Yarl Forum
தமிழ்ப்பொலிஸ்மா அதிபர் கவலைக்கிடம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழ்ப்பொலிஸ்மா அதிபர் கவலைக்கிடம் (/showthread.php?tid=4873)



தமிழ்ப்பொலிஸ்மா அதிபர் கவலைக்கிடம் - KULAKADDAN - 03-06-2005

காலம் கடந்த ஞானோதயம் பலருக்கு ஏற்பட்டுவருவதை இலங்கை வரலாற்றுப் போக்கில் பலரையும் காணலாம். அண்மையில் இந்த வரிசையில் இணைந்து கொண்டவர் வேறு யாரும் அல்ல. முன்னாள் சிறிலங்கா பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜாதான். இவர் இவ்வாறு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டபோது அரச ஆதரவு சக்திகள் "பார்த்தீர்களா இலங்கை ஜனநாயக நாடு". அது சிறுபான்மை இனத்தைச்சேர்ந்தவர் ஒருவரையே பொலிஸ்மா அதிபராக நியமித்துள்ளது என்றெல்லாம் தங்களுடைய வால்பிடி அரசியலுக்கு வக்காலத்து வாங்கியதை பெரும்பாலானோர் மறந்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.தற்போது அப்போதைய பொலிஸ்மா அதிபர் சொல்வதை அவருடைய வார்த்தைகளிலே கேளுங்கள்.



" அரசமைப்புக் கவுன்ஸிலில் முக்கியமானவர்கள் மூவர் இருக்கின்றனர். அதன்தலைவர் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டாரஇ அடுத்தவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சஇ மற்றவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க. இவர்களைவிட ஏனைய ஏழு உறுப்பினர் களும் எவ்வாறு அரசியல் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.இவர்கள் அனைவரும் எனது வரலாறுஇ எனது செயற்பாடுகள்இ சேவை மூப்புஇ எனது பின்னணி என அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே என்னைச் சிபாரிசு செய்தனர். அப்படி அந்தப் பத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட என்னை ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார் என்றால் அதுபற்றிக் கருத்துக்கூற என்னால் இயலவில்லை.அரசியலும்இ இனவாதமும் எனக்கு எதிராகச் செயற்படும்போது என்னால் எதுவும் செய்ய முடியாது. இலங்கை என்ற நாட்டுக்காகவே நான் சேவையாற்றி இருக்கிறேன். "



"அரசமைப்புக் கவுன்ஸில் வழங்கிய சிபாரிசைத் தனியொருவர் நிராகரித்திருப்பது பற்றி எனக்கு எவ்வித வருத்தமும் கிடையாது. நான் தமிழன் என்ற காரணத்தினாலேயே பொலீஸ் தலைமைப் பதவியில் நீடிப்பு வழங்கப்படாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்". இவ்வாறு கூறுகிறார் கடந்த 03ம்திகதி லஞ்ச ஆணைக்குழுவின் பிரதிநிதியாக ஏனையோரால் பிரேரிக்கப்பட்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் ரி. ஆனந்தராஜா.



இப்படித்தான் உயர்பொறுப்புகளில் இருந்த பலர் தமிழன் என்ற காரணத்தால் வரலாற்றிருந்து மறக்கடிக்கப்பட்டார்கள்.



குறிப்பு:
சிறிலங்கா முதல் இராணுவதளபதியாக இருந்தவர் பொன் முத்துக்குமார் என்பவர். இவரைப்பற்றி யாரும் அறிந்திருக்கிறீர்களா?

சிறிலங்கா விமானப்படையை கட்டியெழுப்புவதற்காக அப்போதைய ஜனாதிபதியான ஜேஆர் அவர்களால் சிங்கப்பூரிலிருந்து தமிழ் விமான கப்டன் ஒருவர்வரவழைக்கப்பட்டிருந்தார். இவரைப்பற்றியாவது யாராவது அறிந்திருக்கிறீர்களா?

தமிழ்ச்சங்கமம்!


- Mathan - 03-06-2005

Quote:கடந்த 03ம்திகதி லஞ்ச ஆணைக்குழுவின் பிரதிநிதியாக ஏனையோரால் பிரேரிக்கப்பட்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் ரி. ஆனந்தராஜா.

