாவுக்கும் முன் 10 இலட்சம் பேர் இருந்தார்கள் என கொள்வோம்
ஒரு குடும்பம் சராசரி 4 உறுப்பினர்களாலானது என வைத்தால்
250ää000 குடும்பங்கள்
இவற்றில் பாதி எண்ணிக்கையான குடும்பங்களே மின்கலத்தை பாவிப்பதாக கொண்டால் 125000
ஒவ்வொரு குடும்பமும் இரண்டு மாதத்துக்கு ஒருசொடி மின்கலங்கள் வீதம் பவித்தால்
இரண்டு மதத்தில் 125000 சோடி மின்கலங்கள் தரைக்கு பொகபோகிறது.

ஓருவருடத்தில் கணக்கு பாருங்கள்.
அதைவிட பாதை திறந்தபின் ஒருவாரமும் பாவனைக்கு தாக்கு பிடிக்காத மலிவு மின்கலங்கள் குடாநாட்டை ஆக்கிரமித்தது வேறுகதை.

பாதிப்புகள்
இவ்விரசாயன கூறுகள் மண்ணை மசாக்கம் செய்யலாம்
மழை நீரில் கழுவி செல்லப்பட்டு நீர்நிலைகள் மாசாக்கம்
நிலத்தடி நீர்வள மாசாக்கம்
உணவுசங்கிலியுடு கடத்தபட்டு உயர்விலங்களை பாதிக்கலாம்

குடாநாடின் நில்தடி நீர்வளம்
உவர் நீர் உட்புகல்
விவசாய செய்கையால் நைத்திரேற்று மாசாக்கம்
மலசலகூட குழிகளால் மாசாக்கம் அடைவது ஏற்கனவே நிருபிக்க பட்டது.
மின்கலமாசாக்கம் இன்னும் யாரது கவனத்துக்கும் வரவில்லை.
மின்கல பாவனையை கட்டுபடுத்த முடியாது ஆனால் கண்டபடி வீசியெறியாது விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

போருக்குள் அல்லது இப்போது இது சாத்தியமல்ல என கூறலாம். ஆனால் தாயகத்திற்கான எதிர்கால திட்டமிடலில் இது பற்றி கவனம் செலுத்தலாமில்லயா?

Print this item

  உணர்வாய் மொழியாய் உணர்வில் நிறைந்தாய்
Posted by: sayanthan - 03-07-2005, 09:14 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

இது சிங்கள மற்றும் தமிழ் மொழியில் இணைந்து பாடிய மென்மையான ஒரு காதல் பாடல். Mpeg வடிவில் இருக்கிறது. 40MB அளவுள்ளது. முடிந்தவர்கள் இறக்கி பாருங்கள். இது ஒரு சிங்களப் பாடல் இதையெல்லாம் இங்கே ஏன் இட்டாய் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..
பாடியவர்கள் பாத்தியா.. சந்துஷ்.. மற்றும் நிரோஷா..

இணைப்பு இதோ
http://www.engsoc.org/~seyone/uyiraai.mpeg

Print this item

  கேக் செய்வோம் வாங்களேன்
Posted by: shobana - 03-07-2005, 07:57 PM - Forum: சமையல் - Replies (41)

அன்பான உறவுகளே உங்களுக்கு கேக் செய்யும் முறை தெரிந்திருந்தால் கூறுங்களேள்..

Print this item