Yarl Forum
பதில் தருமா உலகு? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: பதில் தருமா உலகு? (/showthread.php?tid=4822)



பதில் தருமா உலகு? - Mathan - 03-10-2005

பதில் தருமா உலகு?

<i>தமிழ் மக்களின் மனிதாபிமான அவசர பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதான புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி பகிரங்க பேச்சுக்களுக்கு அரசு தயார்!

இலங்கையில் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க இது சரியான தருணம் அல்ல. புதுடில்லியில் கதிர்காமர் தெரிவிப்பு

இடைக்கால நிர்வாக சபை குறித்துப் பேசி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டால் உடனடியாக அரசிலிருந்து விலகுவோம் ஜே வி பி யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எச்சரிக்கை.

சமஷ்டித் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்ப்பேன். சந்திரிகா சபதம்.</i>

மேற்குறித்த செய்திகள் கடந்த சில நாட்களுக்குள் குறித்த இடைவெளிகளில் இலங்கை அரசியல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான சில செய்திகள்.

மூன்றாம் தர அரசியல் நாகரீகம் பின்பற்றப் படும் நாடுகளில் ஓர் இறுதி முடிவு குறித்து ஆளும் கட்சிகள் எதிர்க் கட்சிகள் எதிரிக்கட்சிகள் என்பவற்றுக்கிடையில் எழும் முரண்கள் தான் இவை என எவரேனும் நினைப்பின் அது தவறு.

இலங்கையை ஆளும் சிறீலங்கா மக்கள் சுதந்திர முன்னணி என்னும் கூட்டுக் கட்சியின் பல்வேறு பட்ட தரத்து நிலையிலானவர்கள் இனப்பிரச்சனைத் தீர்வு என்னும் பொது விடயம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களே இவை. தெளிவான ஒருமித்த கருத்தேதும் இன்றி ஆளாளுக்கு வாய்க்கு வந்த படி இனப்பிரச்சனை தொடர்பாக செய்தி வெளியிடுகின்ற கேலிக் கூத்தே அது.

இறுதிக் கட்டத்தில் இது தமிழர் தரப்பில் இப்படி ஒரு சந்தேகமாக எழுந்திருக்கிறது. அதாவது நகர்த்தப்படாமல் இழுபட்டுக்கொண்டு போகின்ற சமாதாப் பேச்சுக்களுக்கு காரணம் கேட்கும் உலக நாடுகளுக்கு தமக்கிடையேயான உள் முரண்பாடு தான் காரணம் எனக்கூறி தொடர்ந்தும் இதனை இவ்வாறே இழுத்துச் செல்ல அரசு திட்டமிட்டு முயல்கிறதா என்பதே அது.

இது தவிர ஜே வி பி க்கும் சந்திரிக்கா கட்சிக்கும் இடையிலான இம் முரண்பாடு அடுத்த தேர்தலுக்கான பங்குப் போட்டியின் வெடிப்பாகவும் இருக்க கூடும்.

எதுவாகவேனும் இருக்கட்டும். யுத்தம் வன்முறையானது. அது பயங்கர வாதமானது. அது மனித நேயமற்றது. அதைக் கைவிட்டு பேச்சுக்கள் மூலம் தீர்வு காணலாம் என புலிகளுக்கு ஆலோசனை விடுத்த சர்வதேச நாடுகள் இப்பொழுது என்ன சொல்லப் போகின்றன என்பதே கேள்வி

நன்றி - சாரல்/சயந்தன்


- Mathan - 03-10-2005

கள உறுப்பினர் சயந்தன் தனது அரசியல் கருத்தை சொந்த குரலில் தந்துள்ளார் கேட்டு பாருங்கள்.

http://www.geocities.com/dashenthi/say.rm


- Mathuran - 03-10-2005

சயந்தனின் குரலில் அரசியல் கருத்து அபாரம். சயந்தனுக்கு எனது வாழ்த்துக்கள். அத்தோடு முடிந்தால் சயந்தன் அவர்கள் இங்கே பிரசுரிக்கப் படுகின்ற கட்டுரைகளையோ, இல்லை அவரின் சொந்த ஆக்கங்களையோ தனது குரலில் பகிர்துகொள்ள வேண்டும் என அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.


- Nilavan - 03-10-2005

ஒலிவடிவத்தை என்னால் கேட்க முடியவில்லை காரணம் நான் பாவிப்பது பொது கணனி (நூலக) சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை நச்சயம் கேட்பேன்.. சயந்தன் அவர்கள் ஆழமாக சிந்திக்கிறார் என்று..
வாழ்த்துக்கள்
நிலவன்