Yarl Forum
பெண்மையின் மெளனபாசை...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பெண்மையின் மெளனபாசை...! (/showthread.php?tid=4824)

Pages: 1 2 3 4


பெண்மையின் மெளனபாசை...! - tamilini - 03-09-2005

<img src='http://p.webshots.com/ProThumbs/33/15133_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

[b]மகளீர்க்கு ஒரு தினம்
மகளீர் தினம்
குட்டுப்பட்டு குட்டுப்பட்டு
குனிந்து விட்ட
தலைகள் யாவும்
இன்னும் நிமிர்ந்திடவில்லை
எங்கோ நிமிர்ந்து விட்ட
தலைகள் ஒன்றிரண்டின்
கொக்கரிப்பா இது

பஞ்சாயத்தின் தீர்ப்பிற்காய்
பாஞ்சாலியாய் ஆக்கப்பட்ட
பாகீஸ்தானிய மங்கைக்கு
நீதியில்லை..
கொண்டையில் பிடித்து
கொண்டவன் கொடுமை
செய்வதற்காய்
கோட்டேறி தவணை
கேட்ட பெண்
இன்னும் இவ்வுலகில்

ஆண்குழந்தைக்காய் ஆசை கொண்டு
ஐயா சாமி என்று
சாமியாரின் இச்சைக்கு
இரையான சிந்தனை திறனற்ற
பெண்களும் இவ்வுலகில் தான்.

காதலென கைபிடித்து
சீதனத்தை உதறிவிட்டு
வேண்டா மருமகளாய்
காஸ் வெடித்து
கதைமுடிந்து போவதும்
இங்கே தான்

கணவனிற்காய் காத்திருக்க
கணவனோ கண்ட வீடு மேய
காத்திருந்து அவனை ஏற்பவளும்
இன்னும் இங்கே தான்..
பிறபெண்ணை ஆய்ந்தவனை
வேண்டவென விலக்கி விட்டு
வீரமாய் வாழாது.
விதியென்றெண்ணி..
காலடியில் வீழ்ந்து கிடப்பவளும்
இன்னும் இங்கு

இச்சைக்கு அழைத்தவனை
செல்வாக்கான இடம் என்று
செருப்பால் அடிக்காமல்
மானம் என்றும் மிரட்டல்
என்றும் பயந்து..
எழுத்தால் அடிக்காது
வெளியே சொல்லாத
பெண்ணியம் பேசும்
எழுத்தாள பெண்மணியும்..
இன்னும் இங்கே தான்.

எங்கே அடக்கப்படுகிறதோ..
எங்கே ஒடுக்கப்படுகிறதோ
அங்கே விடியல் இல்லை.
அவர்களிற்கு விழிப்புணர்வு
கொடுக்க பெண்ணியவாதிகள் இல்லை.
எங்கோ ஒருமூலையில்
எதுவுமே அறியாது.
அடுப்பிற்குள் விறகாய்
இரையாகிப் போகும்
அப்பாவி பெண்களிற்கு
மகளீர் தினம்..
என்னவென்று தான் புரியுமா..??

ஆணும் பெண்ணும் சமன் என
அறைகூவல் விட்டுக்கொண்டு
பெண்ணிற்கு மட்டும் விழா எதற்கு
கிடைக்கும் என்று
காத்திருப்பில் பலன் ஏது
பெண்கள் நிலை உயர
வேண்டும் எனின்
ஒரு மகளீர் தினம் தேவையில்லை
தினம் தினம் சாதிக்க வேண்டும்
வருடம் முழுதும் கூப்பாடு..
வருடத்தில் ஒருநாள் பெண் புகழ்பாடா..??

எத்தனை தினங்கள் பெண்ணிற்கு
வயதிற்கு வந்துவிட்டால் தினம்
வளைகாப்பு தினம்
தாலி அறுப்பு தினம்
பெண்ணை பொம்மையாய் இருத்தி
பூசைசெய்யும் தினங்கள்
இன்னும் அழியவில்லை
இதற்குள் ஒரு மகளீர் தினம்
செயல்வடிவு பெறாத காரியங்கள்
மூலைக்குள் முடங்கிக்கிடக்க
அர்த்தமே இல்லாத
ஒரு மகளீர் தினமா..??
களையப்பட வேண்டிய
எத்தனையோ களைகள்
களையப்படாமல் இருக்க..
மகளீர் தினம் என்று..
மன்றங்களில் பேசியும்.
மலர்ச்செண்டு பரிசளித்தும்..
பயன் என்ன..??
தொடரும்...!


- hari - 03-09-2005

கவிதை நன்று!
வாழ்த்துக்கள் தமிழினி!


- Mathan - 03-09-2005

கவிதைக்கு நன்றி. உங்களுடையதா?


- tamilini - 03-09-2005

ஆமாங்க சுடச்சுட எழுதிப்போட்டிருக்கிறம்.. நேற்று எழுத ரைம் கிடைக்கல. உங்கள் கருத்திற்கு நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 03-09-2005

நினைச்சனான், நான் கருத்து எழுதைக்க கொஞ்சம் புகை வந்தது!


- tamilini - 03-09-2005

Quote:நினைச்சனான், நான் கருத்து எழுதைக்க கொஞ்சம் புகை வந்தது!
இது தானே வேண்டாம் என்கிறது :mrgreen:


- KULAKADDAN - 03-09-2005

கவிதைக்கு நன்றி மகளிர் தினம் கிடைத்ததையே....கண்டு புளகாங்கிதம் அடையும் பெண்ணியங்கள் எப்ப நிஜ உலகுக்கு வரபோகிறதோ.........அன்று....
தமது பிரபலத்துக்கு பெண்ணியம் பேசாது....ஆண்கள் தான் அனைத்துக்கும் காரணம் என கூச்சலிடாது...சமுக பிரச்சனையை யததர்த்தமாக அணுகாதவரை எல்லாம் ஒன்று தான்.....


- இளைஞன் - 03-09-2005

ஹரி தீயணைப்புப் படைய கூப்பிடுங்கோ.
யாழ் கவிதைப்பகுதி தீப்பற்றி எரிகிறது.
Confusedhock: புகை வருதெண்டுட்டு பேசாமல் இருக்கிறீங்கள்!

தமிழினி கவிதை அந்த மாதிரி.
கருத்து கன்னத்தில் அறையுற மாதிரி.

வாழ்த்துக்கள் என்று நான் உங்களுக்கு சொல்லமாட்டன்.
(பிறகு அதுக்கு வேற கவிதை எழுதி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )

தொடர்ந்து இப்படி சிந்தியுங்கள்! தொடர்ந்து திறமையாக எழுதுங்கள். இளைஞர்கள் எழுத வரவேண்டும். அதனை செயல்முறைப்படுத்தவேண்டும். அப்போதுதான் பழைய கூப்பாடுகள் அடங்கிப்போகும்.

எங்கே அடக்கப்படுகிறதோ..
எங்கே ஒடுக்கப்படுகிறதோ
அங்கே விடியல் இல்லை.
அவர்களிற்கு விழிப்புணர்வு
கொடுக்க பெண்ணியவாதிகள் இல்லை.

இதுதான் இன்றைய உண்மைநிலை.


எத்தனை தினங்கள் பெண்ணிற்கு
வயதிற்கு வந்துவிட்டால் தினம்
வளைகாப்பு தினம்
தாலி அறுப்பு தினம்
பெண்ணை பொம்மையாய் இருத்தி
பூசைசெய்யும் தினங்கள்
இன்னும் அழியவில்லை
இதற்குள் ஒரு மகளீர் தினம்

ஓம். மகளிர்தினம் என்ன காரணம் கொண்டு பிறந்ததோ. - அதுவேறு விடயம். ஆனால் அதனை இன்று பழைய மூட சடங்குகள் போலவே ஆக்கிவிட்டார்கள் என்பதே நிதர்சனம்.

தொடருங்கள்....


- sOliyAn - 03-09-2005

Quote:இச்சைக்கு அழைத்தவனை
செல்வாக்கான இடம் என்று
செருப்பால் அடிக்காமல்
மானம் என்றும் மிரட்டல்
என்றும் பயந்து..
எழுத்தால் அடிக்காது
வெளியே சொல்லாத
பெண்ணியம் பேசும்
எழுத்தாள பெண்மணியும்..
இன்னும் இங்கே தான்.
அனுராதா ரமணன்?
வாழ்த்துக்கள்! தொடருங்கள். அவை ஆண் பெண் புரிதலை, அன்புப்பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அமைய வாழ்த்துக்கள்.[/code]


- tamilini - 03-09-2005

இளைஞன் அண்ணா உங்கள் கருத்திற்கு நன்றிகள். ம் சோழியன் அண்ணா.. அவங்களே தான் உங்கள் கருத்திற்கும் நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-09-2005

பெண்மையின் மெளனப்பாசை என்பது தவறு பெண்களின் மெளனப் பாசை என்பதே சரி போல இருக்கு...! பெண்மை என்பது ஆண்மைக்குள்ளும் அடங்கும்....! :wink: Idea

தமிழினி.. மகளிர் என்பது சரியா மகளீர் என்பது சரியா..??! :?:

அதுபோக படத்தையும் மாத்துங்கோ...கவிதை தெற்காசிய பெண்ணிலை... பெண்ணியங்கள் நோக்கியதாக இருக்க....ஏன் பாவம் வெள்ளைக்காரியப் போட்டு அதுகளையும் கேவலப்படுத்துறியள்...! :wink: Idea


- kuruvikal - 03-09-2005

பெண்கள் பிறப்பில் இருந்து விழிச்சுத்தான் இருக்கிறார்கள் பெண்ணியம் என்று விதைக்கப்படுபவைத்தான் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது....!

சட்டமும் நீதியும் இன்னும் பெண்ணுக்கு சலுகைகள் வழங்கும் நிலை ஏனோ....பெண் இன்னும் சலுகைகளில்தான் வாழ்கிறாளோ...???! மனதால் ஆணும் பெண்ணும் ஒருமைப்படும் போது மட்டுமே பெண் தன் நிலை ஆண் தன் நிலையை அணுகியவளாவாள்...அதுவரை பெண்களே பெண்களுக்கு சாபம் இட்டபடி சமூகத்தை ஏசிய படி வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான்...! :wink: Idea


- வியாசன் - 03-09-2005

எங்கே அடக்கப்படுகிறதோ..
எங்கே ஒடுக்கப்படுகிறதோ
அங்கே விடியல் இல்லை.
அவர்களிற்கு விழிப்புணர்வு
கொடுக்க பெண்ணியவாதிகள் இல்லை.

எத்தனை தினங்கள் பெண்ணிற்கு
வயதிற்கு வந்துவிட்டால் தினம்
வளைகாப்பு தினம்
தாலி அறுப்பு தினம்
பெண்ணை பொம்மையாய் இருத்தி
பூசைசெய்யும் தினங்கள்
இன்னும் அழியவில்லை
இதற்குள் ஒரு மகளீர் தினம்

தமிழ் நீங்கள் சமூகத்தின் அவலங்களை தொட்டிருக்கிறீர்கள். மனதை கனக்க வைத்துவிட்டது உங்கள் கவிதை.

பெண்ணுக்கு பெண்ணே எதிரி பெரும்பாலும் ஸ்டவ்வுகள் வெடிக்கவைக்கப்படுவதும்
பெண்ணால். நல்லவேளை ஈழத்தில் அந்த அவலம் இல்லையென்று சொல்லலாம்.
இந்த மகளிர்தினம் கொண்டாடப்படவேண்டியதுதான். உலகத்தை திருத்தமுன் நாங்கள் எங்களை திருத்திக்கொண்டேமே அதற்காகவாவது கொண்டாடப்படவேண்டி இருக்கிறது. மகளிர்தினம் ஈழத்திற்கு பொருத்தமானது என்பது எனது கருத்து..
தமிழ் இந்த சடங்குகள் விடயத்தில் சிலநெருடல்கள் உண்டு. வயதுக்கு வந்ததை பண்டையகாலத்தில் மற்றையவர்களுக்கு தெரிவிப்பதற்காக அந்த சடங்கை செய்தார்கள். இன்று பெண்கள் அந்த சடங்கை நிறுத்த பெற்றோருடன் வாதாடலாம்தானே? ஒரு பெண்ணின் கருத்தை அறியவிரும்புகிறேன்.

சடங்ககள் சங்கடமாக இருக்கக்கூடாதுகவிதை அருமை தங்கையே


- tamilini - 03-09-2005

குருவிகளே பெண்மைகள் பேசவில்லை.. பெண்மை தான் பேசுறது.. ஆண்மைக்குள்ளும் பெண்மை அடக்கம் என்பதற்காய். ஒரு பெண்மை பேசியதை.. பெண்மைகள் என்பது எப்படி சரியாகும்.

நானும் பலமுறை மகளீர் பற்றி யோசிச்சன்.. மகளீர் என்று சொல்லும் போது நீண்டு ஒலிப்பதாய் தோன்றியது அது தான் அப்படி போட்டம்.
அந்தப்படம் போட்டது.. நமக்கு தேவையானது இப்படி முகபாவனை கொண்ட ஒரு பெண்ணின் படம். வெள்ளை கறுப்பு என்பதை பார்க்கவில்லை.. எல்லாம் பெண்மை தானே.. நிறம் ஒரு பிரச்சனையா என்ன..?? :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 03-09-2005

Quote:சட்டமும் நீதியும் இன்னும் பெண்ணுக்கு சலுகைகள் வழங்கும் நிலை ஏனோ....பெண் இன்னும் சலுகைகளில்தான் வாழ்கிறாளோ...???! மனதால் ஆணும் பெண்ணும் ஒருமைப்படும் போது மட்டுமே பெண் தன் நிலை ஆண் தன் நிலையை அணுகியவளாவாள்...அதுவரை பெண்களே பெண்களுக்கு சாபம் இட்டபடி சமூகத்தை ஏசிய படி வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான்...!
பெண்களிற்கு சட்டம் எங்கும்.. சலுகைவழங்குவாய் நாங்க காணவில்லை.. அதைவிட பெண்கள் சலுகை நாடி நின்றது இல்லை.
அண்மையில் என்னை பாதித்த விடயம் என்னவென்றால்.. பாகீஸ்தானில் ஒரு பெண்ணின் தம்பி இன்னொரு பெண்ணை கற்பழித்து விட்டான் என்பதற்காய்.. தம்பி செய்த குற்றத்திற்கு.. சகோதரியை.. பாதிக்கப்பட்ட குடும்ப ஆண்கள் 5 ந்து பேர் 5 வருடமாய் வல்லுறவு கொண்டதாய் அறிந்தேன்.. இது வேறை பஞ்சாயத்து தீர்ப்பாம். இதற்கு நீதி மன்றம் சென்றால்.. சம்பிரதாயம் பாரம்பரியத்தை காப்பாற்றிம் என்று அந்த கேசை தள்ளிவிட்டார்கள். சலுகை வேண்டாம் அந்த பெண்ணிற்கு குறைந்த பட்ச நீதி கு}ட வேண்டாமா..?? இப்படி பல பிரச்சனைகள்.. வெளியிலையே தெரியாமல் இருக்கு.. :evil: :twisted: :twisted:


- tamilini - 03-09-2005

Quote:தமிழ் இந்த சடங்குகள் விடயத்தில் சிலநெருடல்கள் உண்டு. வயதுக்கு வந்ததை பண்டையகாலத்தில் மற்றையவர்களுக்கு தெரிவிப்பதற்காக அந்த சடங்கை செய்தார்கள். இன்று பெண்கள் அந்த சடங்கை நிறுத்த பெற்றோருடன் வாதாடலாம்தானே? ஒரு பெண்ணின் கருத்தை அறியவிரும்புகிறேன்.

பண்டைய காலத்தில அப்படியான சடங்குகள் செய்ய வேண்டியது அவசியமாய் இருந்திச்சு. பருவமாற்றங்களில் இயற்கையா நிகழ்கின்ற இப்படிப்பட்ட விடயங்களை தம்பட்டம் அடிச்சு.. நடத்திற விழாக்களில் நமக்கு ஈடுபாடில்லை.. குருவிகள் மற்றும் வியாசன் அண்ணா உங்கள் கருத்திற்கு நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 03-10-2005

கவிதை நன்ரூ அக் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vasampu - 03-10-2005

tamilini Wrote:ஆமாங்க சுடச்சுட எழுதிப்போட்டிருக்கிறம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

முதலில் கவிதைக்கு வாழ்த்துக்கள். சுடச்சுட எழுதினதாலோ என்னவோ ஆவி பறக்கின்றது. கவதையில் சில நியாயங்களுமுண்டு சில நெருடல்களுமுண்டு. ஒவ்வொரு விடயத்திற்கும் இரு பக்கமுண்டு. ஆனால் இங்கே ஒரு பக்கமே பார்க்கப் பட்டுள்ளது;. மறுபக்கம் பார்க்க மனமில்லையோ ??? :roll: :wink: :roll: :wink:


- Thaya Jibbrahn - 03-10-2005

அருமை தமிழினி. முன்னர் ஒரு முறை கவிதை எழுத தெரியாது என சொல்லியதாய் ஞாபகம். பரவாயில்லை. கவிதை என்பது பசி போன்றது. அந்த உணர்வு எழுதிமுடித்தவுடன் அடையும் திருப்தியில் தான் அடங்கும். தொடருங்கள். வேண்டுமானால் கவிதை ஆர்வமுடைய நண்பர்கள் ஒரு முயற்சி செய்யலாம். ஒரு விடயத்தை கருத்தாட தொடங்கலாம். ஆனால் கருத்துகள் கவிதை நடையில் அமைதல் வேண்டும். எனது எண்ணம் தவறென்றால் மன்னிக்கவும். சரியென்றால் ஆரம்பிக்கவும். கவிதை எழுத ஆர்வமுடையவர்களுக்கு நிச்சயம் நல்ல பயிற்சிக்களமாக அது அமையும்.


- Thaya Jibbrahn - 03-10-2005

நண்பர்களே! படைப்புகள் பற்றிய எனது கருத்து
மேலே தமிழினி தந்துள்ள கவிதை அவருடைய படைப்பு. அதில் அவர் எதை சொல்லியிருக்கலாம் எதை சொல்லியிருக்க கூடாது என தீர்மானிப்பது நாங்களல்ல. அவர் தான். அப்படி நாங்கள் தீர்மானித்தால் அப்படைப்பு எங்களுடையது. ஆக அவர் தந்த கவிதை அழகியல் தன்மையில் எம்மை ஈர்த்ததா? அது எந்த வகையில் அமைந்தது தொடர்பாகவே கருத்து சொல்லும் உரிமை விமர்சகனுக்கு உண்டு- மாறாக நீங்கள் ஒரு பக்க சார்பாக எழுதுகின்றீர்கள் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் இப்படி எழுதுகிறீர்கள் என்பதாகவே பெரும்பாலான விமர்சனங்கள் அமைகின்றன- அப்படியெனில் இந்த விமர்சனங்கள் தங்கள் எண்ணங்களை ஊதுகுழலாக படைப்பாளி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றதா? ஒருவன் இந்த சமூகத்தை பார்க்கின்ற பார்வையும் ஒரு படைப்பாளி பார்க்கின்ற பார்வையும் வேறுபாடானவை. அவ்வாறு பார்க்கின்ற பார்வை தான் படைப்பாளியை சமூகத்திடம். இனம் காட்டுகின்றது. சமூகம் ஏற்றுக்கொள்ளும். இல்லை நிராகரிக்கும். உடனடியாக நிராகரித்து பின்னர் தலையில் தூக்கி வைக்கும். (பாரதியை போல) உடனடியாக இவனல்லோ படைப்பாளி என்று குதூகலித்து எதிர்காலத்தில் தூற்றும். அதெல்லாம் படைப்பாளியின் படைப்பு ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்தது. படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என வழிநடத்த எந்த எpமர்சக கொம்பனுக்கும் உரிமை கிடையாது. நண்பர்கள் சிந்திக்கலாம். மாற்று கருத்து இருந்தால் முன் வைக்கலாம்.