இது தவிர பொலிஸ் மா அதிபர் பதிவி உட்பட சில பதவிகளும் வந்து விட்டு போனது அப்போது கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. வேறு ஏதாவது கிடைகாதா என்று காத்திருந்தார். தற்போது ஒரு பதவியும் கிடைக்காத நிலையில் தான் தமிழன் என்பதனால் புறக்கணிக்கணிக்கப்பட்டேன் என்று சொல்லி அனுதாபம் தேடுவதை தவிர வேறு வழியில்லை.

Quote:சிறிலங்கா விமானப்படையை கட்டியெழுப்புவதற்காக அப்போதைய ஜனாதிபதியான ஜேஆர் அவர்களால் சிங்கப்பூரிலிருந்து தமிழ் விமான கப்டன் ஒருவர்வரவழைக்கப்பட்டிருந்தார். இவரைப்பற்றியாவது யாராவது அறிந்திருக்கிறீர்களா?

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் முன்ணணி விமான சேவையாக நிறுவனமாக இருந்த போது அதிலிருந்த இலங்கை தமிழ் விமானியை சிங்கப்பூர் அரசிடமிருந்து வேண்டி பெற்றுக் கொண்டது இலங்கை, அது போன்ற ஒரு முன்னோடி விமான நிறுவனத்தை இலங்கையில் நிறுவுவதே அதன் நோக்கம். சிங்கப்பூர் அரசு ஆலோசனைகளும் ஆதரவும் தருவதாக சொன்னபோது தனி ஒரு விமான கப்டனை வைத்து விமான நிறுவனத்தையே கட்டி எழுப்பலாம் என்று கனவு கண்டார் இலங்கை தலைவர். இப்படி தனது சுயசரிதையில் எழுதியிருக்கின்றார் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இது குறித்து இலங்கை தரப்பில் ஒரு குறிப்புகளும் இல்லை.

இது தவிர சிவா பசுபதி என்பவர் சட்டமா அதிபராக இருந்திருக்கின்றார்,


- KULAKADDAN - 03-06-2005

அது வாஸ்தவம் தான்... இது வெளிபடை உண்மை.... ஆனால் அடிவருடிகளுக்கு கூட பதவி கொடுக்க விரும்பாதவர்கள். நம்மவர்கள் எப்ப திருந்துவார்கள்.
ஒரு சிறு குறிப்பு
Quote:இது தவிர சிவா பசுபதி என்பவர் சட்டமா அதிபராக இருந்திருக்கின்றார்,

இவர் முன்னாள் சட்டமா அதிபர்....பின் இடைக்கால தன்னாட்சி வரைவது சம்பந்தமான ஆலோசனையில் பங்குபற்றியவர்


தற்போது இருப்பவர் கமல சபேசன் என நினைக்கிறேன்.


- Mathuran - 03-06-2005

நீங்கள் யாவரும் எவ்வாறு தலையில் அடித்துக்கொண்டாலும். தமிழீழம்தான் தமிழனை கௌரவிக்கும் நாடு. அதுவரை பொறுத்திருக்காது அதற்காக செயற்படுங்கள்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- eelapirean - 03-06-2005

இப்போதும் பதவி கிடைக்காதபடியால்த் தான் உண்மை வெளியே வருகிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 03-06-2005

யாழ்ப்பாணத்தில் ஆனந்தராஜா பொறுப்பதிகாரியாக இருந்தபோது செய்த சேவையை பலர் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகின்றேன். திரு.ஆனந்தராஜா அவர்கள் தன் திறமையினால் தான் பொலிஸ்மா அதிபராக உயர்ந்தார். ஒருவர் பதவியிலிருக்கும் போது அரசை விமர்சிக்க முடியாது. இந்நிலையில் அவரின் தற்போதைய கருத்தை விமர்சிப்பது அழகல்ல. அவர் விரும்பியிருந்தால் தற்போது கூட கூறாமல் விட்டிருக்கலாமல்லவா? அல்லது முன்பே சந்திரிக்காவின் வால் பிடித்து தனது பதவியை தக்க வைத்திருக்கலாமல்லவா? இவையொன்றும் செய்யாமல் தன்மானத்தமிழனாக வாழ்ந்தவரை தமிழரே கிண்டலடிப்பதை என்ன சொல்ல. உண்மையில தமிழனுக்கு தமிழன் தான் முதலெதிரி.

:oops: :oops: :oops: :oops: